நீங்க வெயிட் பார்ட்டியா? வெயிட்டைக் குறைக்க நாங்க இருக்கிறோம் , கவலையை விடுங்கன்னு பல நிறுவங்கள் போட்டி போட்டுக்கொண்டு கிளம்பி விட்டன। அவற்றின் குறி கண்டிப்பாக உங்கள் உடல் மீது இல்லை। வேறு ஒன்றின் மீதுதான்।இந்த நிறுவனங்கள் எந்த வெயிட்டைக் குறைக்கப் போகின்றன என்றால் நிச்சயமாக உங்கள் உடல் எடையை இல்லைங்க। அப்படியெல்லாம் தப்புக் கணக்குப் போட்டா உங்களைக் கணக்கே போடத்தெரியாதவங்கன்னு, ஏற்கனவே அறைத்த மொளகா சட்டினியைக் கூட உங்க தலையில் அறைக்க ஆரம்பிச்சு அதற்கு அறைவைக் கூலியாக உங்க பர்சோட எடையைக் குறைத்து காண்பித்து விடும் இந்நிறுவனங்கள்। அதனால் ஜாக்கிறதையாக இருக்க வேண்டியது உங்க கடமை.முக்கியமாக சாலைகளில் பயணம் செய்யும் போது ரெண்டு பக்கமும் பெரிய பெரிய போர்டுகளில் உள்ள விளம்பரங்களைப் பார்த்தால் கண்டிப்பாகக் கண்களை இறுக்கமாக மூடிக்கொள்ளுங்கள். அல்லது ஒதுங்கி போய்விடுங்கள். இப்போது நூதனமாக ஆட்டோ, வேன், முக்கியமாக பள்ளிக்கூட பஸ்கள் எல்லாம் இந்த சமுதாயக் கடமையில் களம் இறங்கி விட்டன.எங்கேயாவது உங்கள் கண்கள் அவற்றைப் பார்க்கப்போய் நீங்க இளைக்கிறீர்களோ இல்லையோ, பாவம் உங்க மணிபர்ஸ்.அதுக்கு உடல் இளைப்பு நோய் வந்துடும்.
இந்தியத் துணைக் கண்டத்தில் ‘வாளொடு முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி’ என்று அடிக்கடி இலக்கிய வாதிகள் கூறக்கேட்டிருப்போம்। வாளோடு பிறக்க முடியுமா? அந்த அன்னையின் வயிறு என்ன ஆவது? பத்து மாதமும் வாளும் வளர்ந்ததா? அப்படியே இருந்ததா? வாலோடு வேண்டுமானால் பிறந்திருக்கலாம்। குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்।அப்பொழுது ஏனிந்த பில்டப் கொடுத்தார்கள் என்று கேள்விகளெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும் மாற்றாரின் தலைகளை அறுப்பதுடன், நம் மண்ணில் விளைந்த தழைகளை அறுத்து உண்டு நோயின்றி வாழவும் வாளொடு பிறந்தார்கள் என்று வைத்துக் கொள்வோம்।
அவர்கள் வீரம் மட்டுமின்றி உடலோம்பும் விவேகமும் நிறைந்தவர்கள் என்பதை தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன। இலக்கியத்தில் இருக்கின்ற நல்ல விஷயங்களை, எளிமையாகப் புரிந்து கொள்ள வேண்டிய செய்திகளை எல்லாம் எடுத்துக் கூற அவ்வப்போது ஆசைப்படுவார்கள் நம் தமிழ் எழுத்தாளர்கள்। ஆனால் ஏன் என்றே தெரியவில்லை தமிழ் ஏடுகளில் இருக்கின்ற, தமிழர்கள் பயன்படுத்திய எளிமையான மருத்துவ முறைகளை எடுத்துக் கூற அவர்கள் விரும்பவில்லை. இதெல்லாம் நமக்கு ஒத்து வராது ஆளை விடுங்கன்னு சொல்லிட்டு கடைவிரிச்சு இருக்கிற எம்.டி.,எம்.எஸ்ன்னு நாம தேட ஆரம்பித்து விடுகிறோம்.
என்று பாடிப் பரவசப் படுவான் பாரதி. நம் முன்னோர்கள் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தனர் என்று பாரதி கூறுவது சற்று மிகையாகத் தெரிந்தாலும், வாழ்ந்த காலத்தில் நோய் நொடியின்றி வாழ்ந்து முடிந்தனர் என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய உண்மை. நோய் என்பது உடல்நோய், மன நோய் இரண்டையும் குறிக்கும்; நொடிதல் என்பது நோயினால் நிலை குலைந்து போதல். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். செல்வம் குறைந்து இருந்தாலும், வறுமை நிறைந்து இருந்தாலும் நாம் நிலை குலைந்து போக மாட்டோம். ஏனென்றால் செல்வம் என்பது சிந்தையின் நிறைவுதான். ஆனால் நோய்தான் நம்மை நொய்ந்து போக வைக்கும்.
நம் முன்னோர்கள் உணவுக்குள் பொதிந்திருந்த நலவாழ்வின் சூட்சுமத்தை அறிந்து வைத்திருந்தார்கள். வருமுன் காக்கும் நோய் தடுப்பு மருந்துகளும், நோய்க்கான மருந்துகளும் அவர்கள் உண்ட உணவிலேயே இருந்தது. அவர்களின் ஆரோக்கியமான வாழ்வுக்கு அவர்கள் உணவை மருந்தாக உண்டது முக்கிய காரணம்.
