“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

ஏரோபிக்ஸ் செய்யலாம் வாங்க...




http://www.vastc.com/jumpclear3.jpg

தூங்காதே தம்பி தூங்காதேன்னு படிச்சுப் படிச்சு பாடம் கேட்ட காலம் போயி ஒரு குறிப்பிட்ட வயது வந்தவுடன் (டீன் ஏஜ் தொடங்கி) தூக்கம் எங்கே தூக்கம் எங்கேன்னு அலையர காலம் வந்து விடுகிறது. ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு காரணம் தூக்கம் வராததற்கு. அதனால்தான் நம் முன்னோர்கள் காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே... காலமிதைத் தவறவிட்டால் தூக்கமில்லை மகளேன்னு பாடி வைத்தார்கள். உயர்மட்ட பணக்காரர்களுக்கு இன்னும் கிரடிட் கார்டு எந்த வங்கியில் வாங்கவில்லை என்று. ம்ற்றவர்களுக்கு கிரடிட் கார்டுக்கு எப்படி பணம் கட்டுவது என்று. இன்று இளைஞர்களின் கண்களுக்குள் டாக்டர் எஞ்சினியர், அயல்நாடு என்று பல கனவுகள் புகுந்து கொண்டு உறக்கம் என்ற உண்மை நண்பனை விரட்டி விடுகின்றன. இன்னும் சிலர் அதாவது டீன்  பருவத்தைக் கடந்தவர்களைப் பணம், பகட்டு, புகழ் என்ற ஆசைப்பேய் அலைக்கழிப்பதால் தூக்கத்தை அறவே மறந்தவர்களாகின்றனர். இப்படிக் கூறினால் இன்னும் பொருத்தமாக இருக்கும். உறக்கத்தால் அடியோடு மறக்கப்பட்டவர்கள் ஆகின்றனர்.

குமரப்பருவத்தில் தடாலடியாகத் தொலைத்து விட்டு அல்லும் பகலும் தூக்கமின்றி அலைந்து திரிந்து தேடி எடுத்து பயன்படுத்தும் தூக்கம் மனிதனிடமிருந்து நடுத்தர வயதில் மீண்டும் இருள் வர மறையும் கதிர் போல கொஞ்சம் கொஞ்சமாகத் தொலைந்து போகிறது. எப்படியாகிலும் தூக்கத்தால் மறுதலிக்கப் பட்டவர்களின் இந்நிலைக்கு இன்சோம்னியா என்று பெயர் சூட்டியுள்ளது  மருத்துவ அறிவியல். இது ஒரு தூக்கக் குறைபாட்டு நோய்.

இந்த இன்சோம்னியா பற்றி ஆயவு செய்த அமெரிக்காவின் நார்த்வெஸ்டர்ன் மெடிசின் அமைப்பு,  நாள் தோறும்  ஏரோபிக்ஸ்(Aerobic) பயிற்சி செய்தால் நல்ல உற்சாகமான மனநிலை வரும். அதன் காரணமாக அதனோடு தொடர்புடைய நல்ல சுறுசுறுப்பு வரும். நல்ல தூக்கமும் வரும் என்கின்றனர்.

தூக்கக் குறைபாடு உள்ள நோயாளிகள் ஐம்பது பேரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர்களுக்கு ஏரோபிக்ஸ் பயிற்சி கொடுத்து சோதித்துப் பார்த்தனர். பயிற்சியின் பின் மருந்து மாத்திரைகளால் உறங்கியதை விட அவர்கள் ஆழ்ந்தும் நீண்ட  நேரமும் உறங்கினர் என்கின்றார் இந்த ஆய்வை மேற்கொண்ட தூக்கக் குறைப்பாட்டு ஆய்வு மைய இயக்குநரான பைலீஸ் ஸீ. இவர் இந்நோயால் அல்லலுறும் நோயாளிகளில் பெரும்பாலானோருக்கு இது பொருந்தும் என்கிறார். மற்றொரு ஆய்வாளராக கேத்தரின் ரீட் என்பவரும் இக்கருத்தை வழிமொழிகிறார்.

