“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

ஆவி வருமா?? தூது வருமா??
”குமரி தனியாப் போனாலும்கொட்டாவி தனியாப் போக மாட்டாள்” ஆமாங்க இது நம்ம ஊருல ரொம்ப நாளா சொல்லிக்கிட்டு இருக்கற பழமொழி. இது உண்மையா? அப்படியெல்லாம் இல்ல என்கிறார்கள் கொட்டாவி ஆய்வாளர்கள். ஆமாங்க.. கொட்டாவி தனியாத்தான் போவாளாம்.. பக்கத்தில் இருப்பவர்களின் உந்துதல், பார்த்துச் செய்தல் என்ற மனோபாவம், கொஞ்சம் சோம்பேறித்தனம் எல்லாம் சேர்ந்துதான் கொட்டாவி விட நம்மைத் தூண்டுமாம்.. நாம் நமக்கு வரவில்லை என்றாலும் மற்றவர் கொட்டாவி விடும்போது முயற்சி செய்து கொட்டாவி விடுவோமாம்....


கொட்டாவி என்றவுடன் நாம் கெட்ட ஆவி என்று நினைத்து மூதேவித்தனம் என்று வசை பாடும் பெரியோர்கள் நம்மிடம் இன்றும் உண்டு. ஆனால் இந்த நம்ம உடலைப்பற்றி நமக்குத் சேதி சொல்லும் அருமையான தூதுவன் தான் இந்த கொட்டாவி. உடலுக்கு ஓய்வு தேவை என்பதையும் உறக்கம் உடனடியாகத் தேவை என்பதையும் உடலுக்குச் சொல்லும் மூளையின் தூதுவன் கொட்டாவி. உடலில் ஆக்சிஜன் அளவு குறையும்போது உயிரினங்கள் கொட்டாவி விடுகின்றன. கொட்டாவியைக் கண்டிப்பாக நிறுத்த முடியாது. நிறுத்துவது போல நாம் வாயை மூடிக்கொண்டாலும் கொட்டாவி தசைகள் இயங்கிக் கொண்டுதான் இருக்கும்.

கொட்டாவியைத் தூண்டுவது மூளை நரம்பு என்பதை ஆய்வாளர்கள் உறுதியாக நம்புகின்றனர். ஆனால் அது எந்த நரம்பு என்று கண்டு பிடிப்பதில் சோர்ந்து போய் இன்னும் கொட்டாவி விட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். மூளையின் நடுப்பகுதியில் கொட்டாவியைத் தூண்டும் நரம்பு இருக்கலாம் என்று கருதுகின்றனர். தசைகளை வருடி சுறுசுறுப்பாக்குவதும், இரத்த ஓட்டத்தை சீராக்குவதும் இந்த கொட்டாவியின் இன்றியமையாத வேலை.

.
.இதுல இன்னும் சில நல்ல விஷயம் இருக்கு. என்னன்னு கேக்கறீஙகளா? முகத்தசைகளுக்கு நல்ல உடற்பயிற்சியும் இதன் மூலம் கிடைத்து விடுகிறது. அதுமட்டுமல்லங்க கொட்டாவி நாட்டியத்திற்கு மத்தளம் கொட்டுகிறார்களே கண்கள் என்ற இரண்டு பெரியவர்கள் இவர்களுக்கும் இது நல்ல பயிற்சியாம்... (மூடி மூடித்திறப்பதால்) கொட்டாவி விடும்போது உடலையும் சேர்த்து முறிக்கும் வழக்கும் பெரும்பாலும் எல்லோருக்கும் உண்டு.. இது உடலுக்கு ஒரு நல்ல உடற்பயிற்சி.. இப்ப நீங்க இந்த ஹெல்த் டிப்பைப் படிக்காம கொட்டாவி விடுவது தெரிகிறது.

ஓகே ஓகே இப்ப விஷயத்துக்குப் போகலாம். குளிர்ந்த நீரைக் குடிப்பதாலும், குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவுவதாலும் கொட்டாவிக்கு கொஞ்ச நேரம் கடுக்கா கொடுக்கலாம். ஆனால் உடலுக்கு ஓய்வு கொடுக்காமல் கொட்டாவியை ஏமாற்ற முடியாதுங்க.. புரிஞ்சுக்கோங்க... சும்மா சும்மா வாயைப் பொளக்காம போய்ப் படுத்துத் தூங்குங்க... எல்லாம் சரியாய்ப் போய்விடும்...இப்ப நான் ஜகா வாங்கிக்கறேன்...ஜூட்...

சனி, 17 ஏப்ரல், 2010

நேப்கின்ஸ், டேம்போன்ஸ் சீக்ரெட்.....http://image.made-in-china.com/2f0j00hvVQRlcWHpoy/290mm-Sanitary-Napkin-Blue-Center.jpg


இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை இல்லாத பழக்கமாக இன்றைய வேக உலகத்தின் காரணம் என்று சொல்லலாமா? சுகாதார நோக்கம் என்று சொல்லலாமா? பெண்கள் மாத விடாய்க் காலங்களில் துணி நேப்கினைப் பயன்படுத்தும் பழைய முறையை மறந்து விட்டோம். சிறியதும் பெரியதுமாகப் பாக்கெட்களில் அடைக்கப்பட்டு மருந்துக் கடைகளை அலங்கரிக்கும் நேப்கின்களைப் பயன் படுத்தும் புதுப் பழக்கத்திற்குள் குடிபுகுந்து விட்டோம். வீட்டு அலமாரியிலும், மாதாந்திர பட்ஜெட்டிலும் முதல் இடம் இதற்குத்தான். எந்த முறையிலும் உள்ள ஆபத்துக்களை அலசி ஆராய்ந்து பார்க்க வேண்டாமா?

http://www.thethingreenlineshop.com/files/2006101/uploaded/ob_tampons_pink_canada.jpg

சானடரி நேப்கின் (sanitary napkin) , டேம்போன்ஸ் (tampons) பயன்படுத்துபவர்களுக்குப் பரவலாகக் கருப்பைப் புற்று நோய் (cervical cancer), கருப்பைக் கட்டிகள் (tumour) வருவதாகக் கண்டறியப் பட்டுள்ளன.

