“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

திங்கள், 28 நவம்பர், 2011

கண்ணீர் அஞ்சலி.


        
              இன்று என் பெருமதிப்பிற்குரிய என் மீது தனிப்பட்ட அன்பும் அக்கறையும் கொண்ட பேராசிரியர் முனைவர். இராம. வேனுகோபால் இறைவனடி சேர்ந்தார். இன்னும் அரை மணி நேரத்தில் இறுதி ஊர்வலம் என்ற அறிவிப்புடன் எனக்குச் செய்தி கிட்டிய போது நான் சென்னைப் பல்கலைக்கழகத்தில். அப்போது மணி மூன்றரை. .நான் துவண்டு
சோர்ந்த போதெல்லாம் அன்பு நீர் தெளித்து என்னை துளிர்க்கச் செய்த அந்த அன்பு .தெய்வமான பேராசிரியரின் முகமலரைக் கூடக் காணும் பேறு பெறாத துர்ப்பாக்கிய நிலையை எண்ணி வருந்துகிறேன். அவர் இறுதியாக கையொப்பமிட்டது என் முனைவர் பட்ட அறிக்கையில்.என்பதும் அவர் இறுதியாக்ச் சொற்பொழிவு ஆற்றிய மாநாடு எங்கள் அமைப்பான பைந்தமிழ்ச்சோலையில்தான் என்பதும் எண்ணும்போதெல்லாம் கண்ணீர் வரியிடுகிறது கன்னங்களில்.

        அவர் தமிழ்த்துறைத் தலைவராக இருந்த போது “அடப் போம்மா’ என்னத்தக் கட்டிக்கிட்டுப் போகப்போறோம்; நீ உத்தரவு போடும்மா; நான் செய்து முடிக்கிறேன். இங்கு நீதான் தலைவி. நான் உன் அடிமை” என்றெல்லாம் விளையாட்டாகச் சொலவதுடன் வேண்டிய அனைத்தையும் எனக்கு மட்டுமன்றி அனைத்து மாணவர்களுக்கும் செய்து அவர்களை மகிழ்வித்த அன்பின் இருப்பிடம் அவர்.
         “நம்மை மறந்தாரை நாம் மறந்தறியோம்; ஏம்மா மாசத்துக்கு ஒரு முறையாவது ஒரு போன் பண்ண மாட்டியா என்று அன்புடன் கடிந்து இன்று ஒரு வைவா வா; இன்று ஒரு செமினார் வா” என்று அன்பு அழைப்பு விடுக்கும் அன்பை எண்ணி மனம் கசிந்து உருகுகிறது. நானும் அதிகமாக உரிமை எடுத்துக்கொண்ட பேராசிரியர் என்றால் அது இவராகத்தான் இருக்க முடியும்.
“எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு வாம்மா... நான் சொல்லச் சொல்ல நீ எழுதி முனைவர் பட்ட ஆய்வேட்டை ஒப்படைத்து விடும்மா” என்று ஆயிரம் முறை கூறிய அந்த அன்பை எப்படி மறப்பது?
               
        சிறு சிறு விதி மீறல்களால் ஒரு மாணவர் பயனடைவார் என்றால் அதனால் பரவாயில்லை என்று கூறி எவ்வாறாயினும் மாணவர்கள் பயனடைய வேண்டும் என்று அவர்களின் நலனில் அக்கறை காட்டும் கனிவை எண்ணி பல முறை வியந்துள்ளேன். எதையும் வெளிப்படையாகப் பேசும் வெள்ளை மனத்தால் மாணவர்களின்

             மனங்களையெல்லாம் கொள்ளை கொண்ட அவர் ஆன்மா சாந்தி அடையவும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் ஆறுதல் அடையவும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன். மனம் கொள்ளாச் சுமையுடன்....


14 கருத்துகள்:

  1. அவர் ஆன்மா அமைதி கொள்ள எனது பிரார்த்தனைகளும்.

    பதிலளிநீக்கு
  2. இப்படி அனைத்து குணநலன்களும் நிறைந்த ஆசானை காண்பது மிக அரிது சகோதரி..
    அவரின் ஆத்மா சாந்தியடைய என் மனமார்ந்த இறை இறைஞ்சல்கள்....

    பதிலளிநீக்கு
  3. நல்லாசிரியராக இருந்தவரைப் பிரிவது மிகவும் வருத்தம் தரக்கூடியதே. அவரின் ஆன்மா சாதியடையப் பிரார்த்திப்போம். உங்கள் வருத்தத்தில் நாங்களும்.

    [I would like to share something with you, personally. You are requested to send me your e-mail ID (If at all you are interested to do so - otherwise not necessary). My e-mail ID : valambal@gmail.com ] vgk

    பதிலளிநீக்கு
  4. பேராசிரியர் முனைவர். இராம. வேனுகோபால் அவர்கள் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை படிக்கும்போது மனதிற்கு மிகவும் வருத்தத்தை துக்கத்தை எனக்கும் அளிக்கிறது.

    நமது அமைப்பில் அவர்களுடன் நாம் சந்தித்து பேசிய சில மணித்துளிகளும் கண்முன் வந்து செல்கிறது...

    அவர்களுடைய ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டுகிறேன்.. அவர்களை பிரிந்து துயரில் இருக்கும் குடும்பத்தினருக்கும் தக்க ஆறுதல்களை வழங்க இறைவனிடம் வேண்டுகிறேன்...

    பதிலளிநீக்கு
  5. மிகவும் வருந்துகிறேன். உங்கள் எழுத்து அருமையான அஞ்சலி.

    பதிலளிநீக்கு
  6. என் வருத்தத்தில் பங்கு கொண்ட சூர்யாவுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  7. //இப்படி அனைத்து குணநலன்களும் நிறைந்த ஆசானை காண்பது மிக அரிது சகோதரி..//
    ஆம் மகேந்திரன். அந்த அத்தனை எளிமை. என்னை அழைத்துக்கொண்டு சில கல்லூரிகளுக்கு அலைந்ததை இன்னும் என்னால் மறக்க இயலவில்லை.

    பதிலளிநீக்கு
  8. நன்றி வை.கோபாலகிருஷ்ணன் ஐயா.

    பதிலளிநீக்கு
  9. ஆம் வாசன். என்னால் இன்னும் அந்த நாட்களை மறக்க இயலவில்லை.

    பதிலளிநீக்கு
  10. நன்றி அப்பாதுரை. அன்று இருந்த மனநிலையில் இதைத் தவிர என்னால் ஒன்றும் செய்ய இயலவில்லை. அந்த அன்புக்கு இது எல்லாம் ஆயிரத்தில் ஒரு மடங்குகூட இருக்காது.

    பதிலளிநீக்கு