“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

செவ்வாய், 15 நவம்பர், 2011

பிளாஸ்டிக் இராணிகள்நினைத்தவுடன் கைகளை வீசிக்கொண்டு கடைக்குப் போவது
வேண்டிய பொருள்களை வாங்குவது வாங்கி, கலர் கலர் பிளாஸ்டிக் பைகளில் கொண்டு வருவது இதெல்லாம் இனிமேல் நடக்காது. அம்மா ஆட்சிக்கு வந்தவுடன் நடந்த ஒரு சில நல்ல விஷயங்களில் ஒன்று பல்பொருள் அங்காடிகளில் பிளாஸ்டிக் பைகளுக்குக் கட்டணம் வசூலிக்க ஆணை பிறப்பித்துள்ளது.என்ன காரணம் என்று கேட்டால் அப்போதுதான் அடுத்த முறை வீட்டில் இருந்து வரும்போதே துணிப்பையோ கூடையோ ஏதாவது எடுத்துக்கொண்டு வருவார்கள். பிளாஸ்டிக் பை அரசிகளின் ஆட்சி குறையும் என்ற நோக்கத்தில் என்பதாம். இந்த நடவடிக்கைக்கு அம்மாவுக்கு பெரிய ஜே.

இப்படி ஒரு புறம் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றன. மறுபுறமோ பிளாஸ்டிக் கவர் என்ன நாங்க எங்க உடலையே பிளாஸ்டிக்கால கவர் செய்து கொள்வோம் என்று கூறுகின்றனர் பலர். அதுவும் எதற்காக எல்லாரையும் கவர் பண்ணுவதற்காகவே. கவர்ந்திழுக்கச் செய்யும் கண்ணழகு, முதல் சொக்க வைக்கும் கால் அழகு வரை அனைத்து உறுப்புகளையும் பிளாஸ்டிக்கினால் வடிவமைத்துக் கொண்டு புகழ் உச்சியில் ஏறி உலகை வலம் வந்து கொண்டு இருக்கின்றனர் பிளாஸ்டிக் இராணிகள் பலர்.

பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை சக்கைப் போடு போட்டுக்கொண்டு
உள்ளது இவர்களால என்றால் மிகையில்லை.

பிரேஸில் நாடுதான் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையில் நம்பர் ஒன். அதிக எண்ணிக்கையில் ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் பெண்கள் நிறைந்த நாடுகளில் பிரேஸில்தான் முதலிடம். பிரேசிலில் பிப்ரவரி முதல் வாரம் நடக்கும் ஒரு திருவிழா, உலக பிரசித்தம். அரை குறை ஆடையுடன் கவர்ச்சிப் பெண்கள்சம்பா என்னும் அந்நாட்டு நடனம் ஆடி வருவதை பார்க்க கூட்டம் குவியும். இந்நடனம் ஆடுவதற்காக பிரேசில் மாடல் அழகி ஏஞ்சலா பிஸ்மார்சி தனது 21 ஆம் வயதில் தொடங்கி 42 ஆம் வயது வரை, நாற்பத்து இரண்டு (42) முறை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். இதற்காக இவர் தன் முதல்
கணவரை விவாகரத்து செய்து விட்டு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணரைத் திருமணம் செய்து கொண்டார். இத்துடன் தீர்ந்ததா இவர் பிளாஸ்டிக் மோகம். அதன்மீது உள்ள மோகத்தால் அவரையும் விவாகரத்து செய்து விட்டு அவரைவிட சிறந்த அறுவை சிகிச்சை நிபுணரை மூன்றாவதாகத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இதே போல இந்நாட்டு இன்னொரு மாடல் ஷைலா ஹெர்ஷே தன் மார்பகங்களைப் பெரிதாக்கிக் கொள்ள முப்பது முறை பிளாஸ்டிக் அறுவை செய்து கொண்டிருக்கிறார். அமெரிக்காவில் ஒரு கேலனுக்கு மேல் சிலிக்கான் இம்ப்ளாண்ட் செய்யக்கூடாது
என்று சட்டமிருப்பதால் தன் தாய்நாடான பிரேசிலுக்குச் சென்று இந்த ஆப்பரேஷனைச் செய்து கொண்டவருக்கு. அதனாலேயே பிரச்சனை ஆகிவிட்டது. ப்ளட் ஸ்ட்ரீமில் இன்பெக்‌ஷன் ஆகி, இரண்டு மார்பகளிலும் பரவி விட்டது. இவரின் உயிரை காக்க வேண்டுமானல் உடனடியாய் அவரது மார்பகங்களையே எடுக்க வேண்டியுள்ளது என்கிறார்கள் டாக்டர்கள். எதிலும் ஒர் அளவு வேண்டும். அதிக ஆசை ஆபத்தில்தான் முடியும். இயற்கைக்கு எதிரான காஸ்மெடிக் சர்ஜரிகளுக்கான எச்சரிக்கை இது என்பதை அனைவரும் அறிய வேண்டும்.

