ஸ்டான்லி மருத்துவமனை
கல்லீரல் அறுவைச் சிகிச்சைப் பிரிவின்
அமைதியான மக்கள் சேவை.
“மூளைச்சாவு ஏற்பட்ட
ஆந்திர வாலிபர் காடி தமோதியின் கல்லீரல் அகற்றப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஸ்டான்லி
அரசு மருத்துவமனை எடுத்து செல்லப்பட்டது. அங்கு உயிருக்கு போராடிய, சென்னை மாதவரத்தை சேர்ந்த விஜயராகவன் (50) என்ற கார்பென்டருக்கு
பொருத்தப்பட்டது. ஸ்டான்லி மருத்துவமனை கல்லீரல், குடல் சார்ந்த அறுவை சிகிச்சை பிரிவு தலைவர் டாக்டர் சுரேந்திரன்
தலைமையிலான டாக்டர்கள் குழுவினர் இந்த ஆபரேஷனை 10 மணி நேரம் மேற்கொண்டனர்.”
இது போன்ற செய்திகள்
அவ்வப்போது தினசரிகளில் இடம்பெறுகிறன. ஸ்டான்லி மருத்துவ
மனை அரசு மருத்துவ மனை. இங்கு இது போன்ற அறுவை சிகிச்சைகள் நடைபெறுகிறதா என்று பலர்
புருவம் உயர்த்துவதைப் பார்க்க முடிகிறது. ஆம் ஸ்டான்லி மருத்துவமனையில்
தான் இது போன்ற அறுவைச் சிகிச்சைகள் மட்டுமல்ல அரசு மருத்துவமனை வரலாற்றில் கண்டறியாத
பல அற்புதங்களும் நடைபெறுகின்றன. அதுவும் எப்போதாவது அல்ல அவ்வப்போது நடைபெறுகிறன.
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைப் பிரிவு (GASTRO SURGICAL WARD) என்றால் ஸ்டான்லிதான் என்ற அளவுக்கு அதன்
பணி சிறப்பாக இருக்கிறது. இது எப்படி ஒரு அரசு
மருத்துவ மனையில் சாத்தியமானது? நிச்சயமாக இது அங்கு பணி புரிபவர்களால் மட்டுமே என்றால்
மிகையாகாது.
பொதுவாக நடுத்தர
வர்க்கத்தினரும் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்கின்ற மக்களுமே குடல் பாதிப்பு நோயால்
அல்லல் படுகின்றனர். பசி பட்டினி இது ஒரு புறம் குடி மறுபுறம் என்று இரு முக்கியமான
காரணிகள் செயல்படுகின்றன. இவ்விரு வகையிலும் குடல் நோய் பெரும்பாலும் ஏழை எளிய மக்களுக்கே
வருகிறது என்பதில் ஐயமே இல்லை. ஈரல் அழற்சி (hepatitis)
ஈரல் புற்றுநோய் (liver cancer) ஈரல் கரணைநோய் (liver cirrhosis) அல்லது
ஈரல் முழுதும் பழுதடைதல் (acute
liver failure) ஆகிய நோய்கள் குடல் சம்பந்தமானவை.
இவை
முற்றிய நிலைக்கு மாற்று அறுவை சிகிச்சை பலனளிக்கிறது
(liver transplant). குடலை ஒருவர் உடலில் இருந்து மற்றவர் உடலுக்கு
மாற்றினால் கொடுத்தவர் என்ன செய்வார். இதுவும் கிட்னி போல இரண்டு உள்ளதா என்று கேள்விகள்
நம்மில் பலருக்கு எழுகிறது. இது வளரும் தன்மை உடையது. கல்லீரலைக் கொடையாகக் கொடுத்தவருக்கு
இரண்டு அல்லது மூன்று வாரங்களில் மீண்டும்
இயல்பான நிலைக்கு வளர்ச்சி அடைந்து விடுகிறது.