இவற்றிக்குக் காரணம் இந்த சாணடரி நேப்கினில் இடம்பெற்றுள்ள ஆஸ்பெஸ்டாஸ் (asbestos) என்ற மூலப்பொருள்தான். இது சிலிகாவில் அமிந்துள்ள ஒரு கூறு. சிலிகா என்பது மணலில் இருந்து கிடைக்கப்பெறும் இரசாயனப்பொருள். நேப்கினும், டேம்போன்ஸும் உள்ளே பருத்தியை வைத்து, மேலே இந்த் ஆஸ்பெஸ்டாஸால் ஆன கவரால் மூடப்படுகிறது. ஆஸ்பெஸ்டாஸில் ரேயான் (rayaan) என்ற ஃபைஃபர் உள்ளது. இது ஈரத்தை உறிஞ்சும் தனமை உடையது.

பொதுவாக ஆஸ்பெஸ்டாஸ் கூரையின் கீழ் நின்றவர்களுக்குத் தெரியும், அது எத்தனை சூட்டை உமிழும் என்று. நேப்கினை மூடியுள்ள ஆஸ்பெஸ்டாஸ் உடலில் நேரடியாகப் பட்டுக்கொண்டு இருப்பதால் சூட்டைக் கிளப்பி, உதிரப்போக்கைக் கூடுதலாக்குகிறது. இதனால் பயன்படுத்தும் நேப்கின்களின் எண்ணிக்கை அதிகமாகிறது. நாளொன்றிற்குச் சுமார் மூன்று நேப்கின் அல்லது டேம்போன்ஸ் பயன்படுத்தும் ஒருவர் இச்சூட்டின் காரணமாக ஐந்து வரை பயன்படுத்துவார். எனவேதான் இம்முறை, விற்பனையைக் கூட்டும் உத்தியாக நேப்கின் தயாரிப்பாளர்களால் கையாளப்படுகிறது. மாத்திற்கு ஐந்து நாட்கள் வீதம் முப்பத்தெட்டு மாதவிடாய்ச் சுழற்சி ஆண்டுகளில் எத்தனை நேப்கின்ஸ் பயன்படுத்துவர். இதில் நேப்கின் தயாரிப்பாளர்களின் லாபம், அதனை பயன்படுத்தும் பெண்களின் உடல்நிலை பாதிப்பு இரண்டையும் பெண்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். நீங்கள் கூடுதலாகப் பயன்படுத்தும் நேப்கின்கள் அதாவது ஒரு மாதவிடாய்க்கு ( 5 X 2 = 10) ஆண்டுக்கு (12 X 10 = 120) சராசரியாகப் பெண்களின் மாதவிடாய்ச் சுழற்சி ஆண்டு முப்பத்தெட்டு.... ( 38 X 120 ) இது ரொம்பப் பெரிய கணக்கு.. நான் கணக்குல ரொம்ப வீக்கு... தப்பா சொல்லிட்டா? அதனால இந்தக் கணக்கை நீங்களே போட்டுக் கொள்ளுங்கள்.

மேலும் டை ஆக்ஸின் (dioxin) என்ற மூலப்பொருளும் இந்தத் தயாரிப்பில் பயன்படுத்தப் படுகிறது. இது நேப்கினின் தூய வெண்மை நிறத்திற்காகப் பயன்படுத்தப் படும் பிளீச் (bleach). இந்த பிளீச் புற்று நோயை ஏற்படுத்தும் தனமை வாய்ந்தது. அதுமட்டுமல்லாமல் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைப்பதுடன், மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் அபாயமும் இதில் உள்ளது. இந்த டைஆக்ஸின் எவ்வளவு குறைந்த அளவு சேர்க்கப்பட்டாலும் கொடிய பாதிப்புகளை உண்டாக்கும் என்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் (Environmental protection agency) அறிக்கை விடுத்துள்ளது. டைஆக்ஸின் சிறிதளவு உடலில் சேர்ந்தாலும் அதிக அபாயத்தை ஏற்படுத்தும் என்பதை, இரத்தக் காயம் பட்ட இடத்தில் பிளீச் பட்டால் ஏற்படும் விளைவை அறிந்தவர் நன்கு அறிவர். மேலும் உடலில் பட்ட பிளீச்சின் அளவு குறையாது, நாள்பட நாள்பட அதிகரித்து நம் உடலில் உறுதியாக இடம் பிடித்துக்கொள்ளும்.

இந்த நேப்கின் அல்லது டேம்போன்ஸ் பயன்படுத்துவோர்க்கு ஆபத்து காத்துக் கொண்டிருக்கிறது. அதிலும் டேம்போன்ஸ் பயன்படுத்துவோர்க்கு விளைவு அதிகம் என்றே சொல்லலாம். ஸ்வீடன், ஜெர்மனி, பிரிட்டன் போன்ற உலக நாடுகளில் பெண்கள் தூய பருத்தியினால் ஆன நேப்கின்ஸ், டேம்போன்ஸ் பழக்கத்திற்கு மாறி வருகின்றனர். நம் நாட்டில் இப்போதுதான் இதன் விற்பனை சூடு பிடித்துள்ளது என்கின்றனர் சுகாதார ஆர்வலர்கள்.

பிரச்சனையைத் தீர்க்க மாற்று வழிகள்:
1. இன்றைய இயந்திர வாழ்க்கையைப் புரிந்து கொண்ட தயாரிப்பாளர்கள், பெண்களை எத்தகு ஆபத்திற்கு உள்ளாக்குகின்றனர் என்ற விழிப்புணர்வைப் பெண்கள் பெற வேண்டும்.

