“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

வெள்ளி, 7 மே, 2010

துஷ்ட கோள்களும் சுற்றும் விழிகளும்!!!!!


"சுட்டும் விழிச் சுடர்தான் - கண்ணம்மா
சூரிய சந்திரரோ?"

என்றுகண்களின் ஒளியைப் பாடிப் பரவசப்பட்டான் பாரதி. அவனுக்குத் தெரிந்து இருக்கும் இவர்கள் (இந்தக் கோள்கள்) தான் கண் தொடர்பான எல்லாவற்றிக்கும்
காரணம் என்று. அவன் தீர்க்கத்தரசி அல்லவா? கண்களுக்கு ஒளியைத் தருவது மட்டுமன்றி இருளைத் தருவதும் இவர்களால் முடிந்த உபகாரம் என்பதை அறிந்தவன்.

http://www.pradeepastrosolution.com/images/planets.gif

கண பார்வைக்குச் சுக்கிரன்தான் முதன்மை அதிகாரி.
ஆனால் சூரியன் வலக் கண்ணையும், சந்திரன் இடக் கண்ணையும் தங்கள அதிகாரத்திற்குள் கொண்டு வந்து விட்டார்கள். பாவம் சுக்கிரன். என்ன செய்வது இவர்களுடன் மோத வலுவில்லாததால் கூட்டணிக்கு சம்மதித்து கண் தொடர்பான நோயைப் பரப்பி வருகிறார். ஆம் கண்கள் தொடர்பான நோய்களுக்கு இம்மூவரும் இரண்டு, பனிரெண்டாம் இடங்களுமே காரணம்.


வலக் கண் இன்சார்ஜ்:
சூரியன் எட்டாவது அல்லது பத்தாவது தொகுதிக்கு வந்தால் வலக் கண்ணைச் சோதிப்பார்.
இடக் கண் இன்சார்ஜ்:
சந்திரன் பனிரெண்டில் இருந்தால் இடக் கண்ணைச் பாதிப்பார்.

மாலைக்கண்:
சூரியன் சந்திரன் இருவரும் இரண்டாம் தொகுதிக்கு வந்தால் மாலைக்கண் பரிசை வழங்குவார்கள் தன் தொகுதி மக்களுக்கு. சில சமயங்களில் சுக்கிரனும் சந்திரனும் 6 , 8 , 12 ஆம் தொகுதிகளில் சேர்ந்து வந்து மக்களுக்கு மாலைக்கண் அன்பளிப்பை அகமகிழ்ந்து வழங்குவார்களாம்.

மாறுகண்:
சுக்கிரனும் சந்திரனும் பனிரெண்டாம் தொகுதியில் இருந்தால் இடக்கண்ணின் பாதியைப் பறித்துக் கொள்வார்களாம். அவர்கள் ஒன்றரை(1-1/2) கண்ணாலதான் இவர்களைப் பார்க்க வேண்டும். தொகுதிச் சீரமைப்புக்கான வசூலோ இது?

கண் அறுவைச் சிகிச்சை:
5 , 6 க்கான கிரகங்கள் சுக்கிரனுடன் 12 ஆம் தொகுதியில் மீட்டிங் போட்டு அறுவைச் சிகிச்சைக்கு வழி வகுத்து விடுவார்களாம். இது நல்ல இருக்கே. இது என்ன டாக்டர்ஸ் மீட்டிங்கா?


மொத்தமா குருடு:
இந்த மூவரால் மட்டும் மொத்தமாகக் குருடாக்க முடியாதாம். அதனால் சனி பகவானுக்கும் கூட்டனிக்கு அழைப்பு விடுவார்களாம். இவரும் உடனே சம்மதித்து விடுவாராம். சனிக்குத்தான் ஆத்திரம் அதிகமாக இருக்கும். ஏனென்றால் அவர்தானே கண்களைக் கட்டிக்கொண்டு அல்லல் படுகிறார். தனக்கு ஒரு கண் போனாலே இரு கண்களைப் பறிக்க எண்ணுவர். இவர்க்கோ இரு கண்களும் இருந்தும் இல்லாதவை!!!. நல்ல வேளையாக மனிதருக்கு இரண்டே இரண்டு கண்கள். செவ்வாய் இரண்டில், சந்திரன் ஆறில், சூரியன் எட்டில், சனி பனிரெண்டில் இருந்து வியுகம் அமைத்து மொத்தமாக குருடு ஆக்கிவிடுவார்களாம். நல்ல எண்ணம்!! ரொம்ப சந்தோஷம்!!
அடுத்த கட்டுரையில் கோள்களின் அட்டூழியம் தொடரு
ம்...


http://1.bp.blogspot.com/_ruK8hx_h-co/SpFHbNrtyuI/AAAAAAAAAEE/UeK4ynOkEHg/s400/DSC05614.jpg
2 கருத்துகள்: