“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

புதன், 29 டிசம்பர், 2010

தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்


பெண்மை அழகு. அதிலும், தாய்மை அழகுக்கு அழகு. அப்பறம் ஏன் இந்த அழகு சாதன பொருள்கள் மேல் உங்களுக்கு இவ்வளவு ஆசை? பெண்களே கொஞ்சம் கவனத்தில வச்சுக்கோங்க. ஈன்று புறந்தருதல் மட்டுமா உங்கள் கடமை. அக்குழந்தையைச் சான்றோனாகவும், நோயகள் அற்றவனாகவும் ஆக்குவதும் உங்கள் கடமை இல்லையா? அதுவும் போட்டிகள் நிறைந்த இந்தக் காலத்தில்!!

உங்கள் அழகு சாதனப் பொருள் ஆசையால் எதிர்காலத்தில் வாரிசு இல்லையே என்று உங்கள் மகனும், பேரப்பிள்ளைகள் இல்லை என்று நீங்களும் சேர்ந்து வருந்த வேண்டிய சூழல் உருவாகிறதாம். உங்களுக்கே தெரியும் இப்போது பரவலாகப் குழந்தைப்பேறு இல்லாமைக்குக் காரணம் ஆண்களே என்கிறது மருத்துவ ஆய்வு. ஆண்களுக்கு முக்கியமான குறை ஆண்மைக் குறைவு குறைபாடு.
’ஓராம் மாசம் உடலது தளரும், ஈராமாசம் இடையது மெலியும், மூணாமாசம் முகமது வெளுக்கும், நாலாமாசம் நடந்தால் இரைக்கும், மாங்காய்
இனிக்கும்…, சாம்பல்
ருசிக்கும், மசக்கையினாலே அடிக்கடி மயக்கம் சுமந்தவள் தவிக்கும் மாசங்கள் பத்து, சிப்பியின் வயிற்றில் இருப்பது முத்து’ எவ்வளவு அழகான பாடல்.

அது விலை கொடுத்து வாங்கும் முத்து இல்லங்க. என்ன விலை கொடுத்தாலும் கிடைக்காத உங்க வீட்டுச் சொத்து. மூன்றாம் மாதம் முகம் அது வெளுக்கும்என்பது உண்மைதானே.. பின் ஏன் இந்த முகப்பூச்சுகள்? பொதுவாகக் கருவுற்றப் பெண்களுக்கு அழகு கூடிக் கொண்டே வ்ரும். கண்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே கருப்புப் புடவை வாங்கிக் கொடுப்பது வழக்கம். அது இன்னும் அழகைக் கூட்டும் அது வேறு விஷயம். ஆனால் கருப்புக்கு கண் திருஷ்டியைக் கழிக்கும் சக்தி உள்ளதாம்.

இப்ப தொடங்கிய விஷயத்துக்கு வருகிறேன். இயற்கையாகக் குளித்ததும் சாம்பராணி புகை போடுவதும், மணமுள்ள
மலர்களைச் சூடுவதும் உடலை நறுமணத்துடன் வைக்கிறது. மேலும் ஏன் இந்த வாசனைத் திரவியங்கள்
மேல் மோகம்?. நீங்கள் எல்லோரையும் போலத்தான் இவைகளை எல்லாம் பயன் படுத்த நினைக்கிறீர்கள். தவறு இல்லை. ஆனால் அது கருவில் இருக்கும் உங்கள் குழ்ந்தைக்குக் கேடு விளைவிக்கிறது என்பதை அறியாமல் இருக்கலாமா? நீங்கள் அந்தக் காலம் போல பேர் சொல்ல மட்டும் பிள்ளையையா பெற்றெடுக்கப் போகிறீர்கள். உலகையே வலம் வர ஒரு வைரத்தை அல்லவா பெற்றெடுக்கப் போகிறீர்கள்.

ஸ்காட்லாந்திலுள்ள
எடின்பரா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் பேராசிரியர் ரிச்சர்ட் ஷார்ப் சொல்றதைக் கேட்டுக்கோங்க...

புற்றீசல் போலக்
கிளம்பும் அழகுசாதனப் பொருட்கள் கருவிலிருக்கும் குழந்தையையே பாதிப்படைய வைக்கிறது எல்லோரையும் போலவே தாய்மை நிலையிலிருக்கும் பெண்களும் கிரீம்களும், ஃபெர்பியூம்களும் பயன்படுத்துவது நாம் அறிந்ததே. ஊடகங்களும் தேவையற்ற பல பொருட்களை தாயின் அத்தியாவசியத் தேவை எனக் கூவிக் கூவி விற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால் அது தாய் தன்னை அறியாமலேயே தன் குழந்தைக்கு வழங்கும் நோய்.

அதிலும் குறிப்பாக கருவில் இருக்கும் குழந்தை ஆணாய் இருந்தால்

அந்தக் குழந்தைக்குப் பிற்காலத்தில் ஆண்மைக் குறைவு, குறைந்த உயிரணுக்கள் எண்ணிக்கை போன்ற சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்பு அதிகமாம்.

எட்டு வாரம் முதல் பன்னிரண்டு வாரம் வரையிலான தாய்மைக் காலத்தில் கருவிலிருக்கும் குழந்தைகளின் இனப்பெருக்க உறுப்புகள் உருவாகின்றன. சில ஹார்மோன்கள் இந்த கால கட்டத்தில் தூண்டப்பட்டு ஆண் குழந்தைகளின் இனப்பெருக்க உறுப்புகளுக்கான அடித்தளத்தை அமைக்கின்றன. இந்தக் காலகட்டத்தில் தாய் பயன்படுத்தும் அழகுப் பொருட்கள் குழந்தையின் ஹார்மோன் தூண்டுதலைத் தடை செய்கின்றன.

டெஸ்டோஸ்ரோன் எனும் ஒரு குறிப்பிட்ட ஹார்மோன் ஆண்களின் இனப்பெருக்க வளர்ச்சிக்குப் பெரிதும் தேவையானது. அதன் மீது இந்த அழகு சாதனப் பொருட்கள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இப்படியெல்லாம் பட்டியலிட்டு தாய்மை நிலையில் இருக்கும் பெண்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்துகின்றார் பேராசிரியர் ரிச்சர்ட் ஷார்ப்.

இந்த அமிலங்களால் புற்று நோய் வரும் வாய்ப்பு கூட இருப்பதாக அவர் அச்சம் தெரிவிக்கின்றார். எனவே தாய்மை நிலையில் இருக்கும் பெண்கள் அழகு சாதனப் பொருட்களை அறவே தவிர்ப்பதே நல்லது என அவர் வலியுறுத்துகின்றார்.


இந்தக் கொடுமையை எங்கே போய் சொல்லுவது. நானும் ரொம்பவே சிந்திச்சு பார்த்துட்டேன். இது மாதிரி பொமளங்க எல்லாம் என் கண்ணில் மட்டும்தான் படறாங்களா? இல்ல எல்லாரும் கண்டும் காணாம போயிடறாங்களான்னு தெரியல.
அழகு சாதனப் பொருட்களே வேண்டாமுனு தலையில அடிச்சுகிட்டு சொல்லிகிட்டு இருக்கோம். இதுங்களுக்கு இப்படியெல்லாம் ஆசை எங்கே இருந்து வருதுன்னே தெரியலை. தலைவிரிச்சுட்டு ஆடுற இந்தக் கொடுமையை எங்கே போய்ச் சொல்ல!! கருமண்டா சாமி... இதுங்களயெல்லாம் திருத்தவே முடியாது. இன்னும் விபரீத ஆசையுள்ள பெண்களும் இருக்கிறார்கள். அந்தப் படத்தையெல்லாம் பகிர மனசு வரலை. அதனால் சாம்பிளுக்கு ஒன்னோட நிறுத்திட்டேன்.

தாய்மை ஒரு வரம். பெண்களுக்கு மட்டுமே கிடைத்த வரம். இந்தத் தாய்மைக்காக ஏங்கும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். எதுவும் எளிதில் கிடைத்துவிட்டால் இப்படித்தான்.

தன்னை மறந்து கருவில் இருக்கும் தன்
குழந்தையின் நலம் ஒன்றையே பத்துத்திங்களும் காத்து வந்ததாலேயே,

ஐயிரண்டு திங்கள் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பைய லென்றபோதே பரிந்தெடுத்துச் -செய்யவிரு
கைப்புறத்தி லேந்திக் கனகமுலை தந்தாள்

முந்தித் தவங்கிடந்து முந்நூறுநாட் சுமந்தே
யந்திபகலாச் சிவனை யாதரித்துத் -தொந்தி
சரியச் சுமந்துபெற்ற தாயார்

என்று அன்று தொடங்கி
காலையில் தினமும் கண்விழித்தால் நான் கைதொழும் தெய்வம் அம்மா’
என்று இன்று வரை தாய்மையைப் போற்றும் புண்ணிய மண் இது. இப்படி தாய்மையை இறைமையாகப் போற்றக் காரணமே பெண்மையின் தியாகம்தான். பெண் சுதந்திரம் முக்கியம். அது வேண்டாம் என்று கூறவில்லை. பெண்ணியம் பேசுவோம். சுதந்திரம் பேணுவோம். ஆனால் நம் கடமையைத் தவறாது செய்வோம். நல்ல ஆண்மையுள்ள சமுதாய்த்தை உருவாக்குவது நம் கையில் என்பதை மறக்க வேண்டாம். செயற்கை அழகுப் பொருட்களுக்கு பத்துத் திங்களாவது விடை கொடுப்போம். இயற்கையான அழகில் தாய்மையை ரசிப்போம் பெண்களே...ஆதிரா...

41 கருத்துகள்:

 1. காஸ்மெடிக் உபயோகத்துல இவ்வளோ ஆபத்து இருக்கா? ரொம்ப தெளிவா சொல்லியிருக்கீங்க ஆதிரா.
  பெண்கள், ஏன் நாங்களும் இதை நினைவில் வைத்துக் கொள்வோம்! :)

  பதிலளிநீக்கு
 2. பயனுள்ள,மற்றும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தியை பதிவித்ததற்கு நன்றி..

  அன்புடன்
  ரஜின்

  பதிலளிநீக்கு
 3. தாய்மையை போற்றுவதோடு...தாய் எப்படி சேய்மையை போற்ற வேண்டும் என அருமையாக விளக்கி உள்ளீர்கள் ...

  இதில் என்ன இருக்கிறது என விவரமில்லாமல் செய்வது பிற்காலத்தில் எவ்வளவு பாதிப்பு தருகிறது...

  அருமையான பதிவு ஆதிரா...

  பதிலளிநீக்கு
 4. அன்புள்ள பாலாஜி சரவணன்,
  முதல் முறை வந்துள்ளீர்கள். தங்கள் வரவு நல்வரவு ஆகுக.
  நினைவில் வைத்துக்கொள்வதாக வாக்குக் கொடுத்துள்ளீர்கள். மிக்க நன்றி.
  இந்த வலைத்தளத்தையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
  தங்கள் தொடர் கருத்துரையை எதிர்நோக்கி.. நன்றியுடன்..

  பதிலளிநீக்கு
 5. அன்பு ரஜின்,
  முதல் வரவு, முதல் கருத்து இரண்டுக்கும் என் மனமார்ந்த நன்றி.
  தொடர் வருகையை எதிர் நோக்கி..
  அன்புடன்..
  ஆதிரா..

  பதிலளிநீக்கு
 6. அன்பு பத்மநாபன்,
  தங்கள் கருத்துரை உடனடியாக கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்து வராவிடில் ஏதோ வெறுமையாக உணரச்செய்து விட்டீர்கள் தங்களின் அருமையான கருத்துரையால். மிக்க நன்றி கருத்துப் பத்மநாபன் சார்..

  பதிலளிநீக்கு
 7. அன்பு கணாக்காதலன்,
  வருக.. வணக்கம்..
  முதல் பாதத்துளிகளுக்கும், தூரிகையால் தாங்கள் வரைந்த முதல் கருத்துக்கும் என் மனத்தூரிகை சொல்லும் நன்றி.

  பதிலளிநீக்கு
 8. சிந்தித்துச் செயற்படுத்த வேண்டிய விடயம்; ஆனால் சிந்திக்க வேண்டிய கருவுற்றுள்ள பெண்கள் இதை ஒத்துக் கொள்ளுவார்களா? செயற்படுத்துவார்களா?

  பதிலளிநீக்கு
 9. அன்பு யோகன்,
  சிந்தித்தால் அவர்களுக்கும் அவர்களின் வாரிசுகளுக்கும் நலம் பயக்கும். இல்லா விட்டால் நட்டம் இந்த சமுதாயத்திற்கே.. இதன் விளைவுகளை கணக்கிட்டால் அச்சமாக இருக்கிறது.

  முதல் பாதம், முதல் பதிவு இரண்டுக்கும் என் மனமார்ந்த நன்றி.

