வலைத்தளத்தில் கண்ட ஒரு செய்தி. பரவலாகப் பல வலைத்தளங்களில்
பல்வேறு தலைப்பின் கீழ் உலா வந்து கொண்டிருக்கின்ற செய்தி இது.
சுவிட்சர்லாந்தின் ஜூரிஜ்பல்கலைக் கழகத்தின்
டாக்டர் வீட்டிசன் 51 இணையர்களிடம் நடத்திய ஆய்வின் முடிவு இது. வாரத்தில் ஒரு சில
முறைகளாவது தம் துணையைக் கட்டி அணைப்பது, முத்தமிடுவது, உடலுறவு கொள்வது ஆகிய இவற்றால்
மன அழுத்தம் குறைகிறது என்கிறது இவ்வாய்வு.
ஒருவர்ஒருவரை அன்பாக நடத்தும் தம்பதிகளுக்கு
மன அழுத்ததிற்குக் காரணமான கார்டிசல் என்ற ஹார்மோன் குறைவாகச் சுரக்கின்றது என்று கண்டறியப்
பட்டுள்ளது.
இதைத்தான் நம் நவரச நாயகன் கட்டிப் பிடி வைத்தியம்
என்று அன்றே படம்போட்டுக் கூறிவிட்டாரே என்று சிந்திப்பது புரிகிறது.
அப்படி என்ன புதிய செய்தியை இவர்கள் கண்டறிந்து
விட்டனர்.”இதெல்லாம் எங்கள் தமிழுக்கும் தமிழருக்கும் ரொம்பப்பழசு” என்று ஜூரிஜ் பல்கலைக்
கழகத்திற்குக் கேட்கின்ற அளவில் கத்த வேண்டும் போல இருக்கிறது. என்றோ தமிழன் கண்டறிந்தவையெல்லாம்
இன்று ஆய்வின் முடிவு என்று கூறி எக்காளமிட்டு வரும் இது போன்ற பல்கலைக் கழகங்களுக்கு
யார் செப்புவது?
கட்டிப் பிடித்து அகற்ற அப்படி என்ன மனநோய்
தம்பதிகளுக்குவருகிறது? அதற்கு என்ன காரணம்? ஒருவரை ஒருவர் விட்டு அகன்று சென்று கொண்டிருப்பதே
இந்தமனநோய்க்குக் காரணம் என்கிறது அன்று முதல் இன்று வரை தோன்றி வளர்ந்துள்ள அறத்துடன்
மருத்துவத்தையும் சேர்த்தே பேசும் எங்கள் தமிழ் இலக்கியம்.
சங்க காலத்தில் நிலங்களைக் குறிஞ்சி, முல்லை,
மருதம், நெய்தல், பாலை என்று ஐவகையாகப் பிரித்து இருந்தனர். இவை ஒவ்வொன்றிற்கும் முதல்பொருள்
என்று நிலத்தையும் காலத்தையும் குறிப்பிட்டு இருந்தனர். அதைல் குறிஞ்சி மலைப்பகுதியையும்,
முல்லைக் காட்டுப் பகுதியையும், மருதம் வயல் பகுதியையும், நெய்தல் கடல் பகுதியையும்,
பாலை வறண்ட பாலை நிலத்தையும் குறிக்கும்.
இந்த ஐவகை நிலங்களுக்கு உரிப்பொருள் என்று ஒவ்வொன்றைச்சுட்டி
இருந்தனர். உரிப்பொருள் என்பது அந்தந்த நிலத்து மக்களின் வாழ்வியல். குறிஞ்சிக்குகுளிர்
பாங்கான மலைப்பகுதியாதலால் அங்கு தலைவனும் தலைவியும் கூடுவர். எனவே ’புணர்தல்’ என்றும்,
முல்லையில் கூடிக்களித்த அவர்கள் திருமணம்புரிந்து நிலையாக குடிபுகுந்து இல்லறம் நடத்துவர்.
ஆதலால் ’இருத்தல்’ என்றும், மருதம் அப்படி நிலையாக அன்புடன் இல்லறம் நடத்துகையில் கூடல்
சிறக்க ஏதுவான ஊடல் நிகழும். எனவே ’ஊடல்’ என்றும், நெய்தல் நிலத்தில் பிழைப்பு கருதி
மீன் பிடிக்கவோ, முத்து எடுக்கவோகடலில் சென்ற தலைவன் வருகைக்காக கவலைப் பட்டுக் கொண்டிருப்பாள்
தலைவி. அதனால் ’இரங்கல்‘ என்றும், பாலை நிலம் வறண்ட பூமி. அங்கு பிழைக்க வழியின்றி
பொருள் ஈட்டுவதற்காகத் தலைவியை விட்டுத் தலைவன் பிரிந்து செல்வான். அதனால் அங்கு ’பிரிதல்
‘ என்றும் உரிப்பொருளை ஆக்கி இருந்தனர்.
பாலைத் திணையில் அமைந்த பாடல்கள்பெரும்பாலும்
மனநோயாளியாக மாறிய தலைவி கூற்றுப் பாடல்களாக அமைந்திருப்பதைக் காணலாகிறது. மனவியல்
வல்லுநராகத் திகழ்ந்த தமிழர் நோய், நோக்குக் காரணம், அதைத் தீர்க்கும் மருந்து என்னென்ன
என்பதை தாம் படைத்தளித்த இலக்கியம் வாயிலாகச் சுட்டிச் சென்றுள்ளனர்.
