“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

செவ்வாய், 6 ஏப்ரல், 2010

காலையிலேயே பரோட்டாவா!!!!!ன்னு கேக்கரவங்களா நீங்க!!!”கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்”


இன்றும் ஒருசில மக்களிடம் குறிப்பாக பிராமணர்களிடம், காலையில் ஒன்பது அல்லது பத்து மணிக்குள் நன்றாக ஒரு கட்டு சாப்பாட்டை கட்டுவது, மதியம் சிற்றுண்டி, இரவு சற்று சத்து குறைவான, அளவு குறைவான, ஜீரணத்திற்கு ஏற்ப உண்ணும் வழக்கம் உள்ளது என்பது நாம் அறிந்தது. ஆனால் இம்முறை உடல் பேணும் ஒரு சிறந்த முறை என்பது நாம் அறியாதது..

ஸ்கூட்டி போன்ற செல்ஃப் (பட்டன் ஸ்டாட்) வண்டி வைத்திருப்பவர்களுக்குத் தெரியும். காலையில் முதல்முறை வண்டியை எடுக்கும்போது உதைத்து (கிக்)ஸ்டார்ட் செய்ய வேண்டும். பிறகு கிக் தேவையில்லை. பட்டன் ஸ்டார்ட் செய்து கொள்ளலாம். இம்முறையைப் பின்பற்றினால் வண்டி நீண்ட நாள் நல்ல கண்டிஷனில் இருக்க உதவும்.

இதேதானே உடலுக்கும். இந்த உடலாகிய வண்டியும் நீண்ட நெடு பயணம் (நிறை ஆயுளுடன்) தொடர வேண்டும் அல்லவா? நாம் சாப்பிடும் நாளின் முதல் உணவாகிய காலை உணவு நல்ல ஸ்ட்ராங்கா நாள் முழுவதும் சக்தி தருவதாக இருக்க வேண்டும். நம்மால் காலையில் முழுச்சாப்பாடு (சோறு) உண்ண முடியாது. நம் வழக்கம் அப்படி. ஆனால் நல்ல சக்தி தரும் சிற்றுண்டியை உண்ணலாமே.
http://recipes.malayali.me/wp-content/uploads/2010/01/IMG_7777-400x285.jpg

கோதுமையில் செய்யப்படுகின்ற பரோட்டா, சப்பாத்தி இரண்டும் உடலுக்கும் மனதுக்கும் உயனடியாகச் சக்தியைத் தருகிறது. நம் இட்லி, தோசையைவிட. இவை சோர்விலிருந்து தசைகளை மீட்பதிலும், நாடித்துடிப்பைச் சீராக்குவதிலும், மனதிற்கு உற்சாகத்தைத் தருவதிலும் மற்ற எந்த உணவையும் விட சிறந்ததாக உள்ளது என்கின்றனர் பஞ்சாப் வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் சத்துணவு நிபுணர்களான ஜே.எஸ்.சித்து, எஸ்.வெர்மா இருவரும்.பஞ்சாப் காரர்கள் அவர்கள் பக்கம் விளையும் பொருளைப்பற்றித்தான் கூறுவார்கள் என்றெல்லாம் தப்புக்கணக்குப் போடக்கூடாது. சுமார் 17 வகையான உணவு வகைகளைப் பயன்படுத்திய 80 குடும்பங்களில் நடத்திய ஆய்வின் முடிவு இது என்கின்றனர் இவர்கள்.

புரத்ச்சத்தைப் பொறுத்தவரை சப்பாத்திக்கும் பரோட்டாவுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. ஆனால் பரோட்டா தயாரிக்கும் போது அதில் உள்ள கொழுப்புச்சத்து வெளெயேறி விடுவதால் கலோரி மட்டும் அதிகரிக்கிறது. ஒரு பரோட்டாவில் 4 .2 முதல் 5கி வரை புரதச்சத்தும், 209 முதல் 258 கிலோ கலோரியும் பெற்றுள்ளது.


 http://i5.photobucket.com/albums/y152/boo_licious/misc4/chapati.jpg

100 கி பரோட்டாவில் சுமார் 18 .50 மி.கி. கால்சியம் அடங்கியுள்ளது. ஆனால் சப்பாத்தியில் 2 .28 மி.கி. புரதம், 69 கிலோ கலோரி மட்டுமே உள்ளன.

உழைக்கும் வர்க்கங்களுக்கு, அதிலும் உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்களுக்கு முறையான காலை உணவுக்குச் சப்பாத்தி, பரோட்டா இரண்டும் சிறந்தது. அதிலும் பரோட்டா மிகவும் சிறந்தது.... அவ்வளவுதான். ஆனால் இரவு உணவுக்கு வேண்டாமே பரோட்டா. சப்பாத்தி ஓகே.

