“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

சனி, 15 ஜூன், 2013

இயக்குநர் மணிவண்ணன் கருப்புச் சட்டைக்குள் ஆர்ப்பரித்த வெள்ளை உள்ளம் அமைதி அடையட்டும்.




இயக்குநர் மணிவண்ணனின் இயற்கை எய்தியதினார் என்னும் செய்தி இதயத்துள் கனக்கிறது. ஒரு சில மணி நேரங்கள் அவருடன் பேசி, சிரித்து மகிழ்ந்ததை மனம் அசை போடுகிறது. அவர் என்னிடம் வைத்த வேண்டுகோளை நிறைவேற்ற முடியவில்லை. வருந்துகிறேன். குழந்தை மனத்துடன் பேசியதை, அவரது கைப்பேசியில் புகைப்படம் எடுத்த்க்கொண்டதை, “நான் படிக்காதவன்ம்மா, எனக்கு இலக்கியத்தில் இருக்கும் வைதீக முறைத் திருமணங்கள் எப்படி நடந்தன? முக்கியமாகக் கண்ணகி, சீதை, பாஞ்சாலி போன்றோரின் திருமணம் குறித்த செய்திகளை எழுதித் தாருங்கள். நான் நடத்தி வைக்கும் சுயமரியாதைத் திருமணங்களில் அதைப் பற்றி பேச வேண்டும்” என்று கேட்டுக்கொண்டதை எப்படி மறக்க? இரு திங்களுக்கு முன்னர் அழைத்து அடுத்த மாதம் தருகிறேன் என்று கூறினேன். மிகவும் வருந்துகிறேன். அந்தக் கருப்புச் சட்டைக்குள் ஆர்ப்பரித்த வெள்ளை உள்ளம் அமைதி அடையட்டும். அவருக்கு என் வீர வணக்கம்



இயக்குனர் மணிவண்ணைப் பற்றி..அந்த விழாவில் வாசித்த கவிதை.. இன்று கண்களின் நீர்த்தாரைகளுடன்....

கருஞ்சிறுத்தைக் கூட்டம் 
இவன் 
கன்னத் தாடி
கண்ணிரண்டும்???? 
கன்னி வெடி
என்ன முரண்? 
மணிவண்ணன் கருத்த மெய்யில் 
கலங்கமில்லா 
வெள்ளை உள்ளம்
வெள்ளித்திரை சிரிப்புக்கு..... 
பல்லே இவன் தான்!
நாவில்
சொல்லணையைக் க்ட்டி வைத்து 
நல்ல தமிழ் சிந்தனையை 
இயக்குகின்றான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக