“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

சனி, 4 டிசம்பர், 2010

மீண்டும் அறுவை - அன்றும் இன்றும்...


சென்ற இதழில் எட்டு ஒன்பதாம் நூற்றாண்டான சோழர் ஆட்சி காலத்தில், மகப்பேறு அறுவை சிகிச்சை ஒரு துறையாகவே இருந்து வந்துள்ளது என்று பார்த்தோம். இதற்கும் சற்று முந்தைய கி.பி. 600 முதல் 850 வரையிலான காலத்தைப் பக்தி இலக்கிய காலம் என்பர். இதுவும் சோழர்களின் ஆட்சி காலமே. இக்காலத்தில் அறுவைச் சிகிச்சை, படிநிலை வளர்ச்சி அடைந்த நான்கு நிலையில் இருந்து வந்துள்ளது.
Justify Full
உடலில் ஏற்படும் கட்டிகளுக்கு இந்த நான்கு முறைகளைக் கையாண்டு அறுவை சிகிச்சை செய்துள்ளனர். திசுக்களில் நுன்கிருமிகள் பரவுவதால் அழற்சி ஏற்படுகிறது. அதனால் பக்கத்தில் உள்ள இரத்தக் குழாய்களில் இரத்த உறைவு ஏற்பட்டு அப்பகுதியைச் சுற்றி வீக்கமும் அதனால் தாங்க முடியாத வலியும ஏற்படுகின்றன. அவ்வீக்கத்தில் இருக்கும் நுண்மங்கள், வெள்ளை அணுக்களின் ஒரு பாலிமார்ப் அணுக்கள் அவ்விடத்தில் உள்ள புரதப் பொருள்களை நொதிகளாக மாற்றி, அழுகும் திசுக்களை நீர்மமாக்குகிறது. இதுவே சீழ் எனப்படுகிறது.

உடலில் கட்டிகள் தோன்றினால், கட்டிகளை அறுத்தல், அதனுள் தேங்கிய இரத்தத்தை அகற்றுதல், அப்பகுதியை நன்கு சுத்தப் படுத்துதல், பின்னர் மருந்தை இட்டுக் கட்டுதல் என்ற நான்கு நிலையில் மருத்துவம் செய்யப்படும்.

இந்த நான்கு நிலைகள் அக்காலத்தும் இருந்து வந்திருக்கிறது. இதனை பின்வரும் கம்பராமாணப் பாடலால் அறியலாம்.


“உடலிடைத் தோன்றிற்று ஒன்றை
அறுத்து அதன் உதிரம் ஊற்றிச்
சுடலுறச் சுட்டு வேறோர்
மருந்தினால் துயரம் தீர்ப்பர்”

ஆனால் இன்றைய காலத்தில் சுத்தப்படுத்துவதற்கு டிங்சர். சாவ்லான், அல்லது டெட்டால் பயன் படுத்துவது போன்றல்லாமல் அக்காலத்தில் நெருப்பால் சுட்டுள்ளனர் என்று தெரிய வருகிறது. இம்மருத்துவம், முறையான சித்த மருத்துவ
மருத்துவர்களால் செய்யப்பட்டு வந்துள்ளன என்பதற்கும் இலக்கியச் சான்றுகள் காணப்படுகின்றன.

இக்காலத்தில் நோயாளி மருத்துவர் மீதும், மருத்துவர் நோட்டின் மீதும் காதல் கொண்டிருப்பதைப் போல் அல்லாது அக்காலத்தில் மருத்துவர் மீது நோயாளியும், நோயாளி மீது மருத்துவரும் காதல் கொண்டிருந்தனர். இன்னும் சொல்லப்போனால் நோயாளிகள் மருத்துவன் மீது பக்தியே கொண்டிருந்தனர் எனலாம்.

