“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

சனி, 10 செப்டம்பர், 2011

பூப்பு..பூப்பு..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhgNcxOj52VzuSJgdU2MY2JIM7BGeBDPJdzUWtrIR_Aihf2IKoCh8FKrhv7maUjTMmDXYl8hExPfFCZNA4QliNIS5ahrNeY_iUXY5LMVeqF_vNPoAssBKJQiBoLY2l7zMrsb6MipPl97g/s1600/bridal-hand-mehndi-design5.jpg
காலம் கெட்டுத்தான் போயிருக்கு. கலிகாலம்னு சொல்றது இதைதானா? பத்து வயசுதான் அதுக்குள்ள இது நடந்து இருக்கு!!! என்னத்த சொல்ல? புலம்பல் ஒலி பரவலாகக் கேட்டுக்கொண்டு இருக்கிறது. உண்மைதான் மூன்றாம் வகுப்பு படிக்கும் போதே பூப்பு அடைந்த செய்தியும் கிடைத்து உள்ளது. என்ன செய்வது? சமைஞ்சிட்டா, பெரிய மனுஷி ஆயிட்டா, வயசுக்கு வந்துட்டா, என்று பல பெயர்களில் அழைக்கப்படும் இந்த பூப்பின் வயது என்பது வயது 12 முதல் 16 என்றுதான் மருத்துவ நூல்கள் கூறுகின்றன. ஆனால் சராசரியாகவும் நலமான பூப்பாகவும் கொள்ள வேண்டிய பூப்பின் வயது 12 முதல் 16 என்பதாம்.  
 மக்கள்தொகைப் பெருக்கத்திற்கேற்ப உணவுத் தேவை ஏற்படுகின்றது. உணவுப்  பற்றாக்குறையைச் சரி செய்ய இயற்கையை மீறி பல்வேறு முறையில் உணவு உற்பத்தி செய்யப்படுகின்றன. அதிக உற்பத்திக்கு முக்கியமாகப் பயன் படுவது ஈஸ்ட்ரோஜன். உணவுப்பொருள்களில் உள்ள ஈஸ்ட்ரோஜென் உடலின் தேவையைவிட அதிகரிக்கும் போது இந்த உரிய வயதுக்கு முன்பே பூப்பு அடைந்துவிடும் வைபவம் நடந்து விடுகிறது. ஏற்கனவே வறுமை. அதில் இந்த பூப்பு. வெந்த புண்ணில் தேளும் கொட்டியது போலத்தான். பின் என்ன? கவிஞர் வைரமுத்து கூறுவது போன்று ஏண்டியம்மா குத்தவச்சே என்று பூப்பு நீராட்டு விழாவை நம் மக்கள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொள்ளாத குறையாகக் கொண்டாடி விடுகின்றனர்.

அதிலும் மாமிச உணவு உண்பவர்களுக்கு இந்நிகழ்வு இன்னும் வெகு விரைவில் என்கிறது ஆய்வு அறிக்கைகள்.. காரணம் கறிக்காகவே வளர்க்கப்படுகிற கோழிகளுக்கு ஈஸ்ட்ரோஜென் எனப்படும் ஊசி போடப்படுகிறது. இது ஏன் என்பது அனைவரும் அறிந்ததே. இன்று எதிலும் கொழு கொழுதான் தேவை. கோழிக்கும் தேவை இக்கோழிகளைச் சாப்பிடுபவர்களுக்குப் பல நோய்கள் ஏற்படுவதாக அறிக்கைகள் வெளியாகிக் கொண்டே உள்ளன. 
பெண்ணுக்குள் இருக்கும் இரண்டு அடிப்படை ஹார்மோன்கள் ஈஸ்ட்ரோஜென், புரொஜெஸ்டிரான். இவை இரண்டும் பெண்ணின் சினைப்பையில் உருவாகின்றன. குறைவாக அட்ரினல் சுரப்பியிலும் உருவாகிறது. கோழிகளின் அதிக வளர்ச்சிக்காகக் கொடுக்கப்படும் ஈஸ்ட்ரோஜென் இளம்பெண்களின் உடல் எடையைக்கூட்டி முன்பருவ பூப்புக்குக் காரணமாவதுடன், பொதுவாகப் பெண்களுக்கு கர்ப்பபை புற்று நோய், எடை கூடுதல், மார்பக வீக்க நோய் போன்றவையுடன் வரைவில் பூப்பு எய்துதலும் ஏற்படுகின்றன. 
இதனால் இதனால் ஆண்களுக்கு ஒன்றும் இல்லையா என்று கேட்காதீர்கள். ஆண்களுக்குப் பெண் தன்மை ஏற்படுகிறதாம்!! ஆண்களுக்கு குறிப்பாகச் சிறுவர்களுக்கு ஆண்குறி வளர்ச்சியின்மை ஏற்படுகினறதாம்.