2. டைஆக்ஸின் சேர்க்கை மற்றும் வேறு எந்த இராசாயனப் பொருளும் கலக்காத நேப்கின்களைப் பயன்படுத்துதல் நல்லது. துரஷ்டவசமாக ஒரு சில தயாரிப்பாளர்கள் மட்டுமே இத்தகு பக்க விளைவுகள் இல்லாத் நேப்கின்களைத் தயாரிக்கின்றனர். அவற்றை இனம் கண்டு வாங்கிப் பயன் படுத்த வேண்டும்.

3. வெறு வழியின்றி இவ்வகை நேப்கின்களைப் பயன்படுத்தும் வேளைகளில் அதிகபட்சமாக ஒரு நேப்கினை மூன்று மணி நேரத்திற்கு மேல் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

4. இத்தனை கஷ்டம் எதற்கு? சுத்தமான பருத்தியையும், கட்டுத்துணியையும் வாங்கி வைத்துக்கொண்டு வீட்டிலேயே நேப்கின் தயாரித்துப் பயன்படுத்துவது உங்கள் ஹெல்த் மணிபர்ஸ் இரண்டுக்கும் உகந்ததாக இருக்குமே...

உங்க உடம்பு... உங்க இஷ்டம்னும் சொல்ல எனக்கு மனசு வரலங்க.. ரொம்ப அக்கரையோட சொல்றேன் தோழிகளே...சொந்தத் தயாரிப்புக்கு மாறிடுங்க....உங்களுக்கு ரொம்ப வேண்டியவங்களுக்கும் எடுத்துச் சொல்லுங்க......
பிளீஸ்......


ஆதிரா..

புதன், 14 ஏப்ரல், 2010

துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்....


http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/56/1e6m_comparison_Mars_Mercury_Moon_Pluto_Haumea_-_no_transparency.png/300px-1e6m_comparison_Mars_Mercury_Moon_Pluto_Haumea_-_no_transparency.png

என்ன கொடுமைடா சாமி.. எல்லாரும் ஒரு முடிவோடத்தான் கெள்ம்பிட்டாங்க போல இருக்கு. நம்ம அரசியல் வாதிகள் எல்லாம் சும்மா வெட்டிங்க.. வேஸ்டுங்க.. இவுங்க செய்யற அட்டூழியத்தைப் பார்க்கும் போது. யாரைப் பற்றி சொல்றேன்னு புரியுதா? மேலே சுகமா உலாவிட்டு இருக்காங்களே ஒன்பது பேர். அந்தக் கோள்களைத்தான் கூறுகிறேன். ஏதோ நாம தான் மேலே சொகமா இருக்கோமே, நாம ஏன் கீழே ஏற்கனவே சுத்தமில்லாத காற்று, கலப்படம் நிறைந்த உணவு, ஓசோன் சூடுன்னு எல்லா வகையிலும் அல்லல் பட்டுக் கொண்டு இருக்கும் மக்களைத் துன்பப் படுத்த வேண்டும் என்று நினைப்பதில்லை. நோய்களைப் பரப்பியே தீர்வோம் என்று கச்சைக் கட்டிக்கிட்டு அலையறாங்க.

http://tippinthescales.files.wordpress.com/2009/04/planets.jpg

நோய்களுக்கும் கோள்களுக்கும் தொடர்பு உண்டு என்பது நாம் எல்லோரும் அறிந்ததுதான். ஆனால் எந்தெந்த கோளுக்குச் சொந்தக்காரர் எந்தெந்த நோயை ஏற்படுத்துகிறார் என்பதைத் தெரிந்து கொள்வோமா? தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறோம் என்கிறீர்களா? அங்கு மட்டும் என்ன வாழ்கிறது? எவ்வளவு மோசமானவர்கள் மேலுலகத்தில் உள்ளனர் என்பதை அறிய வேண்டாமா? அதற்காகத்தான்!!!!குஷ்டம் என்ற தோல் தொடர்பான நோயை ஏற்படுத்துவதில் சூரியனின் பங்குதான் அதிகமாம். ஆம் இவர் தனிதொகுதியில் நின்று வெப்பம் தொடர்பான பவுத்திரம், குட்டம் நோய்களைத் தன் தொகுதி மக்களுக்கு வாரி வழங்குகிறார். இது மட்டும் போதாதென்று இவரே 7ஆம் வார்டில் (இடத்தில்) நின்று லக்கனத்தில் நிற்கும் ச்ந்திரனுடன் கூட்டணி அமைத்தும் குட்டம், வெண்குட்டம் ஆகிய நோய்பரப்புத்திட்ட்ப் பணியைத் துரிதமாகச் செயல் படுத்துகிறாராம்.

இருப்பதிலேயே சிறு தொகுதிக்காரர் புதன்தான். பாருங்க எத்துனூண்டு இருக்காருன்னு..

என்னதான் கடுகு சிறுத்தாலும் காரம் குறைவதில்லையே!! எட்டாம் எண் தொடுதியில் நிற்கும் இவர் வெண்குட்டத்துடன் நராம்புத்தளர்ச்சி, பக்கவாதம் ஆகியவற்றையும் சேர்த்துப் பரப்புவாராம். இவர் 6, 8 ஆம் வார்டுக்கு உரியவர்களான லக்கனாதிபதிகளுடன் கூட்டணி அமைத்தும் குட்ட நோய் பரப்பும் நடவடிக்கையை வெகு சாமர்த்தியமாக முடித்து விடுவாராம்!! அதுமட்டுமல்ல.. நம் அரசியல்வாதிகள் கூட ஒரு நேரத்தில் ஒரு கூட்டணியில் தான் இருப்பர். இவரோ தன் 6 ஆம் தொகுதியில் சந்திரன், சனி ஆகிய இருவருடன் மற்றொரு கூட்டணி அமைத்தும் குட்டம் பரப்பும் பணியை அதி தீவிரமாக மேற்கொள்ளுவாராம்.ஏழாவது வார்டில் சுக்கிரன், செவ்வாய் இருவரும் கேதுவுடன் உடன்படிக்கை செய்துகொண்டு இப்பணியைச் செவ்வனே செய்வார்களாம். இது போதாதென்று லக்கனாதிபதியுடன் சந்திரன், புதன் இருவர் கூட்டணியுடன் மேலும் சனியையோ செவ்வாயையோ சேர்த்துக்கொள்வார்களாம் இவ்வரும் பணியைச் செயல் படுத்த..சந்திரன், புதன், ராகு மூவரின் கூட்டணியைச் சனி பார்த்து விட்டால் அவர் பொறுக்க மாட்டார். உடனே அவர் முந்திக்கொண்டு இப்பணியைத் தன் கையில் எடுத்துக் கொண்டுவிடுவாராம்.