கண்மாற்று, சிறுநீரக
மாற்று, இதயமாற்று, தோல்மாற்று, போல குடல் மாற்று அறுவை சிகிச்சையும் இக்காலத்தில்
பெருகி வருகிறது. பசித்தோர்க்கு தம் உணவினைப் பகுத்துக் கொடுத்த மக்களினம் அவ்வுணவை
செரிக்க வைக்கும் உடலுறுப்பான கல்லீரலையும் தானமாகக் கொடுக்கத் தொடங்கியுள்ளது. கொடுப்போர்
கொடுத்தாலும் வாங்குவோர் வாங்க நினைத்தாலும் மனித உடல் என்ன ஆட்டோவா? ஸ்பேர் பார்ட்ஸை
அங்கே வாங்கி இங்கே பொருத்தி வண்டியை ஓட விட. தானே வாங்கி பொருத்திக்கொள்ள இயலாது.
தேர்ந்த மருத்துவர்கள்,
சிறந்த மருத்துவ மனை, தரமான மருத்துவ உபகரணங்கள், அன்பான செவிலியர், அற்பணிப்பான பிற
ஊழியர்கள், அறுவைக்கு முன்னும் பின்னும் நோயாளிக்குத் தேவையான சுகாதார வளையம் இவ்வனைத்தும்
நிறைந்திருந்தால் மட்டுமே குடல் மாற்றும் பணியின் முழுமையான பயனை ஒரு நோயாளி அடைய முடியும்.
இத்தகு பலவகை
வளையங்களை ஸ்டான்லி மருத்துவ மனையின் கல்லீரல் அறுவைச் சிகிச்சைப் பிரிவில் காணமுடிகிறது.
மருத்துவர் முதல் கடைநிலை ஊழியர்களான ஹவுஸ் கீப்பிங் ஊழியர்கள்
வரை தங்களுக்கே உரித்தான அற்பணிப்புடன் பணியாற்றுவதைப் பார்க்கும் போது இவர்கள் எல்லாரும்
அரசு ஊழியர்கள்தானா என்று நம்மை வியக்க வைக்கிறது. இது ஒரு புறம் இருக்க...
அரசு மருத்துவமனை
என்றால் பொந்தும் பிளவும் உடைந்தும் உடயாத கட்டிடங்கள், சாயம் போன சுவர்கள், வெற்றிலைப்பாக்குக்
கறைகள், பொட்டலங்களாகச் சிதறிய இட்லி. தோசை, சட்னி, சாம்பார், தரையிலும் படுக்கையிலுமாக பிதுங்கி வழிந்து கொண்டிருக்கும்
நோயாளிகள் என்று ஒரு மண்ணுலக நரகமே நம் கண் முன் வருவது. ஆனால் ஸ்டான்லி மருத்துவ மனையின்
குடல் மாற்று அறுவை சிகிச்சைப் பிரிவு இந்தக் காட்சிக்கு நேர்மாறாக விண்ணுலக சொர்க்கமே
தரையிறங்கி வந்தாற் போல காட்சி அளிக்கின்றது. தனியார் மருத்துவ மனையை மிஞ்சும் சுகாதாரம்
இங்கு கடைபிடிக்கப்படுகிறது.
அதனால்தான் இந்தியாவிலேயே முதன் முதலில் ISO தரச்சான்றிதழ்
பெற்ற சிகிச்சைப் பிரிவு என்ற பெருமையை ஸ்டான்லி மருத்துவமனை கல்லீரல் மாற்று அறுவைச்
சிகிச்சைப் பிரிவான இது பெற்றுள்ளது.
இதை ஏன் கூறவேண்டும்
என்றால் இம்மருத்துவ மனையின் இப்பிரிவுக்கு மட்டும் அதாவது கல்லீரல் நோய் சிகிச்சைப்
பிரிவுக்கு மட்டும், சிகிச்சை பெற நாளொன்றுக்கு புற நோயாளிகளாக
குறைந்தது 450 (நானூற்று ஐம்பது) பேர் வந்து சிகிச்சை பெற்று திரும்புகின்றனர். இதில்
6%(ஆறு சதவீதம்) பேர் D C L D (decomposed
liver
disease) என்றழைக்கப்படும் கல்லீரல்
முற்றிலும் அழுகிய அல்லது சிதைந்த நிலையில் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகு நோயாளிகளுக்குச்
சிகிச்சை அளிப்பது சுலபமல்ல என்பது அனைவரும் அறிந்ததே. ஏனெனில் ஒரு நோயாளி அறுவை சிகிச்சை
முடிந்து வீடு திரும்புவதற்குள் அவருக்கு இரத்தப் பரிசோதனை
மட்டுமே 1800 (ஆயிரத்து எண்ணூறு) முறை செய்ய வேண்டியுள்ளது.
இந்த அறுவை சிகிச்சை
ஏன் இவ்வளவு முக்கியமாகப் பேச வேண்டியுள்ளது. ஆம் பிற அறுவைச் சிகிச்சைகளைச் சற்றேறக்குறைய
குறித்த காலத்தில் முடித்து விடலாம். ஆனால் குடல் மாற்று எவ்வளவு நேரம் எடுக்கும் என்பது
மருத்துவர்களுக்கே தெரியாது. மேலே குறிப்பிட்டது போல குறைந்தது பத்து மணி நேரம் முதல்
இருபத்து நான்கு மணி நேரம் கூட ஆகலாம். பலமணிநேரம் மருத்துவர்கள் குழு பணியாற்ற வேண்டியுள்ளது.
மருத்துவர்கள்
உள்ள நேரம் மட்டுமன்றி செவிலியர்கள் இரவு பகல் பாராது உடன் இருந்து கண்காணிக்க வேண்டியுள்ளது.
ஏனெனில் அங்கு வரும் நோயாளிகள் டிரிப்ஸ் தீர்ந்து இரத்தம் பாட்டிலுக்குச் செல்வதைக்
கூட சொல்லத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு பணி புரியும்
செவிலியர்களில் 40% சதவீதமே அரசால் பணியில் அமர்த்தப்பட்ட செவிலியர்கள். ஏனைய 60% வெளியில்
இருந்து ஊதியத்திற்குப் பணி புரிபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அன்பும் அரவணைப்புமான
இவர்களின் பணியே நோயாளிக்கு அறுவைக்கு முன்னும் பின்னும் அதிக அளவில் தேவையாகிறது.
அறுவைச் சிகிச்சைக்
உபகரணங்கள் முழுமையான தர உத்தரவாதத்துடன் இருப்பது மற்றொரு சிறப்பு.
கண்களுக்கும்
தெரியாத பாக்டீரியாக்களில் இருந்து இந்நோயாளிகளைக் காத்தல் என்பது மிகவும் கடினம்.
மருத்துவ மனையின் சுகாதாரம் எனும் போது அதன் பெரும் பானமையான பொறுப்பும் கடை நிலை ஊழியர்களைச்
சார்ந்து விடுகிறது. இங்கு இவர்களின் பணி தனியார் மருத்துவ மனைகளிலும் காணக் கிடைக்காத
அளவில் மாசு இல்லாது எங்கும் பளீர்தான். இவர்கள் அனைவரும் அரசு ஊழியர்களே. இருந்தாலும்
அற்பணிப்பு ஊழியர்களாக இருக்கின்றனர் என்பது இத்துறையின் சிறப்பு என்று கூறலாம். இப்படி
இன்னும் கூறிக்கொண்டே போகலாம்... ஆக மருத்துவர்கள், அரசு, அரசு சாராத மருத்துவமனை ஊழியர்களால்
ஸ்டான்லி மருத்துவ மனையின் இப்பிரிவு சாதனை படைத்து வருகிறது என்று ஆணித்தரமாகக் கூறலாம்.
