“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

சனி, 10 ஏப்ரல், 2010

ரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா?




ரேக்கி என்று சொன்னவுடன் கல்லூரி கலாட்டாக்கள் (Ragging) உங்கள் நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பு அல்ல. இல்லை ராக்கி கட்டும் உன்னதமான சகோதர உறவைக் காட்டும் ஹோலிப்பண்டிகை நினைவுக்கு வந்தாலும் அதற்கும் நான் பொறுப்பு அல்ல. இது வேறு..... இப்பொழுது பரவலாக ரேக்கி மருத்துவம் என்று பேசப்படுவதை அனைவரும் அறிந்து இருப்பர். ரேக்கி என்றால் என்னங்க? இது ஜப்பானியர்களின் புராதன மருத்துவக் கலை. இந்த மகா பிரபஞ்சத்திற்குள்ளே நாம் ஒரு சிறிய் அணுவாக உரைந்து இருக்கிறோம்.. (REI) என்றால் பிரபஞ்சம் என்று பொருள். (KI) என்றால் உயிர்ச்சக்தி என்று பொருள். இந்த பிரபஞ்சம் முழுவதும் பரவி உள்ளது இந்த உயிர்ச்சக்தியே. பஞ்ச என்றால் ஐந்து என்று பொருள் தரும். ப்ரபஞ்சம் என்பது நிலம், நீர், காற்று, தீ, ஆகாயம் என்ற ஐம்பூதங்களைக் குறிக்கும். பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உடல்களும் ஐம்பூதங்களால். ஆனவை.

நிலம் – உடல்
நீர் – இரத்தம்
காற்று – உயிர் சுவாசம் (பிராணவாயு)
நெருப்பு – சூடு (உடலின் மிதமான வெப்பம்)
ஆகாயம் – விந்து
இதனையே,

“அண்ட்த்தில் உள்ளதே பிண்டம்
பிண்ட்த்தில் உள்ளதே அண்டம்
அண்டமும் பிண்டமும் ஒன்றே
அறிந்துதான் பார்க்கும் போதே

என்று சட்டமுனி உரைக்கக்காணலாம். ப்ரபஞ்சத்தில் உள்ள
உயிர்கள் நலமாக இருக்க தேவையான சக்தியை அளித்திருக்கிறான் கடவுள். கடவுளின் கருணையால் பிரபஞ்சம் முழுவதும் பரவிக்கிடக்கிற பிரபஞ்ச சக்தியை
, உடலை அச்சக்தியை ஈர்க்கும் கருவியாக்கி, உடலின் மூலம் ஈர்த்து அதனை யாருக்கு எந்த அளவு தேவைப்படுகிறதோ அந்த அளவு பயன்படுத்துவது ரேக்கி என்றமருத்துவக் கலை. முறையான மருத்துவர் (Master) மூலமே சிகிச்சையும், பயிற்சியும் பெறுதல் மிக மிக அவசியம். இக்கலை ஐந்து நிலைகளாக பகுக்கப்படுகிறது.
அவை முறையே,

1. தூய்மைப்படுத்துதல் – (RINSING AND REFINING)2. சக்தியூட்டல் - (ENERGIZING0)3. தடை காப்பளித்து நலப்படுத்துதல் (நோய் எதிர்க்கும் சக்தி – IMMUNIZING)4. இணைத்தல் - (KINTTING – UNITING)5. கவசமளித்தல் - (INSULATING

தூய்மைப்படுத்துதல்


R – Rinse or clean - தூய்மைப் படுத்துதல் –
ரேக்கி மாஸ்டர், தான் ரேக்கி கலையைப் பயன் படுத்தும் முன்பு தன் உடல், மனம் ஆகிய இரு கருவிகளையும் சுத்தப்படுத்திக் கொள்வது மட்டுமன்றி நோயாளியும் இதே ஒத்த நிலையில் இருக்கச் செய்வது ஆகும்.


சக்தியூட்டுதல்


E – Energize or Activate - சக்தியூட்டுதல் - உலகில் உள்ள ஒவ்வொரு தனிமத்துள்ளும்(Element) மகத்தான பல சக்திகள் அமைந்துள்ளன. இந்த சக்திகளுக்கெல்லாம் ஆதார சக்திதான் ப்ரபஞ்சப் ப்ரணவ உயிர்ச்சக்தி. இந்தச் சக்தி இல்லையேல் உயிர்கள் இயங்க முடியாது. அப்படிப்பட்ட உயிர்ச்சக்தியைப் ப்ரபஞ்சத்தில் இருந்து பெற்று, அதை மற்றவர்கள் மீது செலுத்தும் அருட்பணியே சக்தியூட்டல் என்பதாம்.

தடைக்காப்பளித்து நலப்படுத்துதல்

I – Immunize or Stabilize - தடைக்காப்பளித்து நலப்படுத்துதல் – ப்ரபஞ்சத்தில் இருந்தே சக்தியை எடுத்து நோய்
எதிப்பாற்றலைப் பெருக்குதலாம்.


இணைத்தல்

K – Knit or Unite- இணைத்தல் – எதிர்ப்பாற்றலை உருவாக்கிய
பின் நோயைக் கண்டறிந்து நோயையும் அதற்குத் தேவையான ப்ரபஞ்ச சக்தியையும் இணைத்தல்.


கவசமளித்தல்

I – Insulate or protect - கவசமளித்தல் – பிணியின் தீவிரத்தைக்
குறைத்தல் அதாவது நோயைக் குணப்படுத்துதல் (
Healing).