ல்இன்று?!!!... உணவுக்குப் போகும் முன்பு மெக்கானிக் டூல் கிட்டை திறப்பதைப் போல ஒரு பெரிய பையைக் கையில் எடுப்பார்கள்। அந்தப் பையில் இருந்து பல கலர்களில் பத்து பதினைந்து மாத்திரைகளை உள்ளே தள்ளிய பின்தான் உணவை உள்ளே தள்ளுவார்கள்। எத்தனை மாத்திரைகளை சாப்பிட்டாலும் உணவு விஷயத்தில் மட்டும் எந்தக் கட்டுப்பாடுகளையும் இவர்களால் கடைபிடிக்க முடியாது। கேட்டா சாப்பாட்டு விஷயத்தில் மட்டும் நான் கொஞ்சம் வீக் என்பார்கள் இந்த போஜனப் பிரியர்கள்। ஞானிகள் என்று கூறிக்கொள்கிற ஆன்மீக வாதிகளும் இதற்கு விதி விலக்கல்ல। இவர்கள் ஞானக்கிடங்கு என்று தாங்கள் வளர்க்கின்ற தொப்பைக்கு ஒரு சப்பைக்கட்டும் சொல்லிக் கொள்வார்கள்।
நகைச்சுவை நடிகர் என். எஸ் கிருஷ்ணன் கனவு கண்டது போல, வீட்டில் இருந்து (டெலி·போன்) பட்டனைத் தட்டினால் பிட்ஸாவும் சிக்கன் சிக்சிடி·பைவும் வீடு தேடி வரும் வேக உலகமாக மாறிவிட்டது இன்று. இதுதான் சரியான சமயம் என்று காத்திருக்கும் நோய்களும் தன் வேகத்தைக் கூட்டிக்கொண்டு கதவைத் தட்டாமலேயே உடல் ஆகிய வீட்டின் உள்ளே நுழைத்து விடுகிறது. உணவே மருந்து என்ற நிலை மாறி உணவாலேயே மருந்து தேடும் நிலை அதிகரித்து விட்டது.
ஒரு காலத்தில் மக்கள் ஊருக்குள் உலவி வந்த நிலை மாறி இன்று உலகம் முழுவதிலும் சர்வசாதாரணமாக உலவத் தொடங்கி விட்டனர். தொலைத்தொடர்பு புரட்சியும் அயல் நாட்டுக் கலாச்சாரத்தை நம் நாட்டில் குடி புகுத்திவிட்டது. அதில் முதலிடம் பிடிப்பது உணவுக்கலாச்சாரம். அண்டை மாநில உணவுகள் மட்டுமன்றி அயல் நாட்டு உணவுப் பழக்கமும் நம்மைத் தொற்றிக்கொண்டது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஹோட்டலுக்குச் சென்றால் பூரி கிழங்கு சாப்பிட்டால் பெரிய விஷயமாக இருந்தது. இப்போது அமெரிகன் மக்ரொணி, இத்தாலியன் பாஸ்தா, சைனிஸ் ஸ்க்விட், மெக்சிகன் நாச்சோஸ், ஆஸ்திரேலியன் காங்க்ரு மீட் என்று அகில உலக உணவையும் உண்பது சின்ன விஷயமாகி விட்டது. ஹோட்டலுக்குப் போய் இட்லி, தோசை என்று கேட்டால் வந்துட்டான்யா நாட்டுப்புறத்தான் என்பது போல ஏற இறங்க பார்ப்பதில் நாம் கூனி குறுகி போக வேண்டியுள்ளது. இந்த உணவு வகைகளை அறியாதவன் இந்த உலகில் வாழவே தகுதி இல்லாதவன் என்ற எண்ணமும் இன்றைய இளைய தலைமுறைகளிடம் நிலவி வருகிறது.
இதனால் வந்ததுதான் ஒபிசிடி(Obesity) என்ற உடல் பருமன் நோய்। நான்கு அடி எடுத்து வைக்கும் போதே வாயாலும் மூக்காலும் விடுகின்ற பெருமூச்சால் ஒரு காற்றாலையையே உருவாக்கி விடுவார்கள். தொப்பையைக் குறைக்க பெல்ட் போடுவார்கள். ஜிம்முக்குப் போவார்கள். அங்கு மெஷின்கள் இவர்களின் உடலைக் கடைசல் பிடிக்கும்.
அந்த மெஷின் பெல்ட்டுக்குள் இவர்கள் சிக்கித் தவிப்பத்தைப் பார்க்கும் போது பாற்கடலை கடைந்த மந்திர மலை இப்படித்தான் இருந்திருக்குமோ என்று தான் எண்ணத்தோன்றும்। உடல் பருமன் கரைகிறதோ இல்லையோ பர்ஸின் பருமன் கரைந்து விடும்.
“வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன
இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை - மங்காத
சீரகத்தைத் தந்தீரேல் தேடேன் பெருங்காயம்
ஏர கத்துச் செட்டியா ரே”
ஒன்றும் புரியவில்லையா? ஒரு சில சொற்களுக்கு மட்டும் பொருள் கூறிவிட்டால் நோய் எது, மருந்து எது என்று உங்களுக்கு எளிதாகப் புரிந்து விடும். இப்பாடலில் உள்ள எல்லாச் சொற்களும் இரு பொருள் தருவன.
v காயம் என்றால் உடல் என்பது எல்லார்க்கும் தெரிந்ததே. வெங்காயம் என்பது நீர் நிறைந்த (குண்டான) உடலையும், மருத்துவ குணம் நிறைந்த அன்றாடம் பயன்படுத்தும் வெங்காயத்தையும் குறிக்கும்.
v பெருங்காயம் என்பது பெரிய (பருத்த) உடல், சமையலுக்கு மணம் சேர்க்கப் பயன் படும் கூட்டுப்பெருங்காயம் என்ற இரு பொருளைக் குறிக்கும்.
v இச்சரக்கு என்பது நோய் சுமந்த உடலையும், (அந்தச் சரக்கு இல்லங்க) இப்பாடலில் கூறப்பட்டுள்ள சுக்கு, வெந்தயம், சீரகம் என்ற பல சரக்குப் பொருளையும் குறிக்கும்.
v சீரகம் என்பது நோயற்ற சீரான உடலையும், அஜீரணம் இன்றி உணவைச் செரிக்க வைக்கும் பலசரக்குப் பொருளையும் குறிக்கும்.
v வெங்காயம், பெருங்காயம், இச்சரக்கு என்ற சொற்கள் எல்லாமே உடல் பருமனைக் குறித்த சொற்கள்.
v ஏரகத்துச் செட்டியார் என்பது திருவேரகம் என்ற தலத்தில் எழுந்தருளியுள்ள முருகப் பெருமானைக் குறிக்கும். முருகனைச் செட்டியார் என்று கூறியது ஏன்? செட்டியார் என்பது சாதிப் பெயரா? முருகன் எண்ணெய் செக்கு வைத்திருந்தாரா? ஒரு செட் (இரண்டு) மனைவிகள் உடையதால் செட்டியாரா? என்று பல கேள்விகள் எழுவது தெரிகிறது. அக்காலத்தில் வணிகத்தில் பெயர் போனவர்கள் செட்டியார்கள். முருகன் யார்? சிவன் மகன். சிவன் யார்? வளையல், விறகு இவற்றையெல்லாம் விற்ற வியாபாரி. சிவன் வியாபாரி என்றால் அவன் மகன்? அப்போது முருகன் செட்டியார் தானே.
இப்போது மருந்துக்கு வருவோம். வெங்காயம் பார்க்கப் பளபளப்பாக இருக்கும் வெங்காயத்தின் உள்ளிருப்பது வெறும் நீர்தான். வெற்றுத் தோல் தான். உரிக்க உரிக்க உள்ளீடு ஒன்றும் இருக்காது. மண்டைச் சுரப்பு மாமனிதர் பெரியார் வெங்காயம் என்று அடிக்கடி கூறியது ஏன் என்று புரிந்து இருக்கும். அது போலத்தான் வெற்று நீர் நிறைந்த குண்டு உடல்.
வெங்காயமும் மருத்துவ குணம் நிறைந்தது தான். இப்பாடல் சுட்டுவது உருவத்தைதான். வெங்காயத்தில் இன்சுலின் ஊள்ளது. நீரிழிவு நோயாளிகளுக்கு மிகச்சிறந்த மருந்து வெங்காயம். உடலில் மூன்றில் இரண்டு பங்கு நீர் இருக்க வேண்டும். ஆனால் மூன்று பங்கும் நீர் என்றால் அது ஊளைச்சதை.
சுக்கு இளைத்துச் சுருங்கி காணப்பட்டாலும் மருத்துவ குணம் நிறைந்தது. சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை; சுப்ரமணியனுக்கு மிஞ்சிய தெய்வம் இல்லை என்பர். உடலைச் சுக்கு போல ஒல்லியாக வைத்துக் கொண்டால் எந்த மருந்தும் தேவையில்லையாம். சுக்கை உணவில் பயன் படுத்தி வந்தால் நோய்ப்பையாய் உடலைச் சுமக்கத் தேவை இருக்காது. “காலையில் இஞ்சி கடும்பகல் சுக்கு" என்ற பழம்பாடல் சுக்கு அன்றாடம் பயன்படுத்த வேண்டிய மருந்து என்பதைச் சுட்டும்.
வெந்தயம் தமிழ் மருந்துகளில் தனிச்சிறப்பு வாய்ந்தது. உடலை ஒல்லியாகவும், குளிர்ச்சியாகவும் வைக்கும் அருமையான, அன்றாட உணவில் பயன்படுத்தும் மருந்து மற்றும் உணவுப்பொருள். வயிற்றுக்குள் குளு குளு ஏசியை பொருத்தும் தன்மை இதற்கு உண்டு.
சீரகம் உண்ட உணவைச் செரிக்க வைக்கும் மருந்துப் பொருள்களில் முதலிடம் பிடிப்பது. ஹோட்டல்களில் பில்லுடன் பெருஞ்சீரகத்தை வைப்பார்கள். சிம்பாலிக்காக உண்ட உணவுடன் பில்லைப் பார்த்த அதிர்ச்சியும் ஜீரணம் ஆவதற்காக. அகம் என்றால் உள்ளுறுப்பு. குடல், போன்ற அக உறுப்புகளைச் சீராக வைப்பதால் இதற்கு சீரகம் என்று பெயர்.
பெருங்காயம் உணவுக்கு நல்ல மணத்தைத் தருவதுடன் சீரகத்தைப் போன்றே செரிமானத்துக்குப் பயன்படும் முக்கிய உணவுப் பொருள்। வாயுத்தொல்லைக்கு மிகச்சிறந்த நிவாரணி। சீரகம் இருந்தால் பெருங்காயம் தேவையில்லை। சீரான உடல் இருந்தால் போதும் பெருங்காயம் தேவையில்லை। (பெருங்காயம் - பருத்த உடல்)। ஒரு மருந்தால் நல்ல உடல் நிலையைப் பெற்றுவிட்டால் ஏன் அடுத்த மருந்தை நாடப்போகிறோம்? அதனால் தான் சீரகத்தைத் தந்தீரேல் தேடேன் பெருங்காயம் என்கிறார்।
இவர் மட்டுமல்ல இன்னொரு சித்தர் கூறுவதைப் பாருங்கள்.
” வெண்காயம் உண்டு மிளகுண்டு சுக்குண்டு
உண்காயம் ஏதுக்கடி - குதம்பாய்
உண்காயம் ஏதுக்கடி”
இங்கு, குதம்பைச் சித்தர் எதனையோ வேண்டாம் என்று கூற வந்தாலும், அதற்கு அவர் கூறும் காரணம், சுக்கும், மிளகும் இருக்க வேற எதுவும் தேவையில்லையாம் நன்காயத்திற்கு (நல்ல உடம்புக்கு).
இந்த நான்கு பலசரக்குப் பொருள்களுக்கும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. அவற்றைப் பற்றி பின்னர் வர இருக்கும் வாரங்களில் பார்க்கலாம்.
‘மீதூண் விரும்பேல்’ என்பார் ஒளவையார். எதிலும் அதிகம் என்பது ஆபத்திற்கு அருகில் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் வேதத்தின் தலைவனான ஐயன் திருவள்ளுவரும்,
“மாறுபாடு இல்லாத உண்டி மறுத்து உண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு”
என்பார். .
மாரல்: உடல் வெங்காயம் போன்று குண்டாக இல்லாமல் சுக்கு போல ஒல்லியாக, ஒடிசலாக, சிக்கென இருந்தால் ஆரோக்கியத்துக்கு ஆரோக்கியம்। அழகுக்கு அழகு। இந்த தந்திரம் அடங்கிய சுக்கு, மிளகு,வெந்தயம், சீரகம், பெருங்காயம் ஆகியவற்றை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்।அத்துடன் குறைந்த அளவு வீட்டை பெறுக்குதல், துடைத்தல் என்ற சிறு சிறு வேலைகளைச் செய்யுங்கள்..உண்பதை இன்னும் கொஞ்சம் வயிற்றில் இடம் உள்ளது என்று எண்ணும்போதே நிறுத்திக் கொள்ளுங்கள்.உடல் பருமனைப் புஸ்ஸென்று ஊதித் தள்ளி விடலாம் .
பானுமதி
ஆதிரா.
நன்றி குமுதம் ஹெல்த்।
அவர்கள் வீரம் மட்டுமின்றி உடலோம்பும் விவேகமும் நிறைந்தவர்கள் என்பதை தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன। இலக்கியத்தில் இருக்கின்ற நல்ல விஷயங்களை, எளிமையாகப் புரிந்து கொள்ள வேண்டிய செய்திகளை எல்லாம் எடுத்துக் கூற அவ்வப்போது ஆசைப்படுவார்கள் நம் தமிழ் எழுத்தாளர்கள்। ஆனால் ஏன் என்றே தெரியவில்லை தமிழ் ஏடுகளில் இருக்கின்ற, தமிழர்கள் பயன்படுத்திய எளிமையான மருத்துவ முறைகளை எடுத்துக் கூற அவர்கள் விரும்பவில்லை. இதெல்லாம் நமக்கு ஒத்து வராது ஆளை விடுங்கன்னு சொல்லிட்டு கடைவிரிச்சு இருக்கிற எம்.டி.,எம்.எஸ்ன்னு நாம தேட ஆரம்பித்து விடுகிறோம்.
“எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே - அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள்
வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே”
இருந்ததும் இந்நாடே - அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள்
வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே”
என்று பாடிப் பரவசப் படுவான் பாரதி. நம் முன்னோர்கள் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தனர் என்று பாரதி கூறுவது சற்று மிகையாகத் தெரிந்தாலும், வாழ்ந்த காலத்தில் நோய் நொடியின்றி வாழ்ந்து முடிந்தனர் என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய உண்மை. நோய் என்பது உடல்நோய், மன நோய் இரண்டையும் குறிக்கும்; நொடிதல் என்பது நோயினால் நிலை குலைந்து போதல். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். செல்வம் குறைந்து இருந்தாலும், வறுமை நிறைந்து இருந்தாலும் நாம் நிலை குலைந்து போக மாட்டோம். ஏனென்றால் செல்வம் என்பது சிந்தையின் நிறைவுதான். ஆனால் நோய்தான் நம்மை நொய்ந்து போக வைக்கும்.
நம் முன்னோர்கள் உணவுக்குள் பொதிந்திருந்த நலவாழ்வின் சூட்சுமத்தை அறிந்து வைத்திருந்தார்கள். வருமுன் காக்கும் நோய் தடுப்பு மருந்துகளும், நோய்க்கான மருந்துகளும் அவர்கள் உண்ட உணவிலேயே இருந்தது. அவர்களின் ஆரோக்கியமான வாழ்வுக்கு அவர்கள் உணவை மருந்தாக உண்டது முக்கிய காரணம்.
ல்இன்று?!!!... உணவுக்குப் போகும் முன்பு மெக்கானிக் டூல் கிட்டை திறப்பதைப் போல ஒரு பெரிய பையைக் கையில் எடுப்பார்கள்। அந்தப் பையில் இருந்து பல கலர்களில் பத்து பதினைந்து மாத்திரைகளை உள்ளே தள்ளிய பின்தான் உணவை உள்ளே தள்ளுவார்கள்। எத்தனை மாத்திரைகளை சாப்பிட்டாலும் உணவு விஷயத்தில் மட்டும் எந்தக் கட்டுப்பாடுகளையும் இவர்களால் கடைபிடிக்க முடியாது। கேட்டா சாப்பாட்டு விஷயத்தில் மட்டும் நான் கொஞ்சம் வீக் என்பார்கள் இந்த போஜனப் பிரியர்கள்। ஞானிகள் என்று கூறிக்கொள்கிற ஆன்மீக வாதிகளும் இதற்கு விதி விலக்கல்ல। இவர்கள் ஞானக்கிடங்கு என்று தாங்கள் வளர்க்கின்ற தொப்பைக்கு ஒரு சப்பைக்கட்டும் சொல்லிக் கொள்வார்கள்।
நகைச்சுவை நடிகர் என். எஸ் கிருஷ்ணன் கனவு கண்டது போல, வீட்டில் இருந்து (டெலி·போன்) பட்டனைத் தட்டினால் பிட்ஸாவும் சிக்கன் சிக்சிடி·பைவும் வீடு தேடி வரும் வேக உலகமாக மாறிவிட்டது இன்று. இதுதான் சரியான சமயம் என்று காத்திருக்கும் நோய்களும் தன் வேகத்தைக் கூட்டிக்கொண்டு கதவைத் தட்டாமலேயே உடல் ஆகிய வீட்டின் உள்ளே நுழைத்து விடுகிறது. உணவே மருந்து என்ற நிலை மாறி உணவாலேயே மருந்து தேடும் நிலை அதிகரித்து விட்டது.
ஒரு காலத்தில் மக்கள் ஊருக்குள் உலவி வந்த நிலை மாறி இன்று உலகம் முழுவதிலும் சர்வசாதாரணமாக உலவத் தொடங்கி விட்டனர். தொலைத்தொடர்பு புரட்சியும் அயல் நாட்டுக் கலாச்சாரத்தை நம் நாட்டில் குடி புகுத்திவிட்டது. அதில் முதலிடம் பிடிப்பது உணவுக்கலாச்சாரம். அண்டை மாநில உணவுகள் மட்டுமன்றி அயல் நாட்டு உணவுப் பழக்கமும் நம்மைத் தொற்றிக்கொண்டது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஹோட்டலுக்குச் சென்றால் பூரி கிழங்கு சாப்பிட்டால் பெரிய விஷயமாக இருந்தது. இப்போது அமெரிகன் மக்ரொணி, இத்தாலியன் பாஸ்தா, சைனிஸ் ஸ்க்விட், மெக்சிகன் நாச்சோஸ், ஆஸ்திரேலியன் காங்க்ரு மீட் என்று அகில உலக உணவையும் உண்பது சின்ன விஷயமாகி விட்டது. ஹோட்டலுக்குப் போய் இட்லி, தோசை என்று கேட்டால் வந்துட்டான்யா நாட்டுப்புறத்தான் என்பது போல ஏற இறங்க பார்ப்பதில் நாம் கூனி குறுகி போக வேண்டியுள்ளது. இந்த உணவு வகைகளை அறியாதவன் இந்த உலகில் வாழவே தகுதி இல்லாதவன் என்ற எண்ணமும் இன்றைய இளைய தலைமுறைகளிடம் நிலவி வருகிறது.