http://www.ilo.org/dyn/media/images/watermark/cn0141.jpg

இதைவிடப் பெரிய கொடுமை என்னவென்றால் எதிர்க்கட்சி அமைத்து செயல்படுவதிலும் நம்ம அரசியல் வாதிகளை மிஞ்சிவிடுகிறார்கள் இவர்கள். ஒன்பது கோள்களில் ராகு, கேது மட்டும் என்ன சளைத்தவர்களா? சந்திரனும், புத்திராதிபதியும் ஆறாவது தொகுதியில் நிற்கக் கண்டால்
இவர்கள் இருவரும் கூடி குட்டத்தை ஏற்படுத்துவதுடன், வாக்காளர்களுக்கு மரணத்தையே வாரிக்கொடுத்து விடுவாராம்.

http://wwwdelivery.superstock.com/WI/223/105/PreviewComp/SuperStock_105-W2324.jpg

போதுமடா சாமி என்று விட்டுவிட முடியவில்லையே! மற்றவர்களைப் பற்றியும் அவர்கள் செய்கிற அட்டூழியங்களைப் பற்றியும் அடுத்தப் பதிவில் பார்ப்போமா??

சனி, 10 ஏப்ரல், 2010

ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா?
ரேக்கி என்று சொன்னவுடன் கல்லூரி கலாட்டாக்கள் (Ragging) உங்கள் நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பு அல்ல. இல்லை ராக்கி கட்டும் உன்னதமான சகோதர உறவைக் காட்டும் ஹோலிப்பண்டிகை நினைவுக்கு வந்தாலும் அதற்கும் நான் பொறுப்பு அல்ல. இது வேறு..... இப்பொழுது பரவலாக ரேக்கி மருத்துவம் என்று பேசப்படுவதை அனைவரும் அறிந்து இருப்பர். ரேக்கி என்றால் என்னங்க? இது ஜப்பானியர்களின் புராதன மருத்துவக் கலை. இந்த மகா பிரபஞ்சத்திற்குள்ளே நாம் ஒரு சிறிய் அணுவாக உரைந்து இருக்கிறோம்.. (REI) என்றால் பிரபஞ்சம் என்று பொருள். (KI) என்றால் உயிர்ச்சக்தி என்று பொருள். இந்த பிரபஞ்சம் முழுவதும் பரவி உள்ளது இந்த உயிர்ச்சக்தியே. பஞ்ச என்றால் ஐந்து என்று பொருள் தரும். ப்ரபஞ்சம் என்பது நிலம், நீர், காற்று, தீ, ஆகாயம் என்ற ஐம்பூதங்களைக் குறிக்கும். பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உடல்களும் ஐம்பூதங்களால். ஆனவை.

நிலம் – உடல்
நீர் – இரத்தம்
காற்று – உயிர் சுவாசம் (பிராணவாயு)
நெருப்பு – சூடு (உடலின் மிதமான வெப்பம்)
ஆகாயம் – விந்து
இதனையே,

“அண்ட்த்தில் உள்ளதே பிண்டம்
பிண்ட்த்தில் உள்ளதே அண்டம்
அண்டமும் பிண்டமும் ஒன்றே
அறிந்துதான் பார்க்கும் போதே

என்று சட்டமுனி உரைக்கக்காணலாம். ப்ரபஞ்சத்தில் உள்ள
உயிர்கள் நலமாக இருக்க தேவையான சக்தியை அளித்திருக்கிறான் கடவுள். கடவுளின் கருணையால் பிரபஞ்சம் முழுவதும் பரவிக்கிடக்கிற பிரபஞ்ச சக்தியை
, உடலை அச்சக்தியை ஈர்க்கும் கருவியாக்கி, உடலின் மூலம் ஈர்த்து அதனை யாருக்கு எந்த அளவு தேவைப்படுகிறதோ அந்த அளவு பயன்படுத்துவது ரேக்கி என்றமருத்துவக் கலை. முறையான மருத்துவர் (Master) மூலமே சிகிச்சையும், பயிற்சியும் பெறுதல் மிக மிக அவசியம். இக்கலை ஐந்து நிலைகளாக பகுக்கப்படுகிறது.
அவை முறையே,

1. தூய்மைப்படுத்துதல் – (RINSING AND REFINING)2. சக்தியூட்டல் - (ENERGIZING0)3. தடை காப்பளித்து நலப்படுத்துதல் (நோய் எதிர்க்கும் சக்தி – IMMUNIZING)4. இணைத்தல் - (KINTTING – UNITING)5. கவசமளித்தல் - (INSULATING

தூய்மைப்படுத்துதல்


R – Rinse or clean - தூய்மைப் படுத்துதல் –
ரேக்கி மாஸ்டர், தான் ரேக்கி கலையைப் பயன் படுத்தும் முன்பு தன் உடல், மனம் ஆகிய இரு கருவிகளையும் சுத்தப்படுத்திக் கொள்வது மட்டுமன்றி நோயாளியும் இதே ஒத்த நிலையில் இருக்கச் செய்வது ஆகும்.