  பதிலளிநீக்கு
 10. தாயும் சேயும் நலமா....
  நான் கொஞ்சம் லேட். ஸாரி! ஆணிகள் அப்புறம் நம்ம பதிவு வேற இருக்கு.. ரசிகர்கள் ஏமாந்துடக் கூடாது இல்லையா.. (நாமளே சொல்லிக்க வேண்டியதுதான்.... ;-) )
  தாய்மையே ஒரு பெண்ணிற்கு அழகு தானே.. அதற்க்கு மேல் ஒரு அழகு தேவையா...
  அரை இன்ச் முகத்தில் அடித்துக்கொண்டு வந்தவர்கள் வயிற்றிலும் அடித்துக் கொள்கிறார்கள் போலிருக்கு..
  புற அழகு அவசியம் தான் ..இல்லையென்று சொல்லவில்லை.. அதற்காக இப்படியா.. அகத்தின் அழகு முகத்தில தெரியப்போகுது..

  கடைசியாய் "காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே" கண்டு தெளிந்த திருவெண்காடரின்
  ஐயிரண்டு திங்களாய் சேர்த்த விதம் அருமை. ;-)


  உங்களுக்கு என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 11. எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

  பதிலளிநீக்கு
 12. முதல் வருகைக்கும் முதல் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சண்முககுமார்.
  கண்டிப்பாகப் படித்துக் கருத்துப் பகர்கிறேன் நண்பரே. ஈகரையில் கூட பார்த்ததாகத் தெரிகிறது.

  பதிலளிநீக்கு
 13. அன்புள்ள RVS, நீங்க லேட்டா வந்தாலும் என் பதிவுகள் காத்திருக்கும் உங்கள் கருத்துக்காக.
  உண்மையில் இதை விட மோசமான படங்கள் என் கண்களில் பட்டதன் விளைவே இப்பதிவு. தங்களின் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி.

  தங்கள் வாழ்த்துக்கு நன்றி.

  நல்ல நட்பை ஏற்படுத்திக் கொடுத்த 2010க்கும் மிக்க நன்றி.

  இதே நட்பு தொடர இறைவனை வேண்டிக்கொண்டு தங்களுக்கும் இப்புத்தாண்டு மனநிறைவைத்தரும் ஆண்டாக இருக்க அன்பான வாழ்த்துக்கள் RVS.

  பதிலளிநீக்கு
 14. அன்புள்ள இனியவன்,
  தங்களின் முதல் வருகையே வாழ்த்தில் தொடங்கியுள்ளது. தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி இனியவன்.

  தங்களுக்கும் இப்புத்தாண்டு வெற்றிக்கனிகளைக் குவிக்கும், மனநிறைவை கொடுக்கும் நல்லாண்டாக அமைய வாழ்த்துக்கள் இனியவன். தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 15. இதைப் பற்றி கொஞ்சம் விவரமாக எழுதத் தோன்றுகிறது. அழகுப் பொருட்கள் ஒரு பக்கம். இன்றைய அவசர உலகில் மாடுகளுக்கு எஸ்ட்ரஜன் ஊசிகள் போடப்பட்டு பால் சுரப்பை அதிகப் படுததுவதன் விளைவுகள் இன்னும் தீவிரம்.. பெண்களுக்கு புற்று நோய், ஆண்களுக்கு வீரியக்குறை - டபுள் டேமேஜ். நிரூபிக்கப்பட்டிருக்கிறதா என்றால், சென்ற 25 வருடங்களுக்கான விவரங்களை இப்போது தான் ஆய்வு செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். இது இன்னும் டேஞ்சர் விஷயம்.. (ஏற்கனவே எல்லாரையும் பயமுறுத்துறதா என்னைக் கொஞ்சம் ஒரு மாதிரியா பாக்குறாங்க..) நான் பிறகு வருகிறேன்.

  புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 16. //இன்றைய அவசர உலகில் மாடுகளுக்கு எஸ்ட்ரஜன் ஊசிகள் போடப்பட்டு பால் சுரப்பை அதிகப் படுததுவதன் விளைவுகள் இன்னும் தீவிரம்.. பெண்களுக்கு புற்று நோய், ஆண்களுக்கு வீரியக்குறை -//

  இதைப் பற்றி நான் எழுதியுள்ளேன் குமுதத்தில் ’பூப்பு’ என்ற தலைப்பில் இரண்டு வாரங்கள். அதைச் சற்று சரி பார்த்து இந்து பதிகிறேன்.