பூப்பு விரைவில் எய்துவதற்குக் குழந்தை வயிற்றில் இருக்கும் போது அதன் தாயார் டாக்சிக் அமிலம் அடங்கிய மருந்துகளை உட்கொள்வது ஒரு முக்கிய காரணமாக சொல்லபடுகிறது.

பெண் குழந்தைகள் விரைவில் பூப்பு எய்துவதற்கு பெற்றோர்களின் கருத்து வேறுபாடுகளும், அடிக்கடி இல்லத்தில் நடைபெறும் வாக்குவாதங்கள், சண்டைகள் முதலியவையும் காரணமாகின்றன. அத்துடன் விவாகரத்து ஆன இணையரின் குழந்தைகள் விரைவில் பூப்பு எய்துவதாக உளவியல் ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன.


மனப்பதற்றத்தை ஏற்படுத்தும் எச்சூழலும் விரைவில் பூப்பு எயத காரணமாக அமையும். விரைவு பூப்பின் முக்கிய காரணங்களில் தொலைக்காட்சியின் பங்கு அதி முக்கியமானது என்பது அனைவரும் அறிய வேண்டிய ஒன்று. அதிலும் அடுத்த நாள் வரும் வரை என்ன ஆகுமோ பதற்றத்துடன் இருக்கத் தூண்டும் தொலைக்காட்சித் தொடர்கள் ஆற்று இச்சேவையை ஒருவரும் மறுக்க முடியாது.


      பூப்பு என்றவுடன் இந்நிகழ்வு பெண்களுக்கு மட்டும் உரியதா? பூப்பு ஆண்களுக்கும் உண்டா என்ற வினா எழுகிறது. ஆண்களுக்கும் பூப்பு உண்டு. சிறுவர்கள் உடல், மனம் இரண்டும் முதிர்ச்சியை எட்டிப்பிடிக்கும் இப்பருவத்தை குமரப்பருவம் என்பர். அதாவது குழந்தைப்பருவத்திற்கும் முதிர்ந்த பருவத்திற்கும் இடையேயான ஒரு சிக்கலான இவ்வருவத்தைக் குமரபருவம் என்பர். 

      அண்டச்சுரப்பிகள் இரண்டு பெண்ணின் உடலுக்கும், விந்துச் சுரப்பிகள் இரண்டு ஆணின் உடலுக்கும் சொந்தமானவை. இவையே இருபாலரிடமும் இனப்பெருக்கத்திற்கு உதவுபவை. இவற்றை இனப்பெருக்கச் சுரப்பிகள் என்பர். இது தவிர பிட்யூட்டரி சுரப்பி. இதுதான் இனப்பெருக்கத்துக்குத் தூண்டுவது. இனப்பெருக்கச் சுரப்பிகள் வேலை செய்யும் போது சுரக்கின்ற சுரப்பே ஆணுக்கு மீசை அரும்புதல், உடலளவிலும் பல மாறுதல்களை ஏற்படுத்துகின்றன.  இக்காலமே இரு பாலருக்கும் பூப்புக் காலமாகக் கருதப்படுகின்றது. 