இவர்கள் இம்மாபெரும்
சாதனையை எப்படி ஆற்றி வருகின்றனர்? சாதாரனமாக இந்த அறுவை சிகிச்சைக்கு பிற மருத்துவ
மனைகளில் 50,000 செலவாகக் கூடிய மாற்று அறுவை சிகிச்சையை இவர்கள் செலவே இன்றி ஏழை எளிய
மக்களுக்குக் கொடுக்கின்றனர். சிகிச்சைக்கு வேண்டிய வசதிகளை எவ்வாறு எதிர் கொள்கின்றனர்
என்பது ஒரு பெரிய அதிசயமாக உள்ளது.
இப்பிரிவு
1999 ல் தொடங்கியது. 2009 ல் முதல் முதலில் ஃபாத்திமா என்ற பெண்மணிக்கு மாற்று அறுவை
சிகிச்சையை மேற்கொண்டு வெற்றிகரமாக முடித்தது. சிகிச்சைக்குத் தேவையான ஆயத்தங்களை மேற்கொள்ள
இவ்வளவு காலம் தேவைப்பட்டுள்ளது. இது வரை 29 மாற்று அறுவைச் சிகிச்சைகளை மேற்கொண்டு
அதில் 75% வெற்றிகரமாக முடிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இப்பிரிவில்
பொது இலவசப் படுக்கைகள் 80 உள்ளன. 20 படுக்கைகள் பகிர்வு அடிப்படையில் உள்ளன. இதற்கு
ரூபாய் 5000/- மருத்துவ மனைக்குக் கொடுத்தால் போதுமானது. இது படுக்கைக்கு மட்டும் அல்ல.
ரூபாய் 50,000 செலவு ஆகும் மருத்துவம் முழுமைக்கும். சற்று வசதியான நோயாளிகளுக்கென
பதினைந்து தனிப் படுக்கை அறைகள் உள்ளன. இவர்கள் ரூபாய் 5000/- த்துடன் முடிந்த சிறு
தொகையைக் கூடுதலாகக் கட்டி இவ்வசதியை அனுபவிக்கலாம். இவர்களிடம் வாங்கும் இத்தொகையைக்
கொண்டு அடிப்படை வசதியே இல்லாத ஏழைகளுக்கு இலவசமாக உயர்தர சிகிச்சை அளிக்கின்றனர்.
இத்தொகையும் இவர்கள் மருத்துவ மனையிலோ அல்லது மருத்துவர்களிடமோ செலுத்துவது இல்லை.
மக்கள் மனதில் ஐயம் எழாமல் இருக்கும் வகையில் வங்கியில் செலுத்தி பற்றுச்சீட்டுப் பெற்றுக்
கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பெற்றுள்ளது.
இந்த பகிர்வு
அடிப்படை 20 படுக்கைகள் மூலமாக இப்பிரிவுக்குக் கிடைக்கும் இலாபம் ரூபாய்.
1,28,000/- இதனைப் பரிவுடன் ஏழைகளுக்குப் பயன் படுத்துகிறது இப்பிரிவு. இந்த அறுவைச்
சிகிச்சைக்கான தொகை (சர்ஜரி பேக்கேஜ்) என்பது பிற மருத்து மனைகளில் ரூ.
6,000/- இங்கு ஏழைகளிடம் இவர்கள் வசூலிப்பது
ரூ. 350/-. இத்தொகைக்குள் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை முடித்துக்கொண்டு வீடு திரும்பலாம்.
இத்தகு சாதனையின்
அடித்தளத்தில் அனைத்திற்கும் காரணமாக அமைதியாகப் பணியாற்றி வருபவர் இத்துறையின் தலைவர்
டாக்டர் சுரேந்திரன். பல அரிய திட்டங்களைக் கண்ணும் கருத்துமாக வகுத்தது மட்டுமல்லாமல்
எப்போதும் இன்னும் என்ன என்ன முன்னேற்றம் எவ்வகையில் செய்யலாம் என்று மருத்துவர்களிடமும்
சமுதாயத்தில் உயர்மட்ட மக்களிடமும் ஆலோசனை நடத்துவது, அவர்களின் கொடையையும் பெற்று
மருத்துவ மனைச் செல்வினங்களுக்குப் பயன் படுத்துவது ஆகியவையே இப்பிரிவின் தலைவர் டாக்டர்.
ஆர், சுரேந்திரன் அவர்களின் அன்றாட பணியாக உள்ளது. தற்போது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளே
மாற்று அறுவைக்கு கல்லீரல் கிடைக்காத நிலையில் ஸ்டெம் செல்களின் மூலம் கல்லிரல் உற்பத்தி
செய்யும் ஆராய்ச்சியும் டாக்டர் ஆர். சுரேந்திரன் அவர்களால் மேற்கொள்ளப்பெற்று வருகிறது
என்பதும் குறிப்பிடத்தக்கது.
2005ல் முதல்வர்
செல்வி. ஜெ. ஜெயலலிதா ஆட்சியின் போது இத்துறை
மேம்பாட்டுக்காக ரூபாய் 5 கோடி ஒதுக்கி இத்துறையை மேலும் வளர்ச்சி அடைய வழி வகுத்தார்.
இன்னும் அரசின் உதவி கிடைக்கப்பெற்றால் இத்துறை உலக அளவில் முதன்மையானதாக விளங்கும்
என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை எனலாம்.
நன்றி குமுதம் ஹெல்த் ஸ்பெஷல்.
மருத்துவத்தில் மாண்போற்றும்
பதிலளிநீக்குமகத்தான சேவை செய்துவரும்
ஸ்டான்லி மருத்துவமனைக்கு
சிரம் தாழ்ந்த நன்றிகள்....
இன்றைய காலகட்டத்தில் எவ்வளவு தான்
பொருளுதவி கிடைத்தாலும் அதை ஏப்பமிட்டு செல்பவர்கள்
மத்தியில், இவர்கள் போன்ற சிலரால் தான்
மருத்துவத் துறையே தலைதூக்கி நிற்கிறது....
மனமார்ந்த வாழ்த்துக்கள் ......
அன்பு மகேந்திரன், வாங்க
பதிலளிநீக்குஇது போன்றவர்களின் சேவை வெளிச்சத்திற்கு வந்தால் கொடுப்போரின் கரங்கள் மேலும் நீளும். அதனால் இன்னும் ஒருசிலராவது பயனைடைந்தால் நலமே. ஏதோ நமமால் ஆன ஒரு சிறு தொண்டு.
அதனைப் படித்துப் பாராட்டுவது பெரும் தொண்டு. தாங்கள் தரும் ஊக்கத்திற்கு மிக்க நன்றி மகேந்த்ரன். இதே ஊக்கத்தை என்றும் எதிர் நோக்கி.. அன்புடன்..
இது போன்ற நிகழ்வுகளை மிக ஈடுபாட்டோடு செய்யும் ஸ்டான்லி மருத்துவமனையை மனம் நிறைந்து பாராட்ட வேண்டும் .அங்கு பணிபுரியும் அனைவருக்கும், இந்த பதிவு அவர்களின் ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு ஊக்கமாக அமையும்..
பதிலளிநீக்குஆதிரா,
பதிலளிநீக்குவியப்பான தகவல் பறிமாற்றத்துடன், கட்டுரையின் நோக்கமும் அருமை.
ஆதிரா...ஆச்சரியம் ஆனால் உண்மை என இக்கட்டுரையை படிப்பவர்கள் எண்ணுவார்கள்....ஆனால் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது அரசு சார்ந்த துறைகளில் பணிபுரிபவர்கள் இப்போதெல்லாம் உணர்ந்து பணிபுரிய ஆரம்பித்து விட்டார்கள்!மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் ஆர்.சுரேந்தர் மட்டுமல்ல அங்கு பணிபுரியும் கடை நிலை ஊழியர்களும் வாழ்த்துக்குரியவர்கள்!தொடரட்டும் தங்கள் பணி!