  //(ஏற்கனவே எல்லாரையும் பயமுறுத்துறதா என்னைக் கொஞ்சம் ஒரு மாதிரியா பாக்குறாங்க..) //
  அது வேற பயம். இது வேற பயம்.. ஆனா அப்பா என்றாலே ஒரே பயம்தானா?

  உங்களின் விபரமான பின்னூட்டத்திற்காக/பதிவுக்காகக் காத்து இருக்கிறோம் அப்பாதுரை..

  பதிலளிநீக்கு
 17. விழிப்புணர்வு கட்டுரைகளை பதிக்கும் சேவை மிகப் பெரிய சேவை ..அதை செவ்வனே செய்துவரும் ஆதிராவுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. இவ்வாண்டிலும் பணிசிறக்க நல் வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 18. மிக்க நன்றி பத்து சார். ஏதோ நம்மால முடிந்தது.. தொடர்வோம் இணைந்தே..
  தங்கள் வாழ்த்துக்கு, நட்புக்கு, தொடரும், தொடரப்போகும் அன்புக்கு, தொடர் வருகைக்கு என் ஆழ்மனதின் அன்பும் நன்றியும் பத்மநாபன். என்றும் இதே அன்பை எதிநோக்கி என்றும் அன்புடன்..இனிய புத்தாண்டு வாழ்த்துக்களுடன்..
  ஆதிரா...

  பதிலளிநீக்கு
 19. சொல்ல வந்த செய்தியை விளக்கமாக,ஆணித்தரமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
  இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 20. ஆதிரா,

  சிறந்ததொரு பதிவும், பகிர்வும்.

  புத்தாண்டு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 21. அன்பான தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சென்னைப் பித்தன். தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 22. அன்பு சத்ரியன்,
  கருத்துக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப நன்றிங்க.. உங்களுக்கும் இனிமையும் சுவையுமான வெற்றிக்கனிகளை ருசிக்க இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 23. கவிதையால் வாழ்த்து சொன்ன கவின் மலருக்கு மனமலர் தூவி வாழ்த்தும், நன்றியும், அன்பும் பகர்கிறது இந்தச் சிருமலர். மனமார்ந்த நன்றி சிவா..

  புத்தாண்டு உங்களுக்க்கும் பெரும் சொத்தாண்டாய் அமைய வாழ்த்துக்கள். அன்புடன்..

  பதிலளிநீக்கு
 24. நன்றி இதுவரை நான் அறிந்திராது ஒரு பயனுள்ள தகவல் தந்திருக்கிறீர்கள் . இந்தப் பதிவு அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் வகையில் அமையும் . பகிர்வுக்கு நன்றி.

  பதிவுலக நண்பர்களே..
  அருமையான பதிவு அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.

  நான் ஓட்டு போட்டுட்டேன்.. நீங்க போட்டீங்களா?

  http://sakthistudycentre.blogspot.com

  என்னையும் கொஞ்சம் blog ல Follow பன்னுங்கப்பா

  பதிலளிநீக்கு
 25. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தமிழ் பார்க்.

  பதிலளிநீக்கு
 26. முதல் முறையாக வரும்போதே கலக்குகிறீர்கள் நண்பா. இந்தப் பதிவுக்காக ஓட்டு வேட்டையில் இறங்கி விட்டீர்கள். தங்கள் அன்புக்கு நன்றி. முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

  என்னைத் தொடர்வதற்கு மனமார்ந்த நன்றி.

  உங்கள் வலைப்பூவை ஒரு வலம் வந்தேன். நல்ல பதிவுகள் அதிகமாக உள்ளன. அதிலும் சி.பி.எஸ்.சி கல்வி பற்றியது. மிக்க நன்றி தோழா.
  இனி தங்களின் பதிவுக்கு தொடர் ரசிகை நான்.
  த்ங்களின் வருகையையும் தொடர்ந்து எதிர்நோக்கி...

  பதிலளிநீக்கு
 27. என்னுடைய வலை தளத்திற்கு வந்து முதன் முதலாக உங்கள் கருத்தை தெரிவித்ததற்கு மிகவும் நன்றி. அதுவும் அழகன் முருகனை போல அழகான எழுத்து நடையில் கருத்தை தெரிவித்ததற்கு மிக்க நன்றி ஆதிரா! பெயர் மிகவும் அழகாக உள்ளது. நீரம் இருக்கும் போது கண்டிப்பாக வந்து உங்கள் கருத்தை தெரிவிக்கவும். உங்கள் வலை தளமும் மிகவும் பயனுள்ளதாகவும் நன்றாகவும் உள்ளது. முடிந்தால் என்னுடைய ஆங்கில தளத்தையும் பார்க்கவும்.

