“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

புதன், 19 மார்ச், 2014

நாயன்மார்கள் - அறுபத்து நால்வர்

 16.03/14 அன்று  டி.ஜி.வைணவக் கல்லூரியில் நடைபெற்ற “பக்தி இலக்கியங்களில் பன்முகப் பார்வை” என்னும் தலைப்பில் நடந்த மாநிலக் கருத்தரங்கில் பங்கு பெற்ற என் கட்டுரை

நாயன்மார்கள் அறுபத்து மூவர் என்பது பெரிய புராணத்தில் சேக்கிழார் பெருமான் உருவாக்கியுள்ள நெடுங்கணக்கு. ஆனால் பெண் நாயன்மார்கள் என்று மூன்றே மூன்று பேரை மட்டும் சுட்டுகிறார். சைவம் தழைக்க உதவிய மகளிர் தொண்டர்கள் என்று காரைக்காலமையார், இசை ஞானியார், மங்கையர்க்கரசியார் ஆகிய மூவரைச் சுட்டுகிறது பெரிய புராணம். நாயன்மார்களின் பட்டியலில் பெண் நாயன்மார்கள் வெறும் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவாகவே உள்ளனர்.
          நாயன்மார்கள் அறுபத்து மூவர் என்பது பெரிய புராணத்தில் சேக்கிழார் பெருமான் உருவாக்கியுள்ள நெடுங்கணக்கு. அவர்களுள் பெண் நாயன்மார்கள் மூவர். சைவம் தழைக்க உதவிய மகளிர் தொண்டர்கள் என்று காரைக்காலமையார், இசை ஞானியார், மங்கையர்க்கரசியார் ஆகிய மூவரைச் சுட்டுகிறது பெரிய புராணம். நாயன்மார்களின் பட்டியலில் பெண் நாயன்மார்கள் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவாகவே உள்ளனர்.

பெரிய புராணத்தில் சுந்தரரை ஈன்றெடுத்த அளவில் இசைஞானியாரின் பெருமை ஒர் பாடலில் (1282) பாடி முடிந்துள்ளது,.

மங்கையர்க்கரசியாரின் பெருமை பாண்டிய மன்னன் நின்ற சீர் நெடுமாறனின் துணைவியாக வாழ்ந்து அவருடன் சேர்ந்து ஈசன் அடியின்கீழ் அமரும் பேறு பெற்றதாக மூன்று பாக்களில் (4194.4195, 4196) சுருக்கமாகப் பாடப் பெற்றுள்ளது.

தலங்கள் தோறும் யாத்திரை மேற்கொண்டு சைவப் பெருமை பாடிய காரைக்காலம்மையாரின் வரலாறு 66 பாடல்களில் விரித்து உரைக்கப் பெற்றுள்ளது. இந்த மூவர் மட்டுமே பெரிய புராணத்தால் அறியப் படும் நாயன்மார்களுள் பெண்பாலர்.

இவர்களேயன்றி சைவ அடியார்களுடன் தொடர்புடைய மகளிருள் இன்னும் சிலர் மனத்தாலும் எண்ணிப் பார்க்க முடியாத அளவில் அசாத்தியமான தியாகத்தைச் செய்துள்ளனர். தெரிந்தோ தெரியாமலோ, காலச்சூழல் இடம் கொடுக்காமையினாலோ அவர்களின் அருந்தொண்டுகள் மறைக்கப் பட்டிருக்கின்றன. அப்படி மறைக்கப் பட்ட தூய தொண்டர்களுள் ஒருவர் இயற்பகை நாயனாரின் துணைவியார்.

சீர் தூக்கிப் பார்த்தால் மறுக்கவோ மறக்கவோ மறைக்கவோ முடியாததொரு தியாகம் இவர் செய்தது. ஆனால் இவரது பெயர் கூட பெரிய புராணத்தின் வழி அறியக் கிடைக்கவில்லை என்பதுதான் வருத்தத்திற் குரியது. பெயரும் அறியமுடியாத இவரின் தூய தொண்டு பற்றி இக்கட்டுரை விரிவாக விவாதிக்கிறது.

       சோழ நாட்டுப் பூம்புகார் நகரில் வணிகர் குடியில் தோன்றியவர் இயற்பகை நாயனார். வளமெல்லாம் நிறையப் பெற்ற இவர் சிவ பெருமான் மீது மாளாத பற்று கொண்டவர். சிவனடியார்கள் வேண்டியதை மட்டுமன்றி மனத்தில் நினைத்ததையும் அவகள் மனம் மகிழும் வண்ணம் கொடுக்கக் கூடிய அளவில் அளவில்லாத பக்தி உடையவர். 
     
இப்படி இயற்பகையார் அடியார் பணி செய்து கொண்டு இருக்கும் காலத்தில் தூய வெண்ணீறு அணிந்த மேனியுடன் புறத்தில் காவி அணிந்து அகத்தில் காமம் அணிந்தவராகத் தம் இல்லம் வந்த அடியாரை வரவேற்று வணங்கி ஆசி பெறுகிறார்.

அப்போது வந்த அடியவர் இயற்பகையாரிடம் “அடியார் வேண்டுபவர் வேண்டுவதை நீ தருவாய் என்று கேள்விப்பட்டு இங்கு வந்துள்ளேன். நீ சம்மதிப்பாயானால் எனக்கு வேண்டியதைக் கூறுவேன்” என்கிறார்.

இயற்பகையார் “தாங்கள் கேட்பது எதுவாயினும் என்னிடம் உளது எனின் அது எம்பெருமானின் உடைமையாகும். எனவே நீவிர் விரும்பிய பொருளைக் கேட்டு அருள்க” என்கிறார்.

“உன் மனைவியின் மீது பெருகிய காதலினால் அவளைக் கேட்டுப் பெற வந்துள்ளேன்” என்கிறார் அந்தக் காமத் துறவி. “காட்டுக்குப் போ”என்று கைகேயி கூறியவுடன் கம்ப நாடனின் காப்பியத் தலைவன் முகம் மலர்ந்ததைப் போல இயற்பகையார் முகம் மலர்ந்தது. “என்னிடம் உள்ளதொரு பொருளைக் கேட்டுள்ளீர்கள்” என்று உவகையுடன் கூறிக்கொண்டே வீட்டிற்குள் சென்றார். தம் மனையாளைக் கரம் பிடித்து அடியார் முன்பு அழைத்து வந்து “முறைப்படி மணம் செய்து கொண்ட என் மனையின் விளக்கே! இந்தத் துறவியாருக்கு உன்னை நான் கொடுத்து விட்டேன்” என்று கூறிவிடுகிறார். மனையாளும் ஒப்பி விடுகிறார்.

மனைவியைக் கொடுத்த மகிழ்வுடன் இயற்பகையார் அடியாரைப் பார்த்து “வேறு நான் செய்ய வேண்டுவது யாது?” என்று வினவுகிறார். “நான் உன் மனையாளுடன் இவ்வூரைக் கடந்து செல்லும் வரை நீ வழித்துணையாக உடன் வர வேண்டும்” என்கிறார் அடியார். இயற்பகையாரும் பொன்போல ஒளிரும் ஆடையையும் கச்சையையும் அணிந்து கையில் வாளையும் ஏந்திக் கொண்டு அம்மையாரையும் அடியவரையும் முன்னே போக விட்டு இவர் பின்னே காவலாகச் செல்கிறார்.

