“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

சனி, 23 ஜூன், 2012

செல் ஃபோன்களுக்கு இனி ஜாக்கெட் வாசம் இல்லை.பாக்கெட் சாரிஸ் வந்துவிட்டன.....

பாவம் இந்தப் புடவைக் கட்டும் பெண்கள். ஜீன்ஸ் போடும் பெண்களைப் பாத்து ஏக்கப் பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தனர். ஏன் என்று கேட்க மாட்டீர்களா? ஆம் ஜீன்ஸ் போடும் பெண்கள் எல்லாப் பொருள்களையும் ஜீன்ஸ் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு ஒரு கூலிங் கிளாஸையும் மாட்டிக்கொண்டு ஜாலியாகக் கையை வீசிக்கொண்டு நடப்பதைப் பார்த்தால் ஒரு கையால் புடவையையும் மற்றொரு கையால் ஹாண்ட் பேக்கையும் தூக்கிக்கொண்டு நடக்கும் பெண்களுக்குப் பொறாமையாக இருக்காதா என்ன? அதுவும் பேருந்தில் செல்லும்போது ஒரு ரிங் வந்தவுடன் ஜீன்ஸ் பாக்கெட்டில் கையை விட்டு ஸ்டைலாக மொபைலை எடுத்துப் பேசும் நாகரிக யுவதிகளைப் பார்த்து  காதிலும் வயிற்றிலும் லேசாக அக்கினி உருவாவது இயற்கையே. அதிலும் புடவைப் பெண்கள் மொபைலை வைத்துக் கொள்வது எங்கே என்று தெரியாமல் எங்கெங்கோ வைத்துக்கொண்டு அல்லல் படும் போது சொல்லவே வேண்டாம்.....
ஆனால் இவர்களுக்கும் இனி ஜாலிதான். ஆமாம் பாக்கெட் வைத்த புடவைகள் வந்து விட்டன. குமரன் சில்க்ஸ் பாக்கெட் வைத்த புடவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி மொபைல்களுக்கு ஜாக்கெட் வாசம் கிடைக்காது என்பது ஒருபுறம் வருத்தமாக இருந்தாலும் ஈசியா எடுத்தப் பேச பொருத்தமாகப் பாக்கெட் இடத்தைத் தேர்வு செய்துள்ள குமரன் சில்க்ஸ் நிறுவனத்தைப் பாராட்டாமல் இருக்கமுடியாது.
இந்தப் பாக்கெட் சாரிஸ் சிறு குழந்தைகள் கட்டிக்கொள்ளும் புடவைகளைப் போலவே முன்னரே பிளிட் அதாவது கொசுவம் ரெடிமேடாக வைக்கப்பட்ட்து. சல்வாரை மாட்டுவது போல இதனை மாட்டிக்கொண்டு ஜிப்பைப் பூட்டினால் முடிந்தது வேலை. இது முக்கியமாக விழாக்களுக்கு (PARTY WEAR) அணிந்து செல்லும் வகையில் பட்டில் தயாரிக்கப்பட்டுள்ளன. ஆரம்ப விலை ரூபாய் 4,000. இளம் பெண்களின் மனத்தைக் கொள்ளை கொள்ளும் இப்புடவைகளுக்குக் கொள்கைப் புடவை (concept sariஎன்று பெயர் சூட்டியுள்ளது இந்நிறுவனம்.
குமரன் சில்க்ஸ் அறிமுகப்படுத்தியுள்ள இந்த பாக்கெட் சாரியைக் கட்டிக்கொண்டு பெண்கள் நடந்தால் அவர்களுக்கு ஒரு தனி அந்தஸ்தே வந்து விடும் போல இருக்கிறது... மகிழ்ச்சிதான். ஆனால் பிட்பாக்கெட் கார்ர்களுக்கும் இதில் கொண்டாட்டம்தான். ஜாக்கிரதை ஜாக்கிரதை..... புடவைப் பெண்களே......

6 கருத்துகள்:

 1. //இனி மொபைல்களுக்கு ஜாக்கெட் வாசம் கிடைக்காது என்பது ஒருபுறம் வருத்தமாக இருந்தாலும் //

  இனி செல்போன்களுக்கு மூச்சு முட்ட வாய்ப்பில்லைன்னு சொல்லுங்க.

  மாற்றங்கள் அவசியம் தான். நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல் “பிக்பாக்கெட்”டர்களுக்கு நல்ல வாய்ப்பு தான் போங்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம்.. விடுதலை.. விடுதலை.. இது செல்போன்களின் பாடல்.

   நன்றி சத்ரியன்.

   நீக்கு
 2. குமரன் சில்க்ஸ் அறிமுகப்படுத்தியுள்ள இந்த பாக்கெட் சாரியைக் கட்டிக்கொண்டு பெண்கள் நடந்தால் அவர்களுக்கு ஒரு தனி அந்தஸ்தே வந்து விடும் போல இருக்கிறது... மகிழ்ச்சிதான்.

  பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 3. //இந்தப் பாக்கெட் சாரிஸ் சிறு குழந்தைகள் கட்டிக்கொள்ளும் புடவைகளைப் போலவே முன்னரே பிளிட் அதாவது கொசுவம் ரெடிமேடாக வைக்கப்பட்ட்து. சல்வாரை மாட்டுவது போல இதனை மாட்டிக்கொண்டு ஜிப்பைப் பூட்டினால் முடிந்தது வேலை. இது முக்கியமாக விழாக்களுக்கு (PARTY WEAR) அணிந்து செல்லும் வகையில் பட்டில் தயாரிக்கப்பட்டுள்ளன. //

  பாராட்டப்பட வேண்டிய கண்டுபிடிப்பு/தயாரிப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம். நலமா ஐயா. உங்களோடு பேசும்போதெல்லாம் ஒரு குற்ற உணர்வு.
   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வை.கோ. ஐயா.

   நீக்கு