   அருந்தா என்ற இனக்குழு (மலைச்சாதி) வாழ்க்கையில் ஆணுக்கான பூப்பு சடங்கு கொண்டாடப்பட்டதாக அறிய முடிகிறது. அதுவரை ஆடையின்றி அலைந்த ஆண் மகன் வயதுக்கு வந்துவிட்டதை அறிவிக்கும் சடங்காக இதனைக் கொண்டாடினராம். இச்சடங்கை அக்குழுவின் முதியவர் ஒருவர் நடத்துவாராம். முதியவர் தன் தலையால் சிறுவனின் தலையில் இரத்தம் வரும் வரை பலமாக மோதுவாராம். பிறகு அச்சிறுவனை எறும்புகள் நிறைந்த குழிக்குள் தள்ளி சில நாட்கள் இருக்கச் செய்வார்களாம். இச்சடங்கினை மறுபிறப்பு என்றும் கூறுவார்களாம். (நன்றி கவிஞர் கனிமொழி). இச்சடங்கின் முதன்மையான அம்சம் என்பது அந்த ஆணிடம் வீரத்தையும் வலி பொறுக்கும் தன்மையையும் ஏற்படுத்துவதாம். வீர் யுகத்தில் போருக்கு ஆணை ஆயத்தபடுத்துவதே இச்சடங்கின் முக்கிய நோக்கமாக இருந்திருத்தல் கூடும்.

மேலை நாட்டு இனக்குழுவில் ஆண் பூப்படைதலை பிணை அறுத்தல்” க்யா மோட்டு டி செலி-டு ஸ்னாப் தி டீ (Kia mottu te sele – to snap the tie) என்றும் பெண் பூப்படைதலை பாவாடை அணிதலாகவும் (Hakatiti – titi skirt) கொண்டாடியதாகத் தெரிய வருகிறது. (நன்றி கவிஞர் கனிமொழி)

   ரஷ்யாவில் பெண் பூப்பு அடைந்தவுடன் அவள் தாய் ஓங்கி ஒரு அரை கன்னத்தில் விடுவாளாம். அரையில் சிவக்கும் கன்னம் ஒரு நற்சகுணத்தின் அடையாளமாம். (என்ன சகுணமோ தெரியவில்லை, ஏண்டியம்மா குத்த வச்ச கதையாக இருக்குமோ!!)

நேபாளத்தில் பூப்பு அடைந்த பெண்ணை ஒரு இருட்டறையில் வைத்துப் பூட்டி விடுவார்களாம். உதிரப்போக்கு நாட்கள் முடிந்த பின்பு சூரியனுக்கும் அவளுக்கும் திருமணச்சடங்கு நட்த்துவார்களாம். (கேள்விதான் சரியாகத் தெரியாது)

ஆப்பிரிக்க சுளு இனத்தில் பூப்பு அடைந்த பெண்கள் தோழிகளுடன் சென்று நீராடி வந்த பின்பு அவள் உடலில் சிவப்பு நிற களிமண்ணைப் பூசுவார்களாம்.

இந்திய இனத்தில் ஒரு சாரார் ஒரு பெண் பூப்பு அடைந்து விட்டாளா எனத் தெரிந்து கொள்ளும் பொருட்டு குழூஉக்குறியாக வினவ எள்ளு போட்டாச்சா? என்பர். மற்றொரு சாரர் புட்டு போட்டாச்சா? என்பர். இவற்றைக் குழூஉக்குறி என்பர். இந்த எள்ளு, புட்டு இரண்டும் பூப்பின்போது பூப்படைந்த பெண்ணுக்கும் மற்றவர்களுக்கும் கொடுக்கும் வழக்கம் உள்ளதாம். இது போன்றே ஜப்பானில் ஒரு இனத்தாரிடம் சிவந்த அரிசியும் பீன்ஸும் கொடுக்கும் வழக்கம் உள்ளதாம். 