இப்பவும் சொல்றேன் உங்க உடம்பு உங்க இஷ்டம்னு என்னால கண்டுக்காம இருக்க முடியாது. அதனால் உங்களுக்காக இல்லேன்னாலும் எனக்காகவாவது காலை உணவை நல்ல சத்துள்ள உணவா சாப்பிட்டு நாள்தோறும் நல்ல உற்சாகத்தோடு வேலை செய்ங்க...ப்ளீஸ்...ஆதிரா..

8 கருத்துகள்:

 1. அன்புள்ள ஆதிரா,

  மிகவும் பயனுள்ள தகவல்... விளக்கமும் மிக அருமை... (சிந்திப்போம் செயல்படுவோம்)

  எங்கள் நலன் பற்றிய உங்கள் கவனத்திற்கு மிக்க நன்றி...


  நீங்களே ஒரு நல்ல மெஸ் ஆரம்பிச்சா நாங்க தினம் வந்து சாப்பிடுவதற்கு நல்லா இருக்கும்...

  நியூ ஆ(ந்)திரா மெஸ்... (சிரிப்பதற்கு மட்டும்)

  பதிலளிநீக்கு
 2. மிகவும் பயனுள்ள பதிவு ஆதிரா! அனைவரும் வாசிக்க வேண்டிய பதிவு!
  நன்றி!!! தொடரட்டும்.....!

  பதிலளிநீக்கு
 3. நியூ ஆ(ந்)திரா மெஸ்.. (சிரிப்பதற்கு மட்டும்) இல்ல சிந்திப்போம்...வாசன். தொழில் நல்லா போகும்னு நெனைக்கிறேன். (முதல் கஸ்டமர் புக் ஆயிட்டீங்களே...)மிக்க நன்றி...(இந்தப் பக்கத்தில் முதலில் கருத்து கூறியதற்கும், முதலில் ஆதிரா பார்வையைத் தொடர்வதற்கும் என்றும் நன்றியும் அன்பும்...

  பதிலளிநீக்கு
 4. என் பார்வைகளைப் பார்வையிட்டமைக்கும், கருத்து பகிர்ந்தமைக்கும் என் மனமார்ந்த நன்றி கவிதன்.

  பதிலளிநீக்கு
 5. விளக்கமான பதிவு. டயட் என்ற பெயரில் பட்டினி கிடப்பவர்களுக்கு ஒரு படிப்பினை.
  ...... மத்ததெல்லாம் டூப்பு, புரோட்டாதான் டாப்பு!!
  உணவுகளைப் பற்றி எழுதும்​போது அதன் nutrients பற்றியும் சொல்லிவிடுதல் உத்தமம்.
  உதாரணமாக, புரதம் என்றால் என்ன அதை உடல் எப்படி எடுத்துக்​கொள்கிறது. ​கொழுப்பு உண்மையிலேயே ​கெடுதலானதா, கலோரி என்றால் என்ன? அதன் மதிப்பு எப்படி அறியப்படுகிறது ​போன்ற அடிப்படைத் தகவல்களையும் ​சொல்லுங்கள். மிக உபயோகமாக இருக்கும்.

  வாழ்த்துக்கள்!!!

  பதிலளிநீக்கு
 6. கண்டிப்பாக அடுத்த கட்டுரையில் இருந்து தங்கள் அறிவுரையைப் பின்பற்றுகிறேன். முடிந்தால் இந்தக் கட்டுரையே திருத்தி விடுகிறேன்.. என் தளத்தில் காலடி பதித்தமைக்கும் கருத்துப் பகர்ந்தமைக்கும் என் மனமார்ந்த நன்றி..ஜெகநாதன்.

  பதிலளிநீக்கு
 7. //இப்பவும் சொல்றேன் உங்க உடம்பு உங்க இஷ்டம்னு என்னால கண்டுக்காம இருக்க முடியாது. அதனால் உங்களுக்காக இல்லேன்னாலும் எனக்காகவாவது ...//

  அட!

  வணக்கம் ஆதிரா மேடம்.

  நல்ல்ல்ல பயனுள்ள ( சத்ரியனுக்கு பிடிச்ச விசயம்) தகவல் பதிவுக்கு பாராட்டுக்கள்.

  பொட்டி தட்டும் வேலை செய்பவர்களுக்கும் இந்த உணவுமுறை பொருந்துமா?

  பதிலளிநீக்கு
 8. அன்பு சத்ரியன்,
  அது என்ன பொட்டி தட்டும் வேலை? அது தான் முக்கியமான வேலை. அவங்களுக்குத்தான் அதிகமான சத்து தேவை.

  சத்ரியனுக்கு பரோட்டா ரொம்பப் பிடிக்குமா? அப்ப வெளுத்துக்கட்ட வேண்டியதுதானே.

  நன்றி சத்ரியன்.

  பதிலளிநீக்கு