“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

ஞாயிறு, 4 ஏப்ரல், 2010

மனசு லேசாகனுமா?? ஸ்ஸ்ஸூ.... ரகசியம்ம்ம்ம்....

http://www.istockphoto.com/file_thumbview_approve/720249/2/istockphoto_720249-elderly-couple-hugging.jpg
பேச்சுலர் வாழ்க்கை இன்பமானாது. திருமணம் செய்து கொண்டால் நாலா புறத்தில் இருந்தும் தொந்தரவு வருகிறது. இதனால் மன அழுத்த நோய் வருகிறது என்கின்றனர் பலர். இந்நோய்க்கு மருந்து தேடி மருத்துவ மனைக்கு அலைகின்றனர். ஆனால மருத்துவர்களோ, கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலையும் கதை இது என்கின்றனர்.
இணயர்களில் (தம்பதி) ஒருவருக்கு மன அழுத்த நோய் இருந்தால் மற்றவரிடம் இருக்கிறது அதற்கு மருந்து. இல்லை இல்லை மற்றவரேதான் மருந்து. துணையின் அன்பான அணைப்புதான் இந்நோய்க்கு அருமருந்தாம். இதை உலக நாயகன் வார்த்தையில் கூறவேண்டுமானால் கட்டிப்பிடி மருத்துவம்.

வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு

http://farm4.static.flickr.com/3257/3244763186_1a083bd70f.jpg?v=1233509879
காற்றுக்குகூட இடம் கொடாது முயங்க வேண்டும் என்று தெய்வப்புலவர் அன்றே கூறியுள்ளதும் இதனால்தான். (வளி - காற்று, முயக்கு - அணைப்பு). அதை விட்டு
விட்டு இன்பம் எங்கே?? இன்பம் எங்கே???... என்று தேடி அலைவது எல்லா வகையிலும் பேராபத்தையே விளைவிக்கும்.
சுவிட்சர்லாந்தின் ஜூரிஜ் பல்கலைக்கழகத்தின் டாக்டர் வீட்டிசன் 51 இணையர்களிடம் நடத்திய ஆய்வின் முடிவு இது. வாரத்தில் ஒரு சில முறைகளாவது தம் துணையைக் கட்டி அணைப்பது, முத்தமிடுவது, உடலுறவு கொள்வது ஆகிய இவற்றால் மன அழுத்தம் குறைகிறது என்கிறது இவ்வாய்வு.

http://i9.photobucket.com/albums/a94/krzy4evr/myspace%20graphics/1_old_couple.jpg
மேலும் அலுவலக பிரச்சனை, வெளிப்பிரச்சனை, வீட்டுப்பிரச்சனை என்று எந்தப் பிரச்சனைகளையும் படுக்கையறைக்குள் நுழைய விடாமல் நோ எண்டிரி போர்டு மாட்டிவிட்டால் மனதிலிருந்தும் எல்லா பிரச்சனைகளும் அகன்று விடுமாம்.ஒருவர் ஒருவரை அன்பாக நடத்தும் தம்பதிகளுக்கு மன அழுத்ததிற்குக் காரணமான கார்டிசல் என்ற ஹார்மோன் குறைவாகச் சுரக்கின்றது என்று கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால் மன அழுத்தத்தைக் குறைத்து விடுகிறேன் பேர்வழி என்று ஏதோ எந்திர கதியில் செயல் பட்டால் மூச்சுதான் முட்டுமே ஒழிய இம்மருத்துவம் நோய் தீர்க்க ஒருபோதும் பயன்படாது. மேலும் மன நோயை அதிகரிக்கவே செய்யும். சிவனே என்று இருந்து இருக்கலாமே என்று எண்ணி பின்னால் வருந்தவும் நேரிடும்.
http://images.veer.com/IMG/PIMG/MPP/1559039_P.jpg

ஒருவரை ஒருவர் காதலுடன், அன்பாக, ஆறுதலாக, ஆத்மார்த்தமாக அணைப்பதே மனநோயைப் போக்கும் இன்பமான உயர் மருத்துவமாம்.


ஆதிரா

4 கருத்துகள்:

  1. சுருக்கமா கட்டிபிடி வைத்தியமுனு சொல்லுங்க...

    ஆர தழுவி ஆறுதல், உற்சாகம் மற்றும் வாழ்த்துகள் கூறும் உண்மையான உறவுகளை வளர்ப்போமாக...

    பதிலளிநீக்கு
  2. இன்றைய அதிவேகமான வாழ்க்கை முறையில் இதெற்கெல்லாம் நேரமில்லாதது போல் காட்டிகொள்பவர்கள்தான் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்!!!

    மீண்டுமொரு அருமையான பதிவு!!! வாழ்த்துக்கள்! தொடரட்டும்.....

    பதிலளிநீக்கு
  3. மிக்க நன்றி வாசன் கருத்துப் பகிர்ந்தமைக்கு...

    பதிலளிநீக்கு
  4. தொடரும் தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் என் நன்றியும் அன்பும் கவிதன்..

    பதிலளிநீக்கு