தான் மணக்க இருக்கும் கேனி என்னும் ஒரு பெண்ணுக்கு எட்டு முறை பிளாஸ்டிக்கினால் அறுவை சிகிச்சை என்னும் சில டச்சப்புகளைச் செய்து பின்னர் மணந்து கொண்டுள்ளார் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ரெசா வோசவ் என்னும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுனர். முப்பத்து மூன்று வயதான கேனி ஹோட்டலில் பணி புரிந்த ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கே‌னி‌யி‌ன் மார்பகத்தையும், உதடுகளையும் பெரிதாக மாற்றி, கண்ணிமைகளை கொஞ்சம் உயர்த்தி,. நெற்றியை சமப்படுத்தி அவரை அழகு ராணியாக்க ரெசா வோசவுக்கு 12 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவு ஆனது.

பிளாஸ்டிக் இராணிகள் மட்டுமல்ல. பிளாஸ்டிக் இராசாக்களும்
இருக்கிறார்கள். ஆண்களும் இதற்கு விதிவிலக்கல்ல. பாப் இசையால் மக்கள் மனங்களில் இன்றும் வாழ்ந்து வரும் பாப் இசை மன்னன் மைக்கேல் ஜாக்சன் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையிலும் மன்னன். உலக அளவில் அதிக எண்ணிக்கையில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் இவர்.

இப்படிப்பட்ட எண்ணற்ற தகவல்கள் பிளாஸ்டிக் என்னும்
நவயுக அழகின் பிரம்மாவைப் பற்றி வந்துகொண்டிருக்கின்றன. ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என எல்லா இடங்களிலும் பிளாஸ்டிக்கின் உதவியால் அதிரடிக்கின்ற பிரபங்களைப் பாருங்கள். இவர்கள் புண்ணியத்தால் இப்போது எல்லா தரப்பு மக்களும் பிளாஸ்டிக்கை நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளனர்.

பிக் பிரதர் பிரபல நடிகை ஷில்பா ஷெட்டிஇலண்டன் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோ பேமஸ் ஷில்பா ஷெட்டி இரு முறை தன் மூக்கை வடிவமைத்துக்கொண்டவர். இவரது பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை ஊரறிந்த.. இல்லை உலகம் அறிந்த விஷயம். இவரே பாலிவுட் நடிகைகள் அறுவை சிகிச்சை மேற்கொள்ள முன்னோடியாகத் திகழ்ந்தவர் எனலாம். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இணை உரிமையாளரான ஷில்பா ஷெட்டி அழகி என்பது மட்டுமல்ல. இவர் அழகு நிலையத்துக்குச் சொந்தக்காரர் என்பதும் நாம்
அறிந்து கொள்ள வேண்டியது. மும்பையில் உள்ள இவரது அழகு நிலையத்தின் பெயர் அயோசிஸ்
பிக் பாஸ் புகழ் ராக்கி சவந்த் Rokhi savanth

http://beforeaftersurgery.info/rakhi-sawant-before-and-after-plastic-surgery4677232.jpg