பக்திப் பணுவல்களை இயற்றிய
வைணவ ஆழ்வார்களில் ஒருவரான குலசேகராழ்வார், இறைவன் எத்துனை துன்பன்களைத் தந்தாலும் அவனிடம் தனக்கு அன்பு குறையாமல் இருக்கிறது என்பதைக் கூறும் போது, அதற்கு உவமையாக ”மருத்துவன் வாளால் அறுத்து, சுட்டு மருத்துவம் செய்தாலும், அவன்மீது அன்பு குறையாத நோயாளி போல” என்ற உவமையைப் பயன்படுத்துகிறார். பாடல் இதோ.

“வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால்
மாளாக் காதல் நோயாளன்போல் மாயத்தால்
மீளாத்துயர் தரினும் வித்துவக்கோட் டம்மானேநீ
ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே”

புண்ணுக்கு மருந்திட்டு அதனைப் பஞ்சால் சுற்றும் வழக்கமும் சங்கம் முதலே இருந்து வந்துள்ளது. போர்மேல் கொண்ட ஆசையால் போர்க்களத்தில் ஏற்பட்ட புண்ணுக்கு மருந்திட்டு கட்டிய பஞ்சினைக் கூடக் களையாது ஆயுதங்களை ஏந்தித் திரிந்தனராம் வீரர்கள். இதனை

”செருவா யுழக்கி குருதி யோட்டி
கதுவாய் போகிய துதிவா யெ•கமொடு
பஞ்சியும் களையாப் புண்ணர்”

என்ற பாடல் சுட்டுகிறது.

ஒன்பது மாதக் கர்ப்பினிப்பெண் ஒருத்தி சாலையில் நடந்து கொண்டிருந்தபோது எதிர் பாராத விதமாக அங்கு ஓடி வந்த காளை கொம்பால் வயிற்றில் குத்திவிட்டது. வயிற்றில் ஏற்பட்ட துளையின் வழியாக குழந்தையின் கையின் ஆள்காட்டி விரல் வெளியில் வந்து விட்டது. அப்பெண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாள். வேறு வழியின்றி அறுவை சிகிச்சை செய்துதான் கையை உள்ளே வைக்க வேண்டும் என்று தீர்மானித்தனர். குழந்தையை வெளியில் எடுக்க முடியாது. எடுத்தால் குறைமாதக் குழந்தையாகி பரிதவிக்கும். என்றெல்லாம் குழம்பிக்கொண்டு மருத்துவர்கள் நிற்க, தலைமை மருத்துவருக்கு ஒரு சிந்தனைப் பொறி கிளம்பியது. செவிலியிடம் ஒரு ஊதுபத்தியைக் கொளுத்தி எடுத்துவரச் சொன்னார். அந்த பத்தியால் குழந்தையின் விரலை லேசாகச் சுட்டார் (தொட்டார்). உடனே குழந்தை விரலை வெடுக்கென உள்ளே இழுத்துக் கொண்டது. பிறகு கொம்பு பாய்ந்த தாயின் வயிற்றை தையல் போட்டு மூடினர். இது ஆங்கில மருத்துவ யுகமான இக்காலத்தில் நடந்தது.

ஒருவரின் மூக்கின் வழியாக மூளைக்குள் சென்று அமர்ந்து விட்டது தேரை ஒன்று. எப்படி என்று மூக்கின் மீது விரல் வைக்கிறீர்களா? ஒரு வேளை உறங்கிக்கொண்டிருக்கும் போது சென்றிருக்கும். அவ்வளவு பெரிய மூக்குத் துவாரமா என்றெல்லாம் கேட்கக்கூடாது. தேரை குட்டியாக இருந்திருக்கலாம் இல்லையா?

சரி விஷயத்திற்கு வருவோம. தேரை மூளைப்பகுதியைக் கெட்டியாகக் கெளவிப் பிடித்திருந்தது. அகத்தியரின் அறுவை சிகிச்சை தொடங்கியது. மூளைக்குள் இருக்கமாகப் பற்றியிருந்த தேரையை எடுக்க வழி என்ன என்று சிந்தித்தார். ஏனெனில் மூளை மிகவும் மென்மையான பகுதி மட்டுமல்ல. உடல் உறுப்புகள் அனைத்தையும் இயக்கும் முக்கிய பகுதி. உடனே உடனிருந்த தேரையார் உபாயம் ஒன்று கண்டு சொன்னார்.


