“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

திங்கள், 14 பிப்ரவரி, 2011

காதல் செய்ய காலம் எது??


http://www.funnydb.com/img/glitter-graphics/love/014.gif

ஏபரல் முதல்தேதிக்கும் பிப்ரவரி 14 ஆம் தேதிக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. கண்டுபிடிங்க பார்க்கலாம். நீங்க காதலர்க்களாக இருந்தால் கண்டிப்பாக இதைக் கண்டுபிடிக்க முடியாது. இல்லாவிட்டால் கண்டுபிடித்து இருப்பீர்களே.. ஆமாம்... அதேதான்.. அதேதான். இரண்டும் முட்டாள்கள் தினம்தான்.

காதலர் தினத்துக்கு எனக்கு ரிங் கொடுப்பீங்களா என்று காதலி கேட்டவுடன், ம் கண்டிப்பா கொடுக்கறேன். லேண்ட் லைன்ல இருந்தா மொபைல்ல இருந்தா? ன்னு காதலன் கேட்கத் தொடங்கிய அன்றிலிருந்தே ஏமாற்றத் தொடங்கி விடும் காதலனும், கிரீன் கலர் சூரிதார் போட்டு காதலுக்குக் கிரீன் சிகனல் காட்டலாமா இல்லை இன்னும் கொஞ்சம் நாட்கள் ஏதோ மாதிரி தெரு தெருவா அலைய விடலாமா? என்று திட்டமெல்லாம் போட ஆரம்பித்து விடும் காதலியும் கொண்டாடும் காமத்திருநாள் காதல் திருநாள். காதல் மோகம் தீர்ந்து புளித்துப் போனவுடனேதான் புரிகிறது அது ஒரு மாயவலை என்று.

காதலர் தினம் பிப்ரவரி 14, குழந்தைகள் தினம் நவம்பர் 14. இது என்னடா சாமி. ஏபரல் சொன்னீங்க, பிப். 14 சொன்னீங்க. இப்ப நவம்பர் 14 சொல்றீங்க. இதுவும் முட்டாள்கள் தினமா என்றால் இல்லை. இல்லவே இல்லை. பத்து மாதங்கள் கழித்து காதலர்களின் குவா குவா கொண்டாடும் நாள் இது. ஆனால் அந்தக் குவா குவா இந்நாளை கொண்டாடுமா? அல்லது கொண்டாடும் முறையில் காதல் அமைகிறதா? என்பதுதான் இன்று நம் முன் இருக்கும் வினாக்கள்.

காய்ச்சல் வந்தவரின் அருகில் சென்றால் காய்ச்சல் தொற்றிக்கொள்வது போல காதல் அயல் நாட்டில் இருந்து நம்நாட்டுக்குத் தொற்றிக்கொண்டு விட்டது. இது ஒரு தொற்று நோய் போல பரவியுள்ளது

விழி
இருந்தும்
வழி இல்லாமல்
மன்னன் பழி
தாங்கிப் போகிறேன்.
விழி இழந்து
பார்க்க வழி இழந்து, நின் மன
வலி தாங்காது கதறும்
ஒலி கேட்டும், உனை மீட்க
வழி தெரியாமல்
மக்களுக்காக
பலியாடாகப்
போகிறேன் - நீ
ஒளியாய் வாழு!
பிறருக்கு
வழியாய் இரு!!
சந்தோஷ
ஒளி உன் கண்களில்
மின்னும்!!

-உன்னுடைய வலண்டைனிடமிருந்து!
http://1.bp.blogspot.com/_NA1Wz33mz5Q/TEFNn06ynXI/AAAAAAAAAAk/0pMk2GUJNls/s1600/st-valentine.jpg

நன்றாக இருக்கிறதா? இந்த காதல் கவிதையே இன்றைய நம் கலாச்சார சீரழிவுக்குப் பாதை வகுத்துக் கொடுத்த கவிதை. ஆம் பாதிரியார் வாலண்டைன் எழுதிய காதல் கவிதை. காதலை எதிர்த்த ஒரு மன்னனுக்கு எதிராக காதலர்களை வாழவைத்த ஒரு பாதிரியாரின் நினைவு நாளைக் காதலர் தினமாக இன்று உலகமே கொண்டாடுகிறது.

கொடுரமாகவும் கோமாளித்தனமாகவும் ஆட்சி புரிந்த ரோமானியச் சக்கரவர்த்தி கிளாடியின் முட்டாள் தனமான கட்டளைகளால் அவனை
விட்டு விலகிப் போயினர் அவனது இராணுவ வீரர்கள். புதிய இராணுவ வீரர்களை அவனால் சேர்க்க முடியவில்லை. யாரும் முன் வந்து இராணுவத்தில் சேர மறுத்து விட்டார்கள். அவனது மந்திரி
பரிவாரங்களும் வீரர்களைச் சேர்ப்பதற்கான ஆக்கபூர்வமான ஆலோசனைகள் எதையும் அவனுக்குக் கொடுக்கவில்லை. இதனால் எரிச்சல் உற்றான் கிளாடி. துனது அந்தரங்க நாயகியுடன் சல்லாபமாக இருந்த நள்ளிரவொன்றில் எரிச்சல் உற்ற மறை கழன்ற ரோமானியச் சக்கரவர்த்தி கிளாடி-2 இன் மனதில் - திருமணமானவர்கள் தமது அன்பு மனைவியை விட்டு வர மனமில்லாமலும், திருமணமாகாதவர்கள் தமது காதலியை விட்டு வர மனமில்லாமலும் இருப்பதாலேயே இராணுவத்தில் சேரத் தயங்குகிறார்கள். இவர்களுக்கு எல்லாம் குடும்ப வாழ்க்கை என்ற ஒன்று இல்லாத பட்சத்தில் இவர்கள் மனம் வெறுத்து இராணுவத்தில் சேருவார்கள். போரிலும் மூர்க்கத் தனமாய் போரிடுவார்கள். வெற்றி எளிதில் கிட்டும். என்றதொரு முட்டாள் தனமான எண்ணம் தோன்றியது. உடனேயே நள்ளிரவு என்றும் பாராமல் தன் அந்தரங்க அமைச்சரை அழைத்து "ரோமாபுரி நாட்டில் இனி யாருமே திருமணம் செய்யக்
கூடாது. ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்களும் ரத்துச் செய்யப் படவேண்டும். இவ்வரச கட்டளையை மீறுபவர்கள் யாராயினும் கைது
செய்யப் பட்டு இருட்டுச் சிறையில் அடைக்கப் படுவார்கள். பின்னர் அறிவிக்கப் படும் ஒரு நாளில் பொது இடத்தில் வைத்து கல்லால் அடித்து தலை துண்டிக்கப் பட்டுக் கொல்லப் படுவார்கள்." என்ற அறிவிப்பை மக்களுக்குச்ம் சொல்லும் படி பணித்தான். அரசனை மீற வழி தெரியாத அமைச்சர் அதை அறிவித்தார்.