சங்க இலக்கியத்தில் ‘பசலை நோய் ‘ என்று ஒரு
நோய் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கும். பசலை என்பது உணவு, உறக்கம் செல்லாது காதலனையே
சிந்தித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஏற்படும் நோய். ஏன் நமக்கே கூட சரியான உணவும்,
போதிய உறக்கமும் இல்லாவிட்டால் நாளடைவில் விழி குழிவெய்தி, மேனி இளைத்து, கருத்துப்
போவது இயற்கை. இந்தக் கரிய நிறத்தையே பசலை என்றனர் .நம் மேனி கருத்து இளைப்பதற்கும்
காதல் கொண்டவரின் மேனி கருப்புக்கும் என்ன வேறுபாடு என்றால் அவரது ஆற்றா நோய். அதாவது
காதலனைத் தவிர வேறு மருந்தால் குணப்படுத்த முடியாத நோய். மற்றவரது உண்டு, உறங்கிக்
குணப்படுத்திக் கொள்ளக்கூடிய நோய். இது காதலித்து, பிரிவுத்துயரை அனுபவத்தவர்களுக்கு
நன்கு புரியும். இதனை நீர் இறைக்காத கேணியில் நீரின் மீது படர்ந்து இருக்கும் பாசியைப்
போன்று என்று விளக்குகிறது ஒரு சங்கப் பாடல்.
“ஊருண் கேணி யுண்குறைத் தொக்க
பாசி யற்றே பசலைக் காதலர்
தொடு வழித் தொடு வழி நீங்கி
விடுவுழி விடுவழி பரத்த லானே”
காதல் என்பது
நோயா? என்று புருவங்களைஉயர்த்துவது புரிகிறது. ஆம் நோய்தான். நோயும் மருந்தும் இரண்டும்
ஆவது காதல். அதனால்தான் திருவள்ளுவரும்
நன்கு தேய்த்து வைத்த வெள்ளி, பித்தளைப்பாத்திரங்களின்
மீது நாளடைவில் பசுமை ஏறுவது போல தங்கம் போல ஒளிவிடும் மங்கையின் நிறம்மங்கி ஒளி குன்றக்
காரணம் காதல் நோய் என்கின்றார். இதனைத் திருவள்ளுவர் பத்துப் பாக்களில் கூறியுள்ளார்.
சான்றுக்கு, “காம நோயையும் பசலை நிறத்தையும் கைமாறாக எனக்களித்து, என் அழகையும் நாணத்தையும்
என்னிடமிருந்து பெற்றுக் கொண்டார் ” என்று தலைவி கூறுவது. குறள் இதோ,
“சாயலும் நாணும அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து“
மற்றொன்று, “ அதோ பார் என் காதலர் பிரிந்துசெல்கின்றார்.
இதோ பார் என் மேனியில் பசலை நிறம் வந்து படர்கின்றது“ என்று தலைவி பசலைநோய் வந்து கொண்டிருப்பதை
படம் பிடிப்பாள். குறள் பின்வருவது.
“உவக்காண்எம் காதலர்செல்வார் இவக்காணென்
மேனி பசப்பூர் வது“
மற்றொன்று வேண்டுமென்றாலும் இருக்கின்றது. இது
இன்னும் சுவையானது. ”விளக்கு மறைவினைப் பார்த்துக் கவியக் காத்திருக்கிற இருளைப் போல,
தலைவனுடைய தழுவதல் எப்போது மறையும் என்று பார்த்து என் உடலைத்தழுவ, பசலைக் காத்திருக்கிறது”
என்று தலைவி வருந்துவது. இந்தக் குறளையும் பார்க்க.
“விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல்
கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு”
அதுமட்டுமா? ”புள்ளிக்கிடந்த (தழுவிக் கிடந்த)
தலைவி சற்று அகன்ற போது பசலை நிறம் அள்ளிக்கொண்டது போல வந்து பரவிவிட்டதே” என்றெல்லாம்
தலைவியைப் புலம்ப வைத்ததென்றால் அது நோய்தானே? சங்கப்பெண்டீர் பலரின் இந்நோய்க்கான
புலம்பலைப் பாருங்கள். என் உயிர்மிகச்சிறிது காமமோ பெரிது என்று ஒருத்தி, “அது கொள்
தோழி காம நோயே” என்று ஒருத்தி, ”நோய் தந்தனனே தோழி” என்று ஒருத்தி, ”வெண்ணெய் உணங்கல்
போல பரந்தன்றுஇந்நோய்” அதாவதுவெண்ணெய் உருகினால் வழிந்து பரவுவது போல உடல் முழுவதும்
பசலையைப் பரவச் செய்ததாம் என்று ஒருத்தி இப்படி காம நோய் கண்ட பெண்கள் புலம்பியுள்ளனர்.
“சொல்லரு கொடுநோய்க் காமக் கனலெரி” என்று பெருங்கதைக்
கூறும் காமநோய்க்குக் காரணி காதலன்றோ? ’உள்ள நோய்’, ’வசா நோய்’ ‘இன்னா வெந்நோய்’,
’ஆனனா நோய்’, ’ஈடும்மை நோய்’, ‘துஞ்சா நோய்’, என்றெல்லாம் கடுமையாகச் சுட்டப்படுகிற
இந்நோய்க் கண்ட மகளிர் சங்ககாலத்தில் அதிகமாகவே காணப்பட்டுள்ளனர். இவையெல்லாம் நாகரிகமாகக்
காதலை அதிகம் வெளிக்காட்ட விரும்பாத தலைவியின் புலம்பல்கள்.
ஒரு சங்கத்தலைவி கிட்டத்தட்ட மனநோயாளியாகவே
(ஹிஸ்டீரியாபோலவே) தலையில் முட்டிக்கொண்டும் மார்பில் அடித்துக் கொண்டும் ஐயோ! எந்நோயை
அறியாது உலகோர் எல்லாம் நிம்மதியாகத் தூங்குகின்றனரே என்று அலறிக்கொண்டு, காட்டு வழிகளிலெல்லாம்
அலைந்து திரிகிறாள் என்றால் இந்நோயின் கொடுமையை இதைவிட தத்துரூபமாகக் காட்ட முடியுமா
என்று வியக்கத்தான் வேண்டியுள்ளது.
“முட்டுவேன் கொல் தாக்குவேன்கொல்
ஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்டு
ஆசுஒல்லெனக் கூவுவேன் கொல்
அலமரல் அசைவளி அலைப்பவென்
உயவு நோயறியாது துஞ்சும் ஊர்க்கே”
மெல்ல மெல்ல உயிரைப் வதைக்கும் மன நோய் இக்காம
நோய். இந்நோய்க்கு மருந்து கண்டு பிடிக்கப்பட்டது எக்காலத்தில்? நோயைக் கூறுவதுடன்
தம் கடன் முடிந்து விட்டது என்று எண்ணுபவன் அல்லன் தமிழன். அந்நோய்க்கு மருந்தும் கூறி
நோய்தீர்க்கும் மருத்துவன் அவன்.
இந்நோய்க்கு பிற மருந்தில்லை அவனைத் தவிர என்பதை,
”மருந்துபிறி தில்லையவர்மணந்த மார்பே” என்று கூறியுள்ளது அன்றே தமிழ் மருத்துவ
ஆய்வு.. இதை இன்றுதான் நிருபித்து உள்ளது ஜூரிஜ் பலகலைக்கழகம்.
உடலில் தோன்றும் வெவ்வேறு நோய்களுக்கு வெவ்வேறு
மருந்துகள் இருக்க காதல் நோய்க்கு மட்டும் மருந்து காதலனே என்கிறது தமிழ்இலக்கியம்.
இதோ,
“பிணிக்கு மருந்து பிறமன்அணியிழை
தன்நோய்க்குத்
தானே மருந்து”
இதைவிடச் சான்று தேவையா? தமிழன் மருத்துவத்தில்
கைதேர்ந்தவன் என்பதை அறிய. அம்மருத்துவமும் எவ்வாறு இருக்க வேண்டுமாம்..
”பிரிந்தோர் புணர்க்கும் பண்பின்
மருந்தும் உண்டோ”
பிரிந்தவர் கூடிப் புணர்வதை விட சிறந்த மருந்து
வேறுஉண்டா? என்கிறது இச்சங்கப்பாடல். இதனினும் மேலாய் அப்புணர்ச்சியும் எப்படி இருக்க
வேண்டும் என்று வள்ளுவ மருத்துவன் கூறுவதைப் பார்க்கலாமா?
”வீழும் இருவர்க்கு இனிதே வளியிடைபோழப் படாஅ முயக்கு”
காற்றுக்குகூடஇடம் கொடாது முயங்க வேண்டும் என்று
தெய்வப்புலவர் அன்றே கூறியுள்ளதும் இதனால்தான். (வளி - காற்று, முயக்கு - அணைப்பு).
இன்னும் கூறப்போனால் சங்கப் பாடல்களில் 78 விழுக்காடு
காதல் பாடல்கள். வாழ்வியலை அகம் புறம் என்று வகுத்துக் கொண்ட சங்கத்தமிழன் காதலுக்கு
முக்கியத்துவம் கொடுத்தது நலமான ஒரு சமுதாயத்தைக் காணவே என்று நாம் உறக்கக் கூறிக்
கொள்ளலாம் பெருமையுடன்.. எம் ஆதித்தமிழன் சிறந்த மன நல மருத்துவனே..
இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் ஹிஸ்டீரியா
என்று கூறி மனைவியை மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று பணப்பையைக் கரைப்பதை விடுத்து
காதல் புரிந்தவரின் மனப்பையை அன்பால் நிறையுங்கள், நம் முன்னோர் கூறியுள்ளதைப் போல...
நீங்களும் மகிழலாம்... துணையும் நலம் பெறலாம்.
- ஆதிரா முல்லை
நன்றி குமுதம் ஹெல்த்
கட்டிப்பிடி வைத்தியம். - நன்றாக இருந்தது.
பதிலளிநீக்குகாலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும் இந்நோய்
- இந்தக் காம நோய் காலையில் அரும்பாகி பகலெல்லாம் மொட்டுவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக மாலையில் மலருகிறது என்று கூறுகிறார் வள்ளுவர்.
இதை ஒரு ஸ்ரீகாந்த் கோபிகா நடித்த படத்தில் பல்லவிக்கு முன்னால் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
"மூளை திருகும்.... மூச்சுக்குள் அடுப்பெரிக்கும்.." என்று ஆரம்பிக்கும் பாடல்... அருமையாக இருக்கும்.. வித்யாசாகர் மியூசிக்... முடிந்தால் கண்டுபிடித்து பதிகிறேன்.. ;-)
;-)
புற அக நானூறு உள்ளே போனால் கபிலர் போன்றோர் இன்னும் நிறைய தழுவல் மருந்துகளை அள்ளித் தெளித்திருப்பார்களே.. நிறைய பண்டைய தமிழ் இலக்கியங்கள் படிக்கிறீங்க.. எனக்கு நேரமே இல்லை. உங்களை பார்த்தா பொறாமையா இருக்கு... ;-)
இந்நோயைய் பற்றி எழுத முன் வந்ததே ஒரு நேர்மறை படிக்கல்.. மருத்துவர் ஷாலினிக்கு அப்புறம் ஒரு பெண்மணியிடம் இப்படிக் கட்டுரை வருவது இதுதான் முதல் முறை என நினைக்கிறேன்..அவர் உடற்கூறுக்கு முக்கியத்துவம் அளித்து செல்வார்..உங்களிடம் மனக்கூறின் முக்கியத்துவம் கொண்டு தெரிகிறது...
பதிலளிநீக்குசங்க கவிகள் , அய்யனின் குறள்கள் கொண்டு ஆராய்ந்தது சிறப்பு
படம் : கனா கண்டேன்
பதிலளிநீக்குபாடல் : காலை அரும்பி
இசை : வித்யாஷாகர்
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : கல்யாணி மேனன், ஸ்ரீநிவாஸ்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
காலை அரும்பி பகலெல்லாம் போதாகி
மாலை மலரும் இன்னோய்
மூளை திருகும் மூச்சுக்குள் அடுப்பெரிக்கும்
இடப்பக்கம் வலப்பக்கம் இதயம் பெண்டுலம் ஆடும்
வாய் மட்டும் பேசாது உடம்பெல்லாம் பேசும்
இது மோசமான நோய் ரொம்ப பாசமான நோய்
இது மோசமான நோய் ரொம்ப பாசமான நோய்
மூளை திருகும் மூச்சுக்குள் அடுப்பெரிக்கும்
இடப்பக்கம் வலப்பக்கம் இதயம் பெண்டுலம் ஆடும்
மூளை இருந்த இடம் சூலை ஆகி விடும்
அது தான் நோயின் ஆரம்பம்
கால்கள் பறித்து கொண்டு சிறகை இரவல் தரும்
ஆனால் அதுவே ஆனந்தம்
ஒரு கடிதம் எழுதவே கை வானை கிழிக்குமே
விரல் எழுதி முடித்ததும் அதை கிழித்து போடுமே
இது ஆண் நோயா பெண் நோயா காமன் நோய் தான் என்போமே
சோற்றை மறுதலித்து விண்மீண் விளங்க சொல்லும்
அன்னம் தண்ணீர் செல்லாது
நெஞ்சில் குழல் செலுத்தி குருதி குடித்து கொள்ளும்
வேண்டாம் என்றால் கேட்காது
ஒரு நண்பன் என்று தான் அது கதவு திறக்குமே
பின் காதலாகியே வந்த கதவு சாத்துமே
இந்த நோயின்றி போனாலே வாழ்க்கை சௌக்கியம்ஆகாதே
இது மோசமான நோய் ரொம்ப பாசமான நோய்
பாடலைக் கண்டுபிடித்து விட்டேன். ஒலிக்கச் செய்ய முடியுமா என்று தேடுகிறேன்.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=x5ZfgRB5Pd0
நீக்குமிகச் சரி, தமிழன் அனைத்து விஷயங்களுக்கும் ஒரு முன்னோடிதான் இங்கு இல்லாத இவன் பார்க்காத விஞ்ஞானங்களோ, விஷயங்களோ இல்லை (அதற்கு இது ஒரு உதாரணம்தான் (எதையும் அழகுற பாக்களில் கூறுவது தனிச்சிறப்பு) எனினும் தன்னுடைய திறமையை மகத்துவத்தை வெளிக்காட்டத் தெரியாத துரதிர்ஷ்டசாலி. இவனைப்பார்த்து மூக்கின் மேல் விரல் வைக்க இருக்கின்ற மேலைநாட்டவரை பார்த்து இவன் மூக்கின் மேல் விரல் வைக்கிறான். என்னவென சொல்வது. தங்கள் இச்செய்தியினை பகர்ந்தமைக்கு மிக்க நன்றி (நானும் தலைப்ப பாத்துட்டு பயந்தே போயிட்டேன் அய்யோ அய்யோ!!!!!)
பதிலளிநீக்குநீண்ட நாட்களுக்குப் பின் சங்க இலக்கியம் தழுவிய (சிலேடை பொருட்டே) கருத்துக்களை அலசிய பதிவொன்றை படித்தேன். நிறைவாக இருந்தது. அரைகுறையாய்ப் புரிந்து கொண்டு சடங்குக்காகவும் கடமைக்காகவும் கூடும் சமூகத்திடை மனமும் மனமும் பொருந்திய நிலையில், "மருந்தாகும்" பார்வையில் எழுதியிருப்பது இன்னும் சிறப்பு. ஜூரிக் ஆய்வாளர்கள் தமிழர்களைப் பேட்டி கண்டனரா தெரியாது :)
பதிலளிநீக்குபடிக்கும் பொழுது குறளைப் பற்றி நினைத்தேன் - தொடர்ந்து வந்தால் அழகாக நீங்களே எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள். அன்பும் அருளும் கலந்த அரவணைப்பு முதலில் தாய் தந்தையிடமிருந்து கிடைக்கிறது - வளரும் பருவத்தில் அழுத்தம் வராமல் பாதுகாக்கும் அரவணைப்பு. ஆசையும் காதலும் கலந்த அரவணைப்பு துணையிடமிருந்து வளர்ந்த பின் கிடைக்கிறது. அரவணைக்காத நாள் பாழ். எந்தப் பருவத்திலும் சரி.
என்னவோ தெரியவில்லை - சங்க இலக்கியங்களில் தலைவனைப் பிரிந்த தலைவி பசலையில் வாடுவதாய் வருமளவுக்கு தலைவியைப் பிரிந்த தலைவன் வாடுவதாக எழுதப்படவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.
(சரி, நீங்கள் இத்தனை வற்புறுத்திச் சொல்லியிருக்கிறீர்களே, கொஞ்சம் இரத்த அழுத்தம் குறையட்டுமே, அதுவும் ஜூரிக் ஆய்வாளர்களே சொல்லியிருக்காங்களே என்று பலவிதமாக நினைத்து பக்கத்து வீட்டுப் பெண்மணியிடம் இதைப் பற்றிச் சொன்னேன். அடுத்த கதையை ஏன் கேட்கிறீர்கள்!)
இதென்ன பின்னூட்டமிட்டதும் கூகில் என்னத் தூக்கியெறிகிறதே?
பதிலளிநீக்குநவரச நாயகன் - யாரது?
பதிலளிநீக்குஆதிரா,
பதிலளிநீக்குஅழகியலுடன் அனுகி நம் முன்னோர்களின் பெருமைகளையும் அடுக்கி ‘காதல்’-இன் (காதலுக்குள்ளேயே ’காமம்’ பொருந்தி இருக்கிறது) மகத்துவம் பற்றிய பகிர்வு அருமைங்க.
அன்பு காஜா முகைதீன்,
பதிலளிநீக்குஎன் கட்டுரைகளுக்கு தங்கள் ஃபெஸ்புக்கிலும் தமிழ் நண்பர்களிலும் பின்னூட்டம் பல இட்டுள்ளீர்கள். ஆனால் இது சிறப்பு. தாங்கள் முதன் முறையாக என் வலைப்பூவில் தங்கள் கருத்துரையைப் பதிவிட்டுள்ளீர்கள். தங்களின் முதல் வருகைக்கும் முதல் பதிவுக்கும் என் மனமார்ந்த நன்றி தோழரே.
(நானும் தலைப்ப பாத்துட்டு பயந்தே போயிட்டேன் அய்யோ அய்யோ!!!!!)
அப்படி நான் என்ன சொல்லிவிடுவேன் என்று பயந்தீர்கள் நண்பரே?
15 டிசம்பர், 2010 10:30 am
//இந்நோயைய் பற்றி எழுத முன் வந்ததே ஒரு நேர்மறை படிக்கல்.. மருத்துவர் ஷாலினிக்கு அப்புறம் ஒரு பெண்மணியிடம் இப்படிக் கட்டுரை வருவது இதுதான் முதல் முறை என நினைக்கிறேன்..அவர் உடற்கூறுக்கு முக்கியத்துவம் அளித்து செல்வார்..உங்களிடம் மனக்கூறின் முக்கியத்துவம் கொண்டு தெரிகிறது..//
பதிலளிநீக்குhttp://tamilnimidangal.blogspot.com/2010/04/blog-post.html
அன்புள்ள பத்மநாபன்,
இதற்கு முன்னரே இது போன்றதொரு கட்டுரையைப் பதிந்துள்ளேன். இது அக்கட்டுரையின் தொடர்ச்சி.
மருத்துவத்தைப் பேச அதிலும் மனநோய் மருத்துவத்தைப் பேசுவதில் பெண்களுக்குத் தடை இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஆனால் பார்வைகள் வேறுபடலாம்.
ஆனால் தங்கள் போன்றோரின் இது போன்ற கருத்துரைகளே மேலும் எழுதத் தூண்டும்.. அதுவும் இது போன்ற கட்டுரைகளை எழுதுவதற்கு உள்ள தடைகளை பெண்களாகிய நாங்கள் தாண்ட.. இது போன்ற கருத்துரைகள் கண்டிப்பாகத் தேவை..
தொடர்ந்து அன்பான, ஆழமான கருத்துரைகளால் ஊக்கப்படுத்திக் கொண்டு வருவதற்கு என் மனமார்ந்த நன்றி. இதே அன்பை என்றும் எதிர்நோக்கி.. அன்புடன்..
ஆதிரா..
//என்னவோ தெரியவில்லை - சங்க இலக்கியங்களில் தலைவனைப் பிரிந்த தலைவி பசலையில் வாடுவதாய் வருமளவுக்கு தலைவியைப் பிரிந்த தலைவன் வாடுவதாக எழுதப்படவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.//
பதிலளிநீக்குதலைவியைப் பிரிந்த தலைவன் புலம்புவதாகப் பாடல்கள் பார்த்த நினைவு இல்லை. மீண்டும் ஒருமுறை ஒரு ஓட்டம் விட்டுப் பார்த்துக் கூறிகிறேன் அப்பாதுரை.
//(சரி, நீங்கள் இத்தனை வற்புறுத்திச் சொல்லியிருக்கிறீர்களே, கொஞ்சம் இரத்த அழுத்தம் குறையட்டுமே, அதுவும் ஜூரிக் ஆய்வாளர்களே சொல்லியிருக்காங்களே என்று பலவிதமாக நினைத்து பக்கத்து வீட்டுப் பெண்மணியிடம் இதைப் பற்றிச் சொன்னேன். அடுத்த கதையை ஏன் கேட்கிறீர்கள்!)//
என்ன கொடுமைடா சரவணா? முதுகுத்தோலெல்லாம் சரியாக உள்ளதா அப்பாதுரை?
//அப்பாதுரை சொன்னது…
பதிலளிநீக்குஇதென்ன பின்னூட்டமிட்டதும் கூகில் என்னத் தூக்கியெறிகிறதே?//
ஐயாவுடைய பின்னூட்டம் அப்படி... கூகுல் பக்கத்து வீட்டுப்பெண் மாதிரி என்பது தெரியாதா?
நவரச நாயகன் யாராக இருக்கும்?
பதிலளிநீக்குஏதோ அவராலே டாக்டர்களெல்லாம் வசூல் கொள்ளை அடிக்கறாங்கனு பேசிக்கொள்கிறார்களே!! அப்படியா அப்பாதுரை?
உண்மையிலேயே நவரச நாயகன் யாருனு தெரியாதுங்க.. டாக்டர்கள் வசூல் கொள்ளைனு இன்னும் ஏதோ சொல்றீங்களே?
பதிலளிநீக்குஎன்ன அப்பாதுரை.. இப்படி வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் தான். அவர்தானே மருத்துவத்தில் இதை (கட்டிப்பிடி வைத்தியத்தை) அறிமுகப்படுத்தியவர். உலகமயமாக்கியவரும்.. அந்த உலகநாயகன் தானே? ஏதோ தெரியாதது போல கேட்கிறீர்கள் அப்பாதுரை?
பதிலளிநீக்குஇரண்டாம் முறை பாதம் பதித்து, முதல் முறை கருத்துப் பதிந்துள்ளீர்கள்.. மகிழ்ச்சியாக உள்ளது சத்ரியன். வருகைக்கு மிக்க நன்றி சத்ரியன்.
பதிலளிநீக்குஉங்கள் வலைப்பூ என்னை வெளிவர விடாமல் கட்டிப்போட்டு விட்டது சத்ரியன். மூன்று நாட்களாக மீண்டும் மீண்டும் மலரைச் சுற்றும் வண்டாகச் சுற்றி வந்து கவிரசம் மாந்தி மகிழ்ந்தேன்.
மன நோய்க்கு நல்ல மருந்து உங்கள் பதிவு. நம் இலக்கியங்களில் சொல்லாதது எதுவுமே இல்லை . இன்றைய தலைமுறைக்கு இதில் ஒரு சதவிகிதம் கூட போய்ச் சேரவில்லை என நினைக்கும் போது மனம் வெதும்புகிறது.
பதிலளிநீக்குஆமாம் சிவகுமரன். அதிகம் படித்தவர்கள் எல்லாம் இந்தப் பணியைச் செய்தால் நன்றாக இருக்கும். இலாப நோக்கில் மட்டுமே தமிழ்ப்பணி என்ற நிலை வந்த பின்பு எங்கு இதற்கெல்லாம் நேரம் அவர்களுக்கு?
பதிலளிநீக்குஏதோ நம்மால் முடிந்தது செய்யலாம்..
கருத்துக்கு மிக்க நன்றி.
பின்னூட்டத்தில் நேரம் தவறாக பதிகிறது. கவனியுங்கள் மேடம்
பதிலளிநீக்குஇதோ மாற்றி விடுகிறேன் சிவகுமாரன். நன்றி கவனித்துக் கூறியமைக்கு.
பதிலளிநீக்கு//இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் ஹிஸ்டீரியா என்று கூறி மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று பணப்பையைக் கரைப்பதை விடுத்து காதல் புரிந்தவரின் மனப்பையை அன்பால் நிறையுங்கள், நம் முன்னோர் கூறியுள்ளதைப் போல... நீங்களும் மகிழலாம்... துணையும் நலம் பெறலாம்.//
பதிலளிநீக்குசரியான கருத்து.இக்கருத்துக்குத் துணையாகச் சங்க இலக்கியத்தில் திளைத்து முத்தெடுத்துக் கொடுத்திருக்கிறீர்கள்.அருமை.
அன்பு சென்னைப் பித்தன்,
பதிலளிநீக்குவணக்கம். முதல் முறை வந்துள்ளீர்கள்.. தங்கள் வரவு இனிதாகட்டும்.
நம் முன்னோர் சொல் ஒவ்வொன்று வேதம்.. நாம் பினபற்றுவது இல்லை என்பதை விட அதன் சாரத்தை நாம் அறிந்து கொள்ளவே இல்லை என்பதே உண்மை.
தங்கள் முதல் பாதச்சுவடு, முதல் பதிவுச்சுவடு இரண்டுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன்.
அன்புள்ள ஆதிரா...
பதிலளிநீக்குநல்ல பதிவு தமிழ்ச்சுவை பருகக் கிடைத்த பதிவு. தலைவன் புலம்புவதாகப் பாடல்கள் இல்லையென்பது உண்மைதான்.இருப்பினும் தலைவன் தன் நெஞ்சுக்குக் கூறுவதாகக் குறுந்தொகையில் உள்ள சில பாடல்களைக் கருதிப் பார்க்கலாம். என்றாலும் ஆணாதிக்கம் மேலோங்கிய சமூகத்தில் பெண்ணைக் கட்டுப்படுத்தியதுதான் சங்க இலக்கியம் எனவேதான் வினையே ஆடவர்க்கு உயிர் என்றும் அந்த ஆடவன் பெண்ணுக்கு உயிர் என்றும் பெண்ணிடம் பெண்ணையே கொண்டு சொல்ல வைத்த சமூகமல்லவா. வாழ்த்துக்கள் அருமையான பதிவிற்கு.
அன்புள்ள ஹரனி ஐயா,
பதிலளிநீக்குதங்கள் பாதம் என் வலைப்பூவில் பட்டமை என் பாக்கியமே.. தங்கள் போன்றோரின் கருத்துக்கள் என் போன்றோரைச் சற்று எழுத வைக்கும்.
தலைவன் நெஞ்சுக்குக் கூறும் பாடலகளின் சாரத்தை ஒரு கட்டுரையாகப் பதிவிட எண்ணினேன். தாங்களும் கூறிவிட்டீர்கள். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றி ஐயா. தங்களின் மீள் வருகையை எதிர் நோக்கி..
நல்ல வைத்தியம்,நல்ல பகிர்வும்கூட ஆதிரா :)
பதிலளிநீக்குமிக்க நன்றி சுந்தரா தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.
பதிலளிநீக்குஅதிரடித் தலைப்புக்கு கீழே அழகான இலக்கிய அலசல்.
பதிலளிநீக்குஇலக்கியம் அறியாதவன் நான்... இருபினும் சில விசயங்களை அறிந்துக்கொண்டேன்...
பதிலளிநீக்குஇப்பதிவின் மூலம் நோய் கண்டவர்கள், உள்ளவர்கள் படித்து பயன் பெறட்டும்... மனநலம் , உடல்நலம் பெற்று நல்வாழ்வு வாழட்டும்...
ஆனால் பெண்ணின் மனதினை புரிந்துக்கொள்வதுதான் கடினமான ஒன்றானதாக இருக்கிறதே....
அக்காலத்தில் தலைவன் பிரிவால் தலைவி வாடுதலை புரிந்து உதவிட தோழி இருந்தனர். இக்காலத்தில் அப்படி யாரும் இருப்பது இல்லையென்பதாலும்...
தோழி இருந்தாலும் தோழியரிடம் எல்லாவற்றையும் பகிர்ந்துக்கொள்கிறார்களா என்பதும் ஐயம் தான்.
பெண்ணே தன் மனதில் உள்ளதை இன்றைய காலத்தில் வெளிப்படையாக கூறாவிடின் எந்நோய் என்றாலும் குணப்படுத்த முடியாது...
தன்னை தானே வாட்டிக்கொண்டு தன் மகிழ்ச்சியை இழந்து வாழ வேண்டிய நிலையில்... ஆணோ அல்லது பெண்ணோ இருவருமே...
அன்புள்ள ரிஷபன்,
பதிலளிநீக்குஒற்றை ரோஜாவாய் ஒளிவீசும் தங்கள் கருத்துரை என் மனதை மகிழ்விக்கிறது ரிஷபன். மிக்க நன்றி.
//ஆனால் பெண்ணின் மனதினை புரிந்துக்கொள்வதுதான் கடினமான ஒன்றானதாக இருக்கிறதே....//
பதிலளிநீக்குஅது அவ்வளவு சுலபமில்லை. சும்மாவா வாசன் சொல்லி வைத்தார்கள்? ஆறுமது ஆழமில்லை, அது சேரும் கடலும் ஆழமில்லை. ஆழமிது ஐயா அந்த பொம்பளை மனசு தான்யா.. என்று.
//தன்னை தானே வாட்டிக்கொண்டு தன் மகிழ்ச்சியை இழந்து வாழ வேண்டிய நிலையில்... ஆணோ அல்லது பெண்ணோ இருவருமே... //
முறையான மகிழ்ச்சி இருக்க, அப்படி இணையர்களில் ஒருவர் இழந்து வாழ்ந்தால் அது இணையரில் அடுத்தவரையும் பாதிக்கும்.