ஒரு நீர் நிறைந்த மட்பாண்டத்தை எடுத்து வந்து தேரையின் முன் காட்ட, மூளைக்குள் இருந்த தேரை நீருக்குள் தொப்பென்று குதித்தது.
http://www.kaboodle.com/hi/img/2/0/0/25/2/AAAAAmOm5_0AAAAAACUtZA.jpg
உன்னைப் போற்றுகிறேனடா என் சீடா என்று கட்டியணைத்து கொண்டாராம் அகத்தியர் தேரையாரை. எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்பு வந்த நம் மண்ணின் மருத்துவர்களாகிய சித்தர்கள் மட்டும் சளைத்தவர்களா என்ன சமயோசிதத்தில்? இந்தப் பாடல் சற்று நீளமானாது. ஆனால் சுவையானது. படித்துப் பாருங்களேன்.

“பொருந்தியே தேரையது மூளைதன்னை

பொலிவான நாசிவழி தன்னில் சென்று

வருந்தியே மூளைதன்னைப் பற்றியல்லோ

வாகுடனே தேரையது பொருந்தி நிற்க

கவனிக்கும் வேளையிலே கத்தி கொண்டு

கருத்துடனே மூளைதனைக் கீறிப்பார்க்க

மவுனமென்ற மூளைதன்னில் தேரை தானும்

மார்க்கமுடன் கவ்வியல்லோ கொண்டு நிற்க

புவனமென்ற மூளைதன்னில் தேரை தானும்

புகழான தேரையர் முனிவர் தாமும்

சவனமென்ற பாணியினால் எடுக்கத் தந்திரம்

சாற்றினார் தேரையார்தாம் சாற்றினாரே.


சாற்றவே மண்பாண்டம் தன்னில் தானும்

தன்மையுள்ள சலமதனை நிறைய விட்டு

ஆற்றலுடன் தேரைமுன்னே எதிரே காட்ட

அங்கனவே மூளைவிட்டு குதிக்கலாச்சே

நாற்றிசையும் மேவு புகழ் அகத்தியனார்தாம்

நல்லறிவு கண்டுமல்லோ மனமுவந்து

போற்றியே என்சீடா பொன்னரங்கா

பொலிவான தெள்ளமிர்த சிங்கமாமே”

ஒரே கல்லில் இரு மாங்காய். சித்தர் மூளைப்பகுதியைக் கூட அறுவை செய்துள்ளனர். அத்துடன் இத்தகு சம்யோசித சிந்தனையிலும் சிறந்தே விளங்கி இருந்திருக்கிறார்கள்.

சரி கத்தியால் மூளையைக் கிழித்தாகள். தைப்பதற்கு எதனைப் பயன்படுத்தியிருப்பார்கள். அடுத்த இதழில் பார்க்கலாமே.

அறுவை தொடரும்.. .. ..

நன்றி குமுதம் ஹெல்த்

19 கருத்துகள்:

  1. சித்தர்கள், ஆழ்வார்கள் என்று பக்தி இலக்கியம் படைத்து பகவானைப் பாடியவர்கள் செய்த வைத்திய முறைகளை பாங்காக அந்ததப் பாடல்களோடு மிக நேர்த்தியாக தைத்திருக்கிரீர்கள். இரண்டாம் அறுவையும் வெற்றிதான். Operation Successful. ;-)

    இதை எழுதுவதற்கு முன்பு நிறைய படித்து உழைத்திருப்பீர்கள். எங்களைப் போன்றோர் கதைவிட்டு பொழப்பு நடத்தி வரும் வேளையில் மிகவும் பயனுள்ள முறையில் பதிகிறீர்கள். நன்று. வாழ்த்துக்கள். தொடருங்கள்... ;-)

    பதிலளிநீக்கு
  2. Operation Successful. ;-) ஆள் out னு சொல்ற மாதிரி இருக்கு...
    இருந்தாலும் தேரையார் இருக்காரு ஆள அவுட் பண்ணாம காப்பாத்த..