பிக் பாஸ் புகழ் இவரின் மூக்கும் உதடுகளும் அழகானதில் அவரின் தந்தையரின் ஜீன்களை விட பிளாஸ்டிக் ஜீனின் பங்கே அதிகமானது. மூக்கு, உதடு மட்டுமல்ல உடல் அழகின் ரகசியமே பிளாஸ்டிக்கால்தான். இவர் நெகிழி (பிளாஸ்டிக்) அறுவை சிகிச்சையால் இடுப்பைக் குறைத்தவர். வயிற்றுப்பகுதியைக் குறைத்தவர். அதே சமயம் மார்கங்களைச் சிலிக்கானால் கூட்டியவர். இந்த செயற்கை அழகிக்கு இன்னொரு புகழும் உண்டு. கலிகாலத்தில் ஒரு சுயம்வரம் நடத்தித் தனக்குப் பிடித்த மணமகனைத் தேர்வு செய்தவர். இதைவிட இன்னொரு சிறப்பு இந்த சுயம்வரத்திற்கு மனுசெய்தவர்கள் 12515. ராக்கியால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் 16 பேர். தலை சுத்துதா? ஆளை விடுங்க....

தமிழன் புகழ் பியங்கா சோப்ரா Priyanka chopra
மிஸ் இந்தியா பிரயங்கா சோப்ரா. இந்திய அழகியாகத் தேர்வான இவர் காமினி, பேஷன், அட்ராஸ் போன்ற படங்களில் நடித்ததால் சிறந்த நடிகையாகவும் தேர்வானவர். இவர் மூக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மேற்கொண்டவர் என்பது பலர் அறியாதது. இன்று பாலிவுட்டின் மிகப்பிரபலமான நாயகி.. 

கேங்ஸ்டெர் புகழ் கங்கனா ரானத் Kangana Ranautகேங்க்ஸ்டெர், ஃபேஷன், சகலக பூம்பூம் புகழ் கங்கனா ராவத் பல மொழிகளில் நடித்தவர் என்பதும் பிலிம் ஃபேர் விருது, அப்சரா விருது என்று பல விருதுகளை அள்ளிக்குவித்தவர் என்பது உலகறிந்த விஷயம். ஆனால் சிலிக்கன் மார்பகங்களை பொருத்திக் கொண்டவர் என்பது யாருக்கும் தெரியாத ரகசியம். 
அயன் ஹிந்தி புகழ் கொய்னா மித்ரா Koena Mitra
ரோடு, தூள், அயன், ஆசை போன்ற படங்களால் புகழ் பெற்றவர் இவர். இவர் மார்பகங்களைப் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் பெரிதாக்கிக் கொண்டவர். இரு முறை மூக்கு அறுவை சிகிச்சை தவறான முடிவைத்தர தான் கட்டிய அழகுக்கோட்டை இடிந்து இருளில் சிக்கி மீண்டும் மீண்டும் அறுவை சிகிச்சை செய்து பின்னர் மீண்டவர்.
கனிமொழி தமிழ் புகழ் சாஷன் பதம்சி Shazahn Padamsee
ராக்கெட் சிங் சேல்ஸ்மேன் ஆஃப் தி இயர் என்னும் ஹிந்தி படத்தில் அறிமுகம் ஆகி தமிழிலும் கனிமொழி என்னும் திரைப்படத்தில் தன் அழகிய உதடுகளைக் காட்டி ரசிகர்களை வசீகரித்தவர். இந்த அழகிய உதடுகள் பிளாஸ்டிக் சர்ஜரி தந்த கொடைதான்.