இவை ஒவ்வொன்றுக்கும் குறியீடுகள் உள்ளன. அவற்றை வரைந்து அதற்கான உச்சரிக்கும் சொற்களும் உள்ளன. இந்தக் குறியீடுகளும் மந்திரச் சொற்களும் சுமார் 147 உள்ளன.



அவற்றை உச்சரித்து அருகில் உள்ளவர்களூக்கு மட்டுமன்றி தொலைவில் உள்ளவர்களுக்கும் நோயைப் போக்கலாமாம். இன்னும் அடுத்த பதிவில் தொடரும்...

ஆதிரா..

8 கருத்துகள்:

  1. இயற்கையே நமக்கு மருந்து. அதுவே நம்மை நோயிலிருந்து குணப்படுத்தும் என்ற ஜப்பானிய பூர்விக மருத்துவகலை பற்றிய தங்களின் முதல் கட்டுரைக்கு மிக்க நன்றி...

    இயற்கையின் மூலமாதான் அதிக நோயே நமக்கு பரவுது.(சிரிக்கலாம்) பின்பு அது எப்படி நம்மை காப்பாற்றும் என மனதில் கேள்வி எழலாம்.(சிந்திக்கலாம்)

    பதிலளிநீக்கு
  2. மன்னிக்கவும் வாசன். இயற்கையின் மூலம் நமக்கு நோய்கள் பரவுவது இல்லை. இயற்கையை நாம் தான் நோயாளி ஆக்கி விட்டோம். ”நிலமகள் நோதல் இன்றி நிறை பயன் எய்தல் வேண்டும்” என்ற ஒரு படித்த ஒரு கவிதைதான் நினைவுக்கு” வருகிறது. பிறர்க்கின்னா முற்பகல் செய்யின்” நமக்கு வருவது இயல்புதானே. இயற்கையை அழிப்பதற்கும் ஒரு எல்லை இருக்கிறதே.. தங்கள் இயற்கையின் சா(கோ)பம் கவிதையும் இதைத்தானே கூறுகிறது. கருத்து பகர்ந்தமைக்கு மிக்க நன்றி வாசன்..

    பதிலளிநீக்கு
  3. அன்புள்ள ஆதிரா,

    //இயற்கையின் மூலம் நமக்கு நோய்கள் பரவுவது இல்லை//

    இயற்கையின் மூலம் நமக்கு நோய்கள் பரவாது பல பேருக்கு தெரியும்.

    இது அறியா மக்களின் கேள்வியாய் அது... சிரிக்க மட்டும்...

    பதிலளிநீக்கு
  4. உங்கள் உழைப்பு, எழுத்தாற்றல் எனக்குப் பெரிய ஆச்சரியம். பாராட்டுக்களும்!
    பின்னூட்ட அளவுகளைப் பார்த்து மனம் தளர்ந்துவிடாதீர்கள். இது​போன்ற பதிவுகள் தான் தமிழ் சமூகத்து முக்கியம். கவிதை, கதை, ​நகைச்சுவை என்று வெளுத்துக்கட்ட ஏகப்பட்டவர்கள் உண்டு. இது​போல் அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், ஆரோக்கியம், நலவாழ்வு, தொன்கலைகள் பற்றி எழுதத்தான் ஆட்கள் குறைவு.

    ரெய்கி - ஒரு நல்ல தொடக்கம்.. ​தொடருங்கள் ஆதிரா!

    பதிலளிநீக்கு
  5. அதுதானே பார்த்தேன் வாசனின் கருத்தாற்றல் நான் அறியாத்து அல்லவே..(சிரித்து விட்டேன்) மீண்டும் வந்து கருத்துப் பகர்ந்தமைக்கு மிக்க நன்றி வாசன்.

    பதிலளிநீக்கு
  6. தங்கள் கருத்தை என் சிரம் தாழ்த்தி ஏற்றுக்கொள்கிறேன் ஜெகநாதன். தங்களைப் போன்ற நற்சிந்தையுள்ள ஒருவர் பாராட்டே ஓராயிரம் பாராட்டுக்குச் சமம் என்பதை நானறிவேன். தாங்கள் தரும் அன்பான ஊக்கத்தில் இன்னும் படைப்பேன். தொடர்ந்து தங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும், தந்த, தரவிருக்கும் ஊக்கத்திறகும் என் மனமார்ந்த நன்றி ஜெகநாதன்.

    பதிலளிநீக்கு
  7. வியப்பளிக்கிறது உங்களின் இந்தப்பதிவு. இதைப்பற்றி முதல் முதலில் கேள்விப்படுகிறேன்....பொக்கிசமாய் இத்தனை விசயங்களை தெரிந்து வைத்திருக்கிறீர்களே என்று ஆச்சர்யமளிக்கிறது.... தொடரட்டும் ..... அன்பான வாழ்த்துக்கள் ஆதிரா!!!

    பதிலளிநீக்கு
  8. மிக்க நன்றி கவிதன். இது குறித்து இன்னும் பதிவுகள் தர இருக்கிறேன். இதில் நிறைய இருக்கிறது கவிதன். நேரம் கிடைக்க வேண்டும் பதிவிட அவ்வளவே... த்ங்கள் அன்புக்கு, வருகைக்கு, வாழ்த்துக்கு மிக்க நன்றி கவிதன்..நானும் தங்கள் தளத்தைப் பார்வையிட்டுக்கொண்டுதான் இருக்கிறேன். அருமையான கவிதைகள்ம் எல்லாம்..

    பதிலளிநீக்கு