கருத்துக்கு நன்றி வாசன்..
// முறையான மகிழ்ச்சி இருக்க, அப்படி இணையர்களில் ஒருவர் இழந்து வாழ்ந்தால் அது இணையரில் அடுத்தவரையும் பாதிக்கும்.//
பதிலளிநீக்குபுரியவில்லை...
முறையான மகிழ்ச்சி என்றும் நிரந்தரமாய் அமைந்திட, இணையர்கள் தன் இணையரின் மகிழ்ச்சியை பற்றி இருவரும் எப்பொழுதும் பேசி புரிந்துக்கொள்ளாமையை தான் நான் கூறவந்தேன்.
குறிப்பாக ஆண்கள் திருமணமான சில ஆண்டுகளுக்கு பிறகு தன்னுடைய இணையர்களின் மகிழ்ச்சி பற்றி பெரிதும் முக்கியமாக வாழ்வில் நினைப்பதில்லை. காரணம் தன் மனைவிக்கு இதுதான் தேவை இதுபோதும் என்று அவனும் தனக்கு தானே எண்ணிக்கொள்ளுதல்.
எனவே பெண்கள் தன் இணையரிடம் மனம்விட்டு மகிழ்ச்சி பற்றி பேசுதல் தவறான ஒன்றான் விசயம் அல்ல. அப்படி பேசுதல் பெண்மைக்கு அடிப்படையானது அல்ல என்பதும், இப்படி சில மாறுப்பட்ட எண்ணங்களை தனக்கு தானே வகுத்துக்கொள்வதுதான் தவறு என நினைக்கிறேன்.
அன்பிற்கு இணை அன்புதானே இவ்(இல்)வாழ்வில்... ஒருவரிடம் கிடைக்காத அன்பை மற்றொருவர் தன்மீது காட்டும்போது மனம் அன்பிற்கு அடிமையாகுதல் என்பது இயற்கையான ஒன்றுதானே... அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்....
சமுதாயத்தில் அதுவே நீங்கள் கூரும் முறையான மகிழ்ச்சியின் மறுபக்க தேடலுக்கு வழிவகுக்கும் / வகுக்கிறதோ என்று சிந்திக்கிறேன்...
Wow, multifaceted and apt quotes.
பதிலளிநீக்குஅன்புள்ள சாய் அவர்களே,
பதிலளிநீக்குதங்கள் வருகையிலும் கருத்துரையிலும் மனம் மகிழ்ந்தேன். மிக்க நன்றி ஐயா.
ALAGANA KARUTHU ARUMAIYANA VILAKKAM
பதிலளிநீக்குஅன்பு ஸ்டீவ்,
பதிலளிநீக்குவாங்க! வாங்க! முதல் முறையாக என் குடிலுக்கு வருகை புரிந்து உள்ளீர்கள். இனிய வரவேற்புகள் ஸ்டீவ். முதல் முதல் நீளமான கட்டுரையைப் படித்து களைத்துப் போய் இருப்பீர்கள்.
சற்று ஓய்வு எடுத்து அடுத்த கட்டுரைகளைப் படித்து கருத்து கூறுங்கள்.
தங்கள் முதல் வருகை முதல் கருத்து இரண்டும் மனம் மகிழ்வாக. நன்றி ஸ்டீவ். மீள் வருகையை எதிர் பார்த்து....நட்புடன்...அன்புடன்...
அன்பு ஸ்டீவ்,
பதிலளிநீக்குமுதல் முதல் என் குடிலுக்குள் உங்கள் பாதம் பட்டுள்ளது. இனிய வரவேற்புகள் ஸ்டீவ். ஒரு காஃபி குடிக்கலாமா? வேண்டாம் வேண்டாம். வெய்யில்ல சூடா வேண்டாம். இந்தாங்க பனிக்கூழ். (ஐஸ் க்ரீம்)
முத்தா கருத்து சொல்லி இருக்கீங்க. எப்படி நன்றி சொல்ல... மனம் மகிழ்வாக.... மீள் வருகையை எதிர் நோக்கி... காத்து.... நன்றியும் அன்பும் ஸ்டீவ்..
அன்புள்ள வாசன்,
பதிலளிநீக்குஇத்துனை நாள் தங்கள் கருத்துக்குப் பதில் சொல்லி விட்டேன் என்று இருந்து விட்டேன். எப்படி மறந்தேன் என்று தெரியவில்லை.
தேர்ந்த ஆராய்ச்சியாளராய் பதில்கள் மின்னுகின்றன. நீங்கள் சொல்வது அத்துனையும் சரியே.
அதே போல முன்னோர் சில் விஷயங்களைப் பேசுவது தேவையில்லை என்று கூறுயதிலும் உண்மை இருக்கவே செய்கிறது. பேசிப் பேசிப் புளித்துப் போவதை வி புரிதல் இல்லாத் பொது பேசியே ஆக வேண்டும். எனக்கும் மாற்றுக் கருத்து இல்லை.
எத்தனையோ இல்லறங்களில் என்னதான் சொன்னாலும் எதுவும் எடுபடுவது இல்லை. Z தொலைக்காட்சியில் நாள் தோறும் மனம் விட்டுப் பேசுங்கள் என்று நினைக்கிறேன். ஒரு நிகழ்ச்சி.. அதில் பேசி புரிய வைத்து ஒன்றுக்கும் உதவாமல் போன கேசுகள் ஏராளமாக இடம் பிடித்துள்ளன. சரி அதை விடுங்கள்..
மென்மை என்பது.. என்ன? ஒரு பார்வையில் புரிய வைக்க முடியாத விஷயம் கணவன் மனைவிக்குள் என்ன இருக்க முடியும் என்று நினைக்கிறீகள்?
சொல்லாத சொல்லுக்கு அர்த்தங்கள் ஆயிரம் வாசன்.