இதனால் வந்ததுதான் ஒபிசிடி(Obesity) என்ற உடல் பருமன் நோய்। நான்கு அடி எடுத்து வைக்கும் போதே வாயாலும் மூக்காலும் விடுகின்ற பெருமூச்சால் ஒரு காற்றாலையையே உருவாக்கி விடுவார்கள். தொப்பையைக் குறைக்க பெல்ட் போடுவார்கள். ஜிம்முக்குப் போவார்கள். அங்கு மெஷின்கள் இவர்களின் உடலைக் கடைசல் பிடிக்கும்.
பாவம்ங்க.. இவங்க.. எப்படியெல்லாம் கஷ்டப்படறாங்க தொப்பையைக் குறைக்க. இந்த பருத்த உடல் காரர்களுக்கு தமிழ் ஏட்டில் கூறப்பட்டுள்ள எளிய மருத்துவம் இதோ.
“வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன
இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை - மங்காத
சீரகத்தைத் தந்தீரேல் தேடேன் பெருங்காயம்
ஏர கத்துச் செட்டியா ரே”
ஒன்றும் புரியவில்லையா? ஒரு சில சொற்களுக்கு மட்டும் பொருள் கூறிவிட்டால் நோய் எது, மருந்து எது என்று உங்களுக்கு எளிதாகப் புரிந்து விடும். இப்பாடலில் உள்ள எல்லாச் சொற்களும் இரு பொருள் தருவன.
v காயம் என்றால் உடல் என்பது எல்லார்க்கும் தெரிந்ததே. வெங்காயம் என்பது நீர் நிறைந்த (குண்டான) உடலையும், மருத்துவ குணம் நிறைந்த அன்றாடம் பயன்படுத்தும் வெங்காயத்தையும் குறிக்கும்.
v பெருங்காயம் என்பது பெரிய (பருத்த) உடல், சமையலுக்கு மணம் சேர்க்கப் பயன் படும் கூட்டுப்பெருங்காயம் என்ற இரு பொருளைக் குறிக்கும்.
v இச்சரக்கு என்பது நோய் சுமந்த உடலையும், (அந்தச் சரக்கு இல்லங்க) இப்பாடலில் கூறப்பட்டுள்ள சுக்கு, வெந்தயம், சீரகம் என்ற பல சரக்குப் பொருளையும் குறிக்கும்.
v சீரகம் என்பது நோயற்ற சீரான உடலையும், அஜீரணம் இன்றி உணவைச் செரிக்க வைக்கும் பலசரக்குப் பொருளையும் குறிக்கும்.
v வெங்காயம், பெருங்காயம், இச்சரக்கு என்ற சொற்கள் எல்லாமே உடல் பருமனைக் குறித்த சொற்கள்.
v ஏரகத்துச் செட்டியார் என்பது திருவேரகம் என்ற தலத்தில் எழுந்தருளியுள்ள முருகப் பெருமானைக் குறிக்கும். முருகனைச் செட்டியார் என்று கூறியது ஏன்? செட்டியார் என்பது சாதிப் பெயரா? முருகன் எண்ணெய் செக்கு வைத்திருந்தாரா? ஒரு செட் (இரண்டு) மனைவிகள் உடையதால் செட்டியாரா? என்று பல கேள்விகள் எழுவது தெரிகிறது. அக்காலத்தில் வணிகத்தில் பெயர் போனவர்கள் செட்டியார்கள். முருகன் யார்? சிவன் மகன். சிவன் யார்? வளையல், விறகு இவற்றையெல்லாம் விற்ற வியாபாரி. சிவன் வியாபாரி என்றால் அவன் மகன்? அப்போது முருகன் செட்டியார் தானே.
இப்போது மருந்துக்கு வருவோம். வெங்காயம் பார்க்கப் பளபளப்பாக இருக்கும் வெங்காயத்தின் உள்ளிருப்பது வெறும் நீர்தான். வெற்றுத் தோல் தான். உரிக்க உரிக்க உள்ளீடு ஒன்றும் இருக்காது. மண்டைச் சுரப்பு மாமனிதர் பெரியார் வெங்காயம் என்று அடிக்கடி கூறியது ஏன் என்று புரிந்து இருக்கும். அது போலத்தான் வெற்று நீர் நிறைந்த குண்டு உடல்.
வெங்காயமும் மருத்துவ குணம் நிறைந்தது தான். இப்பாடல் சுட்டுவது உருவத்தைதான். வெங்காயத்தில் இன்சுலின் ஊள்ளது. நீரிழிவு நோயாளிகளுக்கு மிகச்சிறந்த மருந்து வெங்காயம். உடலில் மூன்றில் இரண்டு பங்கு நீர் இருக்க வேண்டும். ஆனால் மூன்று பங்கும் நீர் என்றால் அது ஊளைச்சதை.
சுக்கு இளைத்துச் சுருங்கி காணப்பட்டாலும் மருத்துவ குணம் நிறைந்தது. சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை; சுப்ரமணியனுக்கு மிஞ்சிய தெய்வம் இல்லை என்பர். உடலைச் சுக்கு போல ஒல்லியாக வைத்துக் கொண்டால் எந்த மருந்தும் தேவையில்லையாம். சுக்கை உணவில் பயன் படுத்தி வந்தால் நோய்ப்பையாய் உடலைச் சுமக்கத் தேவை இருக்காது. “காலையில் இஞ்சி கடும்பகல் சுக்கு" என்ற பழம்பாடல் சுக்கு அன்றாடம் பயன்படுத்த வேண்டிய மருந்து என்பதைச் சுட்டும்.
வெந்தயம் தமிழ் மருந்துகளில் தனிச்சிறப்பு வாய்ந்தது. உடலை ஒல்லியாகவும், குளிர்ச்சியாகவும் வைக்கும் அருமையான, அன்றாட உணவில் பயன்படுத்தும் மருந்து மற்றும் உணவுப்பொருள். வயிற்றுக்குள் குளு குளு ஏசியை பொருத்தும் தன்மை இதற்கு உண்டு.
சீரகம் உண்ட உணவைச் செரிக்க வைக்கும் மருந்துப் பொருள்களில் முதலிடம் பிடிப்பது. ஹோட்டல்களில் பில்லுடன் பெருஞ்சீரகத்தை வைப்பார்கள். சிம்பாலிக்காக உண்ட உணவுடன் பில்லைப் பார்த்த அதிர்ச்சியும் ஜீரணம் ஆவதற்காக. அகம் என்றால் உள்ளுறுப்பு. குடல், போன்ற அக உறுப்புகளைச் சீராக வைப்பதால் இதற்கு சீரகம் என்று பெயர்.
பெருங்காயம் உணவுக்கு நல்ல மணத்தைத் தருவதுடன் சீரகத்தைப் போன்றே செரிமானத்துக்குப் பயன்படும் முக்கிய உணவுப் பொருள்। வாயுத்தொல்லைக்கு மிகச்சிறந்த நிவாரணி। சீரகம் இருந்தால் பெருங்காயம் தேவையில்லை। சீரான உடல் இருந்தால் போதும் பெருங்காயம் தேவையில்லை। (பெருங்காயம் - பருத்த உடல்)। ஒரு மருந்தால் நல்ல உடல் நிலையைப் பெற்றுவிட்டால் ஏன் அடுத்த மருந்தை நாடப்போகிறோம்? அதனால் தான் சீரகத்தைத் தந்தீரேல் தேடேன் பெருங்காயம் என்கிறார்।
இவர் மட்டுமல்ல இன்னொரு சித்தர் கூறுவதைப் பாருங்கள்.
” வெண்காயம் உண்டு மிளகுண்டு சுக்குண்டு
உண்காயம் ஏதுக்கடி - குதம்பாய்
உண்காயம் ஏதுக்கடி”
இங்கு, குதம்பைச் சித்தர் எதனையோ வேண்டாம் என்று கூற வந்தாலும், அதற்கு அவர் கூறும் காரணம், சுக்கும், மிளகும் இருக்க வேற எதுவும் தேவையில்லையாம் நன்காயத்திற்கு (நல்ல உடம்புக்கு).
இந்த நான்கு பலசரக்குப் பொருள்களுக்கும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. அவற்றைப் பற்றி பின்னர் வர இருக்கும் வாரங்களில் பார்க்கலாம்.
‘மீதூண் விரும்பேல்’ என்பார் ஒளவையார். எதிலும் அதிகம் என்பது ஆபத்திற்கு அருகில் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் வேதத்தின் தலைவனான ஐயன் திருவள்ளுவரும்,
“மாறுபாடு இல்லாத உண்டி மறுத்து உண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு”
என்பார். .
மாரல்: உடல் வெங்காயம் போன்று குண்டாக இல்லாமல் சுக்கு போல ஒல்லியாக, ஒடிசலாக, சிக்கென இருந்தால் ஆரோக்கியத்துக்கு ஆரோக்கியம்। அழகுக்கு அழகு। இந்த தந்திரம் அடங்கிய சுக்கு, மிளகு,வெந்தயம், சீரகம், பெருங்காயம் ஆகியவற்றை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்।அத்துடன் குறைந்த அளவு வீட்டை பெறுக்குதல், துடைத்தல் என்ற சிறு சிறு வேலைகளைச் செய்யுங்கள்..உண்பதை இன்னும் கொஞ்சம் வயிற்றில் இடம் உள்ளது என்று எண்ணும்போதே நிறுத்திக் கொள்ளுங்கள்.உடல் பருமனைப் புஸ்ஸென்று ஊதித் தள்ளி விடலாம் .
பானுமதி
ஆதிரா.
நன்றி குமுதம் ஹெல்த்।
பயனுள்ள பதிவு. நன்றிகள்..
பதிலளிநீக்கு//வாளொடு முன் தோன்றிய மூத்த குடி//
பதிலளிநீக்குஇப்போது பெரும் வயிறொடு நடக்கும் மூத்த குடிகள் ஆகி விட்டனர்..
சுடச்சுட கருத்து சொன்ன பாரத்,
பதிலளிநீக்குமிக்க நன்றி. உங்க வலைத்தளம் அருமையாக உள்ளது.
//வாளொடு முன் தோன்றிய மூத்த குடி//
பதிலளிநீக்குஇப்போது பெரும் வயிறொடு நடக்கும் மூத்த குடிகள் ஆகி விட்டனர்//
ஹா ஹா ஹா... (வயிர வாளாக இருக்குமோ? (வயிறு + வாளோ) தூக்க முடியாமல்..
மறுபடியும் வந்து சிரிக்க வைத்தமைக்கு நன்றி.
மருந்தே உணவென கொள்வோர்க்கு, உணவிலேயே மருந்துள்ளதென எடுத்து காட்டி..
பதிலளிநீக்குவெங்காயம், சுக்கு, வெந்தயம், சீரகம், பெருங்காயம் இவற்றின் பெருமையை விளக்க நம் முன்னோர்கள் தமிழில் கோர்த்ததையும் அருமையாக எடுத்துக்காட்டி விட்டீர்கள்....
இந்த வலைப்பூச்சரத்தை மருத்துவ மலரால் அழகாக தொடுக்கிறிர்கள் ஆதிரா....
நன்றி... அருமையான பதிவு
பதிலளிநீக்குநான் ரொம்ப ஒல்லி...//அழகுக்கு அழகு//(என்ன பண்ணுறது இப்படி சொல்லி மனச தேத்திக்கவேண்டியது தான்)
பதிலளிநீக்குஅருமையான பதிவு. பதிவுலக மருத்துவ மலர் இந்த வலைப்பூ. தமிழ் வைத்தியம் தருகிறீர்கள். வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குமருத்துவ குணங்கள் உடைய வெங்காயம்,சுக்கு போன்றதோடு... கொஞ்சம் உடலுழைப்பும் வேண்டும் என்றும் சொல்லியிருக்கலாம். தினமும் கொஞ்சம் காலாற நடப்பது, குனிந்து நிமிர்ந்து வீட்டு வேலைகள் செய்வது..
நீங்கள் வெயிட்டான ஆளா? என்று கேள்வியோடு பதிவை துவக்கிப் பார்த்தேன். நன்றாக இருந்தது. மிளகு போல பதிவு விருவிரு என்று இருந்தது.
மனித எடைகுண்டு - நல்ல பதிவு..
"வாலோடு" முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி’ என்பது வேண்டுமானால் உண்மையாக இருக்கலாம். குரங்கிலிருந்து தானே பிறந்தோம்.
பதிலளிநீக்குநல்ல பதிவுக்கு நன்றி.
