“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

சனி, 12 ஜூன், 2010

பக்க வாதத்தைத் தெரிந்துகொள்ள STR முயற்சி....

பொதுவாக பக்கவாதத்திறிகான அறிகுறி தலை சுற்றல். இது தொடங்கி இரண்டு மூன்று மணி நேரம் கழிந்த பின்னரே பக்க வாதம் வருகிறது என்கின்றனர் மருத்துவர்கள். பலர் இந்நிலையை உடனே உணர்ந்து உடண்டியாகச் சிகிச்சை செய்து கொண்டு குணப்படுத்திக் கொள்கின்றனர். விழிப்புணர்வு இல்லாமல் பலர் மோசமான நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். STROKE ஐக் கண்டுபிடிக்க அதன் முதல் மூன்று எழுத்துக்களான STR ஐ நினைவில் வைத்துக்கொண்டால் போதும். இந்நோய் வந்துள்ளது என்பதை அறிந்து முக்கிய கண்டத்தில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.

S - Smile

T -- Talk

R -- Raise the Arms

அதாவது

1. S - Smile - இந்நோய் பாதிக்கப்பட்டு இருப்பது போல தோன்றினால் உடனே அவரை நன்றாகச் சிரிக்கச் சொல்ல வேண்டும்.

2. T -- Talk - அவரை சிறு சிறு சொற்களாக எதையாவது பேசச் சொல்ல வேண்டும்.

3. R -- Raise the Arms - இரண்டு கைகளையும் மேலே தூக்கச் சொல்ல வேண்டும்.

இம்மூன்றில் ஏதாவது ஒன்றைச் செய்ய முசியவில்லை என்றாலும் அது பக்கவாதத்தின் அறிகுறி என்பதை அறிந்து அவசர சிகிச்சைக்கு அழைத்துச் செல்லவேண்டும்.

அப்போதும் நம்பிக்கை வராதவர்கள் மேலும் ஒரு சிறு பரிசோதனையைச் செய்து பார்க்கலாம். Stick the Tangue out.

அதாவது நாக்கை நன்றாக வெளியே நீட்டச் சொல்ல வேண்டும். நாக்கு அஷ்ட கோணல்களாகச் சென்றால் கண்டிப்பாக அவசர சிகிச்சைதான். இல்லாவிட்டால் கஷ்டம் தான். நினைவிருக்கட்டும் STR.


2 கருத்துகள்:

 1. ஒரு அருமையான பதிவு.. ஏன் தமிழிசில் பதிவு செய்யவில்லை..

  இப்போதுதான் உங்கள் தளத்தை பார்வையிடுகிறேன்.. எல்லாமே அருமை..

  முடிந்தால் என் தளத்துக்கும் வந்துபாருங்கள்

  riyasdreams.blogspot.com

  பதிலளிநீக்கு
 2. அன்பு ரியாஸ்,
  முதலில் என் குடிலுக்கு வருகை புரிந்தமைக்கு மிக்க நன்றி...சற்று நேரமின்மையால் தற்போதைய சில பதிவுகளை தமிழிஷில் பதிய இயலவில்லை.. இப்போது பதிவிட்டு விடுகிறேன்..
  இதோ புறப்பட்டு விட்டேன் உங்கள் தளத்திற்கு..மீண்டும் நன்றி. ரியாஸ்..

  பதிலளிநீக்கு