உற்றார் உறவினர்கள் எல்லோரும் எதிர்வந்து தடுக்கின்றனர். தடுத்த அவர்களையெல்லாம் வெட்டி வீழ்த்துகிறார் இயற்பகையார். அடியவர் கூறிய இடம் வந்ததும் “சென்று வருகிறேன்” என்று கூறித் திரும்பியும் பார்க்காமல் வந்து விடுகிறார். அடியாராய் வந்த ஈசன் மனம் மகிழ்ந்து “இயற்பகையானே ஓலம்” என்று ஓலமிட்டு அழைக்கிறார். அப்போதும் இயற்பகையார் “இன்னும் உம்மைத் தடுப்பவர் உளர் எனின் அவரையும் என் வாளால் வெட்டுவேன்” என்று கூறிக்கொண்டே வருகிறார். அங்கு அடியவரைக் காண வில்லை. மறைந்து விடுகிறார். வானத்தில் இறைவன் உமையாளுடன் காட்சி அளிக்கிறார்.

இப்படித் தம் உரிமை மனையாளையும் சிறிதும் வருத்தமின்றி ஆண்டவனின் அடியாருக்குக் கொடுத்த இயற்பகை நாயனாரை,

இன்புறு தாரந் தன்னை ஈசனுக் கன்பர் என்றே
துன்புறா துதவும் தொண்டர் பெருமையைத் தொழுது  வாழ்த்தி” (பெரியபுராணம்; 439)

என்று போற்றுகிறார் சேக்கிழார். சேக்கிழாருக்குத் தொண்டர்தம் பெருமையை எழுத துணையாய் நின்ற திருத்தொண்டத் தொகையை இயற்றிய சுந்தரமூர்த்தி நயனார்

“இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்” 
(திருத்தொண்டத் தொகை)
என்று போற்றுகிறார்.

“கைதவம் பேசிநின் காதலி யைத்தரு கென்றலுமே
மைதிகழ் கண்ணியை ஈந்தவன் வாய்ந்த பெரும்புகழ்வந்(து)
எய்திய காவிரிப் பூம்பட்டி னத்துள் இயற்பகையே. (திருத்தொண்டர் திருவந்தாதி; 4)

என்று நம்பியாண்டார் நம்பி போற்றுகிறார். ஆனால் இந்த மூவரின் நூல்களில் எங்கும் இயற்பகையாரின் துணைவியார் எள் நுணியளவேனும் போற்றப் படவில்லை.

இயற்பகையார் தம் துணைவியாரைச் சற்றேறக் குறைய ஒரு சடப் பொருளாகக் கையாண்டுள்ளார்.

 உன் மனைவியை விரும்பிப் பெற வந்தேன் என்று அடியாராக வந்த இறை கூறியதும். “இதுஎ னக்குமுன் புள்ளதே (பெரிய புராணம் 411) என்று இயற்பகையார் பதில் கூறுகிறார். ‘இது என்று அவர் கூறும் இச்சொல்லே தம் மனையாளை ஒரு சடப் பொருளாக இயற்பகையார் கையாண்டதற்கு வலுவான ஆதாரமாகிறது.

அந்தப் பெண்ணிடம் அவள் விருப்பம் கேட்கப் படவில்லை. அப்பெண் சினந்து பேசவில்லை. மறுத்துக் கூறவில்லை. பார்வையில் சீற்றம் இல்லை. ஒரு சிறு முனங்கல் கூட இல்லை. எந்த எதிர்ப்பும் காட்டாது அடியவருடன் சென்ற அந்தப் பேதையின் பெருமை இயற்பகையாரின் புராணத்தில் எங்கும் பேசப் படவில்லை. ‘திருவினும் பெரியாள்’ என்று ஓரிடத்தில் அவளைச் சொல்வதையன்றி அப்பெண்ணின் பெயர் என்ன என்று கூட அறியப் படவில்லை.

பெயர் கூட அறியப் படவில்லை என்று கூறியவுடன் தமிழ் இலக்கியங்களில் தலைவன் தலைவியின் பெயரைக் கூறும் மரபு இல்லை. இது போன்ற நிகழ்வுகளில் பெண்களின் பெயரைச் சுட்டிக் காட்டுவது சட்டப் படி குற்றம் என்று இப்போதைய வழக்கில் இருக்கும் இந்தியத் தண்டனைச் சட்டப்பிரிவு  228( வைச் சுட்டிக் காட்டுகின்றனர். பின்னா:ளில் அப்பெண்ணுக்கு அவப்பெயர் வந்து விடும் ஆகையினால் பெயர்கள் குறிப்பிடப் படுவதில்லை என்றும் ஒரு சப்பைக் கட்டைக் இறுக்கமாகக் கட்டுகின்றனர். இச்சட்டம் இயற்றப் படாத அக்காலத்திலேயே பெயர் குறிப்பிடப் படாத இம்மரபு கடைபிடிக்கப் பட்டு வந்துள்ளது என்பது வியப்பாகவும் பெருமையாகவும் இருக்கிறது என்ற போதும் இக்காரணஙகளையெல்லாம் கூறி அம்மையாரைப் போற்றாமல் புறந்தள்ளியதை சரி என்று ஏற்றுக் கொள்வது  பெண்ணினத்திற்கு இழைக்கும் துரோகமாகத்தான் இருக்க முடியும்..

இது ஒருபுறமிருக்க அப்பெண் விரும்பி அடியாருடன் செல்ல ஒப்பினாளா என்னும் வினா எழுவதைத் தடுக்க இயலாததாகிறது. தூய நீறுபொன் மேஎனியில் விளங்கத் துர்த்த வேடமும் தோன்ற வேதியராய் வந்த அடியவர், “மன்னுகாதல் உன்மனைவியை வேண்டி வந்த திங்கு” (பெரியபுராணம் 410) என்று சொன்னவுடன் உள்ளே சென்ற இயற்பகையார் அம்மையாரை அழைத்து வந்து “விதிமணக்குல மடந்தை! இன்றுனை இம்மெய்த் தவர்க்குநான் கொடுத்தனன்” (பெரியபுராணம் 411) என்று அடியாரிடம் கொடுத்து விடுகிறார். முதலில் அப்பெண் மனம் கலங்கிப் பின் தெளிவடைவதாகக் காட்டுகிறார் சேக்கிழார். முதலில் மனம் கலங்கிய அப்பெண் மனம் தெளிவது எக்காரணத்தினால்? அவர் இத்தகு செயலுக்குத் துணிவது எப்படி? என்று சிந்திக்க வேண்டுவது இங்கு அவசியமாகிறது.

இயற்பகையார் தொடக்கத்திலேயே “விதிமணக்குல மடந்தை” என்னும் சொல்லைப் பயன்படுத்தி அவளை எதிர்வினையாற்ற விடாது செய்து விடுகிறார்.

‘விதி மணம்’ என்பது முறைப்படி செய்து கொள்ளும் மணந்ததைச் சுட்டுகிறது. விதியோடு மணந்த கற்பறத்தின் முறைமை என்பது கணவனின் சொல்லைத் தட்டாது கேட்டல். இதனை இயற்பகையார் சொன்ன ‘விதிப்படி’ என்னும் இச்சொல் சொல்லாமல் சொல்லிவிடுகிறது.