ப்ரீத்தி சிந்தா Preity Zinta
தில் சே, அர்மான், சோல்ஜர் புகழ் ப்ரீத்தி சிந்தாவைத் தெரியாத தமிழர்கள் இருக்க முடியாது. நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே என்ற பாடல் காட்சியின் மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சினில் நீங்கா இடம் பிடித்தவர். இவரது மூக்கு, புருவம் எல்லாம் அறுவை சிகிச்சையால் மேலும் அழகானவை.

மினிஷா லம்பா Minissha Lamba


யாஹன் முதல் கிட்னாப், அனாமிகா என்று பல ஹிந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் மூக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்துள்ளார். மார்பக அறுவை (Breast enhancement surgery) சிகிச்சையும் செய்துள்ளார். ஆனால் இவர் செய்து கொண்ட மார்பக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை இவருக்கு அதிக அளவில் வசீகரத்தைத் தராததால் மீண்டும் சிலிக்கான் மார்பகத்தை அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளார். 
இந்த வரிசையில் ஜூஹிசாவ்லாவும் இணைவார்கள் என்று கீழே உள்ள புகைப்படங்கள் கூறுகிறது அல்லவா. 

http://makeupandbeauty.com/wp-content/uploads/2010/04/Cosmetic-Surgery-10.png 

ஒரே மாதிரி பாலிவுட் நடிகைகளைப் பற்றியே தெரிந்து கொண்டால் கோலிவுட் நடிகைகளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டாமா என்ற குரல் கேட்கிறது. 
நம்ம பதினாறு வயது ஸ்ரீதேவி.

http://3.bp.blogspot.com/-IOMPdZUoTPE/TfvT60Ta8gI/AAAAAAAAAAw/qTxCk0EnPuc/s1600/Screen%2Bshot%2B2011-06-17%2Bat%2B4.23.07%2BPM.png
இது தமிழர்கள் அனைவரும் அறிந்ததே. அவர் மூக்கை அழகு செய்து கொண்டது ஹிந்தி திரையுலகிற்கு இலாபம். தமிழ் திரையுலகுக்கு நட்டம். அவருக்கு எப்படியோ தெரியவில்லை. பாவம் தமிழர்கள்.....  தமிழுக்கே உரிய அந்த முகம் மாறியதில் தமிழர்களுக்கு வருத்தமே.

ஜீன்ஸ் புகழ் ஐஸ்வர்யா ராய்??.

http://bollywoodproductions.com/uploads/thumbs/jcxjgc5xfs0hs5ur.jpg

அட உலக அழகி இவரும் மூக்கைத் திருத்திக் கொண்டிருக்க வேண்டும் என்பது பலரின் ஐயம். அவரது இளம் வயது புகைப்படங்களையும் இப்போதைய புகைப்படங்களையும் பார்த்து நீங்களே இந்த யூகத்தை முடிவு செய்து கொள்ளுங்கள்.

உலக நாயகனின் புதல்வி ஸ்ருதி ஹாசன்


அம்மாடியோவ்....... இவங்க சரியா மூச்சு விட முடியலைன்னுதான் மூக்கு அறுவை சிகிச்சை செஞ்சாங்களாம் அப்படின்னு சொல்லிக்கிறாங்க. அப்பறம் அவங்க மூக்கு தானாவே அழகா ஆயிட்டதாம். அதனால் என் குரல் ஒன்றும் பாதிக்கப்படவில்லை என்றும் அவரே கூறுகிறார். இவங்க போட்டோவையும் முன்னாலும் பின்னாலும் பாருங்க.. அறுவை சிகிச்சைக்குப் பின்னும் முன்னும்தான்.. நீங்களே கண்டு பிடிச்சிடுவீங்க.......உங்களுக்கும் ஏழாம் அறிவு இருக்குல்ல..

http://withfriendship.com/images/j/45340/rift-between-shruti-hassan-and.jpg http://iskinny.files.wordpress.com/2011/07/shruti2bhassan13.jpg?w=178&h=238

இதுக்குமேல நான் மூச்சு விட மாட்டேன். மாயா மாயா. எல்லாம் சாயா சாயா....


நன்றி குமுதம் ஹெல்த்

25 கருத்துகள்:

 1. எதிலும் ஒர் அளவு வேண்டும். அதிக ஆசை ஆபத்தில்தான் முடியும். இயற்கைக்கு எதிரான காஸ்மெடிக் சர்ஜரிகளுக்கான எச்சரிக்கை இது என்பதை அனைவரும் அறிய வேண்டும்.

  அருமையான பகிர்வுகளின் தொகுப்புகள் சுவாரஸ்யம்.
  பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 2. நல்ல வேலை. நம்ம தமிழ்ப் பெண்களிடையே இந்தக் கலாச்சாரம் பரவவில்லை. ஒரு வேளை சிகிச்சைக்கான செலவு குறையும் பட்சத்தில் இந்த கலாச்சாரம் இங்கும் பரவும் ஆபத்து உள்ளது.
  பகவான் தான் நம்ம பெண்களைக் காப்பாற்ற வேண்டும்
  எச்சரிக்கைப் பதிவு .
  மிக நன்று மேடம் ,

  பதிலளிநீக்கு
 3. நல்ல வேளை என்பது நல்ல வேலை என்றாகி விட்டது பிழைக்கு மன்னிக்கவும் .

  பதிலளிநீக்கு
 4. நல்லதொரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவு.
  இயற்கைக்கு எதிராக எது செய்தாலும் அது மிகவும் ஆபத்திலேயே முடியக்கூடும்.

  பகிர்வுக்கு நன்றிகள்.
  vgk


  கீழ்க்கண்ட லிங்க்கில் ஆசியா ஓமர் அவர்களின் பின்னூட்டத்திற்கு நான் எழுதியுள்ள பதிலைப் படித்துப்பாருங்கள்.

  http://gopu1949.blogspot.com/2011/11/happy-happy.html#comments

  பதிலளிநீக்கு
 5. BEAUTY LIES IN THE EYES OF THE BEHOLDER.தங்கள் அழகு தங்களாலேயே ரசிக்கப்படாததால் ஏற்படும் விபரீத விளைவுகளே இந்த மாதிரியான செயல்கள். சிலரது எண்ணங்களைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. இந்தப் பதிவை படித்தவுடன் சிலரது அழகின்.? ரகசியம் புரிகிறது.

  பதிலளிநீக்கு
 6. நெகிழி பற்றி எங்கோ ஆரம்பித்து எங்கேயோ
  கொண்டு போய்டீங்க...
  நெகிழிப் பைகளை அறவே ஒழிக்க வேண்டும் என்பதே
  சரியான கொள்கை..
  மஞ்சப்பைய்ய எடுத்துட்டு போங்கய்யா கடைக்கு போகும்போது...

  இதோ பாருடா கூத்த.. இந்த அழகான நடிகைகள் எல்லாம்
  அவங்க அப்பா அம்மா ஜென்களில் உள்ள அழகோட வந்தாங்கன்னு நினைச்சிருந்தா..
  அவங்களா இவங்க....

  சரிதான்...
  நெகிழிச் சிகிச்சையில எதையெல்லாம் மாத்தணும் னு இல்லையா...
  இப்படியா எல்லாத்தையும் மாத்தணும்..
  எங்கே செல்லும் இந்த பாதை....

  பதிலளிநீக்கு
 7. உடல் அழகை காட்ட ,மாற்ற கூறு போட்ட நிலை அறிய தந்த கட்டுரை ,இன்றைய காலத்தை பிளாஸ்டிக் இல்லாமல் கட்டியது உண்மை .

  அந்த மதியை போல...
  தொடரட்டும் பானுமதி பயணம் .

  பதிலளிநீக்கு
 8. அன்பு இராஜராஜேஸ்வரி ,
  தங்கள் வருகை மகிழ்விக்கிறது. தொடர் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 9. அன்பு சிவா,
  தமிழ்ப்பெண்களிடம் இக்கலாச்சாரம் பரவ ஆரம்பித்து விட்டது. இங்கு (சென்னையில்)பலர் அழகு காஸ்மெடிக் அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர். என் உடன் பணிபுரியும் ஆசிரியை ஒருவரே இதற்குச் சான்று. முன்னால் அதிகமாக வெளிவந்த பற்களைத் திருத்த முகவாய்க் கட்டையையை அகற்றி புதிதாக மாற்றி அமைத்தார் அவர்.

  வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க் நன்றி சிவா. இப்போது பணியெல்லாம் எப்படி இருக்கிறது? உடலும் உள்ளமும் நலம்தானே?

  பதிலளிநீக்கு
 10. //நல்ல வேளை என்பது நல்ல வேலை என்றாகி விட்டது பிழைக்கு மன்னிக்கவும் . //

  இதற்கு எதற்கு மன்னிப்பெல்லாம்.அதுதான் யுனிக்கோடின் உபயம்

  கடினப்பட்டு அறுவை சிகிச்சை செய்துகொள்பவர்களை நல்ல வேலை என்று பாராட்டுவது போல இருக்கட்டுமே....ஹா ஹா

  பதிலளிநீக்கு
 11. //திருமதிகள்: மஞ்சுபாஷிணி, சந்திரகெளரி, விடிவெள்ளி, ஆதிராமுல்லை மற்றும் என்னிடம் மிகவும் பிரியம் வைத்துள்ள என் அன்புக்குரிய இமா அவர்கள் போன்றவர்களும் வராதது எனக்கு வருத்தமாகவே இருந்தது./


  படித்தேன் வி.ஜி.கே.
  மன்னிக்கனும். எனக்குத் தெரியவில்லை என்பதே உண்மை. நான் என் வலைப்புவுக்கே வந்து பல நாட்கள் கழித்து உள் நுழைந்தேன். உங்கள் கருத்துரையில் இருந்த பின்னூட்டத்தைப் பார்த்து என்ன செய்தி உள்ளதோ பார்க்கலாம் என்று ஆவலாக ஓடி வந்தால் (தாமதமாகத்தான்) இங்கே ஒரு கோலாகலத் திருவிழாவே நடந்தேறியுள்ளது. விழாவில் கலந்துகொள்ள முடியாதவர்கள் மன நிலை எப்படி இருக்கும் என்று தங்களுக்கே தெரியும். வருத்தம் எனக்கே அதிகம். தங்களின் இன்ப நாட்களில் பங்கெடுத்துக் கொள்ளவும் பாராட்டவும் இயலாத அபாக்கியவதி வருத்தத்துடன்....

  இனிவரும் திருநாளை எதிர்நோக்கி.. வாழ்த்துகளுடன் காத்திருக்கிறேன்....

  ஆமாம் ஃபேஸ் புக் முகவரியில் மின்னஞ்சல் உள்ளதே பார்க்கவில்லையா.

  பதிலளிநீக்கு
 12. G.M Balasubramaniam சொன்னது…
  //சிலரது எண்ணங்களைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. இந்தப் பதிவை படித்தவுடன் சிலரது அழகின்.? ரகசியம் புரிகிறது.//

  ஆம் ஐயா. எது நிலை எது நிலையில்லை என்று ஒன்றுமே புரியாத உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கி(றார்கள்)றோம். வருகை கருத்து இரண்டுக்கும் மனமார்ந்த ந்ன்றிகள் ஐயா.

  பதிலளிநீக்கு
 13. மகேந்திரன் சொன்னது..
  ///எங்கோ ஆரம்பித்து எங்கேயோ
  கொண்டு போய்டீங்க...///
  அது சும்மா அம்மாவோட அறிவிப்பச் சொல்லனும்ல..அதுக்காக...

  //மஞ்சப்பைய்ய எடுத்துட்டு போங்கய்யா கடைக்கு போகும்போது...//
  நாங்க ஆரம்பிச்சு ரொம்ப நாள் ஆச்சு சார்.