பதிலளிநீக்குஇக்கட்டுரையின் மூலம் உதவி கரங்கள் நீளும் என்பதில் ஐயமில்லை! வாழ்த்துகள் ஆதிரா!
பதிலளிநீக்குபலர் அரசு சார்பு நிறுவனங்கள் என்றாலே எதோ தரம் குறைவாக இருக்கும் என்று கூறுபவர்களிடம் நான் கேட்பது, நீங்கள் சென்று பார்த்தீர்களா? அதற்க்கு அவர்களின் பதில் பெரும்பாலும், இல்ல; என் நண்பன் சொன்னான் என்று அசடு வழிவார்கள்..
பதிலளிநீக்குசென்று பாருங்கள் எங்கோ ஒரு சதவிகிதம் நடக்கும் தவறுகளை வைத்துக் கொண்டு மொத்தமாக அனைத்து அரசு அலுவலகங்களையும் குறை சொல்வது வாடிக்கையாகி விட்டது..
பி.கு. நான் அரசு ஊழியன் அல்ல.. ஆனால் அரசு ஊழியர்களின் மேல் ஒரு மரியாதை உண்டு...
வாங்க பத்மநாபன்,
பதிலளிநீக்குமிக்க நன்றி பத்மநாபன். அங்கு பணி புரியும் ஊழியர்கள் அனைவரின் புகைப்படங்களுடன் இப்பதிவு வந்துள்ளது பதமநாபன்.
//இந்த பதிவு அவர்களின் ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு ஊக்கமாக அமையும்..//
ஆம். தாங்கள் சொல்வது போல இது அவர்களின் தொண்டுக்கு ஒரு ஊக்கமாக அமையும். தாங்கள் கொடுக்கும் ஊக்கத்திற்கு மிக்க நன்றி பத்மநாபன்.
வாங்க சத்ரியன்,
பதிலளிநீக்குஅதன் நோக்கம் இந்தக் கட்டுரை அரசின் பார்வைக்குப் போகவேண்டும். இப்பிரிவு மேலும் அரசின் உதவியைப் பெற வேண்டும் என்பதே.
உடனே வந்து கருத்துப் பகர்ந்தமைக்கு மிக்க நன்றி சத்ரியன்.
அன்புள்ள தென்றல் சரவணன்,
பதிலளிநீக்குதாங்கள் கூறுவது உண்மை. அரசு ஊழியர்கள் பொறுப்புணர்வுடன் பணியாற்றுகின்றனர். பொதுமக்களில் சிலர் தங்களின் தன்னலத்தால் அவர்கள் பணி செய்வதை வேறு வழியில் (கொடுத்து) தடுக்கின்றனர். குறைகளைத் தம்மீது வைத்துக்கொண்டு அவர்களை மட்டும் குறை கூறுவது பொருந்தாது. எங்கோ ஒரு சிலர் தவறிழைக்கலாம். அதனால் ஒரே அளவு கோலில் எல்லோரையும் அளவிட முடியாது.
உடனடியாக வந்து ஆழமான கருத்தை பதிவிட்டமைக்கு மிக்க நன்றி தென்றல்
thendralsaravanan சொன்னது… //இக்கட்டுரையின் மூலம் உதவி கரங்கள் நீளும் என்பதில் ஐயமில்லை! வாழ்த்துகள் ஆதிரா! //
பதிலளிநீக்குஅதை எதிர்நோக்கிய பதிவிது. தங்கள் வாக்குப் பலித்தால் மிக்க மகிழ்ச்சி. நன்றி தென்றல்.
எதையும் தீர விசாரித்துப் பார்க்காமல் பேசுவது அதுவும் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று திட்டுவது நம்மவர் வழ்க்கம். விடுங்கள் சூர்யா.
பதிலளிநீக்கு//பி.கு. நான் அரசு ஊழியன் அல்ல.. ஆனால் அரசு ஊழியர்களின் மேல் ஒரு மரியாதை உண்டு..//
நானும் அரசு ஊழியள் அல்லள். இருந்தாலும் உள்ளதை உள்ளபடி சொல்வது நம் கடமை.