உடனுக்குடன் வந்து, படித்துக் கருத்துச் சொல்லும் அன்புக்கு மிக்க நன்றி பத்துசார். வெற்று விரல்களால் தொடுக்கும் மருத்துவ மாலைக்கு மணம் சேர்க்கும் மலர்கள் தாங்களே. தங்கள் பின்னூட்டத்தால் இந்த நாரும் மணம் பெறுகிற்து தங்கள் பாராட்டில். மீண்டும் நன்றி
பதிலளிநீக்குமுதன் முறையாக வந்துள்ளீர்கள் சுவாமி நாதன். வருக! வருக! தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சுவாமிநாதன். மீண்டும் மீண்டும் தங்கள் வருகையை எதிர்நோக்கி..
பதிலளிநீக்குஅன்பு ஹரிஷ்,
பதிலளிநீக்குநீங்க ஒல்லியா? குண்டாக என்ன செய்யலாம்னு அடுத்த பதிவு போட்டுடலாம். இப்ப சொன்னதுக்கு அப்படியே ஆப்போசிட்டா செய்யுங்க.. அவ்வளவுதானே..
முதல் முறை வருகைக்கும், முத்தான தங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி. அடுத்த பதிவு உங்களுக்காக.. வந்துடுங்க...
//மருத்துவ குணங்கள் உடைய வெங்காயம்,சுக்கு போன்றதோடு... கொஞ்சம் உடலுழைப்பும் வேண்டும் என்றும் சொல்லியிருக்கலாம். தினமும் கொஞ்சம் காலாற நடப்பது, குனிந்து நிமிர்ந்து வீட்டு வேலைகள் செய்வது..//
பதிலளிநீக்குஉடனே சொல்லிட்டோம்ல... நாங்க குரு சொல்ல தடடாத சிஷ்யையாக்கும்.
//நீங்கள் வெயிட்டான ஆளா? என்று கேள்வியோடு பதிவை துவக்கிப் பார்த்தேன். நன்றாக இருந்தது//
இதையும் தொடங்கி விட்டேன். சரியான்னு பார்த்து சொன்னா நல்லா இருக்கும்.
ஏதோ வந்தோமா? நல்லா இருக்குன்னு ஒரு பதிவு போட்டோமான்னு போகாம.. இது என்ன சும்மா குறை சொல்லிட்டு?
ஏதோ வந்தோமா? நல்லா இருக்குன்னு ஒரு பதிவு போட்டோமான்னு போகாம..இப்படி இருந்தா நல்லா இருக்கும் அப்படி இருந்தா நல்லா இருக்கும்னு சொல்ல ஒரு உண்மையான நட்பு இருக்கனும் RVS. இந்த உண்மையான நட்பைத் தந்த அந்த யானைக் கொம்மிக்குத்தான் நான் நன்றி சொல்லுவேன். நெஜமா இது அடிமனதின் நன்றி RVS.
ஒரு குறிப்பு: இப்பப்ப உங்களையெல்லாம் பார்த்துக் கொஞ்சம் லைவா எழுத கத்துக்கறேன். ஆனா இது எப்பவோ எழுதின கட்டுரை. இன்னும் கருத்துக்களை ஆவலோடு எதிர்நோக்கி.. அன்புடன்..ஆதிரா.
அன்புள்ள சிவகுமாரன்,
பதிலளிநீக்குபாரதியார் ஸ்பெல்லிங்க் மிஸ்டேக் பண்ணியிருப்பாரோ!! ஆமால்ல நம்ம மூத்த குடி வாலோடு தோன்றியக் குரங்குக்குடிதானே.. அப்பறம் எப்படி இப்படி மாறிப்போச்சு!!!
முதன் முறை தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் மனமாரந்த நன்றி..
இன்னும் சிரித்துக்கொண்டும்,,, சிந்தித்துக்கொண்டும்..ஆதிரா..
இந்தப் பதிவு ரொம்ப லைவ்வா இருக்கு ஆதிரா!!! அந்த இரு பாய்ண்டுகள் விடுபட்டது என்று சொன்னவுடனேயே நீங்கள் எடிட் செய்த விதம் நீங்கள் எவ்வளவு பரந்த மனது உடையவர் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு. எனக்கு தோணின சில பாயிண்டுகள் சொன்னேன். அமுல்படுத்தியமைக்கு மிக்க நன்றி. ;-) ;-) அடுத்த ஹெல்த் டிப்சுக்கு வைட்டிங். ;-)
பதிலளிநீக்குஅற்புதமான பதிவு ஆதிரா!
பதிலளிநீக்கு/ஒரு செட் (இரண்டு) மனைவிகள் உடையதால் செட்டியாரா?/
வரவர குறும்பு ஜாஸ்திதான் ஆகிப்போச்சு ஆதிராவுக்கு!
ரசித்தேன்!
RVS தாங்கள் தோன்றுவதைக் கூறுவது என பதிவு இன்னும் மிளிரத்தான் அன்றி ஒளி குன்ற அல்லவே.. மிக்க நன்ற்.. அடுத்த டிப்ஸ் ரெடியாயிட்டு இருக்கு...
பதிலளிநீக்குகுறும்பர்கள் நடுவில் கும்மாளம் அடிக்க ஆரம்பித்த பின்பு நான் மட்டும் எப்படி குறும்பு இல்லாமல்? சொல்லுங்கள் குரு(றும்பர்)
பதிலளிநீக்குரசித்தமைக்கு மிக்க நன்றி ஜி.
//சொல்லுங்கள் குரு(றும்பர்)//அட்டகாசம்... அவர் குரு நாமெல்லாம் வளரும் குருத்து. ;-)
பதிலளிநீக்கு/அவர் குரு நாமெல்லாம் வளரும் குருத்து. ;-)//
பதிலளிநீக்குஆம் RVS. குரு கோபித்துக் கொண்டாரோ? சிஷ்யர்களின் சேட்டைகளைக் கண்டு கோபிப்பவர் இல்லையே நம்ம குரு..
அடாடா! குருன்னு சொல்லி நம்மளை ஓரம் கட்டிடீங்களே ரெண்டு பேரும்!
பதிலளிநீக்குஅப்போ என்னய ஆட்டத்துல சேத்துக்க மாட்டீங்களா?
ஏன் ஆதிராவை என் பதிவு பக்கம் காணோம்?
10 டிசம்பர், 2010 10:43 am
ரெண்டு நாளா நான் நெட்டுக்கு அந்நியமாயிட்டேன் குரு ஜி. என்னோட சிஸ்டம் அப்படியெ ஹேங்க் ஆகுது ஏன்னு தெரியலை.. இப்ப உங்க வலைப்பதிவைப் பார்த்துட்டு வந்துட்டேன். ரொம்ப நல்லா இருக்கு வயலூர் டிரிப்..