சக்தியூட்டுதல்


E – Energize or Activate - சக்தியூட்டுதல் - உலகில் உள்ள ஒவ்வொரு தனிமத்துள்ளும்(Element) மகத்தான பல சக்திகள் அமைந்துள்ளன. இந்த சக்திகளுக்கெல்லாம் ஆதார சக்திதான் ப்ரபஞ்சப் ப்ரணவ உயிர்ச்சக்தி. இந்தச் சக்தி இல்லையேல் உயிர்கள் இயங்க முடியாது. அப்படிப்பட்ட உயிர்ச்சக்தியைப் ப்ரபஞ்சத்தில் இருந்து பெற்று, அதை மற்றவர்கள் மீது செலுத்தும் அருட்பணியே சக்தியூட்டல் என்பதாம்.

தடைக்காப்பளித்து நலப்படுத்துதல்

I – Immunize or Stabilize - தடைக்காப்பளித்து நலப்படுத்துதல் – ப்ரபஞ்சத்தில் இருந்தே சக்தியை எடுத்து நோய்
எதிப்பாற்றலைப் பெருக்குதலாம்.


இணைத்தல்

K – Knit or Unite- இணைத்தல் – எதிர்ப்பாற்றலை உருவாக்கிய
பின் நோயைக் கண்டறிந்து நோயையும் அதற்குத் தேவையான ப்ரபஞ்ச சக்தியையும் இணைத்தல்.


கவசமளித்தல்

I – Insulate or protect - கவசமளித்தல் – பிணியின் தீவிரத்தைக்
குறைத்தல் அதாவது நோயைக் குணப்படுத்துதல் (
Healing).

இவை ஒவ்வொன்றுக்கும் குறியீடுகள் உள்ளன. அவற்றை வரைந்து அதற்கான உச்சரிக்கும் சொற்களும் உள்ளன. இந்தக் குறியீடுகளும் மந்திரச் சொற்களும் சுமார் 147 உள்ளன.அவற்றை உச்சரித்து அருகில் உள்ளவர்களூக்கு மட்டுமன்றி தொலைவில் உள்ளவர்களுக்கும் நோயைப் போக்கலாமாம். இன்னும் அடுத்த பதிவில் தொடரும்...

ஆதிரா..

வியாழன், 8 ஏப்ரல், 2010

நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!!


http://2.bp.blogspot.com/_hlxGFZiqsfg/SWdeV5XRb5I/AAAAAAAABpA/Kvyg4VC5Gm0/s400/noodles.jpg

என்னங்க இதுக்கும் தடை விதிக்க வந்துட்டீங்களான்னு பாக்கறீங்கள?!!!! இல்லைங்க தடையெல்லாம் இல்லை. கொஞ்சம் கவனமா சமையுங்கன்னு சொல்லிட்டுப் போகத்தான் வந்தேன்...

நாம பொதுவா அடுப்புல கடாயைப் போட்டு, அதில் எண்ணெயை விட்டு, எண்ணெய் சூடானவுடன் வெட்டிய காய்களைப் போட்டு நன்றாக வதங்கியவுடன்
அதில் நீரையும் பாக்கெட் மசாலாவையும் சேர்த்து, கொதித்தவுடன் நுடுல்சைப் போட்டு வேக வைத்து 2 நிமிடத்திகுள் (சுத்தப் பொய்!!!) சமைத்து விடுகிறோம்.

இப்போது விஷயத்திற்கு வருகிறேன். இந்த நுடுல்சின் புறப்பகுதியில் ஒரு மெழுகுக் கோட்டிங் (wax ) உள்ளதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். இது எளிதில் ஜீரணமாகாத கொழுப்புப் பொருள். நம் வயிற்றுக்குள் செல்லும் இந்த மெழுகு உடலில் இருந்து வெளியேற சுமார் நான்கு முதல் ஐந்து நாட்கள் ஆகின்றன.

http://dale311.files.wordpress.com/2009/10/ramen-noodles.jpg

எந்த ஒரு பொருளும் நான்கு நாட்கள் வயிற்றில் தங்குவது
வயிற்றுக்குத் தீங்கையே விளைவிக்கும். இதற்காக நூடுல்ஸ் சாப்பிடுவதை அடியோடு தவிர்க்கவா முடியும். அது அவசியமும் இல்லை. மீசை வைத்து
இருப்பவர்கள் கூழ் குடிக்காமலா இருக்கிறார்கள் (காபியைத்தான் சொல்கிறேன்!!!) மீசையில் படாமல் லாவகமாக குடித்து விடுகிறார்களே!!!...
அது போலத்தான் கொஞ்சம் மாத்தி யோசிக்கலாமே!

தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து அதில் நூடுல்சை மட்டும் போட்டு வேகவைக்க வேண்டும். நூடுல்ஸ் நன்கு வெந்த பிறகு தண்ணீரை வடிகட்டி கொட்டி விட வேண்டும்.

http://i446.photobucket.com/albums/qq190/gen_marple/ChickNoodleSoup.jpg

பிறகு வாணலியில் எண்ணெயை விட்டு காய்கள் போட்டு வெந்த வுடன் சிறிதளவு நீர், மசாலா போடி சேர்த்து, வெந்த நூடுல்சையும் சேர்த்து இரண்டு நிமிடத்தில் நூடுல்ஸ் தயாரிக்கலாம். இந்த முறையில் அதிகம் தீங்கு ஏற்பட
வாய்ப்பு இல்லையாம்...... சொல்லிட்டேன்.

எப்படி சமைத்தாலும் ஓரு வாரத்தில் ஒருமுறைக்கு மேல் சாப்பிடுவது உடல் நலத்திற்கு அவ்வளவு நல்லது இல்லை.. முக்கியமாக குழந்தைகள்....... கவனிப்பீர்களா தாய்மார்களே.......

உங்க வயிறு உங்க இஷ்டம்னு என்னால சொல்ல முடியல. தயவு செஞ்சு உங்களுக்காக இல்லேன்னாலும் எனக்காகவாவது இதைப் பின்பற்றுங்களேன்.... ப்ளீஸ்.......ஆதிரா..

செவ்வாய், 6 ஏப்ரல், 2010

காலையிலேயே பரோட்டாவா!!!!!ன்னு கேக்கரவங்களா நீங்க!!!”கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்”


இன்றும் ஒருசில மக்களிடம் குறிப்பாக பிராமணர்களிடம், காலையில் ஒன்பது அல்லது பத்து மணிக்குள் நன்றாக ஒரு கட்டு சாப்பாட்டை கட்டுவது, மதியம் சிற்றுண்டி, இரவு சற்று சத்து குறைவான, அளவு குறைவான, ஜீரணத்திற்கு ஏற்ப உண்ணும் வழக்கம் உள்ளது என்பது நாம் அறிந்தது. ஆனால் இம்முறை உடல் பேணும் ஒரு சிறந்த முறை என்பது நாம் அறியாதது..

ஸ்கூட்டி போன்ற செல்ஃப் (பட்டன் ஸ்டாட்) வண்டி வைத்திருப்பவர்களுக்குத் தெரியும். காலையில் முதல்முறை வண்டியை எடுக்கும்போது உதைத்து (கிக்)ஸ்டார்ட் செய்ய வேண்டும். பிறகு கிக் தேவையில்லை. பட்டன் ஸ்டார்ட் செய்து கொள்ளலாம். இம்முறையைப் பின்பற்றினால் வண்டி நீண்ட நாள் நல்ல கண்டிஷனில் இருக்க உதவும்.

இதேதானே உடலுக்கும். இந்த உடலாகிய வண்டியும் நீண்ட நெடு பயணம் (நிறை ஆயுளுடன்) தொடர வேண்டும் அல்லவா? நாம் சாப்பிடும் நாளின் முதல் உணவாகிய காலை உணவு நல்ல ஸ்ட்ராங்கா நாள் முழுவதும் சக்தி தருவதாக இருக்க வேண்டும். நம்மால் காலையில் முழுச்சாப்பாடு (சோறு) உண்ண முடியாது. நம் வழக்கம் அப்படி. ஆனால் நல்ல சக்தி தரும் சிற்றுண்டியை உண்ணலாமே.
http://recipes.malayali.me/wp-content/uploads/2010/01/IMG_7777-400x285.jpg

கோதுமையில் செய்யப்படுகின்ற பரோட்டா, சப்பாத்தி இரண்டும் உடலுக்கும் மனதுக்கும் உயனடியாகச் சக்தியைத் தருகிறது. நம் இட்லி, தோசையைவிட. இவை சோர்விலிருந்து தசைகளை மீட்பதிலும், நாடித்துடிப்பைச் சீராக்குவதிலும், மனதிற்கு உற்சாகத்தைத் தருவதிலும் மற்ற எந்த உணவையும் விட சிறந்ததாக உள்ளது என்கின்றனர் பஞ்சாப் வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் சத்துணவு நிபுணர்களான ஜே.எஸ்.சித்து, எஸ்.வெர்மா இருவரும்.பஞ்சாப் காரர்கள் அவர்கள் பக்கம் விளையும் பொருளைப்பற்றித்தான் கூறுவார்கள் என்றெல்லாம் தப்புக்கணக்குப் போடக்கூடாது. சுமார் 17 வகையான உணவு வகைகளைப் பயன்படுத்திய 80 குடும்பங்களில் நடத்திய ஆய்வின் முடிவு இது என்கின்றனர் இவர்கள்.

புரத்ச்சத்தைப் பொறுத்தவரை சப்பாத்திக்கும் பரோட்டாவுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. ஆனால் பரோட்டா தயாரிக்கும் போது அதில் உள்ள கொழுப்புச்சத்து வெளெயேறி விடுவதால் கலோரி மட்டும் அதிகரிக்கிறது. ஒரு பரோட்டாவில் 4 .2 முதல் 5கி வரை புரதச்சத்தும், 209 முதல் 258 கிலோ கலோரியும் பெற்றுள்ளது.


 http://i5.photobucket.com/albums/y152/boo_licious/misc4/chapati.jpg

100 கி பரோட்டாவில் சுமார் 18 .50 மி.கி. கால்சியம் அடங்கியுள்ளது. ஆனால் சப்பாத்தியில் 2 .28 மி.கி. புரதம், 69 கிலோ கலோரி மட்டுமே உள்ளன.

உழைக்கும் வர்க்கங்களுக்கு, அதிலும் உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்களுக்கு முறையான காலை உணவுக்குச் சப்பாத்தி, பரோட்டா இரண்டும் சிறந்தது. அதிலும் பரோட்டா மிகவும் சிறந்தது.... அவ்வளவுதான். ஆனால் இரவு உணவுக்கு வேண்டாமே பரோட்டா. சப்பாத்தி ஓகே.

இப்பவும் சொல்றேன் உங்க உடம்பு உங்க இஷ்டம்னு என்னால கண்டுக்காம இருக்க முடியாது. அதனால் உங்களுக்காக இல்லேன்னாலும் எனக்காகவாவது காலை உணவை நல்ல சத்துள்ள உணவா சாப்பிட்டு நாள்தோறும் நல்ல உற்சாகத்தோடு வேலை செய்ங்க...ப்ளீஸ்...ஆதிரா..