    உடனடியாகப் படித்துப் பின்னூட்டம் இட்டு உற்சாகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி RVS

    பதிலளிநீக்கு
  3. மருத்துவ மனைக்குள்ளே உட்காரவைத்து சொல்லிக்கொடுத்தது போல் இருக்கிறது இந்த ஆப்பேரஷன் பதிவு....
    9 மாத க்குழந்தை க்கதை சுபமாக முடியும் வரை திக்...திக்....
    அறுவைக்கு கத்தி ...தையலுக்கு முள்ளா ?
    அழகான தமிழில் இவ்வளவு மருத்துவ கவிதைகளை சேகரித்து பதிவிடுவதற்கு சிறப்பு பாராட்டுகள்..........

    பதிலளிநீக்கு
  4. //மருத்துவ மனைக்குள்ளே உட்காரவைத்து சொல்லிக்கொடுத்தது போல் இருக்கிறது இந்த ஆப்பேரஷன் பதிவு....//
    பத்துஜி எங்க போனாலும் யார் பின்னூட்டமும் எடுபடாத மாதிரி போடறீங்களே.. நாங்க என்ன பண்றது.. உம்... சொல்லுங்க... ;-)

    பதிலளிநீக்கு
  5. ஆர்.வி.எஸ் உங்கள மாதிரி படம் புடிச்சு போடவோ , கத்த கத்தய சிரிக்க சிரிக்க எழுதவோ முடிய மாட்டிங்குது... என்னால முடிஞ்சது ,நல்லா எழுதறவங்களுக்கு ஊக்கமா நாலு நல்ல வார்த்தை எழுதறதுதான்...என்னை ஊக்கப்ப்டுத்தியதற்கு நன்றி

    அதுலயும் ஆதிரா, பிஸ்தாவோ அறுவை சிகிச்சையோ ஒரு பொருள் எடுத்தா அதை அக்கு வேறு ஆணிவேறா பிரித்து பிரித்து விளக்கி பொருத்தமாய் தமிழ்க்கவியையும் போடுவதில் ராணியாக இருக்கிறார்....

    பதிலளிநீக்கு
  6. ஆதிரா! அக்கால அறுவைசிகிச்சை முறை பற்றி
    அற்புதமான பாடல்களுடன் நல்ல பதிவு. பின்னூட்டம் போட நுழைந்தால் ஏற்கெனவே இரண்டு சர்ஜன்கள் பிரிச்சு மேய்ந்து கொண்டிருக்கிறார்கள் ஆபரேஷன் தியேட்டரில்..
    சரி.. நான் போய் பேஷண்ட்டுக்கு சாத்துக்குடி பழங்கள் வாங்கிவரேன்!
    விரல் நீட்டிய குழந்தை... டென்ஷனாயிட்டங்க!

    பதிலளிநீக்கு
  7. 4 ஜி. க்களின் (இது அந்த 2ஜி விவகாரம் இல்ல. வலைத்தளங்களில் கலக்கிக்கொண்டிருக்கும் 3ஜிஸ்) கருத்துரையே எங்களை ஏதோ கொஞ்சம் எழுததூண்டுகிறது என்றால் அது மிகையில்லை. அந்த நாலாவது ஜி (அப்பா ஜி) யைக் காணோம் இன்னும்.
    தையலுக்குத்தான் கட்டெறும்பைப் பயன்படுத்தி -யுள்ளார்களே.. அதை இந்த சிற்றெறும்பு எடுத்துச் சொல்லிட்டு இருக்கு...

    அந்த 9 மாதக் கற்பினி கதை செவிவழிச்செய்தி.

    ஊக்கம் தரும் தங்களின் ஆழமான, அன்பான கருத்துரைக்கு மிக்க நனறி பத்ம நாபன்.

    அதுவும் என்னைப் போல சோம்பேறியாக இல்லாமல் உடனடியாக வந்து கருத்து கூறும் அன்புக்கு மிக்க ந்ன்றி..

    பதிலளிநீக்கு
  8. //பத்துஜி எங்க போனாலும் யார் பின்னூட்டமும் எடுபடாத மாதிரி போடறீங்களே.. நாங்க என்ன பண்றது.. உம்... சொல்லுங்க... ;-) //
    RVS சார்,
    ஒருத்தரு முன்னூட்டம் சிறப்பா போடுறீங்க.. ஒருத்தரு பின்னூட்டம் சிறப்பா போடுறீங்க.. ஒருத்தரு எல்லா ஊட்டமும் சிறப்பு.. ஒருவர் அமானுஷ்யத்தில அழைச்சுட்டுப் போயி திக்கு முக்காட வைக்கிறீங்க..... நாங்களெல்லாம் என்ன செய்ய... ஏதாவது ஒரு வழி சொல்லுங்க.. கிளாஸ் எடுக்கிறீங்களா...... மக்கு ஆதிராவுக்கு...


    ஒன்றுமே புரியாமல்..
    வருத்தம் தோய்ந்த முகத்துடன்,
    ஆதிரா..

    பதிலளிநீக்கு
  9. //பின்னூட்டம் போட நுழைந்தால் ஏற்கெனவே இரண்டு சர்ஜன்கள் பிரிச்சு மேய்ந்து கொண்டிருக்கிறார்கள் ஆபரேஷன் தியேட்டரில்..//

    அவர்கள் பிரித்ததில் மேய்ந்ததில் உடல் நலமடைந்த ஆதிரா..

    //சரி.. நான் போய் பேஷண்ட்டுக்கு சாத்துக்குடி பழங்கள் வாங்கிவரேன்!//

    நோயாளிக்கு டாக்டரே சாத்துக்குடி வாங்கி வர்றாங்க,, ஹை.. ஜாலி.. இனிமேல் இந்த நோயாளி நல்லா வேகமா தேறிடுவேன்..

    //விரல் நீட்டிய குழந்தை... டென்ஷனாயிட்டங்க! //

    இந்தச் செய்தியைக் கேட்ட போது நானும் அப்படித்தான் ஜி கொஞ்சம் டென்ஸனாயிட்டேன்..

    தொடர் அன்பு மழைக்கு ஆதிராவின் இதமான நன்றி ஜிக்கு என்றும் உரியது... இந்த அன்பு தொடர.. வேண்டுதலுடன்..
    நோயாளி..
    ஆதிரா..

    பதிலளிநீக்கு
  10. //ஒரு நீர் நிறைந்த மட்பாண்டத்தை எடுத்து வந்து தேரையின் முன் காட்ட, மூளைக்குள் இருந்த தேரை நீருக்குள் தொப்பென்று குதித்தது.//

    நடைமுறை அறிவும் மருத்துவத்திற்கு பயன் பட்டுள்ளது..
    நல்ல பகிர்வு. நன்றிகள்..

    பதிலளிநீக்கு
  11. உங்களோடது உபயோகமான விஷயங்களை கட்டுரை பாணியில் எடுத்தியம்புவது..
    குறிப்பா... ஹெல்த் சம்பந்தப்பட்ட விஷயங்களை எங்களுக்கு ஊட்டச்சத்து போல பதியுறீங்க...
    இந்த பத்துஜி ஜால வார்த்தைகளின் மன்னர். ஒரு பதிவின் பின்னூட்ட அழகு அவர் போட்டால்தான்.
    மோகன்ஜி பின்னூட்டத்தில் தமிழ் தனிஆவர்த்தனம் செய்யும்.
    அவ்வளவே.. என்னுடையது கோமாளித் தமிழ். அவர்களது கோனார் உரை தமிழ்.. ஓ.கே.


    அப்புறம் அந்த ஒன்பது மாச மேட்டர்.. நான் எங்கயோ படிச்சப்ப.. அந்த டாக்டர் ஒரு ஸ்மோகர்... கையில் இருந்த சிகரெட்டால் சுட்டார்ன்னு ஞாபகம்..

    பதிலளிநீக்கு
  12. எனக்குக் கேட்ட நினைவு.. உங்களுக்கு பார்த்துப் படித்த நினைவு..

    அப்ப கண்களால் பார்ப்பதும் பொய். காதால் கேட்பதும் பொய். தீர விசாரிப்பதே மெய்.. யாருகிட்டே? அந்த டாக்டர் யாருன்னு தெரியலையே.

    ஆனா ஆபரேஷன் தியேட்டர்லயுமா ஸ்மோக்!!! அதுவும் டாக்டரா? ஒரு குழந்தையைச் சிகரெட்டால்... குழந்தை வெளி வரும் முன்னே சிகரெட் சூடு.. அது பெண் குழ்ந்தையா இருக்குமோ? பாவம்.. சரி.. அவரை என்ன செய்வது?

    சரி விடுங்க.. டென்ஷன் ஆகாதீங்க...

    //என்னுடையது கோமாளித் தமிழ். அவர்களது கோனார் உரை தமிழ்.. ஓ.கே.//

    அது என்ன கோமாளித் தமிழ்.. எழுத்தெல்லாம் தொப்பி போட்டு இருக்குமா? இந்த டென்ஷன் காலத்தில் கோமாளித்தமிழே நம் மனதைச் சற்று ஆற்றுப் படுத்துகிறது RVS. அதற்கு உங்களுக்கு நன்றி. உண்மையாகச் சொல்லப்போனால் அந்த யானைக் கொம்மி படித்த பின்பு தான் தினந்தோறும் உஙகள் மூவர் தளங்களுக்கும் வரவே ஆரம்பித்தேன். அதற்கு நானும் பின்னூட்டம் இட்டேன். அது ஏனோ பதிவாகவே இல்லை. வருத்தத்துடன் ஆதிரா..

    பதிலளிநீக்கு
  13. அன்புள்ள பாரத் பாரதி,
    முதல் முறையாக என் குடிலுக்கு வருகை புரிந்துள்ளீர்கள். என் குடிலில் தங்களையும் அங்கத்தினராக இணைத்துக் கொண்டு உள்ளீர்கள். கருத்து பதிவிட்டுச் சென்றுள்ளீர்கள். இத்தனைக்கும் என்னால் கூற முடிந்தது ஒரு மூன்றெழுத்தே. அத்துடன் நிறைய அன்பையும் சேர்த்து.. நன்றி.. பார்தி..

    பதிலளிநீக்கு
  14. நான் சின்னா பையனா இருந்த போது,(இப்போ கொஞ்சம் பெரிய பையன் அவ்வளவு தான் !) என் தம்பி ஒரு துண்டு பலப்பத்தை (சிலேட்டுக் குச்சி) ஒருபக்க மூக்கினுள்ளே தள்ளி அடைத்து விட்டான். எல்லோரும் தவித்து போய் டாக்டரிடம் செல்ல ஆயுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். நான் கர்சீப் முனையை திரித்து சுருட்டி, என் தாத்தாவின் மூக்குப்
    பொடி டப்பியில் கொஞ்சம் பொடி எடுத்து அதில் தடவி இன்னொரு மூக்கில் வைத்தேன். அவன் போட்ட தும்மலில் பலப்பத் துண்டு வெளியே வந்து விட்டது! பாராட்டப் பெற்றேன்! எனக்கு எதாவது டாக்டர் பட்டம் தர முடியுமா ப்ளீஸ்?

    பதிலளிநீக்கு
  15. ஜி உங்களுக்கில்லாத டாக்டர் பட்டமா?