அடுத்ததாகக் ‘குல மடந்தை என்னும் சொல்லை இயற்பகையார் இங்கு பயன் படுத்தியதின் நோக்கத்தை ஆராய்தல் தேவையாகிறது. குலப்பெண்கள் கணவனை அன்றி வேறு தெய்வத்தை வணங்கும் மரபு அக்காலத்தில் இல்லை. இதனைச் சுட்டிக் காட்ட இச்சொல் பயன்பட்டுள்ளதாகத் தெரிகிறது. “தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள்” என்று திருவள்ளுவரும், “சோம குண்டம், சூரிய குண்டம் என்னும் இரு பொய்கைகள் உள்ளன. அவற்றில் மூழ்கி காமன் கோட்டம் சென்று காமனைத் தொழுதால் கணவரோடு இன்புற்று வாழ்வர்; நாமும் தொழுவோம் என்று கண்ணகியின் தோழி தேவந்தி கூறியவுடன் தீப்பட்டாற் போல துடித்தெழுந்து “பீடு அன்று என்று மறுத்த இளங்கோவடிகள் போற்றிய கண்ணகியும்,  “கணவற்கை தொழுது வாழ்வார் தேமலர்த் திருவொ டொப்பார் என்று கூறும் சீவக சிந்தாமணி கூறுவதும் இங்கு ஒப்பு நோக்கத் தக்கது.

ஆக இந்த இரு சொற்களும் அம்மையாரை இயற்பகையாரின் கட்டளைக்கு உடன்பட வைத்ததோ என்றும் சிந்திக்க வேண்டியுள்ளது.
இப்புராணத்தில் இரு இடங்களில் இயற்பகையாரின் துணைவியின் குரல் ஒலிக்கின்றது. முதலில் இயற்பகையார் “உன்னை இந்த அடியாருக்குக் கொடுத்து விட்டேன்” என்று கூறியவுடன் ஒலிக்கிறது.

“இன்று நீரெனக்கருள் செய்ததிதுவேல் என்னுயிர்க் கொடுநாத!நீர் உரைத்த                                                     
தொன்றை நான்செயும் அத்தனை யல்லால் உரிமை வேறுள தோஎனக்(கு)” (பெரியபுராணம் 412)

என்னும் இம்மொழி உரிமையற்ற ஓர் அடிமையின் குரலாக ஒலிக்கிறது. ஏனென்றால் பெரும்பாலும் அடிமைகளே உரிமைகளைப் பற்றி பேசக் கடமைப் பட்டவர்களாக இருப்பர். ‘கடமை வேறுளதோ’ என்று கேட்டிருந்தால் அம்மையார் இச்செயலை மனமுவந்து செய்வதாகக் கொள்ளலாம். இங்கு அம்மையார் பயன்படுத்தியுள்ள ‘உரிமை வேறுளதோ’ என்னும் சொல் அவர் அடிமையாக நடத்தப் பட்டாரோ என்று சிந்திக்க வைக்கிறது.

அடியவர் கழிபெரும் காதலுடன் அம்மையாரைத் தனியிடம் அழைத்துச் செல்கிறார். உடன் இயற்பகையார் காவலாக வருகிறார். அப்போது “எம் குலக்கொடியை விட்டுச் செல்” என்று உற்றாரும் உறவினரும் அடியவரை நோக்கிச் சூழ்ந்து கொள்கின்றனர். அடியவர் அச்சம் கொண்டவராக அம்மையாரைப் பார்க்கின்றார். இத்தருணத்தில், “இறைவனே அஞ்ச வேண்டாம்; இயற்பகை வெல்லும்” (பெரியபுராணம் 419) என்று அடியவரை நோக்கிக் கூறுவதாக அம்மையாரின் குரல் மறுமுறை ஒலிக்கின்றது. இச்சொல்லாடல் இயற்பகையார் இறைவனால் நடத்தப் படும் சோதனையில் வெற்றி பெறுவார் என்னும் நம்பிக்கையைக் கூறுவதாக ஒலிப்பதைக் காணலாம்.

இங்கு இறையடியாருக்கு நம்பிக்கையை ஊட்டும் அம்மையார் மனமுவந்து இத்தொண்டினைச் செய்ததாகவே தெரிகிறது. நமக்கு எழுகின்ற வினாவெல்லாம் அம்மையார் தொண்டு செய்தாரா? உவந்து செய்தாரா? கணவரின் கட்டளைக்காக இணங்கினாரா? என்பதையெல்லாம் கடந்தது.

கணவனின் சொல்லைத் தட்ட முடியாமையினாலோ அல்லது உண்மையிலேயே இறைவனுக்குத் தொண்டாற்றும் நோக்கிலோ அம்மையார் மறுப்பேதும் சொல்லாமல் அடியாருக்குத் தம்மை ஈய நினைத்தமை கற்புடைய பெண்களால் கனவிலும் எண்ணிப் பார்க்க முடியாதது. கற்புக் கொள்கை மேலோங்கி இருந்த அக்காலத்தில் தம்மைப் பற்றியோ, தம்மை உலகம் போற்றுமா தூற்றுமா என்பதைப் பற்றியெல்லாம் சற்றும் சிந்திக்கவில்லை. அப்படிப் பட்ட அம்மையாரைத் தம்பிரான் தோழரும் நம்பியாண்டார் நம்பியும் தெய்வச் சேக்கிழார் பெருமானும் ஏன் போற்றவில்லை என்பதே இங்கு எழும் ஒரே வினா. அவரது பெயரைக்கூட இருட்டடைப்பு செய்தது ஏன்?

குங்கிலியத் தொண்டு செய்தவர், அடியார்களின் துணிகளை வெளுத்துக் கொடுத்தவர், திருவோடு செய்து கொடுத்தவர், மலர் பறித்து தாமம் கண்ணி கட்டிக் கொடுதவர், உருத்திர பசுபதி மந்திரத்தை உச்சரித்தவர், சந்தனம் அரைத்துக் கொடுத்தவர் என்று அறுபது அடியார்களின் சிறப்பை எடுத்துக் கூறும் சேக்கிழார் பெருமானின் பார்வையில் இந்த அம்மையாரின் தொண்டு தூய்மை நிறைந்ததாகத் தெரியாமல் போனதற்கு என்ன காரணம். பெண் என்னும் ஒரே காரணமாகத்தான் இருக்க இயலும்.  

இங்கு தெய்வச் சேக்கிழாரை மட்டும் குறை கூறுவது பொருந்தாது. சேக்கிழார் பெருமானுக்கு வழிகாட்டியாக இருந்த நூல் சுந்தரமூர்த்தி நாயனாரின் திருத்தொண்டத் தொகை. ஆக இந்த அம்மையாரைப் புறந்தள்ளியதில் முதன்மையானவர் சுந்தரமூர்த்தி நாயனாரே.  வழி வழியாக பின்னர் வந்த சேக்கிழாரும் ஆணியச் சிந்தனை மேலோங்கியதால் இந்த அம்மையாரைக் கண்டு கொள்ளாது போயிருக்கலாம்.

நின்ற சீர் நெடுமாறனின் துணைவியாக வாழ்ந்த மங்கையர்க் கரசியாருக்குப் பாடியருளியதைப் போலவோ சுந்தரரைப் பயந்த இசைஞானியாரைப் பாடியதைப் போலவோ ஓரிரு பாடல்களையாவது பாடி அடியார்களுள் ஒருவராக இந்த அம்மையாரையும் சேர்த்திருக்கலாமே என்னும் வினா நியாயமானது என்பதை இப்புராணத்தை நுணுகி ஆராய்பவர் உணர்வர்.

(இக்கட்டுரை முக்கியமாக இச்சிந்தனை கருத்தரங்குக்கு வருகை புரிந்த பேராசிரியர்கள் பலராலும் பாராட்டப் பெற்றது. இதனை விரிவாக எழுதிப் பதிவு செய்யும்படி அனைவரும் கேட்டுக் கொண்டனர்)

திங்கள், 17 மார்ச், 2014

டி.ஜி.வைணவக் கல்லூரி மாநிலக் கருத்தரங்கில்

நேற்று (16.03/14) டி.ஜி.வைணவக் கல்லூரியில் நடைபெற்ற “பக்தி இலக்கியங்களில் பன்முகப் பார்வை” என்னும் தலைப்பில் நடந்த மாநிலக் கருத்தரங்கில் ”நாயன்மார்கள் அறுபத்து நால்வர்” என்று இயற்பகை நாயனாரின் துணைவியாரைப் பற்றிப் பேசிய போது என் மாணவிகள் பதிவு செய்தது. 

நாயன்மார்கள் - அறுபத்து நால்வர்

நாயன்மார்கள் அறுபத்து மூவர் என்பது பெரிய புராணத்தில் சேக்கிழார் பெருமான் உருவாக்கியுள்ள நெடுங்கணக்கு. ஆனால் பெண் நாயன்மார்கள் என்று மூன்றே மூன்று பேரை மட்டும் சுட்டுகிறார். சைவம் தழைக்க உதவிய மகளிர் தொண்டர்கள் என்று காரைக்காலமையார், இசை ஞானியார், மங்கையர்க்கரசியார் ஆகிய மூவரைச் சுட்டுகிறது பெரிய புராணம். நாயன்மார்களின் பட்டியலில் பெண் நாயன்மார்கள் வெறும் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவாகவே உள்ளனர்.
          நாயன்மார்கள் அறுபத்து மூவர் என்பது பெரிய புராணத்தில் சேக்கிழார் பெருமான் உருவாக்கியுள்ள நெடுங்கணக்கு. அவர்களுள் பெண் நாயன்மார்கள் மூவர். சைவம் தழைக்க உதவிய மகளிர் தொண்டர்கள் என்று காரைக்காலமையார், இசை ஞானியார், மங்கையர்க்கரசியார் ஆகிய மூவரைச் சுட்டுகிறது பெரிய புராணம். நாயன்மார்களின் பட்டியலில் பெண் நாயன்மார்கள் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவாகவே உள்ளனர்.

பெரிய புராணத்தில் சுந்தரரை ஈன்றெடுத்த அளவில் இசைஞானியாரின் பெருமை ஒர் பாடலில் (1282) பாடி முடிந்துள்ளது,.
மங்கையர்க்கரசியாரின் பெருமை பாண்டிய மன்னன் நின்ற சீர் நெடுமாறனின் துணைவியாக வாழ்ந்து அவருடன் சேர்ந்து ஈசன் அடியின்கீழ் அமரும் பேறு பெற்றதாக மூன்று பாக்களில் (4194.4195, 4196) சுருக்கமாகப் பாடப் பெற்றுள்ளது.

தலங்கள் தோறும் யாத்திரை மேற்கொண்டு சைவப் பெருமை பாடிய காரைக்காலம்மையாரின் வரலாறு 66 பாடல்களில் விரித்து உரைக்கப் பெற்றுள்ளது. இந்த மூவர் மட்டுமே பெரிய புராணத்தால் அறியப் படும் நாயன்மார்களுள் பெண்பாலர்.

இவர்களேயன்றி சைவ அடியார்களுடன் தொடர்புடைய மகளிருள் இன்னும் சிலர் மனத்தாலும் எண்ணிப் பார்க்க முடியாத அளவில் அசாத்தியமான தியாகத்தைச் செய்துள்ளனர். தெரிந்தோ தெரியாமலோ, காலச்சூழல் இடம் கொடுக்காமையினாலோ அவர்களின் அருந்தொண்டுகள் மறைக்கப் பட்டிருக்கின்றன. அப்படி மறைக்கப் பட்ட தூய தொண்டர்களுள் ஒருவர் இயற்பகை நாயனாரின் துணைவியார்.

சீர் தூக்கிப் பார்த்தால் மறுக்கவோ மறக்கவோ மறைக்கவோ முடியாததொரு தியாகம் இவர் செய்தது. ஆனால் இவரது பெயர் கூட பெரிய புராணத்தின் வழி அறியக் கிடைக்கவில்லை என்பதுதான் வருத்தத்திற் குரியது. பெயரும் அறியமுடியாத இவரின் தூய தொண்டு பற்றி இக்கட்டுரை விரிவாக விவாதிக்கிறது.

       சோழ நாட்டுப் பூம்புகார் நகரில் வணிகர் குடியில் தோன்றியவர் இயற்பகை நாயனார். வளமெல்லாம் நிறையப் பெற்ற இவர் சிவ பெருமான் மீது மாளாத பற்று கொண்டவர். சிவனடியார்கள் வேண்டியதை மட்டுமன்றி மனத்தில் நினைத்ததையும் அவகள் மனம் மகிழும் வண்ணம் கொடுக்கக் கூடிய அளவில் அளவில்லாத பக்தி உடையவர். 
     
இப்படி இயற்பகையார் அடியார் பணி செய்து கொண்டு இருக்கும் காலத்தில் தூய வெண்ணீறு அணிந்த மேனியுடன் புறத்தில் காவி அணிந்து அகத்தில் காமம் அணிந்தவராகத் தம் இல்லம் வந்த அடியாரை வரவேற்று வணங்கி ஆசி பெறுகிறார்.

அப்போது வந்த அடியவர் இயற்பகையாரிடம் “அடியார் வேண்டுபவர் வேண்டுவதை நீ தருவாய் என்று கேள்விப்பட்டு இங்கு வந்துள்ளேன். நீ சம்மதிப்பாயானால் எனக்கு வேண்டியதைக் கூறுவேன்” என்கிறார்.

இயற்பகையார் “தாங்கள் கேட்பது எதுவாயினும் என்னிடம் உளது எனின் அது எம்பெருமானின் உடைமையாகும். எனவே நீவிர் விரும்பிய பொருளைக் கேட்டு அருள்க” என்கிறார்.

“உன் மனைவியின் மீது பெருகிய காதலினால் அவளைக் கேட்டுப் பெற வந்துள்ளேன்” என்கிறார் அந்தக் காமத் துறவி. “காட்டுக்குப் போ”என்று கைகேயி கூறியவுடன் கம்ப நாடனின் காப்பியத் தலைவன் முகம் மலர்ந்ததைப் போல இயற்பகையார் முகம் மலர்ந்தது. “என்னிடம் உள்ளதொரு பொருளைக் கேட்டுள்ளீர்கள்” என்று உவகையுடன் கூறிக்கொண்டே வீட்டிற்குள் சென்றார். தம் மனையாளைக் கரம் பிடித்து அடியார் முன்பு அழைத்து வந்து “முறைப்படி மணம் செய்து கொண்ட என் மனையின் விளக்கே! இந்தத் துறவியாருக்கு உன்னை நான் கொடுத்து விட்டேன்” என்று கூறிவிடுகிறார். மனையாளும் ஒப்பி விடுகிறார்.

மனைவியைக் கொடுத்த மகிழ்வுடன் இயற்பகையார் அடியாரைப் பார்த்து “வேறு நான் செய்ய வேண்டுவது யாது?” என்று வினவுகிறார். “நான் உன் மனையாளுடன் இவ்வூரைக் கடந்து செல்லும் வரை நீ வழித்துணையாக உடன் வர வேண்டும்” என்கிறார் அடியார். இயற்பகையாரும் பொன்போல ஒளிரும் ஆடையையும் கச்சையையும் அணிந்து கையில் வாளையும் ஏந்திக் கொண்டு அம்மையாரையும் அடியவரையும் முன்னே போக விட்டு இவர் பின்னே காவலாகச் செல்கிறார்.