உறக்கம் எப்படி வராமல் போகும்? உழைத்து களைத்தவனின் உரிமை ஓய்வு என்று அறிஞர் அண்ணா சொன்னது போல ஆடிக் களைத்தவனுக்கு உரிமை அல்லவா உறக்கம். உறக்கம் வராமல் போகுமா? வரத்தானே செய்யும். அதுவும் ஏரோபிக்ஸ் ஆடலுடன் பாடலும் நல்ல இசையும் இணைவதால் உற்சாகமான உறக்கம் வருவதில் என்ன சந்தேகம்.

அதெல்லாம் சரி ஏரோபிக்ஸ் என்றால் என்ன? அது என்ன மருத்துவம்? ஒன்றும் இல்லைங்க. இசையொன்றை போட்டுக்கொண்டு அதற்கேற்றாற் போல உடலை அசைத்து நடனமாடுவது. அதாவது உடற் பயிற்சி செய்வது.

இதனைக்கண்டு பிடித்தவர் டெக்சாஸ் நாட்டின் விமானப்படை மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவரான கென்னத் கூப்பர் (Kenneth H. Cooper).. இந்தப் பயிற்சி முதன் முதலில் வான் ஆராச்சியாளர்களிடம் பயன்படுத்தப் பட்டது. நாளடைவில் பொது மக்களுக்களிடம் பரவியது. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபதுகளின் இறுதியில் தொடங்கிய இந்த ஏரோபிக்ஸ் பயிற்சி டான்ஸ் ஏரோபிகஸ், ஸ்டெப்ஸ் ஏரோபிகஸ், நீர் ஏரோபிக்ஸ், ஸ்போட்ஸ் (விளையாட்டு) ஏரோபிக்ஸ் என்று பலவகைப்படும்.

ஸ்டெப்ஸ் ஏரோபிக்ஸ்

 http://i347.photobucket.com/albums/p466/poopydoopy92/aerobics.jpg
ஸ்டெப்ஸ் ஏரோபிக்ஸ் பெருமளவு கலோரிகளை எரிக்கவும்,  நேர்த்தியான உடல் அமைப்பிற்கும் தசைகளை வலுவூட்டவும் உதவுகிறது. இசையுடன் காலடி வைத்து செய்யும் உடற்பயிற்சி. பயிற்சியாளரின் உடல் வாகு, வேகத்தின் அடிப்படையில் நிமிடத்திற்கு 125 முதல் 140 அடிகள் வைத்து பயிற்சி செய்யும் அளவில் இசையோடு தாளம் இணைக்கப் பட்டிருக்கும்.

டான்ஸ் ஏரோபிக்ஸ்
http://www.oocities.org/wexlerschoolofmusic/images/JR_Hip_Hop_Class.jpg
டான்ஸ் ஏரோபிக்ஸ் வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் மேற்கொள்வதால் அழகிய உடல் தோற்றமும், முகவசீகரமும், மனமகிழ்ச்சியும் தன்னம்பிக்கையும் ஒர் மகிழ்ச்சியான அனுபவத்தின் வழியாக  கிட்டுகின்றன. உரிய பயிற்றுநரிடம் இப்பயிற்சியை மேற்கொண்டாலும் குடும்ப மருத்துவர் பச்சைக் கொடி காட்டிய பின்னே இப்பயிற்சியை மேற்கொள்வது நல்லது.

நீர் ஏரோபிக்ஸ்
http://i.pbase.com/g1/06/296006/2/116911633.0cibd7eR.jpg

மார்பு வரையும் அல்லது கழுத்து வரையும் நீரில் நின்று கொண்டு செய்யும் நீர் ஏரோபிக்ஸ் குறைந்த அளவு கலோரிகளை எரித்தாலும் இதய நோயில் இருந்து இதயத்தைப் பாதுக்காக்கிறதாம். நீர் உடற்பயிற்சிகள் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவி புரிகின்றன. இதனால் நாம் தினசரி வேலைகளைச் செய்யும்போது கூட உடல் உஷ்ணமடையாமல் பாதுகாக்கப்படுகிறது. குறிப்பாக நம் நாடு போன்ற உஷ்ணப் பிரதேசங்களில் நீர் உடற்பயிற்சி  இன்றியமையாதது என்கின்றனர். .