இந்த அறிவிப்பைக் கேட்டு மக்கள் அதிர்ந்தார்கள்। இருமனங்கள் இணைவதை அரசன் அறுத்தெறியத் துணிந்த போது திருமணங்கள் கனவாகிப் போன சோகத்தில் ரோமாபுரி சோகக் கண்ணீரில் மிதந்தது. அரசனின் இந்த முடிவு

http://2.bp.blogspot.com/-aL2dP7ecIYA/TVknL2-G5_I/AAAAAAAAArY/ki4btm653HU/s1600/St-Valentine-Kneeling-In-Supplication.jpg

அநியாயம் என்று சொல்லிக் கொதித்தெழுந்த கிறிஸ்தவ பாதிரியார் வலண்டைன் அரச கட்டளையை மீறி இரகசியத் திருமணங்களைச் செய்து வைத்தார். இந்தச் செய்தி அரசனுக்கு எட்டி விட வாலண்டைன் கைது செய்யப்பட்டு இருட்டுச் சிறையில் அடைக்கப் பட்டு மரணதண்டனை விதிக்கப் பட்டார். அவர் சிறை வைக்கப் பட்டிருந்த காலத்தில் சிறைக்காவல்
தலைவனின் கண் தெரியாத மகளான அஸ்டோரியசுக்கும் பாதிரியார் வாலண்டைனுக்கும் இடையில் காதல் என்னும் அன்பு பூத்தது.அஸ்டோரியஸ் பாதிரியாரை சிறையிலிருந்து மீட்க முயன்றாள். இதையறிந்த அரசன் அஸ்டோரியசை வீட்டுச்சிறையில் வைத்தான். கண்கள் கிடைத்து விட்டது போன்ற மகிழ்ச்சியில் திளைத்திருந்த அஸ்டோரியஸ் கனவுகள் சிதைந்ததில் கலங்கினாள். ஆனால் வலண்டைனுக்கான மரணதண்டனையில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை.ன்அஸ்டோரியசுக்கு ஒரு காகித அட்டையை வரைந்து விட்டு தண்டனையை ஏற்க அவன் தயாரானான். வலண்டைன் கல்லால் அடிக்கப் பட்டு சித்திரவதை செய்யப் பட்டு தலை துண்டிக்கப் பட்ட அந்தநேரத்தில் அந்தனை கட்டுக் காவல்களையும் மீறி வலண்டைனிடமிருந்து
வந்த அந்த அட்டையின் வரிகளை தோழி வாசிக்க அஸ்டோரியசின்
கண்களிலிருந்து கண்ணீர்ப் பூக்கள் சொரிந்தன. அந்தக் அட்டையிலிருந்த கவிதை வரிகள்தான் இவை.

ஆனால் தமிழர்கள் எந்தக் காலத்திலும் காதலை எதிர்த்ததில்லை ஆண்டாண்டு காலமாய்க் காதலுக்கு மரியாதை தந்த இனம் தமிழினம்। கடைக்கண் பார்வை வீசிப்பிடிக்கும் காதலுக்கு இலக்கணம் வகுத்த இனம் தமிழினம்। காதலர்கள் ஒரே காதலில் நின்று அடுத்தக் கட்டமானகற்பு என்ற திருமணத்தில் இணையப் போதிய வழிகளையும் சொல்லித் தந்த இனம் நம்மினம்। காட்சி, ஐயம், குறிப்பறிதல், ஊடல், கூடல், என்று தொடங்கி, காதலனுடன் ஓடிப்போவதற்குக் கூட ‘உடன் போக்கு’ என்று அழகான இலக்கணத்தைச் சொல்லவில்லையா நம் தொல்காப்பியர்। அந்த இனம் இன்று இந்த அந்நிய சடங்கினை ஏற்று நம் பெருமையைக் குலைத்து வருகிறது। இன்று பிரச்சனை வந்த பிறகு காதலை வாழ வைத்த வாலைண்டைனைத் தெரிந்த அளவு, காதலர்களுக்கு தொல்காப்பியரைத் தெரியல்லை.
“பாலொடு தேன்கலந்தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்”
முத்தச்சுவையை இதைவிட அழகாக யாரால் சொல்ல முடியும். இனிய சொற்களைப் பேசுகின்ற என் காதலியாகிய இவளின் வாயில் இருந்து ஊறிய நீர் பாலும் தேனும் கலந்த சுவை என்று கூறவில்லையா திருவள்ளுவர்?
இனிக்க இனிக்கக் காதலுக்கு அழகிய இலக்கணம் வகுத்துக் கொடுத்தவர்கள் தொல்காப்பியரும் திருவள்ளுவரும் என்பதும் எத்தனைப் பேருக்குத் தெரிந்திருக்கிறது.
இளசுகளின் இன்ப நாளான காதலர் தினத்தை ஏன் இப்படி குறை கூறுகிறீர்கள்
என்று பலர் கேட்பது புரிகிறது. இன்றைய காதலர்கள் என்ன அம்பிகாபதி-அமராவதி, லைலா மஜ்னு போல அமரத்துவமாக, ஆழமாக காதல் செய்கின்றனரா? காதல் என்பது ஒரு ஃபாஷன் ஆகிவிட்டது. கேட்டால் காதல்
என்பது காய்ச்சல்போல... வரும், பிறகு போய்விடும் ஆண்டுக்கொருமுறை வரும் ஆனால் ஆறு மாதத்தில் போய்விடும் என்கின்றனர் இன்றைய தலைமுறையினர். இந்த ஜுரம் வரவில்லைஎன்றால் அவன் ஹியூமனே இல்லை என்ற எண்ணமும் வந்து விட்டது. ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவன் முதல் (வாசகர்கள் சந்தேகமிருந்தால் ஆசிரியர்களைக் கேட்டு உறுதிப் படுத்திக்கொள்ளலாம்) அவனுக்கு ஒரு டாவு இல்லை என்று வைத்துக்கொள்ளுங்கள். அது அவனுக்குப் பெருத்த அவமானம். அவனைச் சக மாணவர்கள் மதிப்பதில்லை.