அதெல்லாம் சரி. பண்டைய காலத்தில் எத்தனை வயதில் பூப்பு எய்தினார்கள் என்ற அடுத்த வினா எழுகிறதே நம் மனத்தில்? பழைய காலத்தில் எத்தனை வயதில் பூப்பு அடைந்தார்கள் என்பதற்குத் தெளிவான சான்றுகள் கிடைக்கவில்லை. ஒரே ஒரு சங்கப் பாடலில் பெயர்க்குறிப்பிடப்படாத ஒரு சிற்றரசனின் மகளின் பூப்பு பற்றி குறிப்பு உள்ளது. பூப்பு விழா கொண்டாடிய அன்றைய வழக்கத்தை அறிய முடிகிறது எனினும் பூப்பான பெண்ணின் வயது தெரியவில்லை.

பாரி பறம்பின் பனிச்சுனை போல
காண்டற் கரியளாகி மாண்ட
பெண்மை நிறைந்த பொலிவோடு மண்ணிய
துகில்விரி கடுப்ப நுடங்கி தண்ணென
அகில் ஆர் நறும்புகை சென்றடங்கிய
கபில நெடுநகர்க் கமழும் நாற்றமொடு
மனைச் செறிந்தனளே வாணுதல்

இச்சங்கப் பாடல் வழி பூப்பு அடைந்த பெண்ணை அயலார் காண முடியாதவாறு மனைக்குள் வைத்தனர் என்பது தெரிகிறது. இன்றும் மாமனைத்தவிர அப்பெண்ணை மற்ற ஆண்கள் பார்க்க்கூடாது என்று மாமன் ஓலைக்குடிசைக் கட்டுவதும் அதற்கு உரிமைப்போர் நடப்பதும் எண்ணற்ற திரைப்படங்கள் வழி நமக்கு கிடைக்கும் பூப்பு பற்றிய செய்திகள்.

சங்க காலப் பாவலர்கள் கவி எழுதுவதை நோக்க வியப்பே எஞ்சுகிறது. பார்ப்பதற்கு அருமையான, பரம்பு மலையின் சுனை பொல என்று பூப்பு அடைந்த பெண்ணை உவமிப்பது எண்ணி எண்ணி வியத்தற்குரியது.  

பூப்பு அடைந்த பெண்ணை அயலார் காண இயலாது மனைக்குள் வைத்தனர் என்பதும், அம்மனையுள்ளும் தூய்மை, வெண்மை, குளிர்ச்சியான அகில் மணம் கமழும் விரிப்பில் அமர்த்தப்பட்டதும் அறியலாகிறது. இதில் அக்காலத்தில் பேணப்பட்ட சுகாதாரம் நன்கு விளங்குகிறது. பூப்பு நாட்களில் அதிமுக்கியமானது சுகாதாரமானச் சுற்றுச் சூழலே என்பதை அறிந்த நம் முன்னோர் எவ்விதத்தில் உடலியல், அறிவியல் அறிவில் குறைந்தவர்கள்? உளவியல் கூறுகளும் அவர்களிடம் நிரம்பியே இருந்துள்ளன என்பதற்கும் இப்பாடல் சான்றாகின்றது.

இது அந்நாளைய பூப்பு விழாவை ஒட்டிய சடங்குகள் எனலாம். பூப்பு அடைந்தவுடன் சிறுமியாக இருந்த அப்பெண்ணிடம் பெண்மை நிரம்பி வழிந்தது என்று சுட்டும் பாடலடிகளால் பூப்பு என்பது பெண்களுக்கு உடலளவிலும் மனத்தளவிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற உளவியல் உண்மை இப்பாடலால் பெறப்படுகின்றது. இதனை நோக்கும் போது அக்காலத்து மக்களிடம் நிலவிய உளவியல் அறிவு நம்மை வியக்க வைக்கிறது. 

                                 பூ(ப்பு) இன்னும் மலரும்....


நன்றி குமுதம் ஹெல்த் ஸ்பெஷல் 


29 கருத்துகள்:

  1. ஆதிரா,

    அனைவரும் அறிந்துக்கொள்ள வேண்டிய தகவலை, சுவாரஸ்யமாகவும், உரிய தரவுகளுடனும், நம் முன்னோர்களின் வாழ்க்கைமுறையையும் ...

    அருமையாக வடித்திருகின்றீர்கள்.