    இனிய விழாவில் திரு மோகன் ஜி அவர்களுக்குப் பொன்னாடையைப் போர்த்தி மல்ர்க்கொத்துக் கொடுத்துப் பாராட்டுத் தெரிவிப்பவர் டாக்டர் RVS.
    இன்னிசை முழங்க ’மூக்குப் பொடி டாக்டர்’ என்று பட்டம் வழ்ங்கிச் சிறப்பிப்பவர் திரு பத்மநாபன் அவர்கள்..
    வாழ்த்து சொல்லி மகிழ்பவர் ஆதிரா..

    உண்மையைச் சொல்லுங்க ஜி. எத்தனை திருவிளையாடல்களைச் செய்துள்ளீர்கள் இளமையில்?

    பதிலளிநீக்கு
  16. @மோகன்ஜி
    வைத்யரத்னா மோகன் அண்ணா அவர்களுக்கு...
    உங்களது தமிழும் அருமருந்துதான்.
    மூக்குப்பொடியோ முத்தமிழோ எதுவுமே உங்களிடம் இருந்து வந்தால் தனி சிறப்பு பெறுகிறது.

    "அண்ணனுடையான் வைத்தியத்திற்கு அஞ்சான்" என்று புதுமொழி சொல்லியிருக்கிறீர்கள்... சின்ன வயசிலேயே...

    (தப்பா எடுத்துக்காதீங்க... ப்ளீஸ்... தம்பி மூக்கில் போன பல்பம் உங்களோடதா... ஹி...ஹி ;-) )

    பதிலளிநீக்கு
  17. // தம்பி மூக்கில் போன பல்பம் உங்களோடதா...
    ஹி...ஹி //
    நான் விழுந்து விழுந்து சிரிப்பதை எங்க வீட்டுலப் பாத்து என்னாச்சோன்னு திகைச்சிட்டாங்க!
    ஆர்.வீ.எஸ் பன்ச்! எப்பிடி இப்படி யோசிக்கிறீங்க தல?
    உங்க வைத்யரத்னா பட்டத்தை சிரமேல் ஏற்கிறேன்.
    என் டூர் விவரங்களை பிறகு வெளியிடுகிறேன்! ஆதிரா! இரண்டு சர்ஜன்களுக்கும் என் நன்றி!
    அனஸ்தீசியா குடுக்க ஒரு டாக்டர் மண்டையோடு எடுத்துகிட்டு வருவாரே? அவரை இன்னும் காணோமே?

    பதிலளிநீக்கு
  18. //(தப்பா எடுத்துக்காதீங்க... ப்ளீஸ்... தம்பி மூக்கில் போன பல்பம் உங்களோடதா... ஹி...ஹி ;-) )//

    RVS கரெக்டா பாயிண்டைப் புடிச்சிட்டீங்க..

    மோகன் ஜி வந்து ஆம் என்று கூறுவார் என்று நினைத்தேன். அப்படியே...

    நாடிப் பிடித்துப் பார்க்காமல் துல்லியமாகப் பல்ஸ் கூறும் சித்த(மனம்) மருத்துவ மாமேதை.. தாங்கள்.

    பதிலளிநீக்கு
  19. மோகன் ஜி,
    ரெண்டு டாக்டர்கள் பட்டமெல்லாம் கொடுத்து பாராட்டு விழாவெல்லாம் நடத்தி இருக்கோம். எங்களுக்கு வெறும் நன்றி தானா?

    //அனஸ்தீசியா குடுக்க ஒரு டாக்டர் மண்டையோடு எடுத்துகிட்டு வருவாரே? அவரை இன்னும் காணோமே?//
    ஆமாம் அதானே!! அவரு வந்தாத்தானே ஆபரேஷனைத் தொடங்க முடியும். அனஸ்தீஷியா மயக்கத்தில் அவரே இருக்காரா?

    அப்பா ஜி காதுல விழுகுதா??

    பதிலளிநீக்கு