பதிலளிநீக்குஅந்தக் குஞ்சுக் குழுவான்களோடு.. நானும் இடம் பிடித்து நெருக்கி அமர்ந்து வந்து பாதாம் பர்பியும் சாப்பிட்ட அனுபவம்... ரசிச்சேன்.. மோகன் ஜி வடிவில் கடவுளையும் தரிசிச்சேன்..
ஈகரை தமிழ் களஞ்சியம் வந்திருந்தேன்.. ஆதிரா, சத்தமில்லாமல் மொத்த பாரதிபாடல்களயும் பதிவேற்றிவிட்டீர்கள்.. எல்லாம் அருமை.
பதிலளிநீக்குதலைமை நடத்துநர் பணி சிறக்க வாழ்த்துக்கள்...
( அங்கு பின்னூட்டம் இட முடியவில்லை )
நம்ம பக்கம் கொஞ்சம் வாங்களேன் ஆதிரா
பதிலளிநீக்கு//ஈகரை தமிழ் களஞ்சியம் வந்திருந்தேன்.. ஆதிரா, சத்தமில்லாமல் மொத்த பாரதிபாடல்களயும் பதிவேற்றிவிட்டீர்கள்.. எல்லாம் அருமை.//]
பதிலளிநீக்குஈகரையில் அன்பான உறவுகள் பத்துசார்.நாம் செய்வதை ரசிக்கும் உள்ளங்கள் அதிகம். அதுதான் முதலில் என் பிளக்குக்குக் கூட நான் முக்கியத்துவம் தருவதில்லை. முதல் மரியாதை ஈகரைக்குத்தான்.
//தலைமை நடத்துநர் பணி சிறக்க வாழ்த்துக்கள்...//
மிக்க நன்றி சார்.
என்னால சரியாகப் போக முடியவில்லை என்றாலும் அவர்களின் அன்புக்கு அளவே இருக்காது..
( அங்கு பின்னூட்டம் இட முடியவில்லை )
அங்கு பின்னூட்டம் இட லாக் இன் பண்ண வேண்டும் சார். ஒன்றும் இல்லை மெயில் ஐடியும் பாஸ்வேடும் கொடுத்தால் போதுமானது.
உங்கள் போன்றோரின் வருகை எம்மை இன்னும் மகிழ்விக்கும்.. தங்கள் வரவை ஆவலுடன் எதிர்நோக்கி..
வாங்க சிவகுமரன். முதல் முறை வந்துள்ளீகள். வருகைக்கு மிக்க நன்றி சிவகுமரன். இதோ கிளம்பிட்டேன் நம்ம பக்கம்..
பதிலளிநீக்குlight blue color கண்களை உறுத்துகிறது..(post words)
பதிலளிநீக்குஆதிரா! ஆர்.வீ.எஸ் வலையிலிருந்து உங்கள் ஈகரை தமிழ் களஞ்சியம் பற்றி அறிந்தேன். ஈகரையிலிருந்து இக்கரை மீள நேரமானது எனக்கு.'யாதும் சுவடு படாமல்' அமைதியாக நல்ல காரியம் செய்கிறீர்கள். இதுகாறும் ஈகரைப் பற்றி எங்களுக்கெல்லாம் நீங்கள் மூச்சுவிடாத கோபம் சற்று தணிந்தபின் தான் பாராட்டுவேன் ஆதிரா!
பதிலளிநீக்குஅன்புள்ள பாரத்... பாரதி...
பதிலளிநீக்குஎழுத்துருக்களின் வண்ணத்தை மாற்றி விட்டேன். உங்கள் கண்கள் எனக்கு மிகவும் முக்கியம். கண்களுக்குச் சரியாக இருக்கிறதா என்று பார்த்துச் சொல்லவும்...
அன்புள்ள மோகன் ஜி,
பதிலளிநீக்குநான் உங்கள் தளத்திலும் RVS தளத்திலும் ஒரு சில முறை ஈகரையின் குறியீட்டைப் பதிவிட்டுள்ளேன். அதனால் தாங்கள பார்த்திருப்பீர்கள் என்று நினைத்தேன். மேலும் நான கூறினால் தாங்கள் விளம்பரமாகக் கருதிவிட இடமுண்டு. ஆகையால் தனிப்பட்ட முறையில் கூறவில்லை. ஆனால் பல முறை ஈகரையின் லின்க் கொடுத்துள்ளேன்.
உங்களைப் போன்றவர்களின் வருகையில் ஈகரை இன்னும் பொலிவுறும். என் இனிய வரவேற்புகள் என்றும்.
//ஈகரையிலிருந்து இக்கரை மீள நேரமானது எனக்கு.'யாதும் சுவடு படாமல்' அமைதியாக நல்ல காரியம் செய்கிறீர்கள். //
நான் ஒன்றும் பெரிதாகச் செய்துவிட வில்லை ஜி. ஆனால் ஈகரைக்குள் சென்றால் பாசமழை பொழியும் உறவுகளின் அன்பில் நம் கவலைகளை எல்லாம் மறக்கலாம். அதனால்தான் பல நேரங்களில் என் வலைப்பூவைக் கூட என்னால் சரியாகப் பராமரிக்க முடியது போகிறது என்றாலும் ஈகரையே என் முதல் தேர்வாக இருக்கும். நான் கணிப்பொறியில் சற்று இயங்குகிறேன் அல்லது இயக்குகிறேன் என்றால் அது ஈகரையால் தான் என்று பெருமையாகக் கூறுவேன். எந்த உதவியும் உடனடியாக கிடைக்கும் ஒரு காமதேனு ஈகரை.
//இதுகாறும் ஈகரைப் பற்றி எங்களுக்கெல்லாம் நீங்கள் மூச்சுவிடாத கோபம் சற்று தணிந்தபின் தான் பாராட்டுவேன் ஆதிரா! //
இப்போது கோபம் தணிந்து இருக்குமே.. இப்போது தங்களின் பாராட்டோ வைதலோ எனக்கு பூமாலையாக மணக்கும். இரண்டையும் ஈகரையில் கண்டு ரசிப்பேன். தங்கள் வருகையை எதிர் நோக்கி ஈகரையில்...