“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

புதன், 14 ஏப்ரல், 2010

துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்....


http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/56/1e6m_comparison_Mars_Mercury_Moon_Pluto_Haumea_-_no_transparency.png/300px-1e6m_comparison_Mars_Mercury_Moon_Pluto_Haumea_-_no_transparency.png

என்ன கொடுமைடா சாமி.. எல்லாரும் ஒரு முடிவோடத்தான் கெள்ம்பிட்டாங்க போல இருக்கு. நம்ம அரசியல் வாதிகள் எல்லாம் சும்மா வெட்டிங்க.. வேஸ்டுங்க.. இவுங்க செய்யற அட்டூழியத்தைப் பார்க்கும் போது. யாரைப் பற்றி சொல்றேன்னு புரியுதா? மேலே சுகமா உலாவிட்டு இருக்காங்களே ஒன்பது பேர். அந்தக் கோள்களைத்தான் கூறுகிறேன். ஏதோ நாம தான் மேலே சொகமா இருக்கோமே, நாம ஏன் கீழே ஏற்கனவே சுத்தமில்லாத காற்று, கலப்படம் நிறைந்த உணவு, ஓசோன் சூடுன்னு எல்லா வகையிலும் அல்லல் பட்டுக் கொண்டு இருக்கும் மக்களைத் துன்பப் படுத்த வேண்டும் என்று நினைப்பதில்லை. நோய்களைப் பரப்பியே தீர்வோம் என்று கச்சைக் கட்டிக்கிட்டு அலையறாங்க.

http://tippinthescales.files.wordpress.com/2009/04/planets.jpg

நோய்களுக்கும் கோள்களுக்கும் தொடர்பு உண்டு என்பது நாம் எல்லோரும் அறிந்ததுதான். ஆனால் எந்தெந்த கோளுக்குச் சொந்தக்காரர் எந்தெந்த நோயை ஏற்படுத்துகிறார் என்பதைத் தெரிந்து கொள்வோமா? தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறோம் என்கிறீர்களா? அங்கு மட்டும் என்ன வாழ்கிறது? எவ்வளவு மோசமானவர்கள் மேலுலகத்தில் உள்ளனர் என்பதை அறிய வேண்டாமா? அதற்காகத்தான்!!!!குஷ்டம் என்ற தோல் தொடர்பான நோயை ஏற்படுத்துவதில் சூரியனின் பங்குதான் அதிகமாம். ஆம் இவர் தனிதொகுதியில் நின்று வெப்பம் தொடர்பான பவுத்திரம், குட்டம் நோய்களைத் தன் தொகுதி மக்களுக்கு வாரி வழங்குகிறார். இது மட்டும் போதாதென்று இவரே 7ஆம் வார்டில் (இடத்தில்) நின்று லக்கனத்தில் நிற்கும் ச்ந்திரனுடன் கூட்டணி அமைத்தும் குட்டம், வெண்குட்டம் ஆகிய நோய்பரப்புத்திட்ட்ப் பணியைத் துரிதமாகச் செயல் படுத்துகிறாராம்.

இருப்பதிலேயே சிறு தொகுதிக்காரர் புதன்தான். பாருங்க எத்துனூண்டு இருக்காருன்னு..

என்னதான் கடுகு சிறுத்தாலும் காரம் குறைவதில்லையே!! எட்டாம் எண் தொடுதியில் நிற்கும் இவர் வெண்குட்டத்துடன் நராம்புத்தளர்ச்சி, பக்கவாதம் ஆகியவற்றையும் சேர்த்துப் பரப்புவாராம். இவர் 6, 8 ஆம் வார்டுக்கு உரியவர்களான லக்கனாதிபதிகளுடன் கூட்டணி அமைத்தும் குட்ட நோய் பரப்பும் நடவடிக்கையை வெகு சாமர்த்தியமாக முடித்து விடுவாராம்!! அதுமட்டுமல்ல.. நம் அரசியல்வாதிகள் கூட ஒரு நேரத்தில் ஒரு கூட்டணியில் தான் இருப்பர். இவரோ தன் 6 ஆம் தொகுதியில் சந்திரன், சனி ஆகிய இருவருடன் மற்றொரு கூட்டணி அமைத்தும் குட்டம் பரப்பும் பணியை அதி தீவிரமாக மேற்கொள்ளுவாராம்.ஏழாவது வார்டில் சுக்கிரன், செவ்வாய் இருவரும் கேதுவுடன் உடன்படிக்கை செய்துகொண்டு இப்பணியைச் செவ்வனே செய்வார்களாம். இது போதாதென்று லக்கனாதிபதியுடன் சந்திரன், புதன் இருவர் கூட்டணியுடன் மேலும் சனியையோ செவ்வாயையோ சேர்த்துக்கொள்வார்களாம் இவ்வரும் பணியைச் செயல் படுத்த..சந்திரன், புதன், ராகு மூவரின் கூட்டணியைச் சனி பார்த்து விட்டால் அவர் பொறுக்க மாட்டார். உடனே அவர் முந்திக்கொண்டு இப்பணியைத் தன் கையில் எடுத்துக் கொண்டுவிடுவாராம்.


http://www.ilo.org/dyn/media/images/watermark/cn0141.jpg

இதைவிடப் பெரிய கொடுமை என்னவென்றால் எதிர்க்கட்சி அமைத்து செயல்படுவதிலும் நம்ம அரசியல் வாதிகளை மிஞ்சிவிடுகிறார்கள் இவர்கள். ஒன்பது கோள்களில் ராகு, கேது மட்டும் என்ன சளைத்தவர்களா? சந்திரனும், புத்திராதிபதியும் ஆறாவது தொகுதியில் நிற்கக் கண்டால்
இவர்கள் இருவரும் கூடி குட்டத்தை ஏற்படுத்துவதுடன், வாக்காளர்களுக்கு மரணத்தையே வாரிக்கொடுத்து விடுவாராம்.

http://wwwdelivery.superstock.com/WI/223/105/PreviewComp/SuperStock_105-W2324.jpg

போதுமடா சாமி என்று விட்டுவிட முடியவில்லையே! மற்றவர்களைப் பற்றியும் அவர்கள் செய்கிற அட்டூழியங்களைப் பற்றியும் அடுத்தப் பதிவில் பார்ப்போமா??

9 கருத்துகள்:

 1. அடேங்கப்பா..... கோள்களுக்கும் நோய்களுக்கும் இடையில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா....! நீங்க சமீபத்துல ஜோதிடம் படிச்சீங்களா.... ஆச்சர்யமாக இருக்கிறது.... அரசியல்வாதிகள ஒரு வழி பண்ணிட்டீங்க, ஆனால் அதுதான் உண்மை. அடுத்த பதிவுக்கான எதிர்பார்ப்புடன்....

  பகிர்வுக்கு நன்றி ஆதிரா!!!

  பதிலளிநீக்கு
 2. இன்னும் பதிவையே சரியாக முடிக்காத போதும் சுடச்சுடக் கருத்து பகிர்ந்த தங்கள் அன்புள்ளத்திற்கு என் சிரம் தாழ்ந்த நன்றி கவிதன். தங்கள் எதிர்பார்ப்புக்கான அளவில் என் பதிவு தொடரும்.மீண்டும் நன்றி கவிதன்.

  பதிலளிநீக்கு
 3. இங்கே ...
  காலம் காட்டும் கோள்களும் கூட
  அலங்கோலம் கூட்டும் நோய்களும் ஆக...வாழ்வில்.

  தங்களின் கட்டுரை மிகவும் அருமை... மற்றும் பயனுள்ளதாக..

  இதுக்கு எந்த ராசிக்கல் போட்டா சரியாகுமுனு சொன்னா நல்ல இருக்கும். அல்லது மேலும் தெரிந்துகொள்ள அணுக நல்ல ஜோதிடரையோ அல்லது மருத்துவரையோ சிபாரிசு செய்தால் மிகவும் நன்றாக இருக்கும்.