திங்கள், 5 ஏப்ரல், 2010

மனநிலையையும் புவி ஈர்க்குமா????

http://www.israelshamir.net/Images/Tsunami.jpg
புவி இயல் மாற்றம் மனிதனின் மன நிலையையும் ஈக்குமாம். குறிப்பாகத் தற்கொலை எண்ணத்தைத் தூண்டுகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள். 1948முதல் மூன்று பருவ நிலை மாற்ற காலங்களிலும் செய்யப்பட்ட பல்வேறு ஆய்வுகள் இதனை உறுதி செய்துள்ளதாக ரஷ்ய விஞ்ஞானி ஒவேக் ஷ்மிலோவ் கூறியுள்ளார். மைக்கேல் ரைகிராப்ட் என்ற ஐரோப்பிய விஞ்ஞானியும் 10 - 15% மக்களை புவியியல் மாற்றம் பாதிக்கிறது என்கிறார். 2006 ஆம் ஆண்டு ஆய்விலும் பருவ நிலை மாற்றனங்களின் போது அதிக் அளவில் தற்கொலைகள் நடந்துள்ளதாகக் கண்டறிந்துள்ளனர்.
A young boy holds up a sign that reads:
தென் ஆப்பிரிக்காவிலும் கடந்த 13 ஆண்டுகளில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவான போது மொத்த மக்கள் தொகையில் 36.2% பேர் மனநிலை பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டனர் என்கிறது ஒரு ஆய்வு.
A young boy waits for his lunch
நமது உடலின் இயங்கு தன்மை சுற்றுச்சூழலை அடிப்படையாகக் கொண்டது. அதனால் பருவ நிலை மாற்றங்கள் ஏற்படும் போது உடல் இயங்கு தன்மையிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இம்மாற்றங்கள் மன நிலயையும் பாதித்து தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு மன அழுத்தத்தைக் கொடுக்கிறது என்கின்றனர்.

A family mourns the death of their child
சுனாமியால் வீடு வாசல், மனைவி, மக்களை இழந்தவர்கள் கதறிய வேதனையை நம்மால் மறக்கத்தான் முடியுமா? அதனைத் தொலைவிலிருந்து கண்ட நமக்கே மனநிலை சிறிது காலம் கலங்கி இருந்தது.
A woman and her son carry bags as they walk amid the destruction in sumatra
உற்றார் உறவுகளை இழந்தால் இந்த இழப்பு மனநிலையை பாதிப்பது என்பதும், அணைப்பார் யாருமற்ற சூழலில் தற்கொலை எண்ணம் வருவது என்பதும் இயல்புதானே.ஆதிரா

ஞாயிறு, 4 ஏப்ரல், 2010

குடிநீர் குப்பி

http://store.weddingsolutions.com/wedding_store/images/medium/mini-TKB88047.jpg

நண்பர்களே நீங்கள் குடிநீர் குப்பி (mineral water bottle ) பயன் படுத்துபவரா???? கொஞ்சம் இதப்படிங்க!!!!!!![/b]
நாம் வங்கிப் பயன்படுத்தும் வாட்டர் பாட்டில்களில் சுற்றியுள்ள லேபிளில் (labil ) "பாட்டில்களை மீண்டும் பயன் படுத்தாதீர்கள் " (Crush the bottle after use) என்று எழுதியிருப்பதைப் படித்து இருக்கிறீர்களா? படித்ததைச் செயல்படுத்தி இருக்கிறீர்களா? வகை வகையாக பிரிட்ஜ்ஜில் பாட்டில்களைச் சேமித்து வைத்து இருப்பீர்களே!!! இதைப் படிங்க முதல்ல.
இது சமீபத்தில் துபாயில் நடந்த ஒரு சம்பவம். ஒரே மினரல் வாட்டர் குப்பியைப் பதினாறு மாதங்கள் பயன்படுத்திய பனிரண்டு வயது சிறுமி பரிதாமாக உயிர் இறந்தாள்.

இன்றைய காலகட்டத்தில் பயணத்தின் போது கையில் தண்ணீர் கொண்டு செல்லும் வழக்கம் மறைந்தே போய விட்டது. கை வீசிக் கொண்டு கிளம்பிச் செல்வதும், ஆங்காங்கு கடைகளில் கழுத்தில் சுரூக்கிட்டுத் தொங்கும் மினரல் வாட்டர் பாட்டில்களை வாங்கிக குடிப்பதும் நாகரிகமாகி விட்டது. இதனால் சுருக்கு உங்கள் கழுத்துக்குத்தான். தெரிந்து கொள்ளுங்கள்.
பாட்டில் நாகரிகத்தைப் பின்பற்றும் எவரும் அந்தப் பாட்டிலில் குறிப்பிட்டுள்ள அறிவுரைகளைப் படிப்பதும் இல்லை. படித்தாலும் பின்பற்றுவதும் இல்லை. இந்த குப்பிகளைச் சேகரித்து வைத்து சிறுவர் முதல் பெரியவர் வரை பள்ளிக்கும, அலுவலகத்துக்கும் குடிநீர் கொண்டு செல்லப் பயன் படுத்துகின்றனர். ஏன் பிரிட்ஜில் குளிர் நீர் சேமிப்பதற்கும் இவற்றைப் பயன் படுத்துகின்றனர். இன்னும் கூறப்போனால் பல இல்லங்களில் தண்ணீர் அருந்த டம்ப்ளர்களைப் பயன் படுத்தும் வழக்கம் கூட குடிநீர் குப்பிகளாக மாறி விட்டது.
எல்லா பிளாஸ்டிக் (நெகிழியினால்) ஆன
பாட்டில்களையும் பெட் (pet ) என்பர். சான்று ஸ்ரிபெட் பாட்டில்கள். பெட்(pet ) என்பது பாலி எததிலின் டேரப்தலேட் (Polyethylene terephthalate) என்பதின் பெயர் சுருக்கம் ஆகும். இந்த பெட் என்னும் ரசாயனப் பொருளில் டை- எத்தில் ஹைட்ரக்சின் அமைன் (diethyl hydraxylamine or DEHA) என்ற
ரசாயனப் பொருளும் கலந்துள்ளது. இந்த டெகாவில் (DEHA ) தான் ஒளிந்து இருக்கிறது புற்று நோய்க்கு வித்திடு பேராபத்து
. குப்பிகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதால் பாட்டிலின் மூலப்பொருளான டெகா பிரிந்து தண்ணீரில் கலக்கிறது. அதிலும் வெந்நீரை ஊற்றி வைக்கும் போது இதன் வீரியம் இன்னும் கலை கட்டுகிறது . இந்தப பாட்டில்களை அதிகபடியாக ஒரு வாரத்திற்கு மேல் பயன் படுத்துவது ஆபத்தை விளைவிப்பதாகும்.