    பூ மலரட்டும்....

    வாசிக்கும் வண்டுகள் வலம் வரு(வோ)ம்!

    பதிலளிநீக்கு
  2. அறிந்து கொள்ள வேண்டிய அறிவியல் தகவல் பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  3. இயற்கையின் இனிய நிகழ்வை அறிவியல், சமுக, உளவியல் கருத்துக்களோடு பகிர்ந்துள்ளீர்கள்.. தொடரட்டும்..மக்கள் விழிப்புணர்வடைய வழி வகுக்கும் தொடர்... வாழ்த்துகள் ஆதிரா.....

    பதிலளிநீக்கு
  4. அடுத்த பாகத்தில் இதை கொண்டாடுகிறோம் என்ற பெயரில் பெண்ணின் மனதை நோகடிக்கும் சைகாலஜி விஷயம் நிறைந்ததாக இருக்க வேண்டும் என்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்..

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் அதிரா,
    வரலாற்று ரீதியான தகவல்களோடு, பல்வேறு நாடுகளில் பூப்படைந்தோரினை எவ்வாறு நடத்துகிறார்கள் என்பதனையும் உள்ளடக்கிய தொகுப்பினைப் பகிர்ந்திருக்கிறீங்க.

    பகிர்விற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  6. சத்ரியன்,

    //வாசிக்கும் வண்டுகள் வலம் வரு(வோ)ம்! //

    வண்டுகளாய் மாறிய தங்களின் வருகைக்கென பூக்கள் மலர்ந்து மணம் வீசிக்கொண்டே இருக்கும்.


    வண்டுகளால் மட்டுமே மலர்களின் இனப்பெருக்கம். பாராட்டுகளால் மட்டுமே பதிவுகளின் இனப்பெருக்கம்.

    இனிய நன்றி சத்ரியன்.

    பதிலளிநீக்கு
  7. தங்கள் இனிய வருகைக்கு இன்பம் தரும் பதிவுக்கும் மிக்க நன்றி மாய உலகம் ராஜேஷ். (ராஜேஷ் என்று நினைக்கிறேன். சரியா?)

    பதிலளிநீக்கு
  8. அன்பு பதமநாபன்,

    தங்கள் கருத்துக்களே எங்களை (என்னை) ஊக்கப்படுத்துகின்றன. எப்போதும் போல்
    தங்கள் வருகைக்கும் எப்போதும் ஊக்கப்படுத்தும் தங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி பத்மநாபன்.

    பதிலளிநீக்கு
  9. //அடுத்த பாகத்தில் இதை கொண்டாடுகிறோம் என்ற பெயரில் பெண்ணின் மனதை நோகடிக்கும் சைகாலஜி விஷயம் நிறைந்ததாக இருக்க வேண்டும் என்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்.. //

    அது உண்மை சூர்யா. பெண்களுக்கு இழைக்கப்பெறும் அநீதிகளில் இதுவும் ஒன்று. தங்கள் ஆவலான கருத்துக்கு மிக்க நன்றி சூர்யா. கண்டிப்பாகத் தங்கள் எதிர்பார்ப்பை நிறைவு செய்ய முயல்கிறேன்.

    பதிலளிநீக்கு
  10. அன்புள்ள சூர்யா,

    அழகான கருத்துக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  11. அன்புள்ள நிரூபன்,
    வருகைக்கும் மேலான கருத்துக்கும் மிக்க நன்றி நிரூபன். தங்கள் வலையில் நேற்று முழுவது வாசம் செய்தேன். அழகான வடிவமைப்பு. அருமையான செய்திகள்.

    பதிலளிநீக்கு
  12. மென்மையான விசயத்தை...தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்களை...தெளிவாக,அழகாக எடுத்து தொடுத்துள்ளீர்கள்...பூவாசம் தொடரட்டும்!