  (சிரிக்கவும் & செயல்பட வேண்டியும்)

  பதிலளிநீக்கு
 4. ஆதிராவின் பார்வையும் உக்கிரமாகத்தான் இருக்கிறது - கோள்களை நோக்கி :))

  ஒரு சந்தேகம். கோள்கள் 9 என்பது சரியா..?

  விக்கிப்பீடியாவில் பார்த்த வகையில்..
  European Renaissance (16th - 17th century): 6 planets (Mercury Venus Earth Mars Jupiter Saturn)
  Early 1800s: 11 planets (Mercury Venus Earth Mars Vesta Juno Ceres Pallas Jupiter Saturn Uranus)
  from late 1800s to 1930: 8 planets (Mercury Venus Earth Mars Jupiter Saturn Uranus Neptune)
  from 1930 to 2006: 9 planets (Mercury Venus Earth Mars Jupiter Saturn Uranus Neptune Pluto)
  from 2006 to present: 8 planets (Mercury Venus Earth Mars Jupiter Saturn Uranus Neptune)
  - International Astronomical Union (IAU) வரையறை.

  பதிலளிநீக்கு
 5. மிக்க நன்றி வாசன் தங்கள் வாழ்த்துக்கு மட்டுமல்ல.. தங்களின் கருத்துக்கும்... எந்த ராசிக்கல் என்பதும் கண்டு எழுதியிருக்கலாம் என்று சிந்திக்க வைத்ததற்கு... முடிந்தால் அதையும் செய்கிறேன்..இது போன்ற கருத்துகளே நல்ல ஆக்கத்திற்கு வழிகாட்டும். மிக்க நன்றி....

  பதிலளிநீக்கு
 6. அன்புள்ள ஜெகநாதன்,
  தங்கள் வாழ்த்தும் ஐயமும் எனக்கு மிக்க மகிழ்வைத் தந்தது. தாமதமான பதிலுரைக்கு மன்னிக்கவும். படங்களைப் பதிவுக்காகத் தேடும்போது நானும் இவற்றைப் பார்த்தேன். ஆனால் பொதுவாக ஒன்பது என்பதுதான் வழக்கில் உள்ளது என்பதால் அவ்வாறு பதிந்தேன்.. இன்னும் இது குறித்து எனக்கு தெளிவு பிறக்க வில்லை.. தங்களின் மேலான கருத்தை எதிர் நோக்கி...

  பதிலளிநீக்கு
 7. அன்பு ஆதிரா..
  இந்த இடுகைக்கு ஒன்பது கோள்கள் என்பதே ​பொருத்தமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
  பொதுவாக, ஒரு அபிமானத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தவே எந்த அறிவியலும் அல்லது தத்துவமும் முயல​வேண்டும். நமக்கு அவநம்பிக்கை தருகிற எந்த விஷயமும் கேள்விக்குரியதுதான்.

  எளிமையும் யாரையும் புண்படுத்தாத கேலியுமாக இந்த எழுத்து சுவாரஸியமாக இருக்கிறது. தொடர்ந்து​செல்லுங்கள் ஆதிரா!

  பதிலளிநீக்கு
 8. மீண்டும் வந்து மறுமொழி பகர்ந்த தங்கள் அன்புக்குத் தலை வணங்குகிறேன் ஜெகன். தங்களை அப்படி அழைக்கலாமா? தங்களின் ஒவ்வொரு கருத்துரையும் எனக்கு மிகுந்த மன மகிழ்ச்சியையும், எழுதும் ஊக்கத்தையும் தருகிறது.. இந்த அன்பைத் தொடர்ந்து எதிர்பார்க்கும்...அன்புடன்....

  பதிலளிநீக்கு
 9. நன்றி ஆதிரா!
  உங்களின் முயற்சி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்!!
  ஜெகனை ஜெகன் என்றே அழைக்கலாம்:)

  பதிலளிநீக்கு