உற்றார் உறவினர்கள் எல்லோரும் எதிர்வந்து தடுக்கின்றனர். தடுத்த அவர்களையெல்லாம் வெட்டி வீழ்த்துகிறார் இயற்பகையார். அடியவர் கூறிய இடம் வந்ததும் “சென்று வருகிறேன்” என்று கூறித் திரும்பியும் பார்க்காமல் வந்து விடுகிறார். அடியாராய் வந்த ஈசன் மனம் மகிழ்ந்து “இயற்பகையானே ஓலம்” என்று ஓலமிட்டு அழைக்கிறார். அப்போதும் இயற்பகையார் “இன்னும் உம்மைத் தடுப்பவர் உளர் எனின் அவரையும் என் வாளால் வெட்டுவேன்” என்று கூறிக்கொண்டே வருகிறார். அங்கு அடியவரைக் காண வில்லை. மறைந்து விடுகிறார். வானத்தில் இறைவன் உமையாளுடன் காட்சி அளிக்கிறார்.

இப்படித் தம் உரிமை மனையாளையும் சிறிதும் வருத்தமின்றி ஆண்டவனின் அடியாருக்குக் கொடுத்த இயற்பகை நாயனாரை,

இன்புறு தாரந் தன்னை ஈசனுக் கன்பர் என்றே
துன்புறா துதவும் தொண்டர் பெருமையைத் தொழுது  வாழ்த்தி” (பெரியபுராணம்; 439)

என்று போற்றுகிறார் சேக்கிழார். சேக்கிழாருக்குத் தொண்டர்தம் பெருமையை எழுத துணையாய் நின்ற திருத்தொண்டத் தொகையை இயற்றிய சுந்தரமூர்த்தி நயனார்
“இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்” (திருத்தொண்டத் தொகை)
என்று போற்றுகிறார்.

“கைதவம் பேசிநின் காதலி யைத்தரு கென்றலுமே
மைதிகழ் கண்ணியை ஈந்தவன் வாய்ந்த பெரும்புகழ்வந்(து)
எய்திய காவிரிப் பூம்பட்டி னத்துள் இயற்பகையே. (திருத்தொண்டர் திருவந்தாதி; 4)

என்று நம்பியாண்டார் நம்பி போற்றுகிறார். ஆனால் இந்த மூவரின் நூல்களில் எங்கும் இயற்பகையாரின் துணைவியார் எள் நுணியளவேனும் போற்றப் படவில்லை.

இயற்பகையார் தம் துணைவியாரைச் சற்றேறக் குறைய ஒரு சடப் பொருளாகக் கையாண்டுள்ளார்.

 உன் மனைவியை விரும்பிப் பெற வந்தேன் என்று அடியாராக வந்த இறை கூறியதும். “இதுஎ னக்குமுன் புள்ளதே (பெரிய புராணம் 411) என்று இயற்பகையார் பதில் கூறுகிறார். ‘இது என்று அவர் கூறும் இச்சொல்லே தம் மனையாளை ஒரு சடப் பொருளாக இயற்பகையார் கையாண்டதற்கு வலுவான ஆதாரமாகிறது.

அந்தப் பெண்ணிடம் அவள் விருப்பம் கேட்கப் படவில்லை. அப்பெண் சினந்து பேசவில்லை. மறுத்துக் கூறவில்லை. பார்வையில் சீற்றம் இல்லை. ஒரு சிறு முனங்கல் கூட இல்லை. எந்த எதிர்ப்பும் காட்டாது அடியவருடன் சென்ற அந்தப் பேதையின் பெருமை இயற்பகையாரின் புராணத்தில் எங்கும் பேசப் படவில்லை. ‘திருவினும் பெரியாள்’ என்று ஓரிடத்தில் அவளைச் சொல்வதையன்றி அப்பெண்ணின் பெயர் என்ன என்று கூட அறியப் படவில்லை.

பெயர் கூட அறியப் படவில்லை என்று கூறியவுடன் தமிழ் இலக்கியங்களில் தலைவன் தலைவியின் பெயரைக் கூறும் மரபு இல்லை. இது போன்ற நிகழ்வுகளில் பெண்களின் பெயரைச் சுட்டிக் காட்டுவது சட்டப் படி குற்றம் என்று இப்போதைய வழக்கில் இருக்கும் இந்தியத் தண்டனைச் சட்டப்பிரிவு  228()  வைச் சுட்டிக் காட்டுகின்றனர். பின்னா:ளில் அப்பெண்ணுக்கு அவப்பெயர் வந்து விடும் ஆகையினால் பெயர்கள் குறிப்பிடப் படுவதில்லை என்றும் ஒரு சப்பைக் கட்டைக் இறுக்கமாகக் கட்டுகின்றனர். இச்சட்டம் இயற்றப் படாத அக்காலத்திலேயே பெயர் குறிப்பிடப் படாத இம்மரபு கடைபிடிக்கப் பட்டு வந்துள்ளது என்பது வியப்பாகவும் பெருமையாகவும் இருக்கிறது என்ற போதும் இக்காரணஙகளையெல்லாம் கூறி அம்மையாரைப் போற்றாமல் புறந்தள்ளியதை சரி என்று ஏற்றுக் கொள்வது  பெண்ணினத்திற்கு இழைக்கும் துரோகமாகத்தான் இருக்க முடியும்..

இது ஒருபுறமிருக்க அப்பெண் விரும்பி அடியாருடன் செல்ல ஒப்பினாளா என்னும் வினா எழுவதைத் தடுக்க இயலாததாகிறது. தூய நீறுபொன் மேஎனியில் விளங்கத் துர்த்த வேடமும் தோன்ற வேதியராய் வந்த அடியவர், “மன்னுகாதல் உன்மனைவியை வேண்டி வந்த திங்கு” (பெரியபுராணம் 410) என்று சொன்னவுடன் உள்ளே சென்ற இயற்பகையார் அம்மையாரை அழைத்து வந்து “விதிமணக்குல மடந்தை! இன்றுனை இம்மெய்த் தவர்க்குநான் கொடுத்தனன்” (பெரியபுராணம் 411) என்று அடியாரிடம் கொடுத்து விடுகிறார். முதலில் அப்பெண் மனம் கலங்கிப் பின் தெளிவடைவதாகக் காட்டுகிறார் சேக்கிழார். முதலில் மனம் கலங்கிய அப்பெண் மனம் தெளிவது எக்காரணத்தினால்? அவர் இத்தகு செயலுக்குத் துணிவது எப்படி? என்று சிந்திக்க வேண்டுவது இங்கு அவசியமாகிறது.

இயற்பகையார் தொடக்கத்திலேயே “விதிமணக்குல மடந்தை” என்னும் சொல்லைப் பயன்படுத்தி அவளை எதிர்வினையாற்ற விடாது செய்து விடுகிறார்.

‘விதி மணம்’ என்பது முறைப்படி செய்து கொள்ளும் மணந்ததைச் சுட்டுகிறது. விதியோடு மணந்த கற்பறத்தின் முறைமை என்பது கணவனின் சொல்லைத் தட்டாது கேட்டல். இதனை இயற்பகையார் சொன்ன ‘விதிப்படி’ என்னும் இச்சொல் சொல்லாமல் சொல்லிவிடுகிறது.

