நண்பர்களே நீங்கள் குடிநீர் குப்பி (mineral water bottle ) பயன் படுத்துபவரா???? கொஞ்சம் இதப்படிங்க!!!!!!![/b]
நாம் வங்கிப் பயன்படுத்தும் வாட்டர் பாட்டில்களில் சுற்றியுள்ள லேபிளில் (labil ) "பாட்டில்களை மீண்டும் பயன் படுத்தாதீர்கள் " (Crush the bottle after use) என்று எழுதியிருப்பதைப் படித்து இருக்கிறீர்களா? படித்ததைச் செயல்படுத்தி இருக்கிறீர்களா? வகை வகையாக பிரிட்ஜ்ஜில் பாட்டில்களைச் சேமித்து வைத்து இருப்பீர்களே!!! இதைப் படிங்க முதல்ல.
இது சமீபத்தில் துபாயில் நடந்த ஒரு சம்பவம். ஒரே மினரல் வாட்டர் குப்பியைப் பதினாறு மாதங்கள் பயன்படுத்திய பனிரண்டு வயது சிறுமி பரிதாமாக உயிர் இறந்தாள்.
இன்றைய காலகட்டத்தில் பயணத்தின் போது கையில் தண்ணீர் கொண்டு செல்லும் வழக்கம் மறைந்தே போய விட்டது. கை வீசிக் கொண்டு கிளம்பிச் செல்வதும், ஆங்காங்கு கடைகளில் கழுத்தில் சுரூக்கிட்டுத் தொங்கும் மினரல் வாட்டர் பாட்டில்களை வாங்கிக குடிப்பதும் நாகரிகமாகி விட்டது. இதனால் சுருக்கு உங்கள் கழுத்துக்குத்தான். தெரிந்து கொள்ளுங்கள்.
பாட்டில் நாகரிகத்தைப் பின்பற்றும் எவரும் அந்தப் பாட்டிலில் குறிப்பிட்டுள்ள அறிவுரைகளைப் படிப்பதும் இல்லை. படித்தாலும் பின்பற்றுவதும் இல்லை. இந்த குப்பிகளைச் சேகரித்து வைத்து சிறுவர் முதல் பெரியவர் வரை பள்ளிக்கும, அலுவலகத்துக்கும் குடிநீர் கொண்டு செல்லப் பயன் படுத்துகின்றனர். ஏன் பிரிட்ஜில் குளிர் நீர் சேமிப்பதற்கும் இவற்றைப் பயன் படுத்துகின்றனர். இன்னும் கூறப்போனால் பல இல்லங்களில் தண்ணீர் அருந்த டம்ப்ளர்களைப் பயன் படுத்தும் வழக்கம் கூட குடிநீர் குப்பிகளாக மாறி விட்டது.எல்லா பிளாஸ்டிக் (நெகிழியினால்) ஆன
பாட்டில்களையும் பெட் (pet ) என்பர். சான்று ஸ்ரிபெட் பாட்டில்கள். பெட்(pet ) என்பது பாலி எததிலின் டேரப்தலேட் (Polyethylene terephthalate) என்பதின் பெயர் சுருக்கம் ஆகும். இந்த பெட் என்னும் ரசாயனப் பொருளில் டை- எத்தில் ஹைட்ரக்சின் அமைன் (diethyl hydraxylamine or DEHA) என்ற
ரசாயனப் பொருளும் கலந்துள்ளது. இந்த டெகாவில் (DEHA ) தான் ஒளிந்து இருக்கிறது புற்று நோய்க்கு வித்திடு பேராபத்து . குப்பிகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதால் பாட்டிலின் மூலப்பொருளான டெகா பிரிந்து தண்ணீரில் கலக்கிறது. அதிலும் வெந்நீரை ஊற்றி வைக்கும் போது இதன் வீரியம் இன்னும் கலை கட்டுகிறது . இந்தப பாட்டில்களை அதிகபடியாக ஒரு வாரத்திற்கு மேல் பயன் படுத்துவது ஆபத்தை விளைவிப்பதாகும்.
நாம் கவனிக்க வேண்டியது:
வாட்டர் பாட்டில்களை வாங்கும் போது கண்டிப்பாக நாகவனிக்க வேண்டியது, அதன்அடிப்பகுதியில் ஒரு முக்கோணமும் அதனுள் ஒரு எண்ணும் பொறிக்கப் பட்டிருக்கும். இந்த எண் ஐந்துக்கு மேல் இருந்தால் மட்டுமே பாட்டில்கள் தொடர்ந்து பயன் படுத்துவதற்குப் பாதுகாப்பானது. எண் ஐந்திற்கு குறைவாக
இருப்பின் கண்டிப்பாக ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தக் கூடாது. ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய (use and throw) குப்பிகளில் எண் ஐந்திற்குக் குறைவாகத்தான் இருக்கும். பெரும்பாலும் எண் ஒன்று (1 ) தான் இருக்கும்.
இக்குப்பிகளில் அடைபடும் தண்ணீருடன் இந்தக் குப்பிகளின் கெமிகல் எளிதாகக கலந்து விடும் தன்மையது.
பிளாஸ்டிக் குப்பிகளால் ஆபத்து அதில் அடைக்கப்பட்டுள்ள தன்நீருக்கல்ல; அதனை மீண்டும் மீண்டும் பயன்படுத்தப் போகும் உங்களுக்குத்தான். அலட்சியம் வேண்டாம். அல்பத்தனமும் வேண்டாம் நண்பர்களே. வரும் முன் காப்போம்.
நன்றி குமுதம் ஹெல்த்
பிளாஸ்டிக் குப்பிகளால் ஆபத்து அதில் அடைக்கப்பட்டுள்ள தன்நீருக்கல்ல; அதனை மீண்டும் மீண்டும் பயன்படுத்தப் போகும் உங்களுக்குத்தான். அலட்சியம் வேண்டாம். அல்பத்தனமும் வேண்டாம் நண்பர்களே. வரும் முன் காப்போம்.
நன்றி குமுதம் ஹெல்த்
//பிளாஸ்டிக் குப்பிகளால் ஆபத்து அதில் அடைக்கப்பட்டுள்ள தன்நீருக்கல்ல; அதனை மீண்டும் மீண்டும் பயன்படுத்தப் போகும் உங்களுக்குத்தான். அலட்சியம் வேண்டாம். அல்பத்தனமும் வேண்டாம் நண்பர்களே. வரும் முன் காப்போம்.//
பதிலளிநீக்குஅதென்ன எங்களுக்கு மட்டும்... உங்களுக்கு கிடையாதா? யார் பார்த்து அல்பமுனு சொன்னீங்க. (சிரிப்பதற்கு)
சொன்னாலும் கேட்பதில்லை... பாதிக்கபட்டாலும் மாறுவதில்லை.(சிந்திப்பதற்கு)
விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது உங்கள் பதிவு...அவசியம் நீங்கள் சொன்னது போல் கவனமாக இருப்பேன்..... முடிந்த வரை நண்பர்களுக்கும் சொல்வேன்.
பதிலளிநீக்குநன்றி ஆதிரா!!!
நாஙக திருந்திட்டோமல வாசன். அதனாலதான் உங்களுக்கு... வருகைக்கும் ஒவ்வொரு பதிவிலும் சிரிக்க வைப்பதற்கும் மிக்க நன்றி...
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் மிக்க நன்றி கவிதன்.
பதிலளிநீக்குnandru
பதிலளிநீக்குவாங்க கோபி நாதன். முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
நீக்கு