என்னங்க இதுக்கும் தடை விதிக்க வந்துட்டீங்களான்னு பாக்கறீங்கள?!!!! இல்லைங்க தடையெல்லாம் இல்லை. கொஞ்சம் கவனமா சமையுங்கன்னு சொல்லிட்டுப் போகத்தான் வந்தேன்...
நாம பொதுவா அடுப்புல கடாயைப் போட்டு, அதில் எண்ணெயை விட்டு, எண்ணெய் சூடானவுடன் வெட்டிய காய்களைப் போட்டு நன்றாக வதங்கியவுடன்
அதில் நீரையும் பாக்கெட் மசாலாவையும் சேர்த்து, கொதித்தவுடன் நுடுல்சைப் போட்டு வேக வைத்து 2 நிமிடத்திகுள் (சுத்தப் பொய்!!!) சமைத்து விடுகிறோம்.
இப்போது விஷயத்திற்கு வருகிறேன். இந்த நுடுல்சின் புறப்பகுதியில் ஒரு மெழுகுக் கோட்டிங் (wax ) உள்ளதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். இது எளிதில் ஜீரணமாகாத கொழுப்புப் பொருள். நம் வயிற்றுக்குள் செல்லும் இந்த மெழுகு உடலில் இருந்து வெளியேற சுமார் நான்கு முதல் ஐந்து நாட்கள் ஆகின்றன.
எந்த ஒரு பொருளும் நான்கு நாட்கள் வயிற்றில் தங்குவது
வயிற்றுக்குத் தீங்கையே விளைவிக்கும். இதற்காக நூடுல்ஸ் சாப்பிடுவதை அடியோடு தவிர்க்கவா முடியும். அது அவசியமும் இல்லை. மீசை வைத்து
இருப்பவர்கள் கூழ் குடிக்காமலா இருக்கிறார்கள் (காபியைத்தான் சொல்கிறேன்!!!) மீசையில் படாமல் லாவகமாக குடித்து விடுகிறார்களே!!!...
அது போலத்தான் கொஞ்சம் மாத்தி யோசிக்கலாமே!
தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து அதில் நூடுல்சை மட்டும் போட்டு வேகவைக்க வேண்டும். நூடுல்ஸ் நன்கு வெந்த பிறகு தண்ணீரை வடிகட்டி கொட்டி விட வேண்டும்.
பிறகு வாணலியில் எண்ணெயை விட்டு காய்கள் போட்டு வெந்த வுடன் சிறிதளவு நீர், மசாலா போடி சேர்த்து, வெந்த நூடுல்சையும் சேர்த்து இரண்டு நிமிடத்தில் நூடுல்ஸ் தயாரிக்கலாம். இந்த முறையில் அதிகம் தீங்கு ஏற்பட
வாய்ப்பு இல்லையாம்...... சொல்லிட்டேன்.
எப்படி சமைத்தாலும் ஓரு வாரத்தில் ஒருமுறைக்கு மேல் சாப்பிடுவது உடல் நலத்திற்கு அவ்வளவு நல்லது இல்லை.. முக்கியமாக குழந்தைகள்....... கவனிப்பீர்களா தாய்மார்களே.......
உங்க வயிறு உங்க இஷ்டம்னு என்னால சொல்ல முடியல. தயவு செஞ்சு உங்களுக்காக இல்லேன்னாலும் எனக்காகவாவது இதைப் பின்பற்றுங்களேன்.... ப்ளீஸ்.......
ஆதிரா..
அன்புள்ள ஆதிரா,
பதிலளிநீக்குநல்ல பயனுள்ள பதிவு...
எப்படி சமைத்தாலும் ஓரு வாரத்திற்கு மேல் பிரிட்ஜ்ல வைத்து சாப்பிடுவதும் உடல் நலத்திற்கு நல்லது இல்லை.. முக்கியமாக தாய்மார்களே ..... கவனிப்பீர்களா உங்கள் குழந்தைகளை ...... உஷார இருங்க...(சிரிக்கவும் & சிந்திக்கவும்)
தொடரும் தங்களின் பார்வைக்கும், கருத்துப் பதிவுக்கும் மிக்க நன்றி..வாசன்!
பதிலளிநீக்குமிக அருமையான கருத்து... தொடருங்கள்.. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் என் மனமார்ந்த நன்றி அண்ணாமலையான் அவர்களே...
பதிலளிநீக்குஉங்கள் அக்கறை மெய் சிலிர்க்க வைக்கிறது ஆதிரா..... நீங்கள் சொல்லும் விதம் சூப்பர்!!! எல்லா பதிவுகளுமே மிகவும் பயனுள்ளவையாக இருக்கின்றன..... எல்லோரையும் சென்றடைய வேண்டும்...
பதிலளிநீக்குதொடருங்கள்..... நன்றி கலந்த வாழ்த்துக்கள்!
என் எல்லா பதிவுகளையும் படித்து மெய்சிலிர்க்கும்படி பாராட்டும் கவிதனின் அன்புள்ளத்தைப் பொக்கிஷமாக்கிப் பத்திரமாக வைத்துக்கொள்வேன். மிக்க ந்னறி கவி..
பதிலளிநீக்கு