  குறிஞ்சி குடில்

  பதிலளிநீக்கு
 28. தங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி குறிஞ்சி. நான் உங்களோட ஆங்கில் தளத்தையே முதலில் படித்தேன். ஏதோ புதிய உலகத்தில் இருந்த அன்பவம். பயந்து ஓடி வந்துட்டேன்.. அழகாக வடிவமைத்து இருக்கிறீர்கள் இரண்டையும்.

  பதிலளிநீக்கு
 29. கர்ப்பிணி வயிற்றில் டாட்டூவா?
  கொடுமைடா சாமி
  ...நீங்கள் சொல்லும் இன்னும் சில படங்களைப் பாத்து அதிர்ந்திருக்கிறேன்
  பகிர்வுக்கு நன்றி மேடம்..

  பதிலளிநீக்கு
 30. மீள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சிவா. அந்தப் படங்களை பதிவு செய்ய மனம் இடம் கொடுக்க வில்லை அதனால்தான் பதிவிடவில்லை.

  பதிலளிநீக்கு
 31. அப்பாதுரை அவர்கள், நீங்கள் தமிழில் எடுத்துக் கொடுத்த கவிகளின் ஆர்வத்தில் , குறுந்தொகை கொண்டு அழகான நவின கதை கொடுத்துள்ளார் ..
  ஆதிரா,உங்கள் தமிழ் சேவை வாழ்க...

  பதிலளிநீக்கு
 32. அன்புள்ள பத்து சார்,
  எங்கே அவர் பிளாக்லயா. இதோ பார்க்க கிளம்பிட்டேன். எப்படியோ எங்கள் சங்கத்தமிழ் வலைத்தளத்திலும் முழங்கினால் சரி. எனக்கு உடனே பார்க்கனும்..

  பதிலளிநீக்கு
 33. வருக வருக கே.எஸ்.ஜி. முதல் வருகைக்கும் முதல் கருத்துக்கும் மிக்க நன்றி கே.எஸ்.ஜி.

  பதிலளிநீக்கு
 34. அக்கா வணக்கம்
  நலமாயிருக்கிறீர்களா நலம்பெற இறைவன் துணைபுரிவானாக

  பெண்கள் அனைவரும் தெரிந்திருக்க வேண்டிய விடயம் அதே நேரம் மனைவி அழகாயிரு என்று தேவையற்ற பொருட்களை வாங்கிக்கொடுப்பவர்களும் தெரிந்திருக்க வேண்டிய கணவன்மாரும் அறிந்திருக்க வேண்டிய விடயம் நன்றி வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 35. அன்பு ஹாசிம் தம்பி,
  நான் நலமாக இருக்கிறேன். தாங்கள் நலமாக இருக்க ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.
  இதில் கணவன் மனைவி இருவருக்கும் பங்கு உண்டு. ஆனாலும் பெரும் பங்கு தாயாகும் மனைவிகளுக்கே...
  கருத்துக்கு நனறி ஹாசிம்.

  பதிலளிநீக்கு
 36. Ungal kootru mihavum sariye athira.
  Indraya pengal unaravendiya visayam.
  Udane pillai petral Azhagu kurainthuvidum yendru natkalai kadathiya yen thankgaikku 10 varudam ahiyum pillai pere illamal poyittru.

  Yendrum siritha mugathudan irukkum yen thangaiyin mugathil indru oorayiram varutha regaigal.
  Nalla seithi. Palarukkum ubayogamai irukkum.

  பதிலளிநீக்கு
 37. அன்பு அலாய்ஸ்,
  முதல் முதல் வருகை புரிந்துள்ளீர்கள். இனிய வரவேற்புகள்.

  முதல் வருகை மகிழ்வித்தது. நன்றி அலாய்ஸ்.

  முதல் கருத்து வருத்தத்தைத் தந்தது.
  உங்கள் தங்கைக்காக இறைவனை வேண்டுகிறேன்.

  அவர்கள் முகத்தில் மழலையைக் கண்ட மகிழ்ச்சி பொங்கும் காலம் விரைவில் வரும்.
  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அலாய்ஸ்.

  பதிலளிநீக்கு