//அன்பிற்கு இணை அன்புதானே இவ்(இல்)வாழ்வில்... ஒருவரிடம் கிடைக்காத அன்பை மற்றொருவர் தன்மீது காட்டும்போது மனம் அன்பிற்கு அடிமையாகுதல் என்பது இயற்கையான ஒன்றுதானே... அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்....//
பதிலளிநீக்குஇதே கருத்தை பாரதியும் கூறியுள்ளார். இதையும் பொதுவாக இரு கட்சிக்கும் வைத்து பெண்ணியம் பேசிய முதல் புலவன் அவன.
அதனால்தான் ஒவ்வொருவரின் சூழல் மனநிலை என்று அவரரவர் நிலையில் இருந்து பார்த்தால் பல விஷயங்கள் சரி என்று படும் .
அதை நாம் தவறு என்று சொல்லவோ சரி என்று நியாயப் படுத்தவோ முயலக்கூடாது.
அன்புக்கு இணை அன்புதான். தாங்கள் சொன்னதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லாதது இது. மற்றதில் எனக்குக் கொஞ்சம் மாற்றுக்கருத்து உண்டு. ஏனெனில் அந்த நியாயப்படுத்தல் ஒருபுறம் கலாச்சார சீர்கேடுகளுக்கு வழிவகுக்கும் என்பதால்.
மனதில் அன்பு குடி கொண்டு விட்டால்...
எதை விலை கொள்ள முடியாது?
நல்ல பதிவு.
பதிலளிநீக்குகணவனின் துணையோடுதானே காமனை வென்றாக வேண்டும் என்று கண்ணதாசன் இழுத்த கருத்தும் அகநானுறு கருத்துதான்..
உங்கள் பக்கத்தில் இருக்கும் படம் எழுத்துக்களின் நிறத்தை மருட்டுவதால் படிப்பது சிரமமாக இருக்கிறது.
ஒன்று படத்தை எடுத்து விடுங்கள் அல்லது எழுத்துக்களின் நிறத்தை மாற்றுங்கள்.
அன்புள்ள அறிவன்.
பதிலளிநீக்குமுதல் முறை வந்துள்ளீர்கள். சற்று எழுத்தைக் கண்டு மருண்டுள்ளீர்கள். மன்னிக்கவும். பழைய டெம்ப்லேட்டை ஏதோ செய்து கொண்டிருந்தேன். எல்லாம் கெட்டு விட்டது. மீண்டும் பழையபடி எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். விரைவில் மாற்றிவிடுகிறேன்.
ஆம கண்ணதாசன் சங்க, சித்தர் இலக்கியங்களை அதிகமாக கையாண்டுள்ளார்.
மிக்க நன்றி அறிவன்.
இந்த காரணத்தினால் தன உனக்கு பிரசர் வருகிறது என்று கூறி என் மனைவியிடம் கூறி நன்றாய் வாங்கிக்கட்டிகொண்டேன் தோழி.
பதிலளிநீக்குவாருங்கள் தோழர் அலாய்ஸ்,
நீக்குஅதைக் கூற வேண்டிய முறையில் கூறியிருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். ஹா ஹா ஹா
நல்ல பதிவு..! அக நானூறு பாடல்களில் பார்வைகளில் பல விஷயங்கள் பொதிந்து உள்ளனவே..! இலக்கியம் என தள்ளி வைக்காமல் அதனின் ரசனையை கவனித்தால்.. புரிபடும் தமிழின் சுவையும் பொருளும்..! நன்றி.. நல்ல படைப்பிற்கு..!
பதிலளிநீக்குஅன்பு பொன்னியின் செல்வன்,
நீக்குவருக! தங்களின் உற்சாகமூட்டும் கருத்துரைக்கு மனமார்ந்த நன்றிகள்
இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் ஹிஸ்டீரியா என்று கூறி மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று பணப்பையைக் கரைப்பதை விடுத்து காதல் புரிந்தவரின் மனப்பையை அன்பால் நிறையுங்கள்
பதிலளிநீக்குநல்ல பதிவு நன்றி
வாங்க! வாங்க சரவணன். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றிங்க
நீக்குமிக்க நன்றி ஐயா
பதிலளிநீக்குnalla padhivu thodarndhu yezhudhungal.
பதிலளிநீக்கு-saivan.
வருக சைவன். உங்கள் வருகையில் மகிழ்ந்தேன். வாழ்த்தும் ஊக்கத்தில் தொடர்ந்து எழுதுவேன்.வருகை வாழ்த்து இரண்டுக்கும் மிக்க நன்றி சைவன்.
நீக்குMudhanmurai ungal valainuzh nuzhanidhullen. Aadhirai kavidhai pakkangalil kadalai kaangiren. ivai kadallukkul kaanum muththu alla. Muththukkul konjam kadal. Valarga umadhu thamizh thondu.
பதிலளிநீக்குஅன்புள்ள நந்தகுமார் சார்/crab மற்றும் ஷீலா நந்த குமார்,
நீக்குபல நாட்களாக நான் நுழையாத ஒட்டடை அடைந்து பாழடைந்த என் வலை மனையில் நீங்கள் இருவரும் பாதம் பதித்து உங்கள் பதிவையும் விட்டுச் சென்றுள்ளீர்கள். உடனடியாக வரவேற்பு கொடுக்காததற்கு வருந்துகிறேன். மகிழ்ச்சியில் நன்றி என்னும் சொல்லைத் தவிர என்ன எழுதுவது என்று தெரியாத மனநிலையில்.... நன்றி நன்றி அன்பு கலந்த ஹுலி சொப்பு விருந்துக்கும்...
ஆகா ...
பதிலளிநீக்குவலைச்சரம் மூலம் வந்தேன்
வாழ்த்துக்கள்
வலைச்சரம் அறிமுகப் படுத்திய மது அவர்களின் வருகை, கருத்து இரண்டும் மகிழ்வு. நன்றி
நீக்குமிக்க நன்றி கீத மஞ்சரி. தங்கள் வருகை மகிழ்வு. வலைச்சரத் தகவல் மிகவும் மகிழ்வு. மீண்டும் நன்றி
பதிலளிநீக்கு