இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை இல்லாத பழக்கமாக இன்றைய வேக உலகத்தின் காரணம் என்று சொல்லலாமா? சுகாதார நோக்கம் என்று சொல்லலாமா? பெண்கள் மாத விடாய்க் காலங்களில் துணி நேப்கினைப் பயன்படுத்தும் பழைய முறையை மறந்து விட்டோம். சிறியதும் பெரியதுமாகப் பாக்கெட்களில் அடைக்கப்பட்டு மருந்துக் கடைகளை அலங்கரிக்கும் நேப்கின்களைப் பயன் படுத்தும் புதுப் பழக்கத்திற்குள் குடிபுகுந்து விட்டோம். வீட்டு அலமாரியிலும், மாதாந்திர பட்ஜெட்டிலும் முதல் இடம் இதற்குத்தான். எந்த முறையிலும் உள்ள ஆபத்துக்களை அலசி ஆராய்ந்து பார்க்க வேண்டாமா?
சானடரி நேப்கின் (sanitary napkin) , டேம்போன்ஸ் (tampons) பயன்படுத்துபவர்களுக்குப் பரவலாகக் கருப்பைப் புற்று நோய் (cervical cancer), கருப்பைக் கட்டிகள் (tumour) வருவதாகக் கண்டறியப் பட்டுள்ளன.
இவற்றிக்குக் காரணம் இந்த சாணடரி நேப்கினில் இடம்பெற்றுள்ள ஆஸ்பெஸ்டாஸ் (asbestos) என்ற மூலப்பொருள்தான். இது சிலிகாவில் அமிந்துள்ள ஒரு கூறு. சிலிகா என்பது மணலில் இருந்து கிடைக்கப்பெறும் இரசாயனப்பொருள். நேப்கினும், டேம்போன்ஸும் உள்ளே பருத்தியை வைத்து, மேலே இந்த் ஆஸ்பெஸ்டாஸால் ஆன கவரால் மூடப்படுகிறது. ஆஸ்பெஸ்டாஸில் ரேயான் (rayaan) என்ற ஃபைஃபர் உள்ளது. இது ஈரத்தை உறிஞ்சும் தனமை உடையது.
பொதுவாக ஆஸ்பெஸ்டாஸ் கூரையின் கீழ் நின்றவர்களுக்குத் தெரியும், அது எத்தனை சூட்டை உமிழும் என்று. நேப்கினை மூடியுள்ள ஆஸ்பெஸ்டாஸ் உடலில் நேரடியாகப் பட்டுக்கொண்டு இருப்பதால் சூட்டைக் கிளப்பி, உதிரப்போக்கைக் கூடுதலாக்குகிறது. இதனால் பயன்படுத்தும் நேப்கின்களின் எண்ணிக்கை அதிகமாகிறது. நாளொன்றிற்குச் சுமார் மூன்று நேப்கின் அல்லது டேம்போன்ஸ் பயன்படுத்தும் ஒருவர் இச்சூட்டின் காரணமாக ஐந்து வரை பயன்படுத்துவார். எனவேதான் இம்முறை, விற்பனையைக் கூட்டும் உத்தியாக நேப்கின் தயாரிப்பாளர்களால் கையாளப்படுகிறது. மாத்திற்கு ஐந்து நாட்கள் வீதம் முப்பத்தெட்டு மாதவிடாய்ச் சுழற்சி ஆண்டுகளில் எத்தனை நேப்கின்ஸ் பயன்படுத்துவர். இதில் நேப்கின் தயாரிப்பாளர்களின் லாபம், அதனை பயன்படுத்தும் பெண்களின் உடல்நிலை பாதிப்பு இரண்டையும் பெண்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். நீங்கள் கூடுதலாகப் பயன்படுத்தும் நேப்கின்கள் அதாவது ஒரு மாதவிடாய்க்கு ( 5 X 2 = 10) ஆண்டுக்கு (12 X 10 = 120) சராசரியாகப் பெண்களின் மாதவிடாய்ச் சுழற்சி ஆண்டு முப்பத்தெட்டு.... ( 38 X 120 ) இது ரொம்பப் பெரிய கணக்கு.. நான் கணக்குல ரொம்ப வீக்கு... தப்பா சொல்லிட்டா? அதனால இந்தக் கணக்கை நீங்களே போட்டுக் கொள்ளுங்கள்.