  பதிலளிநீக்கு
 14. மகேந்திரன் சொன்னது..
  //இதோ பாருடா கூத்த.. இந்த அழகான நடிகைகள் எல்லாம்
  அவங்க அப்பா அம்மா ஜென்களில் உள்ள அழகோட வந்தாங்கன்னு நினைச்சிருந்தா..
  அவங்களா இவங்க..//

  அவரா நீங்க...ரொம்ப நாளா அவரப்பத்திப் பேச்சு காணலை.. நீங்க நினைவூட்டிட்டீக..

  பதிலளிநீக்கு
 15. மகேந்திரன் சொன்னது..
  எங்கே செல்லும் இந்த பாதை....

  யாரோ யாரோ அறிவாரோ!!!! அவனையன்றி..
  வருகை கருத்து இரண்டுக்கும் நன்றி மகேந்திரன்.

  பதிலளிநீக்கு
 16. வாங்க கலைநிலா,
  அந்த மதியை போல...
  தொடரட்டும் பானுமதி பயணம் .

  அது யாரு பானுமதி? எங்கே போகிறார்கள்?

  பதிலளிநீக்கு
 17. நெகிழி அறுவை சிகிச்சை பெண்கள் மட்டுமில்லை ஆண்களும் செய்துகொள்கிறார்கள்... கட்டுடல் வடிவமைப்பு முதல் இளமை தோற்றம் வரை...

  http://plasticsurgery4u.com/male_plastic_surgery/index.html

  பதிலளிநீக்கு
 18. ஆதிரா...தலையங்கம்தான் பிடிச்சது எனக்கு !

  பதிலளிநீக்கு
 19. உலக புகழ் மைக்கேல்ஜாக்ஸன் நிலைமையை பார்த்தாவது இவர்கள் உணரமாட்டார்களா..

  பதிலளிநீக்கு
 20. Thanjai Vasan (தஞ்சை.வாசன்) சொன்னது…

  //நெகிழி அறுவை சிகிச்சை பெண்கள் மட்டுமில்லை ஆண்களும் செய்துகொள்கிறார்கள்... கட்டுடல் வடிவமைப்பு முதல் இளமை தோற்றம் வரை...//

  ஆம் வாசன் அதுபற்றி அடுத்த பதிவு இடலாம் என்று இருந்தேன். நன்றி வாசன்.

  பதிலளிநீக்கு
 21. அன்புள்ள ஹேமா,
  தலையங்கத்தைப் படித்து கருத்து சொன்ன உங்கள் அன்புக்கு தலை வணங்குகிறேன். வருகைக்கு மிக்க நன்றி ஹேமா.

  பதிலளிநீக்கு
 22. அன்பு ராஜேஷ்,
  தங்கள் ஆதங்கம் எனக்கும். அதே ஆர்வத்தில்தான் இப்பதிவு இடப்பட்டுள்ளது. இந்நாகரிகம் மெல்ல மெல்ல சாதாரன மக்களிடமும் பரவத்தொடங்கி விட்டது என்பதே உண்மை.

  பதிலளிநீக்கு
 23. அன்பு ராஜேஷ்,
  வருகைகும் கருத்துக்கும் நன்றி ராஜேஷ்.(மாய உலகம்)

  பதிலளிநீக்கு
 24. பானுமதியை பற்றி உங்களுக்கு தெரியாது .
  ஆனால் உங்களை பற்றி அவங்களுக்கு தெரியும்.
  அவங்க பேரை சொன்னால் சும்மா ஆதிரா என்றே அதிருமுல்லே

  பதிலளிநீக்கு
 25. ம்ம்ம்... அப்பறம் சொல்லுங்க கலைநிலா. என்ன அதிருதோ என்னவோ....எனக்கு இப்ப பயத்தில் மனசெல்லாம் அதிருது.

  பதிலளிநீக்கு