நாம் கவனிக்க வேண்டியது:


வாட்டர் பாட்டில்களை வாங்கும் போது கண்டிப்பாக நாகவனிக்க வேண்டியது, அதன்அடிப்பகுதியில் ஒரு முக்கோணமும் அதனுள் ஒரு எண்ணும் பொறிக்கப் பட்டிருக்கும். இந்த எண் ஐந்துக்கு மேல் இருந்தால் மட்டுமே பாட்டில்கள் தொடர்ந்து பயன் படுத்துவதற்குப் பாதுகாப்பானது. எண் ஐந்திற்கு குறைவாக

இருப்பின் கண்டிப்பாக ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தக் கூடாது. ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய (use and throw) குப்பிகளில் எண் ஐந்திற்குக் குறைவாகத்தான் இருக்கும். பெரும்பாலும் எண் ஒன்று (1 ) தான் இருக்கும்.
http://3.bp.blogspot.com/-NiSVH6EO2Ik/TirREQb1QWI/AAAAAAAAAQo/q3mrKvvLzfU/s320/bottles.jpg
இக்குப்பிகளில் அடைபடும் தண்ணீருடன் இந்தக் குப்பிகளின் கெமிகல் எளிதாகக கலந்து விடும் தன்மையது.
பிளாஸ்டிக் குப்பிகளால் ஆபத்து அதில் அடைக்கப்பட்டுள்ள தன்நீருக்கல்ல; அதனை மீண்டும் மீண்டும் பயன்படுத்தப் போகும் உங்களுக்குத்தான். அலட்சியம் வேண்டாம். அல்பத்தனமும் வேண்டாம் நண்பர்களே. வரும் முன் காப்போம். நன்றி குமுதம் ஹெல்த்


மனசு லேசாகனுமா?? ஸ்ஸ்ஸூ.... ரகசியம்ம்ம்ம்....

http://www.istockphoto.com/file_thumbview_approve/720249/2/istockphoto_720249-elderly-couple-hugging.jpg
பேச்சுலர் வாழ்க்கை இன்பமானாது. திருமணம் செய்து கொண்டால் நாலா புறத்தில் இருந்தும் தொந்தரவு வருகிறது. இதனால் மன அழுத்த நோய் வருகிறது என்கின்றனர் பலர். இந்நோய்க்கு மருந்து தேடி மருத்துவ மனைக்கு அலைகின்றனர். ஆனால மருத்துவர்களோ, கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலையும் கதை இது என்கின்றனர்.
இணயர்களில் (தம்பதி) ஒருவருக்கு மன அழுத்த நோய் இருந்தால் மற்றவரிடம் இருக்கிறது அதற்கு மருந்து. இல்லை இல்லை மற்றவரேதான் மருந்து. துணையின் அன்பான அணைப்புதான் இந்நோய்க்கு அருமருந்தாம். இதை உலக நாயகன் வார்த்தையில் கூறவேண்டுமானால் கட்டிப்பிடி மருத்துவம்.

வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு

http://farm4.static.flickr.com/3257/3244763186_1a083bd70f.jpg?v=1233509879
காற்றுக்குகூட இடம் கொடாது முயங்க வேண்டும் என்று தெய்வப்புலவர் அன்றே கூறியுள்ளதும் இதனால்தான். (வளி - காற்று, முயக்கு - அணைப்பு). அதை விட்டு
விட்டு இன்பம் எங்கே?? இன்பம் எங்கே???... என்று தேடி அலைவது எல்லா வகையிலும் பேராபத்தையே விளைவிக்கும்.
சுவிட்சர்லாந்தின் ஜூரிஜ் பல்கலைக்கழகத்தின் டாக்டர் வீட்டிசன் 51 இணையர்களிடம் நடத்திய ஆய்வின் முடிவு இது. வாரத்தில் ஒரு சில முறைகளாவது தம் துணையைக் கட்டி அணைப்பது, முத்தமிடுவது, உடலுறவு கொள்வது ஆகிய இவற்றால் மன அழுத்தம் குறைகிறது என்கிறது இவ்வாய்வு.

http://i9.photobucket.com/albums/a94/krzy4evr/myspace%20graphics/1_old_couple.jpg
மேலும் அலுவலக பிரச்சனை, வெளிப்பிரச்சனை, வீட்டுப்பிரச்சனை என்று எந்தப் பிரச்சனைகளையும் படுக்கையறைக்குள் நுழைய விடாமல் நோ எண்டிரி போர்டு மாட்டிவிட்டால் மனதிலிருந்தும் எல்லா பிரச்சனைகளும் அகன்று விடுமாம்.ஒருவர் ஒருவரை அன்பாக நடத்தும் தம்பதிகளுக்கு மன அழுத்ததிற்குக் காரணமான கார்டிசல் என்ற ஹார்மோன் குறைவாகச் சுரக்கின்றது என்று கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால் மன அழுத்தத்தைக் குறைத்து விடுகிறேன் பேர்வழி என்று ஏதோ எந்திர கதியில் செயல் பட்டால் மூச்சுதான் முட்டுமே ஒழிய இம்மருத்துவம் நோய் தீர்க்க ஒருபோதும் பயன்படாது. மேலும் மன நோயை அதிகரிக்கவே செய்யும். சிவனே என்று இருந்து இருக்கலாமே என்று எண்ணி பின்னால் வருந்தவும் நேரிடும்.
http://images.veer.com/IMG/PIMG/MPP/1559039_P.jpg

ஒருவரை ஒருவர் காதலுடன், அன்பாக, ஆறுதலாக, ஆத்மார்த்தமாக அணைப்பதே மனநோயைப் போக்கும் இன்பமான உயர் மருத்துவமாம்.


ஆதிரா