மேலும் டை ஆக்ஸின் (dioxin) என்ற மூலப்பொருளும் இந்தத் தயாரிப்பில் பயன்படுத்தப் படுகிறது. இது நேப்கினின் தூய வெண்மை நிறத்திற்காகப் பயன்படுத்தப் படும் பிளீச் (bleach). இந்த பிளீச் புற்று நோயை ஏற்படுத்தும் தனமை வாய்ந்தது. அதுமட்டுமல்லாமல் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைப்பதுடன், மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் அபாயமும் இதில் உள்ளது. இந்த டைஆக்ஸின் எவ்வளவு குறைந்த அளவு சேர்க்கப்பட்டாலும் கொடிய பாதிப்புகளை உண்டாக்கும் என்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் (Environmental protection agency) அறிக்கை விடுத்துள்ளது. டைஆக்ஸின் சிறிதளவு உடலில் சேர்ந்தாலும் அதிக அபாயத்தை ஏற்படுத்தும் என்பதை, இரத்தக் காயம் பட்ட இடத்தில் பிளீச் பட்டால் ஏற்படும் விளைவை அறிந்தவர் நன்கு அறிவர். மேலும் உடலில் பட்ட பிளீச்சின் அளவு குறையாது, நாள்பட நாள்பட அதிகரித்து நம் உடலில் உறுதியாக இடம் பிடித்துக்கொள்ளும்.
இந்த நேப்கின் அல்லது டேம்போன்ஸ் பயன்படுத்துவோர்க்கு ஆபத்து காத்துக் கொண்டிருக்கிறது. அதிலும் டேம்போன்ஸ் பயன்படுத்துவோர்க்கு விளைவு அதிகம் என்றே சொல்லலாம். ஸ்வீடன், ஜெர்மனி, பிரிட்டன் போன்ற உலக நாடுகளில் பெண்கள் தூய பருத்தியினால் ஆன நேப்கின்ஸ், டேம்போன்ஸ் பழக்கத்திற்கு மாறி வருகின்றனர். நம் நாட்டில் இப்போதுதான் இதன் விற்பனை சூடு பிடித்துள்ளது என்கின்றனர் சுகாதார ஆர்வலர்கள்.
பிரச்சனையைத் தீர்க்க மாற்று வழிகள்:
1. இன்றைய இயந்திர வாழ்க்கையைப் புரிந்து கொண்ட தயாரிப்பாளர்கள், பெண்களை எத்தகு ஆபத்திற்கு உள்ளாக்குகின்றனர் என்ற விழிப்புணர்வைப் பெண்கள் பெற வேண்டும்.
2. டைஆக்ஸின் சேர்க்கை மற்றும் வேறு எந்த இராசாயனப் பொருளும் கலக்காத நேப்கின்களைப் பயன்படுத்துதல் நல்லது. துரஷ்டவசமாக ஒரு சில தயாரிப்பாளர்கள் மட்டுமே இத்தகு பக்க விளைவுகள் இல்லாத் நேப்கின்களைத் தயாரிக்கின்றனர். அவற்றை இனம் கண்டு வாங்கிப் பயன் படுத்த வேண்டும்.
3. வெறு வழியின்றி இவ்வகை நேப்கின்களைப் பயன்படுத்தும் வேளைகளில் அதிகபட்சமாக ஒரு நேப்கினை மூன்று மணி நேரத்திற்கு மேல் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
4. இத்தனை கஷ்டம் எதற்கு? சுத்தமான பருத்தியையும், கட்டுத்துணியையும் வாங்கி வைத்துக்கொண்டு வீட்டிலேயே நேப்கின் தயாரித்துப் பயன்படுத்துவது உங்கள் ஹெல்த் மணிபர்ஸ் இரண்டுக்கும் உகந்ததாக இருக்குமே...
உங்க உடம்பு... உங்க இஷ்டம்னும் சொல்ல எனக்கு மனசு வரலங்க.. ரொம்ப அக்கரையோட சொல்றேன் தோழிகளே...சொந்தத் தயாரிப்புக்கு மாறிடுங்க....உங்களுக்கு ரொம்ப வேண்டியவங்களுக்கும் எடுத்துச் சொல்லுங்க......பிளீஸ்......
ஆதிரா..
பெண்களுக்கு பயனளிக்கும் வகையிலான தங்களின் பதிவிற்கு மிக்க நன்றி...
பதிலளிநீக்கு//இரத்தக் காயம் பட்ட இடத்தில் பிளீச் பட்டால் ஏற்படும் விளைவை அறிந்தவர் நன்கு அறிவர்.//
பெண்கள் அழகு நிலையங்களில் பிளீச்சீங் செய்துக்கொள்ளும்போது கூட இதனை நன்கு உணர்ந்து இருப்பார்கள்.
வாசன் நலமாக இருக்கிறீர்களா? தங்கள் எழுத்தில் என்றும் ஒரு அக்கறையும் ஆய்வு மனப்பானமையும் இருக்கும். மிக்க நன்றி வாசன் கருத்து பகிர்ந்தமைக்கு...
பதிலளிநீக்கு