கொட்டாவியைத் தூண்டுவது மூளை நரம்பு என்பதை ஆய்வாளர்கள் உறுதியாக நம்புகின்றனர். ஆனால் அது எந்த நரம்பு என்று கண்டு பிடிப்பதில் சோர்ந்து போய் இன்னும் கொட்டாவி விட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். மூளையின் நடுப்பகுதியில் கொட்டாவியைத் தூண்டும் நரம்பு இருக்கலாம் என்று கருதுகின்றனர். தசைகளை வருடி சுறுசுறுப்பாக்குவதும், இரத்த ஓட்டத்தை சீராக்குவதும் இந்த கொட்டாவியின் இன்றியமையாத வேலை.
.
.இதுல இன்னும் சில நல்ல விஷயம் இருக்கு. என்னன்னு கேக்கறீஙகளா? முகத்தசைகளுக்கு நல்ல உடற்பயிற்சியும் இதன் மூலம் கிடைத்து விடுகிறது. அதுமட்டுமல்லங்க கொட்டாவி நாட்டியத்திற்கு மத்தளம் கொட்டுகிறார்களே கண்கள் என்ற இரண்டு பெரியவர்கள் இவர்களுக்கும் இது நல்ல பயிற்சியாம்... (மூடி மூடித்திறப்பதால்) கொட்டாவி விடும்போது உடலையும் சேர்த்து முறிக்கும் வழக்கும் பெரும்பாலும் எல்லோருக்கும் உண்டு.. இது உடலுக்கு ஒரு நல்ல உடற்பயிற்சி.. இப்ப நீங்க இந்த ஹெல்த் டிப்பைப் படிக்காம கொட்டாவி விடுவது தெரிகிறது.ஓகே ஓகே இப்ப விஷயத்துக்குப் போகலாம். குளிர்ந்த நீரைக் குடிப்பதாலும், குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவுவதாலும் கொட்டாவிக்கு கொஞ்ச நேரம் கடுக்கா கொடுக்கலாம். ஆனால் உடலுக்கு ஓய்வு கொடுக்காமல் கொட்டாவியை ஏமாற்ற முடியாதுங்க.. புரிஞ்சுக்கோங்க... சும்மா சும்மா வாயைப் பொளக்காம போய்ப் படுத்துத் தூங்குங்க... எல்லாம் சரியாய்ப் போய்விடும்...இப்ப நான் ஜகா வாங்கிக்கறேன்...ஜூட்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக