நாட்டுக்கோழி, முட்டைக்கோழி, கரிக்கோழி, வெடக்கோழி, உஜாவால் கோழி, ஸ்வேதா கோழி, பியர்ல் கோழி, கினி கோழி(திரைப்படப் பாடலாசிரியர் ப. விஜயின் ஃபேவரேட்) கிரி=நிர்பீக், ஹிட்கரி, வனராஜா, கிரிஷிப்ரோ, அங்களேஷ்வர், அசீல், பர்சா, டங்கி, சிட்டாகாங், தவோதிகிர், காகஸ், ஹர்ரிங்காடா, கருப்பு கதக்நாத், காலஸ்தி, காஷ்மீர் பவிரோலா, மிரி நிக்கோபாரி, பஞ்சாப் பிரெளன், தெள்ளிச்சேரி, வான்கோழி, புரோக்கோளி.....
என்னங்க இது ஒரே கோழியா இருக்குன்னு கேக்கிறீர்களா? இதில் ஒன்று மட்டும் வித்தியாசமானது. சுத்தமான சைவ உணவு. கண்டுபிடிங்க பார்க்கலாம். ம்ம்ம்ம்ம்ம்ம் மிகச்சரியான பதில். சரியா கண்டு பிடிச்சிட்டீங்களே. அதுமட்டும் தான் கோழி இனம் அல்ல. காய்கறி இனம். ஆமாம் புரோக்கோளி (Broccoli) என்பது முட்டைக்கோஸ் குடும்பத்தில் அவதரித்த அடுத்த வாரிசு. அந்தக் குடும்பத்து காலிஃபிளவரும் இதுவும் கலர் மட்டும் கொஞ்சம் மாறுபட்ட டிவின்ஸ்ன்னு சொல்லலாம். இந்த இரட்டைக் குழந்தைகளுக்கு கொஞ்சம்தான் வேறுபாடு இருக்கும். ப்ரோக்கோளி பூ காலிஃப்ளவர் பூ போலவே இருக்கும். ப்ரோக்கோளியி அடர்பச்சை, பிரெளன் இரண்டு நிறத்திலும் இருக்கும்..
இதன் பிறப்பிடம் இத்தாலி என்பதால் இதனை இட்டாலிகா இனம் என்றும் கூறுவர். ப்ரோக்கோளி என்ற பெயரும் Broccolo என்ற இத்தாலிச் சொல்லில் இருந்து பிறந்ததே. இலத்தின் மொழியில் கிளை அல்லது கை என்ற பொருள் தரும் ப்ரோச்சியம் (brachium) என்ற சொல் மருவி ப்ரோக்கோளியாக உருமாறியது என்று இதற்குப் பெயர் வைத்த கதையைச் சொல்லுவார்கள் அந்தக் குழந்தைக்குச் தந்தையர் நாட்டுக்காரர்கள்..
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இத்தாலியில் பயிரான ஒரு தாவரம் இது. 1920 வரை அதிகம் மக்களால் பயன்படுத்தப் படாத இத்தாவரம் வழக்கம் போல இங்கிலாந்துக்குப் போய் அங்கிருந்து மீள் அறிமுகம் செய்யப்பட்டது. ஜெ.டி.ஸ்மித் என்பவரே இதனை எடுத்துச் சென்று உலகத்திற்குக் காட்டினார். இது குளிர்காலப்பயிர். குளிர்ச்சியான தட்பவெப்பநிலையில் பயிரடப்படும் இந்த புரோக்கோளியில் எண்ணற்ற சத்துப்பொருகள் நிறைந்துள்ளன. 100 கிராம் புரோக்கோளியில் உள்ள சத்துப் பொருட்களைப் பாருங்க,
கார்போஹைடிரேட்ஸ் 6.64 கிராம்,
சர்க்கரை 1.7 கிராம்,
நார்ச்சத்து 2.6 கிராம்,
நீர்ச்சத்து
89.30 கிராம்,
கொழுப்புச்சத்து
0.37 கிராம்,
புரதம் 2.82 கிராம,
சுண்ணாம்புச்சத்து 5%,
வைட்டமின் ஏ 3%,
வைட்டமின் சி 149%,
வைட்டமின் ஈ 5%,
இரும்புச்சத்து 6%,
மக்னீசியம் 6%,
பாஸ்பரஸ் 6%,
பொட்டாசியம் 7%,
சிங்க் 4%.
பீடா கரட்டின் 3%,
தயாமின் 5%,
ரிபோஃப்ளோவின் 8%
நியாசின் 4%
பேண்டொதேனிக் 11%
அடங்கியுள்ளன. இத்தனைச் சத்துக்களை விட்டு வைக்கலாமா சாப்பிடாமல்? அது என்னென்ன வேலைகளை நம்ம உடலில் செய்கிறது என்று பாருங்கள்.
புற்றுநோய் என்ற கொடுங்கோல் எமதர்மன் இன்ஃப்லமேஷன், ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸ், டெடாக்ஸ் என்ற மனித உடலில் நல்லாட்சி புரியும் மூவேந்தர்களை அடிமையாக்குவதன் மூலமாகத் தன் கடுகிய ஆட்சியைப் புரியத் தொடங்குவான். இவர்களைத் தன் படைபலத்தால் காத்தும், புற்று நோய்க் கிராதகனை இவர்களிடம் அண்ட விடாமலும் உடல்நாட்டைக் காக்கும் அருமையான பணியைச் செய்கிறது இந்த புரோக்கோளி. ஒவ்வொரு முறையும் இரண்டு முதல் மூன்று கப் ப்ரோக்கோளி வீதம் வாரத்திற்கு மூன்று முறை உணவில் சேர்த்து வந்தால் உடலின் எதிர்ப்புச்சக்தியை அதிகரிப்பதன் மூலம் புற்றுநோய்க் கிருமிகளை வ(ள)ரவிடாமல் தடுக்கலாம் என்கிறது தற்போதைய ஆய்வு முடிவுகள்.
ஆம், இதுவரை பல கோணங்களில் நடைபெற்ற ஏறத்தாள முந்நூறு ஆய்வுக்ளின் முடிவாக, ப்ரோக்கோளி புற்றுநோயை வராமல் தடுக்கும் மாபெரும் பணியை செய்கிறது என்கின்றனர் ஜெட் பாகே உள்ளிட்ட ஜான் காப்கின்ஸ் மருத்துவப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளகள் பலர்.
புற்று நோய்க்குச் சமமாக இன்றையச் சூழலில் மக்களை அதிகமாக அச்சுறுத்தி வரும் நோய் மாரடைப்பு. ப்ரோக்கோளியில் உள்ள பிகாம்ப்ளக்ஸும் வைட்டமின் எ,சி,ஈ, ஆகிய உயிர்ச்சத்துக்களும் இதய நோயிலிருந்தும் இதயத்தைக் காக்கிறதாம். உடனடி மாரடைப்பு வராமலும் தடுக்கிறதாம்.
தைராய்டு எனப்படும் முன்கழுத்துக் கழலைக்கு ப்ரோக்கோளி மிகச்சிறந்த மருந்தாகும் இதனைப் பச்சையாக தின்று வந்தால் தைராய்டு சுரப்பியின் செயற்பாடு கட்டுக்குள் இருக்குமாம்.
விழி பாதுகாப்புக்குத் தேவையாக வைட்டமின்கள் அனைத்தும் இதில் உள்ளதால் விழியைப் பாதுகாப்பதிலும் சிறந்த சேவையை ஆற்றுகிறதாம். முக்கியமாக காட்ராக்ட் வராமல் தடுக்கிறதாம்.
சூரிய ஒளியால் சருமத்தில் ஏற்படும் அலஜியையும் தடுக்கிறதாம். உடலில் அலர்ஜியை ஏற்படுத்தும் சரும நோய்க்கிருமிகளைக் குறைப்பதால் தோல்வியாதி உள்ளவர்களுக்கு மிகச்சிறந்த மருந்துப் பொருளாகிறது என்கிறது தற்போதைய ஆராய்ச்சி.
இரும்புச் சத்து அதிகம் உள்ள இந்த புரோகோலிக்கு அல்சர் நோய் வராமல் தடுக்கும் வல்லமையும் உண்டு.
பத்து கலோரி ப்ரோக்கோளியில் சுமார் 1கிராம் நார்ச்சத்து இருப்பதால் இது ஜீரணசக்தியை அதிகரிக்கும் நற்பணியைச் செய்யும் நல்ல தாவரமாகும். அதுமட்டுமல்ல ப்ரோக்கோளியைப் பச்சையாகப்ப் பயன்படுத்துவதால் வயிற்றில் தேவையற்று வளரும் சில தசைகளின் வளர்ச்சியைக் குறைக்கிறதாம்.
சிங்கும் வைட்டமின் ஈயும் நோய் எதிர்ப்பாற்றலைத் தருவதால் பல நோய்களில் இருந்து காப்பாற்ற இந்த இரு சத்தும் நிறைந்த ப்ரோக்கோளி பயன் படுகிறது.
ப்ரோக்கோளியைச் சமைக்கும் முறை. ஒன்றும் பெரிதாக இல்லை. காளிஃபிளவரை சமைக்கும் முறை அனைத்தும் ப்ரோக்கோளிக்கும் பொருந்தும். காளிஃப்ளவரைப் போலவே பூவிலிருந்து ஒவ்வொரு இதழாகப் பிரித்து கொள்ளவேண்டும். பெரிய இதழ்களாக (கொண்டைகளாக) இருந்தால் அவற்றைச் சிறிது சிறிதாக வெட்டிக்கொள்ளலாம். அதனை உப்பு போட்டுக் காய்ச்சிய வெந்நீரில் போட்டு கழுவிச் சுத்தம் செய்த பின்பு சமைக்க வேண்டும். காளிஃப்ளவரில் காணப்படுவது போல சிறு புழுக்கள் இதிலும் இருக்க வாய்ப்புள்ளதால். நீரில் வேகவைப்பதை விட ஆவியில்
வேகவைப்பது சரியான சமையல் முறை.
சரி.. இத்தனை பயன்பாடுகள் உள்ள இந்தக் கோளி இங்கு கிடைக்குமா என்றால்..... கண்டிப்பாக கிடைக்கிறது. பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட இந்தக்கோளி விமானத்தில் பயணித்து சென்னை நீல்கிரிஸ், ரிலையன்ஸ் போன்ற கடை வரைக்கும் வந்து விட்டது. பிற இடங்களில் தெரியவில்லை. சென்னை வாசிகளெல்லாம் எப்பொழுதோ சாப்பிடவும் ஆரம்பித்து விட்டார்கள்.
ஒரு
முக்கியமான செய்திங்க.. இதை மறந்திடாதீங்க.. இதனை குளிர்ச்சாதனப்
பெட்டியில் வைத்து பத்து நாட்கள் வரை பயன்படுத்தலாம். ஆனால் வைக்கும்
போது நீரில் கழுவிவிட்டு வைக்கக் கூடாது. ஏனெனில் நீர் இதனைக் கெட்டுப்போக
வைக்கும். அதே போல பிரித்து வைத்த ப்ரோக்கோளியை இரண்டு நாட்களுக்கு மேல்
பயன்படுத்தாமல் இருப்பதும் நல்லது.
கறிக்கோழி, முட்டைக்கோழி, வெடக்கோழி கினிக்கோழியெல்லாம் சாப்பிடும் போது இந்தப் ப்ரோக்கோளி மட்டும் என்ன பாவம் பண்ணிச்சு.. எத்தனையோ சாப்பிட்டுட்டோம்....இதையும் சாப்பிட்டு வைக்கலாமே.... நாங்க தொடங்கிட்டோம்...... நீங்க??....
ஓஓஓ நீங்க அப்படி வரீங்களா? தங்கம் விலைதான் கண்ணாபின்னான்னு ஏறியிருக்கே.. இதை இப்படி கூட பயன்படுத்தலாம்னு மேலே இருக்கற படத்தைப் பார்த்து நீங்களும் முடிவெடுத்துட்டீங்க...... ரோட்டுல யாராவது புரோக்கோளின்னு உங்களைக் கூப்பிட்டா நான் பொறுப்பு இல்லைங்க......
பின்னாடி யாரோ புரோக்க்கோளின்னு கூப்பிடற மாதிரி இருக்கே.... ஐயோ... சாமி...அது நான் இல்லப்பா...... ஆளை விடுங்க.........
நன்றி குமுதம் ஹெல்த் ஸ்பெஷல்
கறிக்கோழி, முட்டைக்கோழி, வெடக்கோழி கினிக்கோழியெல்லாம் சாப்பிடும் போது இந்தப் ப்ரோக்கோளி மட்டும் என்ன பாவம் பண்ணிச்சு.. எத்தனையோ சாப்பிட்டுட்டோம்....இதையும் சாப்பிட்டு வைக்கலாமே.... நாங்க தொடங்கிட்டோம்...... நீங்க??....
ஓஓஓ நீங்க அப்படி வரீங்களா? தங்கம் விலைதான் கண்ணாபின்னான்னு ஏறியிருக்கே.. இதை இப்படி கூட பயன்படுத்தலாம்னு மேலே இருக்கற படத்தைப் பார்த்து நீங்களும் முடிவெடுத்துட்டீங்க...... ரோட்டுல யாராவது புரோக்கோளின்னு உங்களைக் கூப்பிட்டா நான் பொறுப்பு இல்லைங்க......
பின்னாடி யாரோ புரோக்க்கோளின்னு கூப்பிடற மாதிரி இருக்கே.... ஐயோ... சாமி...அது நான் இல்லப்பா...... ஆளை விடுங்க.........
நன்றி குமுதம் ஹெல்த் ஸ்பெஷல்
இந்தியாவில் மலைப்பிரதேசம்/கேரளாவில் broccoli பண்ணைகள் இல்லையா?
பதிலளிநீக்குஇல்லை அப்பா துரை அவர்களே. நலமா?
பதிலளிநீக்குநலமே.
பதிலளிநீக்குசமீபத்தில் ஒரு வாரச் சென்னைப் பயணம் வந்திருந்தேன். நெருக்கடியில் உங்கள் தொலைபேசி விவரம் கேட்க மறந்துவிட்டது. எலிக்குப் பயந்து உங்களைச் சந்திக்க முடியாவிட்டாலும் உங்களுடன் பேசியிருக்கலாம். அடுத்த பயணத்தில் அவசியம் சந்திக்க விரும்புகிறேன்.
அன்புள்ள அப்பாதுரை,
பதிலளிநீக்குஇப்படி செய்து விட்டீர்களே. ஒரு வார்த்தை சொல்லிட்டு வந்திருக்கக் கூடாதா?
தங்களை.... கோபம் கோபமாக... போங்க...
//குறைந்தபட்சம் பேசியாவது இருக்கலாம்// ...ம்ம்ம்ம்ம்ம்
அதுக்குக் கூட கொடுத்த வைக்கவில்லையே...
சரி அடுத்த முறை எப்போது? பேச.. பார்க்க.. ஆவலுடன்...
நன்றி அருமை
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கு நன்றி தமிழர்களின் சிந்தனைக்களம்.
பதிலளிநீக்குகுளிர்பெட்டியிலும் தீந்து போயிடுச்சுங்க. பின்னே? மூணு பத்து நாளாயிருச்சுல்ல?
பதிலளிநீக்குசாப்பிட்ட புராக்கோளி செறிச்சு செல்லாப் போயிருச்சு தாயி!
பதிலளிநீக்குஹா ஹா ஹா ஹா
பதிலளிநீக்குஅன்பு அப்பாதுரை...
என்ன ஆச்சு????
இருங்க இருங்க... உங்களுக்காக ஒரு கினிக்கொழியை (ஐஸ்.. மாதிரி) சமச்சு சுடச்சுடத் தரேன்...
இருக்கீங்களா.. அம்பேல்னு குரல் கேட்டுச்சு அதான்..
பதிலளிநீக்குப்ளீஸ் அப்பாதுரை அப்படியெல்லாம் சொல்லாதீங்க... அப்பறம் நான் அழுதுவிடுவேன். எப்ப வரும் எப்ப வரும் உங்களோடவெல்லாம் அளவாளாவும் நாள் என்று ஏங்கிக்கொண்டு இருக்கிறேன். விரைவில் வந்து விடுவேன்.
பதிலளிநீக்குசமீபகாலமாக சரண்யாவுடன் வாழ்ந்து வருகின்றேன். சாரி "ஹெ" க்கு பதில் "ச" வந்து விட்டது. தங்கள் கைவசம் ஏதும் மருந்துண்டா?
பதிலளிநீக்குஎன்ன புல்லாங்குழலில் பக்கமே உங்களை காணவில்லை.
உங்கள் தளத்தின் மூலம் என் பள்ளித் தோழன் ஸ்டீஃபன் ராஜை மீண்டும் தொடர்பு கொண்டான். நன்றி!
வாருங்கள் ஓ நூருல்,
பதிலளிநீக்குமிக்க மகிழ்ச்சியாக உள்ளது. ஸ்டீவ் பலமுறை தங்களை மீண்டும் தொடர்பு கொள்ள முடிந்ததை, சந்தித்து மகிழ்ந்ததைக் கூறி மகிழ்ந்திருக்கிறார். எனக்கும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.
அது சரி யாரொ ஒருவருடன் வாழ்ந்து வருவதாகக் கூறியிருக்கிறீர்களே... வீட்டம்மாகிட்ட போட்டுக் குடுத்துடலாமா...
கொஞ்சம் பொறுத்துக்கோங்க நண்பரே மருந்தோடு வரேன்...
/அது சரி யாரொ ஒருவருடன் வாழ்ந்து வருவதாகக் கூறியிருக்கிறீர்களே... வீட்டம்மாகிட்ட போட்டுக் குடுத்துடலாமா.../
பதிலளிநீக்குவீட்டுக்காரம்மாவிடம் கேட்டேன். 'ஹெ' க்கு பதில் 'ச'வாக இருந்தால் நானே உருட்டு கட்டை வைத்தியம் செய்து விடுவேன். 'ஹெ'க்கு வைத்தியர் அக்காவையே கேளுங்கள் என பதில் சொல்கின்றாள்.
காத்திருக்கின்றேன்.
:) :) பின்னூட்டங்கள்.
பதிலளிநீக்குஅன்பு நூருல் அமீன்,
பதிலளிநீக்குஅந்த பயம் இருந்தா சரி.
இனி எந்த இடத்திலாயவது ‘ச’ ன்னு சத்தம் வரும்!!!!!
அப்பாதுரை சார்,
பதிலளிநீக்குஅதெல்லாம் சும்ம்மாஆஆஅ... கலாட்டாதான்...
சரி எப்ப சென்னை வலம்?
அடுத்த மாதம் (வசதியான பதில்)
பதிலளிநீக்கு