    பதிலளிநீக்கு
  13. அன்பு சரவணன்,
    முதல் முறை வந்துள்ளீர்கள். அழகாக கருத்துச் சொல்லி உள்ளீர்கள்.பதிந்த முதல் பாதம் முதல் பதிவு இரண்டும் மகிழ்ச்சியாக. மிக்க நன்றி. மீண்டும் மீண்டும் தங்கள் வரவை எதிர்நோக்கி...அன்புடன்...

    பதிலளிநீக்கு
  14. உண்மைதான் இங்கு நாங்கள் சாப்பிடும் உணவுகள்தான் இப்படி செய்கிறது அதிலும் சிறு பெண்கள்..?? பெற்றோர்கள் அவதானமாக இருக்க வேண்டிய தருனமிது.. பகிர்வுக்கு நன்றி

    காட்டான் குழ போட்டான்

    பதிலளிநீக்கு
  15. வாங்க காட்டான்,
    முதல் முதல்ல வந்து நாட்டான் போல அழகாக கருத்து சொல்லி இருக்கிறீர்கள். அது சரி அது என்ன ‘காட்டான் குழ போட்டான்?’

    வருகைக்கும் பதிவுக்கும் நன்றி காட்டான்.
    உங்க உண்மை பெயர் தெரிந்து கொள்ளலாமா?

    பதிலளிநீக்கு
  16. மிக கனதியான ஆக்கம். பல தகவல்கள் நன்றி வாழ்த்துகள்
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  17. வருக வேதா. முதல் முறை வந்துள்ளீர்கள்.. என் குடில் மகிழ்கிறது உங்கள் வருகையில். தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி வேதா. மீண்டும் தங்கள் வருகையை எதிர்நோக்கி.. அன்புடன்

    பதிலளிநீக்கு
  18. பூப்பெய்துவதை
    அறிவியல், இலக்கியம் உளவியல் என
    அனைத்து துறைசார்ந்த விளக்கத்தால்
    நம் முன்னோர்கள் எந்த அளவிலும்
    குறைந்தவர் அல்லர் என
    அழகுறச் சொல்லியிருக்கிறீர்கள்.
    அதுவும் அண்டை நாடுகளில்
    பூப்பெயதவுடன் எப்படி நடந்துகொள்கிறார்கள்
    என திறம்பட விளக்கியிருக்கிறீர்கள்.

    இன்று முதல் உங்கள் வலைப்பக்கத்தை
    தொடரும் அன்பர்களில் நானும் ஒருவன்...

    பதிலளிநீக்கு
  19. அன்பு மகேந்திரன்,

    மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. நம்மவர்கள் அறிவியல் மருத்துவம் உளவியல் என்று எல்லாம் அறிந்தே பல சாத்திரங்களை வைத்துள்ளனர்.

    என்னுடைய பழைய கட்டுரைகள் எல்லாம் இலக்கியச் சான்றுடன் நம் முன்னோர்களின் மருத்துவ அறிவை விளக்கியுள்ளேன். நாம் எல்லா பெருமைகளையும் மற்றவர்களுக்கு விட்டுக் கொடுத்தது மட்டுமல்லாமல் அவர்கள் கூறுவதுதான் உண்மை என்று அவர்களின் வால் பிடித்துக்கொண்டு இருக்கிறோம்.

    அழகான பின்னூட்டம். மனமார்ந்த நன்றி.

    //இன்று முதல் உங்கள் வலைப்பக்கத்தை
    தொடரும் அன்பர்களில் நானும் ஒருவன்...//

    இது யான் பெற்ற பேறு.


    மிக்க நன்றி. மீண்டும் மீண்டும் தங்கள் வருகையை எதிர்நோக்கி.. அன்புடன்..

    பதிலளிநீக்கு
  20. மிக நல்ல பகிர்வு! நிறைய தகவல்களுடன்!!

    பதிலளிநீக்கு
  21. இன்றுதான் தங்கள் தளம் வருகிறேன் .அருமையாக
    உள்ளது. முன்பு இட்ட பதிவுகளையும் ,தங்களின்
    மற்ற தளங்களையும் படிக்க வேண்டும் ,ஓய்வாக இருக்கும் பொழுது படிப்பேன் .