இப்படிப்பட்ட சீறழிவுகளுக்கெல்லாம் யார் ரோடு போட்டுக் கொடுக்கிறார்கள்? வேறு யார்.. வியாபாரிகள். இதெல்லாம் வியாபார நுணுக்கம்.. ஆம் ரோஜாப்பூக்களில் தொடங்கி, கிஃப்ட் ஆர்ட்டிக்கள் என்று நீண்டு இன்று நட்சத்திர விடுதிகள் வரை காதலர் தின ஸ்பெஷல் என்று எதையாவது அறிவித்து லாபத்தைக் கொழித்துக்கொண்டு இருக்கின்றன.
http://preview.canstockphoto.com/canstock0837780.png

வாழ்த்து அட்டைகள் வியாபாரம் அமோக வியாபாரம் அன்று. ஹால்மார்க்
நிறுவனம் மட்டுமே சுமார் 200 மில்லியன் வாழ்த்து அட்டைகளைத் தயாரிக்கின்றனவாம். நம் குழந்தைகள், இன்றைய பெரும்பான்மையான காதலர்கள் குழந்தைகள்தான். கால்ப்பகுதியில் கிழிந்து போன பேண்டைப் போட்டுக்கொண்டு அதை டான் செய்ய இருபது ரூபாய் செலவு செய்ய முடியாத குழந்தைகள் (காதலர்கள்) வாழ்த்து அட்டைகளை 50 ரூபாய் 100 ரூபாய் கொடுத்து வாங்கி தன் காதலியான மாணவிக்கு கொடுக்கின்றனர்.

அன்றைய தினம் கொடிகட்டிப் பறக்கும் வியாபாரம் ரோஜாப்பூக்களின் வியாபாரம். இதைக் கொடுப்பதில் ஏழை பணக்காரர்கள் என்ற வேறுபாடு இல்லை.
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcS5G3i-WalgRGCdPO5KcJfLXnRsF2XveGLNJrZ58wiMEDA9c0cJ&t=1
இவை தவிர பரிசுப்பொருள்கள் வியாபாரம். கண்ணாடியால் ஆன இதயம், இதயத்தைக் குத்திக்கிழித்துக்கொண்டு போகும் அம்பு, என்று எல்லாம் இதயத்தையே குறிவைக்கும். காதல் தோல்வி ஏற்பட்டு உடையப்போவது உங்கள் இதயம் என்பதை சிம்பாளிக்காகச் சொல்லும் உத்தியுடன் ஆக்கப்பட்ட
பரிசுப்பொருள்களின் அணிவகுப்பு. வாழ்த்து அட்டையில் இதயம், கேக்கில் இதயம் என்று தொடங்கி இன்று காதலர் தினத்தன்று ஹோட்டலில் இட்லியிலும் தோசையிலும்கூட இடம்பிடித்து விட்டது இதயம்.

பிப்ரவரி மாதத்தில் ரெஸ்டாரண்ட்கள் நிரம்பி வழிகின்றன. அலுவலக வேலை, பிற வேலைகள் என்று அவசரமாக எந்த ஊர் சென்றாலும் காதலர்கள் அல்லாதவர்கள் பிளாட்பாமில்தான் தங்க வேண்டும்.

அன்று போலிஸ் காரர்களுக்கும் மஜாய்தான். சில்லரை வாங்கும போலிஸ்காரர்களுக்கு அந்த மஜாய். வாங்காத போலீஸ்காரர்களுக்கு, சாதனை செய்ததாய் ஒரு நான்கு ஜோடிகளை அத்து மீறி பொது இடத்தில் நடந்து கொண்டனர் என்று உள்ளே தூக்கிப் போடும் மஜாய்.

பூங்காக்கள், சினிமா அரங்கங்கள், கடற்கரை தோறும் முகத்தோடு முகம் வைத்து, ரஜினி பாணியிலும் கமல் பாணியிலும் முத்தம் கொடுப்பவர்கள், முகம் காட்டி, முகம்காட்டாமல் முதுகு மட்டும் காட்டி, வெட்கியும், வெட்கமற்றும் காதலர்களின் போஸ் கொடுக்கும், சூடான வண்ணப்படங்கள் நிரம்பிய நாளிதழ்கள். வியாபார தந்திரத்தில் அவைகள் மட்டும் என்ன குறைந்தா போய்விடும்.

