“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

திங்கள், 28 மே, 2012

நிலாச்சோறு இதழ் வெளியீட்டு விழா


நிலாச்சோறு இதழ் வெளியீட்டு விழா
வெளியிட்டவர் செஃப் ஜேகப் ச. அருணி

நிலாச்சோறு மாத இதழ் வெளியீட்டு விழாவும் அதனையொட்டிய பயிலரங்கமும் சிறப்பாக நடந்தேறியது. உணவுக்கலை வல்லுநர் ஜேகப் அவர்கள் நூலை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார். பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்ட புகுமுக இதழாளர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கிச் சிறப்பு செய்தார்.பயிலரங்கத்தில் குங்குமம் இதழாளர் கவிஞர் அய்யனார் ராஜன் நேர்முகம் குறித்தும் திரைப்பட பாடலாசிரியர், கவிஞர், இதழாளர் முருகன் மந்திரம் அவர்கள் கட்டுரைகள், படப்பதிவு பற்றியும் பேரா.எழுதாளர்.ப. பானுமதி அவர்கள் சிறுகதை, நூல் அறிமுகம் பற்றியும் பேரா. கவிஞர். பூமாவதி அவர்கள் பன்முக திறனும் ஆளுமையும் என்பது குறித்தும் கருத்துகளை வழங்கினர்கள். நிலாச்சோறு இதழின் ஆசிரியர் மணி எழிலன் அவர்கள் வரவேற்புரையும் நன்றியுரையும் வழங்கினார். கவிராஜன் இலக்கிய மன்றத்தின் பொதுச்செயலாளர் துரை கோ. அவர்கள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.


4 கருத்துகள்:

  1. நிலாச்சோறு இலக்கிய குழந்தைகளுக்கு பசியாற்றட்டும். நிலா வளரட்டும். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. வருக சத்ரியன். பசியாற்றும் அழகிய மாத இதழாக வரும் என்று நம்புகிறேன். வாழ்த்துக்கு மிக்க நன்றி சத்ரியன்.

    பதிலளிநீக்கு