அடுத்ததாகக் ‘குல மடந்தை என்னும் சொல்லை இயற்பகையார் இங்கு பயன் படுத்தியதின் நோக்கத்தை ஆராய்தல் தேவையாகிறது. குலப்பெண்கள் கணவனை அன்றி வேறு தெய்வத்தை வணங்கும் மரபு அக்காலத்தில் இல்லை. இதனைச் சுட்டிக் காட்ட இச்சொல் பயன்பட்டுள்ளதாகத் தெரிகிறது. “தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள்என்று திருவள்ளுவரும், “சோம குண்டம், சூரிய குண்டம் என்னும் இரு பொய்கைகள் உள்ளன. அவற்றில் மூழ்கி காமன் கோட்டம் சென்று காமனைத் தொழுதால் கணவரோடு இன்புற்று வாழ்வர்; நாமும் தொழுவோம் என்று கண்ணகியின் தோழி தேவந்தி கூறியவுடன் தீப்பட்டாற் போல துடித்தெழுந்து “பீடு அன்று என்று மறுத்த இளங்கோவடிகள் போற்றிய கண்ணகியும்,  “கணவற்கை தொழுது வாழ்வார் தேமலர்த் திருவொ டொப்பார் என்று கூறும் சீவக சிந்தாமணி கூறுவதும் இங்கு ஒப்பு நோக்கத் தக்கது.

ஆக இந்த இரு சொற்களும் அம்மையாரை இயற்பகையாரின் கட்டளைக்கு உடன்பட வைத்ததோ என்றும் சிந்திக்க வேண்டியுள்ளது.
இப்புராணத்தில் இரு இடங்களில் இயற்பகையாரின் துணைவியின் குரல் ஒலிக்கின்றது. முதலில் இயற்பகையார் “உன்னை இந்த அடியாருக்குக் கொடுத்து விட்டேன்” என்று கூறியவுடன் ஒலிக்கிறது.
“இன்று நீரெனக்கருள் செய்ததிதுவேல் என்னுயிர்க் கொடுநாத!நீர் உரைத்த                                                     
தொன்றை நான்செயும் அத்தனை யல்லால் உரிமை வேறுள தோஎனக்(கு)” (பெரியபுராணம் 412)

என்னும் இம்மொழி உரிமையற்ற ஓர் அடிமையின் குரலாக ஒலிக்கிறது. ஏனென்றால் பெரும்பாலும் அடிமைகளே உரிமைகளைப் பற்றி பேசக் கடமைப் பட்டவர்களாக இருப்பர். ‘கடமை வேறுளதோ’ என்று கேட்டிருந்தால் அம்மையார் இச்செயலை மனமுவந்து செய்வதாகக் கொள்ளலாம். இங்கு அம்மையார் பயன்படுத்தியுள்ள ‘உரிமை வேறுளதோ’ என்னும் சொல் அவர் அடிமையாக நடத்தப் பட்டாரோ என்று சிந்திக்க வைக்கிறது.

அடியவர் கழிபெரும் காதலுடன் அம்மையாரைத் தனியிடம் அழைத்துச் செல்கிறார். உடன் இயற்பகையார் காவலாக வருகிறார். அப்போது “எம் குலக்கொடியை விட்டுச் செல்” என்று உற்றாரும் உறவினரும் அடியவரை நோக்கிச் சூழ்ந்து கொள்கின்றனர். அடியவர் அச்சம் கொண்டவராக அம்மையாரைப் பார்க்கின்றார். இத்தருணத்தில், “இறைவனே அஞ்ச வேண்டாம்; இயற்பகை வெல்லும்” (பெரியபுராணம் 419) என்று அடியவரை நோக்கிக் கூறுவதாக அம்மையாரின் குரல் மறுமுறை ஒலிக்கின்றது. இச்சொல்லாடல் இயற்பகையார் இறைவனால் நடத்தப் படும் சோதனையில் வெற்றி பெறுவார் என்னும் நம்பிக்கையைக் கூறுவதாக ஒலிப்பதைக் காணலாம்.

இங்கு இறையடியாருக்கு நம்பிக்கையை ஊட்டும் அம்மையார் மனமுவந்து இத்தொண்டினைச் செய்ததாகவே தெரிகிறது. நமக்கு எழுகின்ற வினாவெல்லாம் அம்மையார் தொண்டு செய்தாரா? உவந்து செய்தாரா? கணவரின் கட்டளைக்காக இணங்கினாரா? என்பதையெல்லாம் கடந்தது.

கணவனின் சொல்லைத் தட்ட முடியாமையினாலோ அல்லது உண்மையிலேயே இறைவனுக்குத் தொண்டாற்றும் நோக்கிலோ அம்மையார் மறுப்பேதும் சொல்லாமல் அடியாருக்குத் தம்மை ஈய நினைத்தமை கற்புடைய பெண்களால் கனவிலும் எண்ணிப் பார்க்க முடியாதது. கற்புக் கொள்கை மேலோங்கி இருந்த அக்காலத்தில் தம்மைப் பற்றியோ, தம்மை உலகம் போற்றுமா தூற்றுமா என்பதைப் பற்றியெல்லாம் சற்றும் சிந்திக்கவில்லை. அப்படிப் பட்ட அம்மையாரைத் தம்பிரான் தோழரும் நம்பியாண்டார் நம்பியும் தெய்வச் சேக்கிழார் பெருமானும் ஏன் போற்றவில்லை என்பதே இங்கு எழும் ஒரே வினா. அவரது பெயரைக்கூட இருட்டடைப்பு செய்தது ஏன்?

குங்கிலியத் தொண்டு செய்தவர், அடியார்களின் துணிகளை வெளுத்துக் கொடுத்தவர், திருவோடு செய்து கொடுத்தவர், மலர் பறித்து தாமம் கண்ணி கட்டிக் கொடுதவர், உருத்திர பசுபதி மந்திரத்தை உச்சரித்தவர், சந்தனம் அரைத்துக் கொடுத்தவர் என்று அறுபது அடியார்களின் சிறப்பை எடுத்துக் கூறும் சேக்கிழார் பெருமானின் பார்வையில் இந்த அம்மையாரின் தொண்டு தூய்மை நிறைந்ததாகத் தெரியாமல் போனதற்கு என்ன காரணம். பெண் என்னும் ஒரே காரணமாகத்தான் இருக்க இயலும்.  

இங்கு தெய்வச் சேக்கிழாரை மட்டும் குறை கூறுவது பொருந்தாது. சேக்கிழார் பெருமானுக்கு வழிகாட்டியாக இருந்த நூல் சுந்தரமூர்த்தி நாயனாரின் திருத்தொண்டத் தொகை. ஆக இந்த அம்மையாரைப் புறந்தள்ளியதில் முதன்மையானவர் சுந்தரமூர்த்தி நாயனாரே.  வழி வழியாக பின்னர் வந்த சேக்கிழாரும் ஆணியச் சிந்தனை மேலோங்கியதால் இந்த அம்மையாரைக் கண்டு கொள்ளாது போயிருக்கலாம்.

நின்ற சீர் நெடுமாறனின் துணைவியாக வாழ்ந்த மங்கையர்க் கரசியாருக்குப் பாடியருளியதைப் போலவோ சுந்தரரைப் பயந்த இசைஞானியாரைப் பாடியதைப் போலவோ ஓரிரு பாடல்களையாவது பாடி அடியார்களுள் ஒருவராக இந்த அம்மையாரையும் சேர்த்திருக்கலாமே என்னும் வினா நியாயமானது என்பதை இப்புராணத்தை நுணுகி ஆராய்பவர் உணர்வர்.