    தாங்கள் இன்று பதிவிட்டிருப்பதும் எனக்கு பிடித்த மருத்துவ அறிவியல் துறை சம்பந்தப் பட்டது என்பதால் சுவாரஸ்யம் ஏற்பட்டுள்ளது .இன்று முதல் தொடர்கிறேன்.

    உண்மைதான் வாழும் சூழ்நிலையும் ,மன நிலையும்
    காரணம் என்பது.
    கூடவே உணவு பழக்க வழக்கங்களும் காரணம்
    முன்கூட்டியே பூப்பெய்துவதும் ,காலங்கடந்தும் பூப்பெய்துவதும் என்று ஒரு கட்டுரையில் படித்துள்ளேன்.

    பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  22. ஆர்.வி.எஸ்.
    தங்கள் வருகை, கருத்து இரண்டுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  23. M.R சொன்னது…
    //இன்றுதான் தங்கள் தளம் வருகிறேன் .அருமையாக
    உள்ளது. முன்பு இட்ட பதிவுகளையும் ,தங்களின்
    மற்ற தளங்களையும் படிக்க வேண்டும் ,ஓய்வாக இருக்கும் பொழுது படிப்பேன் .//

    அன்பு எம்.ஆர்.
    முதல் வருகைக்கு இனிய வரவேற்புகள். இனியும் வரவேற்க வேண்டுகிறேன்.

    நிதானமாக நேரம் கிட்டும்போது பார்வையிடுங்கள். எல்லாம் பெரும்பாலும் மருத்துவ அறிவியல் இலக்கிய சான்றுகளுடன் பதிவு செய்துள்ளேன்.

    தங்களின் முதல் வருகைக்கும் முத்தான பதிவுக்கும் என் ஒரே சொத்தான அன்பும் நன்றியும். மீண்டும் வருகையை எதிர்நோக்கி..அன்புடன்..

    பதிலளிநீக்கு
  24. அறிந்து கொள்ள வேண்டிய அறிவியல் தகவல் பகிர்வுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  25. முதல் வருகை...
    வருக ரெவரி. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ரிவரி.

    பதிலளிநீக்கு
  26. பல புதிய தகவல்கள்;சங்கப்பாடல் மேற்கோள்; அருமையான பகிர்வு!

    பதிலளிநீக்கு
  27. நீண்ட நாள்களுக்குப் பிறகு சென்னைப் பித்தன் அவர்கள்! வருக! வருக!

    மிக்க நன்றி தங்கள் பாராட்டுக்கு.

    பதிலளிநீக்கு
  28. பயனுள்ள கட்டுரை.

    எஸ்ட்ரொஜன் ஏற்றப்படாதப் பண்ணைக் கால்நடை இல்லை. இன்றைய நிலையில் இது போன்ற நிகழ்வுகள் தவிர்க்க முடியாதவையாகி விட்டன.

    எஸ்ட்ரொஜன் தான் பூப்பு விரைவில் ஏற்படக் காரணம் என்பது கேள்விக்குறிதான் என்றாலும் ஓரளவுக்கு எல்லாருமே நம்புகிறார்கள். இதை அழகாக எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள். துரிதப்பூப்பை எண்ணி மனங்கலங்குவோருக்கு மருத்துவ ரீதியில் தற்காலிகத் தீர்விருப்பதையும் சொல்லியிருக்கலாமே? அடுத்த பதிவில் சொல்லப்போகிறீர்களா?

    பதிலளிநீக்கு
  29. வருக அப்பாதுரை,
    ஆம் இப்போது ஈஸ்ட்ரோஜன் ஏற்றப்படாதப் பண்ணைக் கால்நடைகளே இல்லை.

    அடுத்த பதிவில் மருத்துவ தீர்வு குறித்து ஆராய்வோம் என்று நினைத்தேன்.தாங்களும் அதையே கூறுகின்றீர்கள்.

    தங்கள் வருகையே புதிய சிந்தனையைத் தூண்டுவதாக அமையும். மிக்க நன்றி அப்பாதுரை.

    பதிலளிநீக்கு