காட்சி ஊடகமான தொலைக்காட்சியின் அரிய சேவை கேட்கவே வேண்டாம்.,
காதலர்கள் தினம் தேவையா? தேவையில்லையா? என்று நிகழ்ச்சி தயாரித்து விடும். கோபிநாத்தும் நடுவில் நின்று உசுப்பேற்றி உசுப்பேற்றிக் காதலர்களையும் காதல் எதிர்ப்பாளிகளையும் மோத வைத்து, ரணகளப்படுத்தி மரணப்படுக்கையில் தள்ளியேவிடுவார்.

கேட்கிறார்களோ கேட்கவில்லையோ நாங்கள் ஊதும் சங்கை ஊதியே
தீருவோம் என்று சில அமைப்புகளின் எதிர்ப்புக் குரல்கள் இத்தனையும் மீறி காதல் தேவைதானா என்றால் தேவைதான்। ஆனால்அது எப்போது। நம் வயிற்றுப் பாடு நிறைவேறி வளமான வாழ்வுக்கு அடித்தளமிட்ட பின்பு அது தேவைதான்। அப்படின்னா எப்ப காதலிக்கலாம்। பள்ளிப்பருவம், கல்லூரிப்பருவம் முடித்து ஒரு அலுவலில் அமர்ந்து காதலிக்கு உங்கள் சொந்தப் பணத்தில் ஒரு பரிசுப்பொருள் வாங்கித்தரும் அளவில் உங்கள் வாழ்க்கைத்தரம் உயர்ந்தபின்பு காதலித்தால் உங்கள் காதல் வெற்றிபெறும்। அதை விடுத்து “ஏய் மச்சி ஏப்படியாவது ஒரு 200 ரூபாய் ஏற்பாடு பண்ணித்தாடா। காதலர் தினத்துக்கு என் ஆளுக்கு ஏதாவது வாங்கித் தரனும்டா“ன்னு கேக்கர நிலைமையில் காதல் தேவையா என்று சிந்திக்க வேண்டியது இன்றைய காதல் செய்யும் இளைய தலைமுறையின் முறையான, முக்கியமான, முதன்மையான கடமை। சிந்தியுங்கள் காதலர்களே!!
நன்றி குமுதம் ஹெல்த்

32 கருத்துகள்:

 1. அப்பா எவ்ளோ பெரிய அலசல்? அருமையாக இருக்குங்க! நேரமிருந்தா நம்ம வீட்ட வாங்க!!

  பதிலளிநீக்கு
 2. இரண்டாம் வகுப்பு மாணவமாணவிகளே காதலிக்கிறாகள் (பார்க்க மதுரை சரவணன் பதிவு)ஆண் பெண் நட்பாளர்களுக்கும் காதலர்களுக்கும் HAPPY VALENTINES DAY. FOR THOSE WHO ARE SINGLE HAPPY INDEPENDSNCE DAY.

  பதிலளிநீக்கு
 3. காதலர் தினத்துக்குள் இத்தனை விஷயங்கள் இருக்கின்றனவா?
  அருமை!

  பதிலளிநீக்கு
 4. ஆதிரா வணக்கம்... முனைவர் ஆய்வு அறிக்கைகளை சமர்ப்பித்து இருப்பீர்கள்...வாழ்த்துக்கள்...

  காதல் காதல் காதல் ...காதல் போயின் சாதல் ..பாரதி பாடியதும்.
  கண்ணோடு கண்ணினை நோக்கு.... அய்யனின் குறளும் ,
  அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்—கம்பன் போற்றியதுமான
  நித்ய காதலை ஏற்கும் அதே நேரம்

  அன்னிய நாட்டிலிருந்து நுழைந்த .கிரீட்டிங் கார்டு தற்காலிக காதல் கலாச்சரத்தை ஒழிக்க வேண்டும்...
  விவரமான பதிவு .. வாழ்த்துக்கள்.....
  சரி எப்ப ஊசி போட ஆரம்பிக்கிறிங்க...( எங்களுக்கு டாக்டர்ன்னாலே ஊசிதான் ஞாபகம் வரும்.....)

  பதிலளிநீக்கு
 5. அன்புள்ள மாத்தி யோசி,
  முதன் முதல் வந்திருக்கிறீர்கள். தங்கள் பாதம் இக்குடிய்லில் பதிந்தமையில் மனம் மகிழ்ந்தேன். தங்கள் கருத்தும் பதிந்ததில் தேன்மழையில் நனைந்த அனுபவம். மிக்க நன்றி. தங்கள் வீட்டுக்கு வந்து என்னை பதிவு செய்துவிட்டேன். மீண்டும் வருவேன்.. மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 6. அன்புள்ள ஷண்முகவேல,
  முதல் வருகை. முதல் பதிவு. இரண்டும் இனிய மகிழ்ச்சி. முதல் வருகைக்கும் முதல் கருத்துக்கும் மிக்க நன்றி. மீண்டும் தங்கள் வருகையை எதிர்நோக்கி..அன்புடன்..

  பதிலளிநீக்கு
 7. அன்புள்ள பாலசுப்ரமணியன் ஐயா, வணக்கம்.

  //இரண்டாம் வகுப்பு மாணவமாணவிகளே காதலிக்கிறாகள் (பார்க்க மதுரை சரவணன் பதிவு)//

  உண்மைதான் தாங்கள் சொல்வது.

  //FOR THOSE WHO ARE SINGLE HAPPY INDEPENDSNCE DAY.//

  என்ன அருமையான வாழ்த்து ஐயா. சுதந்தரமாக வாழும் அன்பர்கள் சார்பில் நன்றி கூறுகிறேன்.

  அழகான கருத்துக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 8. அன்புள்ள சென்னை பித்தன்,
  வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 9. அன்புள்ள நாகசுப்ரமணியன் அவர்களே,

  முதல் வருகைக்கு மிக்க நன்றி. ஆம் காதலர்கள் வேண்டுமானால் தவறாகலாம். காதல் என்றும் தவறானது இல்லை. அதனால்தான் தமிழர்கள் காதலைக் கண்ணாகக் கொண்டனர். வாழும். காதல் சார்பில் மிக்க நன்றி தங்களுக்கு. மீள் வருகையை எதிர்நோக்கி.... அன்புடன்..

  பதிலளிநீக்கு
 10. அன்புள்ள பத்மநாபன்,
  வருக! நலம்தானா? ஆய்வேடு இன்னும் சமர்ப்பிக்கவில்லை. நடுவில் கொஞ்சம்... ரிலாக்ஸ். இந்தக் கட்டுரையை பதிவிட வேறு நேரம் அத்துனைப் பொருத்தமாக இருக்காதே. அதானால்தான். குமுதம் ஹெல்த்தில் வந்தது. இங்கு பதிய வேண்டாமா?

  கண்டிப்பாகக் களைய வேண்டிய அந்நிய கலாச்சாரத்தால் இளம் மனதுகளில் விளைந்துள்ளன வேண்டாத களைகள். நெஞ்சு பொறுப்பதி(க்கவி)ல்லை.. ஒரு ஆசிரியராக....

  இன்னும் கொஞ்ச நாள்..பொறுத்துக்கோங்க சார். ஊசியோட வந்து.. மருத்துவம் பாக்கறேன்.

  உங்க வலைப்பதிவுகளையெல்லாம் படிக்க முடியாமல் இருப்பது எதையோ இழந்த மாதிரி இருக்கிறது. விரைவில் வந்துவிடுகிறேன்..நீண்ட இடைவெளிக்கு மன்னிக்கவும் சார்.

  பதிலளிநீக்கு
 11. அமர்க்களமான பதிவு. வாலண்டைன் பாதிரியார் பற்றிய குறிப்புகளும் அவருடைய கவிதையும் சூப்பர்!
  மீட் பண்ணுவதற்கும் பரிசுகள் பெறுவதற்கும் ஏதாவது காரணம் வேண்டாமா ஆதிரா! அதற்குத்தான் காதலர் தினம். காதலெனும் தேர்வெழுதி பரிசுபெற்ற மாணவன் நான்! ;-) ;-)
  காதலுக்கு ஜே! ... ம்.ம்..ம்... தமிழ்க் காதலுக்கு ஜே! .... சரியா? ;-) ;-)

  பதிலளிநீக்கு
 12. ஆஹா காதல் மன்னன் நீங்கன்னு தெரியுமே.. சந்திக்க பரிசுகள் பெறவும் மட்டும் தான்னா பிரச்சனை இல்லை. ஆனா அதற்கும் ஒரு வயசு வேண்டாமா? ஒரு வயசுலயேவா? நீங்க காதல் தேர்வை எழுதிய மாணவன்... சரி சரி. எந்த வகுப்பு படிக்கும்போது? சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா வெளாட்டுக்கு...

  தமிழ்க்காதலுக்கு தமிழர்களான எங்கள் ஓட்டு மட்டுமல்ல உதவியும் உண்டு...

  வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி RVS.
  என் மேல் கோபமில்லையே.. உங்க வலைப்பூவுக்கு வரவில்லை என்று..

  பதிலளிநீக்கு
 13. நீங்க முனைவர் முனைப்பில் இருக்கிறீர்கள் என்று தெரியும்!
  கல்லூரியில் தொடங்கி இன்னமும் தொடர்கிறேன்.. என் காதலை! ;-)

  பதிலளிநீக்கு
 14. உங்கள் காதல் நூறாண்டு காலம் தொடர வாழ்த்துக்கள் RVS.

  பதிலளிநீக்கு
 15. சொன்ன சொல்லுக்கு வந்துட்டீங்க.. இருங்க படிச்சபின்னே கருத்திடுறேன்.

  எண்ணம் போல எல்லாம் முடிஞ்சுதுங்களா?

  பதிலளிநீக்கு
 16. அன்புள்ள அப்பாதுரை,
  வந்து மீண்டும் விடுமுறையைப் புதுப்பித்துக்கொள்ளலாம் என்று நினைத்தேன். தங்கள் அனைவரின் அன்பை ருசித்த உள்ளத்திற்கு அந்த ருசி பழகிப் போய்விட்டது. வராமல் இருக்க முடியவில்ல. இன்னும் முடியவில்லை அப்பாதுரை. இன்னும் ஒரு மாதல் பிடிக்கும் போல இருக்கிறது. ப்ளீஸ் இன்னும் ஒரு மாதம் லீவ் எக்டென் பண்ணிக்கவா?

  பதிலளிநீக்கு
 17. காதல் பத்தி கன்னாபின்னாவென்று எழுதிட்டு லீவ் வேறேயா? திரும்பி வந்து லவ் பத்தி அழகா நாலு வரி எழுத ஒப்புக்கொண்டால் தான் லீவ்.
  :)

  பதிலளிநீக்கு
 18. (கோவிக்காதீங்க)
  கண்ணுக்கு மறைஞ்சக் கடவுளை நேசிச்சு
  கோடிச் செலவு செஞ்சும்
  மறுநா
  குப்பையில வாடுதே பூ?
  கண்ணுக்குத் தெரிஞ்ச மனிதரை நேசிச்சு
  கோடியில ஒரு பங்கு
  போனா
  குறைஞ்சா போயிடும் பூ?

  பதிலளிநீக்கு
 19. எனக்கென்னவோ ஒண்ணாங்கிளாஸ்லயே காதலிச்சா நல்லது தான்னு தோணுது.
  நேசிப்பது நலம்னு சூடிச் சொல்லிக் கொடுக்கணுங்கேன்.

  பதிலளிநீக்கு
 20. ஆஹா வந்துட்டாங்கய்யா.. வந்துட்டாங்க...

  நாங்களும் காதலுக்கு மரியாதை தருகிறவங்கதான்... காலத்தின் கொடுமை.. கண்களால் வீணாகப்போகிற கலாச்சாரச் சீரழிவைப்பார்க்கும்போது மனது அஞ்சுகிறது. எங்கே போய் முடியுமோ என்று.

  நேசித்த ஒருவருக்கு பூ வாங்கிக் கொடுக்கலாம்.. புடவை வாங்கிக்கொடுக்கலாம். ஏன் தாஜ் மஹாலைப்போல ஒரு புது பங்களாவே வாங்கிக்கொடுக்கலாம். ஒரே நேரத்தில் எத்தனை பேருக்கு வாங்கிக் கொடுப்பது என்பதுதான் இப்போதுள்ள கேள்வி.

  சங்க கால பரத்தையர் ஒழுக்கத்தைக் தவறில்லை என்று கூறுவது போல தாங்கள் பலகாதல் விவகாரத்தைத் தவறு இல்லை என்று கூறிவிடுவீர்களோ?

  எனக்குத் தெரியும். அப்பாதுரை எதிலும் எங்கும் தப்பா துரை..

  பதிலளிநீக்கு
 21. //அப்பாதுரை சொன்னது…
  எனக்கென்னவோ ஒண்ணாங்கிளாஸ்லயே காதலிச்சா நல்லது தான்னு தோணுது.//

  நேற்றைய எங்கள் பள்ளியின் பரபரப்புச் செய்தி. ஒன்றாம் வகுப்பில் ஒரு காதல் ஜோடி உள்ளதாக..முதல்வரிடம் இருந்து..

  இப்ப சநந்தோஷமா... உங்க ஆசை நிறைவேறி விட்டதா...

  பதிலளிநீக்கு
 22. மருத்துவ கட்டுரையோனு படிக்க ஓடோடி வந்தேன்... ஏமாந்து போயிட்டனே....

  இனி இது மாதிரி பொது கட்டுரையும் நிறைய வருமா?

  வழக்கம்போல் சிறப்பான பதிவு... சிரிக்க சில விஷயம்... சிந்திக்க பல விஷயம்.....

  கொஞ்சம் ஓய்வு எடுத்து வந்தாலும் சூப்பர் சூப்பரா இருக்கு

  பதிலளிநீக்கு
 23. ரொம்ப யோசிக்க வைக்கறீங்க. காலங்காலையிலே.

  உடல் உபாதைக்கும் மன உபாதைக்குமான தூண்டுதல்களில் வேறுபாடு உண்டு என்ற கண்ணோட்டத்தில், ஒழுக்கம் என்ற வரம்புக்குள் காதலை அடக்கப்பார்ப்பது சரியாகத் தோன்றவில்லையே? தீர்த்துக் கொள்ளக் கூடியதல்ல காதல் என்று நினைக்கிறேன். பரத்தையர் நாடும் ஒழுக்கத்தைத் தவறு என்றார்களா சங்க காலத்தில்? (பிற ஆண்களையும் பெண்கள் நாடினார்கள் என்றே நினைக்கிறேன் - அதைப் பற்றி பாட்டெழுதாமல் போனார்களே?!) பரத்தையர் மோகத்தை உள்ளது என்று அங்கீகரித்தார்களே தவிர தவறு என்றோ சரி என்றோ சொன்னதாக எனக்குத் தெரியவில்லை (ஒழுங்கா படிச்சிருந்தா தானே தெரியும்?).

  அன்பைக் கொண்டாடும் நாள் - காதல் வயப்பட்ட அன்பென்றால் இன்னும் கூடுதல் கொண்டாட்டம். வேலன்டைன்ஸ் நாளை இந்தியாவில கொஞ்சம் திரிச்சுட்டாங்களோனு தோணுது.

  உங்கள் கவலை புரிகிறது. இருவருக்கிடையே மதிப்பும் அன்பும் ஓரளவுக்காவது தியாக உணர்வும் கலந்த நிலைக்கும், வெளிக்கவர்ச்சிக்கும் வேறுபாடு இருக்கிறது என்று சொல்ல வருகிறீர்கள். சினிமாவில் தெரிவதை வைத்து முடிவுகளை எடுத்துச் சீரழிவதைத் தடுக்கப் பார்க்கிறீர்கள். சரியே.

  ஒண்ணாங்கிளாஸ்னதும் என்ன இப்படி மண்டைல அடிக்கிறீர்ங்க? ஆறு வயசுப் பிள்ளைங்களுக்கு காதல்னா என்னானு தெரியுமா? காதலைப் பத்தித் தெரிஞ்சுக்குறதுல தப்பில்லைனு சொன்னேன் - play date போல. காதலைப் பத்தித் தெரிஞ்சுக்குறது அவசியம் தான்னு சொன்னேன். 'லவ் பண்றான்' என்பதை 'திருடறான், பொய் சொல்றான்' என்கிற லெவலில் பார்க்கச் சிறுவயது முதலே தயார் செய்வதை இனியாவது நிறுத்தவேண்டும் என்பதற்காகச் சொன்னேன். அதுக்காக சினிமாப் பாட்டு ஆடி மரத்தை சுத்தவா சொன்னேன்? (இந்த மாதிரி அவசரக் காமென்டுகள் என்னிக்கும் வம்புல மாட்டி விடும் - தெரிஞ்சும் கமென்டினது என் தப்பு.)