(இக்கட்டுரை முக்கியமாக இச்சிந்தனை கருத்தரங்குக்கு வருகை புரிந்த பேராசிரியர்கள் பலராலும் பாராட்டப் பெற்றது. இதனை விரிவாக எழுதிப் பதிவு செய்யும்படி அனைவரும் கேட்டுக் கொண்டனர்)

செவ்வாய், 11 மார்ச், 2014

இணையத்தில் உலாவரும் திருநங்கைகள்

மூன்றாம் பாலான திருநங்கைகள் வெளியுலகில் சுதந்திரமாக உலாவருவதற்கு இன்று வரையும் பல இடையூறுகள் இருந்தே வருகின்றன. அதற்குக் காரணம் வெளித்தோற்றத்தால் அவர்கள் அடையாளப் படுத்தப் படுவதால். ஆனால் இணைய தளங்களில் இவர்கள் சுதந்திரமாகவும் சுயமரியாதையுடனும் உலா வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதன் காரணமாகப் பலர் இணையத்தின் வாயிலாகத் தம் எழுத்தாளுமைகளைக் காட்டி வருகின்றனர் என்ற போதும் எண்ணிக்கையின் அளவில் மிகக் குறைவாக உள்ளனர். ஆனாலும் இந்த குறைந்த விழுக்காட்டினர்  தம் சுயத்தை வெளிக் காட்டிக் கொண்டு தம் இனத்திற்கு மட்டுமல்லாமல் இச்சமுதாயத்திற்கும் நலன் நினைக்கும் உள்ளத்தினராக உள்ளனர்.

திருநங்கையருக்கும் மங்கையருக்கு உள்ள அத்தனை ஆசைகளும் ஏக்கங்களும் உள்ளன என்பதையும் கூடுதலாகச் சமுதாயம் குறித்த பொறுப்புகளும் அக்கறையும் இருக்கின்றன. என்பதையும் இந்தச் சமுதாயம் புரிந்து கொள்ளும் வகையில் இணையத்தில் தம் எழுத்துகளைப் பொறித்து வருகின்றனர். அவர்களுள் ப்ரியா பாபு, கல்கி சுப்ரமணியம், ஆயிஷா ஃபாரூக் என்னும் மூவரின் எழுத்துகளில் பொதிந்துள்ள தன் இனம், பெண்ணினம், சமுதாயம் பற்றிய கருத்துகளைச் சுட்டிக் காட்டுகிறது இக்கட்டுரை.

“என் எழுத்துக்களை வடிவமைக்கிறாய்
என் சொற்களை அச்சுக் கோர்க்கிறாய்
என் நினைவுகளில் நிறை நிற்கிறாய்
என் கனவுகளில் மலர்கிறாய்
இன்னும் இன்னும் எத்தனையோ
விதைக்கிறாய் என்னுள் – நான் அறியாமலே
கணங்களின் அவஸ்தையைச் சொல்லிவிட துடிக்குது
மனதுடன் மெல்லப் புலர்கிறது புதுக்காலை”

என்று காலை புலர்வதை இவ்வளவு மென்மையும் அழகியலும் நிரம்பி வழிகின்ற கவிதையைப் புனையும் இவர் இணையத்தின் ஈடு இணையற்ற சமூக சேவகியாக உலாவரும் திருநங்கை ப்ரியா பாபு. “அன்பின் வழியது உயிர்நிலை” (குறள் 80) என்ற வள்ளுவனின் குறளுக்கு உருவம் தந்துள்ள இவர் திருநங்கைகளோடு அன்புறவு கொண்டு தம் வாழ்நாளைச் சேவை நாளாக ஆக்கிக் கொண்டவர். காதலனைப் பற்றி,

“தனித்த என் இரவுகளின் கனவுகளில் விடிந்துக்கொண்டிருக்கிறாய்
இன்னுமும்… நீ….”

என்று கூறும் இவர், ஏதோ ஒரு காரணம் கருதி பிரிந்த பின் அந்த காதலனின் வருகைக்காகக் காத்திருக்கும் மனம் படும் பாட்டை,

“பிரிய முடியாத பிரிவிற்கு உடன்பட்டு
 (பிரியும் போது)துன்பத்தால் கலங்குவதையும் 
விட்டு பிரிந்த பின் மீண்டும் மீண்டும்
வரவை எண்ணி/ உயிரோடிருந்தும்
வாழாதவர்”
என்று வலி மிகுந்த எழுத்துகளில் வடிக்கிறார். இவர்

கனவுகளை சுமந்து செல்கிறது என் இரவு 
நீர்த்துப் போகா நினைவுகளுடன் 
நிழல்களையும் தாண்டிய நம்பிக்கையோடு"

என்று ஒவ்வொரு கவிதையின் இறுதியிலும் தம் நினைவில் நிழலாடும் நம்பிக்கையையையும் விதைத்து வருகிறார். திருநங்கைகளுக்கான பல சமூக சேவைகளுக்காகத் தம்மை அர்ப்பனித்துக் கொண்ட ப்ரியா பாபு எழுதிய திருநங்கைகளின் வேதனைகளைத் தாங்கிய, அதே வேளையில் அவர்களின் விடியலுக்கான வெளிச்சத்தைப் பாய்ச்சும் நூலே மூன்றாம் பாலின் முகம். வலிகளை மட்டுமே அனுபவித்த இந்தத் திருநங்கை தம் மனத்தில் சுமந்த சின்னச் சின்ன ஆசைகளை,

”அத்தனையும் அத்தனையுமாய் ஆகிவிட ஆசைத்தான்
அரக்கை சட்டையாய் 
 உறவாடும் உள்ளுடையாய்
குளித்த தலையை கோதிடும் கரங்களாய்
கையோடு கலந்திருக்கும் கெடிகாரமாய் ....
மடியில் தலை சாய்த்த மழலையாய்/ பகிர்தலுக்குரிய தோழியாய்
பூத்த கண்களுடன் காதலியாய்/ எல்லாமாகி விட்ட மனைவியாய் ”

என்று பட்டியலிடுகிறார். வலிகளை சுமந்த விழிகளில்  கனவுகளை மிச்சம் இருத்தி எழுத்துக்களில் எண்ணங்களை வடித்து நிஜங்களின் நம்பிக்கையோடு கனவுகளைக் கண்டு கொண்டிருக்கிறார்.

இவரைப் போலவே திருநங்கையர்களுக்கான இட ஒதுக்கீடு, உதவித்தொகை என்ற பல நிலைகளில் அவர்களுக்காகப் போராடும் வீராங்கனை திருநங்கை கல்கி சுபரமணியம்,
“குறி அறுத்து 
குருதியில் நனைந்து
மரணம் கடந்து  
மங்கையானேன்”

என்று தான் வலிசுமந்து பெண்சுமந்ததைக் (திருநங்கையானதை) கூறும் கல்கி சுபரமணியத்தின் உடலும், மனமும் அனுபவித்த வலியை எழுத்தில் வடிக்கிறார். இரத்தம் வடியும் இவ்வெழுத்துகளைப் படிக்கும் போது வேதனையை அனுபவிக்காத மனம் மனித மனமாக இருக்க முடியாது. சிகிச்சை மூலம் என்னதான் பெண்ணானாலும் திருநங்கையருக்குக் கரு சுமக்கும் அறை இல்லை; ஆகையால் பெண் என்னும் தகுதி இல்லை என்று ஏளனம் செய்யும் ஆண்கள் உலகைப் பார்த்து,

“நீங்கள் கழிக்கும்
எச்சங்களை, 
சாதி வெறியும் மதவெறியும் 
கொண்டு நீங்கள் 
விருட்சமாக்க/ விதைபோட்ட
 உங்கள் மிச்சங்களை/ சிசுவாக சுமக்கிற 
கருவறை எனக்கு வேண்டாம்”

என்று கூறும் துணிச்சல் மட்டுமல்ல, இழிதொழிலான இரவுத்தொழிலைச் செய்பவர்களைப் பார்த்து,

“எழுந்திரடி
 புரட்டிப் போடு அவனை
உன்னை அம்மணமாக்கும்
அவமானங்களின் பிரதிநிதி அவன்
அவன் கழுத்தில் 
கால் வைத்து
உன் காளி முகம் காட்டு”

என்று வீர ஆவேசம் ஊட்டி அவர்களை நல்வழிப் படுத்தும் விவேகமும் நிறைந்தவர் இந்தத் திருநங்கை.  