சொல்ல வந்ததைச் சொல்லாமல் விட்டு விட்டேன். தெளிவான ஆணித்தரமான கருத்துக்கு மிக்க நன்றி சூர்யா.
பதிலளிநீக்குவிண்ணுலக சொர்க்கமா? .. ரைட்டு. அடுத்த தடவை கும்பிட்டா ஸ்டேன்லி ஆஸ்பத்திரி குமாஅ சிகிச்சையகத்துக்கு வழி காட்டு கடவுளேனு வேண்டிக்கலாம் :)
பதிலளிநீக்குநம்மூர் மருத்துவமனை நல்ல பேர் வாங்கினால் கேக்க நல்லாயிருக்கு. எடுத்துச் சொன்ன உங்களுக்கும் நன்றி.
குமாஅ சிகிச்சையகத்துக்கு வேண்டிக்கொண்ட தங்கள் அன்புள்ளத்துக்கு மனமார்ந்த நன்றி அப்பாதுரை. நீங்க சொன்னமாதிரியே நாங்களும் வேண்டிக்கொள்கிறோம். மீண்டும் நன்றி.
பதிலளிநீக்குஎனக்கும் இதை கேள்விப்படும்போது ஆச்சரியமாய்தான் இருக்கின்றது அரசு மருத்துவமனை மீது எனக்கு இப்போது மரியாதை கூடுகிறது..
பதிலளிநீக்குகாட்டான் சொன்னது…
பதிலளிநீக்கு//எனக்கும் இதை கேள்விப்படும்போது ஆச்சரியமாய்தான் இருக்கின்றது அரசு மருத்துவமனை மீது எனக்கு இப்போது மரியாதை கூடுகிறது.. //
அதிசயம் விலகாமலேதான் நானும் கட்டுரை பதிவிட்டுள்ளேன். தங்கள் வருகையில் மகிழ்ச்சி. கருத்துக்கு நன்றி காட்டான்.
பதிவைப் படிக்க நம்பிக்கை பிறக்கிறது ஆதிரா. நல்லவை நடக்கட்டும். நம்பிக்கைகள் தளராமல் வைத்திருப்பதும், ஊக்கமூட்டும் முயற்சிகளுமே நாம் மேற்கொள்ள வேண்டியது.
பதிலளிநீக்குவருகை கருத்து இரண்டும் மகிழ்விக்கிறது ஜி.
பதிலளிநீக்குநம்மால் முடிந்ததைச் செய்வோம். மீண்டும் நன்றி ஜி.
பத்மநாயன்,
பதிலளிநீக்குதென்றல் சரவணன்,
மகேந்திரன்,
சூர்யா ஜீவா
அப்பாதுரை,
ஈகரை கிச்சா
ஆகியோர் சொன்ன கருத்துகள் அப்படியே குமுதம் ஹெல்த் இதழில் ‘வாசகர் கடிதங்கள்’ பகுதியில் வெளியாகியுள்ளன. அனைவருக்கும் நன்றி
தகவலுக்கு நன்றி மேடம்
பதிலளிநீக்குமிக்க நன்றி ஆதிரா!பின்னூட்டத்தின் மூலம் எழுதுபவருக்கு எழுத்து சிறக்கும் !பின்னூட்டம் இடுபவருக்கே வலிமை கூட செய்தீர்கள்.
பதிலளிநீக்குவாழ்த்துக்களுடன்!
அச்சு எழுத்திலும் பின்னூட்டத்தை கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி ஆதிரா .. உண்மையில் ஸ்டான்லியின் செயல் பாடுகள் பாராட்டுக்குரியது .
பதிலளிநீக்குஅன்பு சூர்யா, தென்றல், பத்மநாபன்,
பதிலளிநீக்குவிரைவில் அதனை ஸ்கேன் செய்து பதிவிடுகிறேன். மின்னஞ்சலுக்கும் அனுப்புகிறேன்.