புவி இயல் மாற்றம் மனிதனின் மன நிலையையும் ஈக்குமாம். குறிப்பாகத் தற்கொலை எண்ணத்தைத் தூண்டுகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள். 1948முதல் மூன்று பருவ நிலை மாற்ற காலங்களிலும் செய்யப்பட்ட பல்வேறு ஆய்வுகள் இதனை உறுதி செய்துள்ளதாக ரஷ்ய விஞ்ஞானி ஒவேக் ஷ்மிலோவ் கூறியுள்ளார். மைக்கேல் ரைகிராப்ட் என்ற ஐரோப்பிய விஞ்ஞானியும் 10 - 15% மக்களை புவியியல் மாற்றம் பாதிக்கிறது என்கிறார். 2006 ஆம் ஆண்டு ஆய்விலும் பருவ நிலை மாற்றனங்களின் போது அதிக் அளவில் தற்கொலைகள் நடந்துள்ளதாகக் கண்டறிந்துள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவிலும் கடந்த 13 ஆண்டுகளில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவான போது மொத்த மக்கள் தொகையில் 36.2% பேர் மனநிலை பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டனர் என்கிறது ஒரு ஆய்வு.
நமது உடலின் இயங்கு தன்மை சுற்றுச்சூழலை அடிப்படையாகக் கொண்டது. அதனால் பருவ நிலை மாற்றங்கள் ஏற்படும் போது உடல் இயங்கு தன்மையிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இம்மாற்றங்கள் மன நிலயையும் பாதித்து தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு மன அழுத்தத்தைக் கொடுக்கிறது என்கின்றனர்.
சுனாமியால் வீடு வாசல், மனைவி, மக்களை இழந்தவர்கள் கதறிய வேதனையை நம்மால் மறக்கத்தான் முடியுமா? அதனைத் தொலைவிலிருந்து கண்ட நமக்கே மனநிலை சிறிது காலம் கலங்கி இருந்தது.
உற்றார் உறவுகளை இழந்தால் இந்த இழப்பு மனநிலையை பாதிப்பது என்பதும், அணைப்பார் யாருமற்ற சூழலில் தற்கொலை எண்ணம் வருவது என்பதும் இயல்புதானே.
ஆதிரா
பூமி, மனிதனின் மனநிலையை மட்டுமல்ல மனிதனையே ஈர்த்தும் இழுத்து கொண்டும்... (சுனாமி & நிலநடுக்கம்)
பதிலளிநீக்குமனிதனின் மாறுபட்ட மனநிலை (வறுமையும் & வேதனையும்)தற்கொலைகளுக்கு அடிப்படையாய்...
சுனாமியால் வீடு வாசல், மனைவி, மக்களை இழந்தவர்கள் கதறிய வேதனையை நம்மால் மறக்கத்தான் முடியுமா?
பதிலளிநீக்குஎப்படி முடியும்....! இதுபோல் இனி வராமல் இருக்க இறைவனை வேண்டிக்கொள்வோம்!!!
தங்கள் பார்வைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வாசன்.
பதிலளிநீக்குஆம் கவிதன்.. இறைவனைத்தான் வேண்டவேண்டு. ஆட்டுவிப்பவன், அழவைப்பவன் எல்லாம் அவன் தானெ.... தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கவிதன்..
பதிலளிநீக்கு