“இப்போதெல்லாம்
 வடுக்களை நான் 
தொடும்போது/ ஐயோ வயிறு கிழிந்து
யோனி பிளந்து 
இறந்து போன 
என் ஈழத்துச் சகோதரியின்
நினைவுகள் நெருப்பாய் தகிக்கிறதே”

என்று ஈழச் சகோதரிகளை வெறி பிடித்த சிங்களவர்கள் கற்பழித்துச் சின்னா பின்னமாக்கியதை நினைத்து கவிதையால் கண்ணீர் சிந்துகிறார். காதலுக்காகத் தன் காதலி திவ்யாவுக்காகத் தன் உயிரைத் தியாகம் செய்த இளவரசனுக்குப் பாடும் இரங்கலில், 

“இன்னொரு பிறவியென்று
னக்கு உண்டெனில் 
என்னிடம் வந்து விடு 
மாறாக்காதலும்
மனம் ஒத்த வாழ்வும் 
போராடும் குணமும் 
பூப்போன்ற மனமும் 
நான் உனக்குத் தருகிறேன்” 

என்று ஒரு காதலியாக உருவெடுக்கிறார். 

“மூன்றாம் பாலினமான நாங்களும் எழுத்துலகில் சாதிக்க முடியும் என்பதைச் சமூகத்திற்குத் தெளிவு படுத்தத்தான் என் எழுத்துக்களைப் பெரிதும் பயன் படுத்துகிறேன்” என்று கூறும் ஆயிஷா ஃபாருக் என்று அழைக்கப் பெறும் திருநங்கை ரம்யா முகப்புத்தகம் தவிர தமக்கென்று தனித்தளம் உருவாக்கி எழுதி வருகிறார். கவிதைகள் கட்டுரைகள் மூலமாக அபாரமானத் தம் எழுத்து ஆளுமைகளை வெளிப்படுத்துகிறார். சமுதாயச் சிந்தனைக் கவிதைகளைப் படைக்கும் இவரும் அவற்றுடன் திருநங்கைகளின் வேதனைகளையும் விருப்பங்களையும் வெகு நாகரிகமாக வெளிப்படுத்துகிறார்.

திருநங்கைகள் வாழ்வில் படும் துன்பங்களை,
“பெற்றோர் நிராகரிப்பு 
சுற்றம் ஒதுக்கல்/ காதல் மயக்கம்
 காமப் பசி/ வாழ்க்கை ஏக்கம் 
எதிர்காலப் பயம் 
இப்படி 
சுற்றிலும் சூழ்நிலைப் பின்னடைவுகள் 
ஆக மன சோர்வுகள் 
வாழ்கையில் பயம்
வாழ்ந்தே ஆகவேண்டும் 
வாழ்கிறோம்/ இனியும் வாழ்வோம்  
வாழ்ந்தே ஆவோம் துணிவோடு எதிர்கொண்டு 
நாம் திருநங்கைகள்”
என்று கூறி தம் இலட்சியப் பயணத்தைத் தொடர்கிறார். காதலுக்காக ஏக்கம் கொண்டு, துய்த்துப் பின் தூ என்று உமிழும் ஆண்களால் தம் உயிரை உமிழ்ந்த திருநங்கைகள் பலர். இப்படி ஆண்களை நம்பி ஏமாந்ததை,  

“நம்மை ஊர் ஏற்காது உறவும் ஏற்காது
நீ கருவுறும் பூவும் அல்ல
உன்னை மணக்க நான் மகான் அல்ல
அனைத்தும் இழந்த மங்கை 
உயிரும் துறந்தாள் திருநங்கை யாதலால்”

என்று சொல்லிப் புலம்புகிறார். தாய் வேறு தாய்மை வேறு. தாயனவர்கள் எல்லோரும் தாய்மையடைவதில்லை. தாய்மை உள்ள அனைவரும் தாயாகிவிடுகின்றனர்.. தாயாகாது தாய்மை அடைந்த இந்தத் திருநங்கை ஏதோ ஒரு குழந்தைக்காகப் பாடும் தாலாட்டு பின்வருவது.

மொடமா பொறந்தாலும் மனந்தான் திரிந்தாலும்
தான் பெற்ற பிள்ளை தனது ஆகாதோ
பால் மாறி பிறந்து விட்டோம் நம் மீது தப்பென்ன
ஊருசனம் பேச்சை கேட்டு ஒதுக்குவதேனோ
 நம் பொறப்பு ஒசந்ததடி நீ உறங்கு என்மகளே
பெண்ணான ஆண்மகளே”

ஏழைகளுக்கு உதவாமல் இறைவனுக்குச் செலவு செய்யும் ஆன்மிகத்தை,

“நீ ஏற்றிய மெழுகுவர்த்தியின்
 ஒளியை தேவன் ரசிக்கவில்லை
ஒளியிழந்த குடிசைகளுக்கு
நீ ஒளி ஏற்றாததால்
நீ அபிஷேகிக்கும் பாலை 
தெய்வம் விரும்பவில்லை 
பாலில்லாமல் அழும் குழந்தைகளுக்கு
 நீ கொடுக்காததால்”

என்று என்றுமே ஒரு குழந்தைக்குத் தாயாக முடியாத இவர், குழந்தைக்காகப் பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து பேசுகிறார்.  

            அர்த்தநாரியாகச் சிவனை வழிபடும் மானுடம் திருநங்கைகளையும் திருநம்பிகளையும் மதிக்காது துன்புறுத்துவது வேதனையிலும் வேதனை. காக்கை குருவி எங்கள் சாதி என்று அஃறிணை பாலையும் உயர்திணைப் பாலுடன் சேர்த்துப் பாடிச்சென்றான் பாரதி. ஞானமும் நல்லறமும் நிரம்பி வழியும் சதையும் உணர்வுமாக இருக்கும் இவ்வுயர்திணையின் மூன்றாம் பாலை மதிப்பதும் இவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதும் எக்காலமோ? 

பார்க்க முக நூல் பக்கங்கள்
ப்ரியா பாபு
https://www.facebook.com/priyababu.priyababau
கல்கி சுப்ரமணியன்
https://www.facebook.com/kalki.subramaniam
ஆயிஷா ஃபாருக்  
https://www.facebook.com/Ayeshafarook

இந்தக் கட்டுரை வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரியும் தமிழ்நாடு உயர்கல்வி மன்றமும் இணைந்து நடத்திய “உலகப் படைப்பிலக்கியங்களில் பெண்களின் பங்கு” என்னும் தலைப்பில் அமைந்த மாநிலக் கருத்தர்ங்குக்கு வழங்கப் பட்டது.