ஸ்போர்ட்ஸ் ஏரோபிக்ஸ்
http://www.dbb.org.au/schools/stleoscollege/SiteCollectionImages/aerobics.jpg
இந்த ஏரோபிக்ஸை ஏரோபிக்ஸ் ஜிம்னாஸ்டிக்ஸ் என்று கூறுவார்கள். இதுவும் இசையோடு கூடிய விளையாட்டுகள். இக்காலத்தின் உடல் ஊனமுற்றோருக்கும் பயன்படும் வகையில் ஏரோபிக்ஸ் பயிற்சி நிறு வந்துள்ளன. பள்ளிகளில் அநேகமாக விளையாட்டு விழாவில் முதலிடம் பிடிப்பது ஏரோபிக்ஸ்தான். ஒருவர் மீது ஒருவர் யானை, ஒட்டகம், தேர், கார் என்று பல வடிவங்களில் இசைக்கும் நேரத்தில் அமைத்து காண்போர் கண்களை ஆச்சரியத்தில் விரியச்செய்யும் கணகவர் காட்சியமைப்புகளுடன் ஏரோபிக்ஸ் விளையாட்டுப் பிரிவில் நுழைந்துள்ளது எனலாம்.

தூக்கம் வருவது இருக்கட்டும். ஏரோபிக்ஸ் செய்தால் எந்த வயதிலும் ஏர்ஹோஸ்டர்ஸ் மாதிரி சிக்குனு இருக்கலாம். முக்கியமாக இதய தசைகளை வலுவடையச் செய்கின்றன. இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது. உடலின் சக்தி அதிகரிக்கிறது. மனச்சோர்வு குறைகிறது. சர்க்கரை நோயாளிகள் ஏரோபிக்ஸ் செய்வதால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்குமாம். அதுமட்டுமல்ல. தாம்பத்திய உறவையும் பலப் படுத்துகிறதாம்.

இதை எழுதிக்கொண்டு இருக்கும்போதே என் கால்கள் லேசாக அடியெடுத்து வைக்க ஆரம்பித்து விட்டது. நீங்களும் தயாரா.. ஏரோபிக்ஸ் செய்ய...உடல் உறுதியுடன் இருக்க...நன்றாக உறங்க......


நன்றி குமுதம் ஹெல்த் ஸ்பெஷல்

10 கருத்துகள்:

  1. டாக்டரம்மாவுக்கு வணக்கம் ... நாளாச்சு வந்து ( நிங்களும்) ...
    உடற்பயிற்சி அத்தியாவசியத்தை உணர்ந்து போட்ட பதிவு ... இப்பெல்லாம் மக்களுக்கு , எதிலும் ஓரு துள்ளல் தேவைபடுகிறது .. வேர்வை ஒழுக சும்மா ஓடி நடந்து பயிற்சி செய் என்றால் சலித்து விடுகிறார்கள் ..பாட்டும் ஆட்டமுமாக இருந்தால் சலிக்காமல் தொடருவார்கள் ... உடல் நலமும் பேணப்படும் ....இங்கிருக்கும் வசதி கொண்டு, சில நாளாக நானும் காதில் ,,சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு பாட்டோடு,, ஒரே இடத்தில் வேகமாக நடந்து கொண்டிருக்கிறேன் ......

    பதிலளிநீக்கு
  2. அன்புள்ள பத்மநாபன்,
    நலமா? நம் நண்பர்கள் எல்லோரும் நலமாக இருப்பார்கள் என்று நம்புகின்றேன்.
    ஒரு வழியாக உங்கள் அனைவரது வாழ்த்துகளுடன் ஆய்வேடு சமர்ப்பித்து விட்டேன்.