  பதிலளிநீக்கு
 24. அன்புள்ள வாசன்,
  இதுவும் மருத்துவக் கட்டுரைதான். சமுதாய தொற்றத் தொடங்கி இருக்கும் நோய்க்கு மருத்துவம். யார் செய்வது என்று கையைக்கட்டிக்கொண்டு இருக்காமல் ஒரு சிறு துறும்பைக் கிள்ளிப் போடலாமே என்ற எண்ணம்தான்.

  பொதுக் கட்டுரைகள் எழுதுவது கரும்பு தின்ன கூலியா.... வரும்.. நேரம் கிடைத்தால் எல்லாம்...

  மருத்துவம்தான் நமக்குத் தெரியாத விஷயங்களைப் படித்து எழுதவேண்டியுள்ளது.

  படித்துக் கருத்துப் பகர்ந்தமைக்கு நன்றி வாசன்.

  பதிலளிநீக்கு
 25. அன்புள்ள அப்பாதுரை,

  அழகான பின்னுட்டம். சங்க இலக்கியத்தில் 966 பாடல்கள் கற்பியல் பாடல்கள். அவற்றுள்ளும் 279 பாடல்கள் பரத்தமை ஒழுக்கம் பற்றியது. 50 புலவர்கள் இப்பாடல்களைப் பாடியுள்ளனர். //”பரத்தமை தவறு என்று அறிகிறோம். எனினும் அவனை என்ன செய்வது? தவற்றைச் சுட்டிக்காட்டித் தழுவிக்கொள்ள வேண்டும். தமிழ்ச்சமுதாயம் பெண்களுக்கு இயல்பாக கற்பிக்கும் மரபுக்கல்வி இது. அதனாலன்றோ குடும்பம் பிளவு படுவதில்லை. கற்பு மகளிர் உள்ளம் திரிவதில்லை. மண்பதையில் பெண் பெருமை பெறுகிறாள்”//

  இது வ. சுப. மாணிக்கனாரின் எழுத்து. இதற்கு என்ன சொல்ல. அக்காலத்தில் மணமுடித்தபின் பரத்தையர் ஒழுக்கம். அதுவும் ஒரு குழந்தை பிறந்தவுடன் ஆரம்பித்து விடுவார்களாம் அட்டகாசத்தை. இக்காலத்தில் காதலிக்கும்போதே லொள்ளுகள் தொடர்ந்துவிடுகின்றன. அப்ப கள்ளு.. இப்ப பீர்.. அப்ப சாராயம்.. இப்ப ஃபாரின் சரக்கு.. மாதிரிதான். கொஞ்சம்தான் வித்தியாசம்.

  //ஆறு வயசுப் பிள்ளைங்களுக்கு காதல்னா என்னானு தெரியுமா? //
  காதலுக்கு மேலயும் தெரிந்து பேசியது என்று என் முதல்வர் நேற்று சொன்னதும் அதிர்ந்த நான் இன்னும் மீளவில்லை அந்த அதிர்விலிருந்து.

  //அதுக்காக சினிமாப் பாட்டு ஆடி மரத்தை சுத்தவா சொன்னேன்?//
  அதைவிட அதிகமாம்.உண்மை அப்பாதுரை சார்.

  காரணம் யார்? கண்டிப்பாக பெற்றோர்கள் என்று சொல்ல வேண்டும். வீட்டின் வரவேற்பறை வரைக்கும் வந்துவிட்ட சீரழிவுகளைப் போட்டு தானும் தன் குழந்தையும் சேர்ந்து பார்க்கும் போக்கு மாற வேண்டும்.

  இன்னொன்று.. அப்பாதுரைசார்.. மனச்சங்கடப்படும் விளம்பரம். தாய் ஸ்பூனில் சாப்பாட்டை எடுத்துக்கொண்டு குழந்தையின் முகத்தின் முன் காட்டி சாரி வாயின்முன் காட்டி ஏதோ தீப ஆராதனை செய்வது போல முகத்தைச் சுற்றி சுற்றி எடுத்த உணவைக் காட்டுவாளே, பாவம் குழந்தை வாயைச் சப்புக்கொட்டிக்கொண்டு... ஏதோ டிஸ் ஏண்டனாவுக்கு வந்துள்ள விளம்பரம்..அந்த விளம்பரம் பார்க்கும்போது தாங்கள் ஏதாவது உணர்ந்ததுண்டா...

  பதிலளிநீக்கு
 26. குறிப்பிட்ட விளம்பரம் பார்த்ததில்லையே?

  ஒண்ணாங்கிளாஸ்ல என்ன அதிகம் இருக்க முடியுங்க - என்னால் நம்ப முடியவில்லையே? பொதுவாகவே பெரிசுங்க பண்ற தொல்லை தாங்க முடியாது - நெறிப் போலீசாட்டம் தாங்களாவே நெனச்சு சட்டம் தண்டனை எல்லாம் தாங்களாவே தீர்மானம் போட்டுக்குவாங்க. இந்த விவகாரம் அதுல ஒண்ணா இருக்கும்னு தான் தோணுது. ஆறு வயசுல curiosity அவ்வளவு தான். பிள்ளைங்க தான் பாவம். மன்னிச்சுருங்க - ஆறு வயது பிள்ளைங்க மனசுல வேறு மயக்கம் எதுவும் இருக்க வாய்ப்பே இல்லைனு தான் தோணுது. நாமும் அந்த வயதைத் தாண்டித்தான் வந்தோம்னு பெரியவங்க நினைச்சாங்கன்னா இது புரியுமோ என்னவோ!

  பதிலளிநீக்கு
 27. பரத்தையர் ஒழுக்கம் தவறு என்பது குறுந்தொகைக்கு விளக்கம் எழுதியவர்கள் சொன்னது இல்லிங்களா? சங்ககாலத்தில் அது தவறு சரி என்று சொல்லவில்லை என்றே நினைக்கிறேன் - நடந்ததை நடந்ததாகச் சொன்னார்கள் அவ்வளவு தான் என்று நினைக்கிறேன். ஒழுக்க அளவுகோல் அவரவர் மனதைப் பொறுத்தும் கால சமூக வளர்ச்சியையும் பொறுத்து ஏற்பட்டது என்று நினைக்கிறேன். கவனித்தால்.. பரத்தையர் ஒழுக்கம் தவறு என்று சொல்லும் அதே விரிவுரையாளர்களும் சாமியார்களும் ஞானிகளும் கடவுளரின் கேளிக்கைகளைப் பற்றி ஏதாவது சொல்வார்களா? கேட்டால் ஜீவாத்மா பரமாத்மா பக்தி ரசம் என்று காது குத்துவார்கள்.

  பிற ஆண் பெண் பழக்கம் சங்க காலத்துலயும் தலைவன் தலைவிகளுக்கு மட்டுமே உரித்தாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. சோத்துக்கு லாட்டரி அடித்த சாதாரணன் அன்றைக்கும் விசிலடிப்பதோடு சரியென்று தான் தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
 28. அது எப்படி அப்பாதுரை சார் நடந்ததை நடந்தாக மட்டுமே சொல்லி விட்டு விட முடியும்? சங்க காலத்தில் வரி வாங்கிய மன்னனைக் கண்டித்து இருக்கிறார்கள். இப்படித்தான் வாழ் வேண்டும் என்பதையும் சொல்லி இருக்கிறார்கள். இதை மட்டும் சொல்லாமல் விட்டு விடுவார்களா? கபிலர் ஆரியனுக்குக் கூறிய அறிவுரை இது தொடர்பானதே. வையாவி கோப்பெரும் பேகன் தன் மனைவியை விட்டு பரத்தையர் ஒழுக்கம் கொள்ள கபிலர் நாகரிகமாக கண்டித்த பாடல் புறநானூற்றில் காணப்படுகிற்து. என்ன ஒன்று வெளிப்படையாகக் கண்டிக்காமல் விட்டு விட்டார்கள். அதற்கு வேறு ஒரு காரணமும் உண்டு.

  அது போர் யுகம். போர்க்களத்தில் வீரர்கள் இறந்து பட, பெண்கள் தொகை அதிகமாகவும் ஆண்கள் குறைவாகவும் இருந்தனர். அதனால் ஒருவர் பலதார மணம் செய்துகொள்வதும், பரத்தையர் ஒழுக்கமும் கூடிற்று என்றும் கூறுவர். இதுவும் பெரும்பாலும் பெண்கள் மீது கொண்ட இரக்கம் காரணமாகவே இருந்து இருக்கலாம். அதனால் அதிகமாகக் கண்டிக்கப்பட வில்லை என்றும் தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
 29. ஆறு வயதில் செய்யும் எதுவும் அறிந்து செய்வதில்லை. இன்னும் சொல்லப்போனால் ஒன்பதாம் வகுப்பு பையன் மட்டும் நன்கு தெரிந்தா காதலிக்கிறான். கண்டிப்பாக அது எதிர்பால் கவர்ச்சியே. அதனால் அந்தக் காலத்தில் ஒன்றும் பெரிதாக இழப்பு இல்லை. ஏனெனில் அவர்களுக்கு படிப்புத்தேவையில்லை. விவசாயமே முதன்மைத் தொழிலாக இருந்ததால். இன்று அப்படியா.. அந்த டிஸ்ட்ரேக்‌ஷன் அவர்களின் படிப்பை மட்டுப்படுத்துகிறது. மதிப்பெண்கள் குறைய காரணமாக அமைந்து விடுகிறது. மதிப்பெண்களா மாணவர்களின் வாழ்க்கையை நிர்ணயிக்கிறது என்றால், இது மதிப்பெண் காலமாக இருபபதால் சற்று அஞ்ச வேண்டியுள்ளது.

  பதிலளிநீக்கு
 30. அந்தக்காலத்தில் 16, 12 ம் திருமண வயதாக இருந்தது. இன்று முடியுமா? அந்தப் பருவத்தில் உடலளவில், எல்லாக் காலத்திலும் மனதளவில் திருமணத்திற்குத் தேவையான முதிர்ச்சி அடைந்து விடுகிறார்கள். இந்தக்காலத்தில் ஊடகங்களின் உதவியால் இன்னும் விரைவிலே முதிர்ச்சி நிலையை எட்டிவிடுகிறார்கள். ஆனால் சமுதாயத்தில் காலூன்றி வாழும் பிற வளர்ச்சி அடைவதில்லை.

  //ஒழுக்க அளவுகோல் அவரவர் மனதைப் பொறுத்தும் கால சமூக வளர்ச்சியையும் பொறுத்து ஏற்பட்டது என்று நினைக்கிறேன்.//

  மிகச்சரியாகச் சொல்லியுள்ளீர்கள். சமூக வளர்ச்சியால் தானே இன்று திருமண வயது பெண்ணுக்கு 18, ஆணுக்கு 21 என்று மாறியுள்ளது.

  தனிப்பட்ட ஒருவரின் ஒழுக்கத்தை பார்க்க, அந்தந்த சூழலில் இருந்து பார்க்கும்போது நம்மால் ஒரே அளவு கோலால் மதிப்பிட முடிவதில்லை.

  பதிலளிநீக்கு