    நண்பர்களைப் பார்க்கலாம் என்று ஓடோடி வந்தால் வலைவேகம் என் வேகத்திற்குத் தடை விதித்து விட்டது. ஒரு ம்ணி நேரம் போராடி இந்தப் பதிவுடன் திரும்பினேன். என்ன சிறப்புச் செய்திகள் பத்து சார்?

    இன்று என் நட்பை மீட்டுருவாக்க நண்பர்களின் வலைப்பூ உலா செல்ல உள்ளேன்... வலைக்கடவுள் காப்பாராக...

    பதிலளிநீக்கு
  3. என்னைப் போன்றவர்கள் எங்கே ஏரோபிக்ஸ் செய்வது.?
    ஆய்வேடு சமர்ப்பித்தாயிற்று. இனி வெற்றி விழா எடுக்கத் தயாராகுங்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. ஆய்வேடு சமர்பித்தமைக்கு வாழ்த்துக்கள் ...விரைவில் முனைவர் தகுதி பட்டம் வந்திட வாழ்த்துக்கள் ...அது தான் சிறப்பு செய்தி ....

    பதிலளிநீக்கு
  5. ஏரோபிக்சுல இத்தனையா? விவரங்களுக்கு நன்றி.
    welcome back.
    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் ஜி.என்.பி சார்.
    தங்கள் வாழ்த்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி பதமநாபன்.

    பதிலளிநீக்கு
  8. அன்புள்ள அப்பாதுரை,

    வருகைக்கு, வாழ்த்துக்கு, கருத்துக்கு மிக்க நன்றி..
    வார்த்தை கொடுத்தா அதைக் காப்பாத்தனுமாக்கும்.. ஆமா...

    பதிலளிநீக்கு
  9. வணக்கமும், வாழ்த்துக்களும் ஆதிரா.

    வணக்கம்- நீ......ண்ட இடைவெளிக்குப் பிறகு வந்ததற்கு.

    வாழ்த்துக்கள்- படிப்பு சார்ந்ததற்கு.

    //ஏரோபிக்ஸ் செய்தால் எந்த வயதிலும் ஏர்ஹோஸ்டர்ஸ் மாதிரி சிக்குனு இருக்கலாம்.//

    நீங்க “ஏஇ இந்தியா”, “ஏர் இந்தியா எக்ஸ்ப்ரெஸ்” - இதுகள்ள பயணம் செஞ்சதில்ல போலிருக்கு. ஒவ்வொரு பயணத்தின் போதும் உசுர கண்ணுல புடிச்சிக்கிட்டு வர்ர எங்களுக்குத் தானே தெரியும்.

    கட்டுரை படிக்க உற்சாகமாத்தான் இருக்கு. செய்யலாம்னா தான் கஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ட்ட்ட்டம்மா இருக்கு.




    //ஏரோபிக்ஸ் செய்தால் எந்த வயதிலும் ஏர்ஹோஸ்டர்ஸ் மாதிரி சிக்குனு இருக்கலாம்.//

    பதிலளிநீக்கு
  10. சத்ரியன்.. உங்களை ஏரோபிக்ஸ் செய்து சிக்குனு இருக்கச் சொன்னா நீங்க ஏன் ஏர்ஹோஸ்டையெல்லாம் கண்ணுக்குள்ள கொண்டு போகின்றீர்கள்? அப்பறம் உசிரைக் கண்ணுல பிடிச்சுட்டு வராம என்ன கையிலயா பிடிச்சுட்டு வர முடியும். இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியல?

    கஷ்டத்தைப் பார்த்தா அப்பறம் ஏர்ஹோஸ்டஸ் உங்களப் பார்க்க வேண்டாமா?

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி சத்ரியன். மீண்டும் தொடர்வோம் நட்பை, அன்பை.

    பதிலளிநீக்கு