“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

புதன், 12 ஜனவரி, 2011

விரும்பாத விடுப்பு விண்ணப்பம்


அன்பான் என் உறவுகளே,

என் முனைவர் பட்ட ஆய்வு முடிவுறும் நிலையில் இருப்பதால் கூடுதல் பணி காரணமாகஉங்கள் அனைவரிடமிருந்து, உங்களின் அனுமதியுடனும் அன்பான வாழ்த்துக்களுடனும் ஒரே ஒரு மாதம் மட்டும் விடைபெறுகிறேன்.
ப்ளீஸ் என்னை மறந்துடாதீங்கப்பா...

மீண்டும்
வரும்வரை பசுமையான நினைவுகளுடன்....

அன்புடன்..
ஆதிரா
..

33 கருத்துகள்:

  1. முனைவர் பட்ட ஆராய்ச்சியை சிறப்பாக முடித்து வாருங்கள்...வாழ்த்துக்கள் டாக்டர் ஆதிரா..

    உங்கள் தமிழும் நலமும் கூடிய பதிவுகள் என்றும் நினைவில் நிற்பவை...

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்... பொங்கலோடு உங்கள் ஆய்வும் இனிக்கட்டும்

    பதிலளிநீக்கு
  2. அன்பான தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி பத்மநாபன். ஆய்வேடு ஒப்படைக்கும் முன்பே டாக்டர் பட்டம். கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் கரும்பாக இனிக்கும் தைப்பொங்கல் நல் வாழ்த்துக்கள் பத்மநாபன்.

    பதிலளிநீக்கு
  3. இனிய பொங்கல் வாழ்துக்களுடன் வெற்றி பெறவும் ஆண்டவனை வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  4. இனிய பொங்கல் வாழ்த்துகள்!உங்கள் முனைவர் ஆய்வுப் பணி சிறப்புடன் நடைபெற வாழ்த்துக்கள்!

    Kurinji kathambam
    குறிஞ்சி குடில்

    பதிலளிநீக்கு
  5. நான் படித்து
    இதுவரை...
    பட்டம் பெறாதவன்
    என்றபோதினும்...
    புலமைப் பட்டம்
    நாளை...
    நீங்கள்பெறுவதை இன்றே
    கண்களில்...
    காணாமல் கண்டு
    மகிழ்ந்துக்கொண்டு...

    வாழ்த்த வயது இல்லாமல் போனாலும்... பட்டம் பெறுவதை காண காத்துக்கொண்டு... இறைவனிடம் வணங்கிகொண்டு...

    பதிலளிநீக்கு
  6. வாழ்த்துக்கள் வருங்கால டாக்டர் ஆதிரா :-)

    பதிலளிநீக்கு
  7. மிக்க நன்றி புவனேஸ்வரி ராமநாதன். உங்களுக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. மிக்க நன்றி G.M Balasubramaniam ஐயா. உங்கள் ஆசி கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. வெற்றி பெறும் நம்பிக்கையுடன்..உங்களுக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. தமிழ்க்கடவுளின் நிலத்தில் இருந்து வந்து வாழ்த்தியுள்ளீர்கள். மிக்க நன்றி குறிஞ்சி. தங்களுக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. //நான் படித்து
    இதுவரை...
    பட்டம் பெறாதவன்
    என்றபோதினும்...
    புலமைப் பட்டம்
    நாளை...
    நீங்கள்பெறுவதை இன்றே
    கண்களில்...
    காணாமல் கண்டு
    மகிழ்ந்துக்கொண்டு...//

    படித்ததனால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு. பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டே..

    வாசன் அன்பான உங்கள் வாழ்த்துக்கு நன்றி என்ற ஒரு சொல் போதாது. இறைவனிடம் எனக்காக வேண்டும் அந்த அன்பு உள்ளத்திற்கு எப்படி நன்றி சொல்வது? என்றும் இதே அன்புடன்... பாசத்துடன்... இருக்க ஆண்டவனைப் பிராத்தித்துக் கொண்டு....

    பதிலளிநீக்கு
  11. அன்புள்ள அமைதிச்சாரல்,
    தேர்வு எழுதும் முன்னே ரிசல்ட்... பட்டம்.. மனம் மகிழ்ச்சியில் துள்ளுகிறது.. வாழ்த்துக்கு மிக்க நன்றி..அமைதிச்சாரல்..

    பதிலளிநீக்கு
  12. //அப்பாதுரை சொன்னது…

    யாருங்க நீங்க? :)//

    என்ன அப்பாதுரை சார், கொஞ்ச நாள் வரவில்லை என்றதும் மறந்துவிட்டீர்களா?

    ஆதிராவை அழவைக்கனுமா... மறுபடியும் வந்து உங்க கரப்பான் பூச்சியைப் படித்துச் சுவைக்க வேண்டாமா?


    வாழ்த்துக்கு நன்றி அப்பாதுரை.

    பதிலளிநீக்கு
  13. உங்கள மறக்குறதாவது... அருமையா எழுதுறதோட ஒரு பதிவுக்கு வேற ஐடியா கொடுத்தீங்க.. சும்மா நன்றியோட கிண்டல் செஞ்சேங்க. பொழுது போக வேண்டாமா?

    மனமார்ந்த வாழ்த்துக்கள். முனைவர் பட்டம் அதன் பின்னே புதைந்திருக்கும் ஆழ்ந்த சிந்தனைக்கும் அநியாய உழைப்புக்கும் சிறிய அளவில் ஒரு சான்று. (அசல் டாக்டர் பட்டம் வேறே. உங்களைத் தெரியும்னு சொல்லிக்க அனுமதி கொடுத்தாலே போதும்)

    பதிலளிநீக்கு
  14. நான் அடிக்கடி உங்கள் பதிவுக்கு வந்து பார்த்து விட்டு ஏமாந்து பிறகு கணபதியின் அந்த ஆட்டத்தை ஒருமுறை ரசித்து விட்டு போவது வழக்கம். நீங்கள் மறுபடியும் வந்து நீங்கள் படிக்காமல் போன என் எல்லா கவிதைகளையும் படித்து விமர்சிக்க வேண்டும் என்பது என் அவா. (உங்களை விட்டா இந்த ஏழை கவிஞனுக்கு யார் கிடைப்பார் ?)

    பதிலளிநீக்கு
  15. மிக்க நன்றி ஆதிரா ... நீங்கள் முனைவர் பட்டம் பெற மனமார்ந்த வாழ்த்துகள் ..

    பதிலளிநீக்கு
  16. அப்பாதுரை சார்,
    உங்க கிண்டலை நானறிய மாட்டேனா.. நானும் சும்ம்ம்ம்ம்ம்மா ஒரு விளையாட்டுக்குத்தான் அழவேன்னு சொன்னேன்...

    அது என்ன உழைப்பு... அனுமதி அது இதுன்னு??

    டெல்லிக்கு ராஜா ஆனாலும் தல்லிக்கு (அப்பா[துரை]க்கும்)பிள்ளைதானே.. அது வேற.. இது வேற ..(இதுவும் ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சும்ம்ம்மா வெளாட்டுக்கு)

    உங்க எல்லோருடைய அன்பு மட்டுமே பெரிய பட்டம்.. அதுதான் எனக்கு என்றும் மகிழ்ச்சி கொடுப்பதும்..

    தீசிஸ் சீக்கிரம் சப்மிட் செய்யனும்னு வேண்டிக்கோங்க அப்பாதுரை.. எனக்காக..ப்ளீஸ்..

    பதிலளிநீக்கு
  17. அன்பு சிவா,

    ஏழைக்கவிஞனா? அது யாரு?


    ஓஒ ஏழைகளைப் பாடுகிற கவிஞர்னு சொல்றீங்களா..ரொம்பச் சரிதான்.. அவங்கதான் கவிதை உலகில் நிலைத்த புகழ்(இடம்) பெறுவார்கள்.. பாரதி, பாரதிதாசன், பட்டுக்கோட்டை மாதிரி...

    கொஞ்ச நாள் தான். முதல்முதலாக வந்த போது ஒரே மூச்சில் உங்க எல்லா கவிதைகளையும் படித்த மாதிரி வந்தவுடன் படிச்சிட மாட்டேனா..

    பதிலளிநீக்கு
  18. முதல் முதலில் இல்லை இரண்டாம் முறை வந்தமைக்கும், கருத்து பதிந்தமைக்கும், என்னை வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி விஜய்..

    பதிலளிநீக்கு
  19. சாய் சார்,
    உங்க எழுத்தையெல்லாம் ஒரு மாதம் கழித்து வந்த் கண்டிப்பா படிச்சிடுவேன். ஏன்னா ஒரே ஒரு பதிவைப் பார்த்துட்டு வந்த வைபிரேஷன் இன்னும் இருக்கு.. அவ்வளவு எளிய, எதார்த்தமான எழுத்து..

    வாழ்த்தியமைக்கும் இப்போதே டாக்டர் ஆக்கிப் பார்க்கும் தங்கள் அன்புக்கும் மிக்க நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  20. அப்ப.. உழைப்பெல்லாம் இல்லிங்களா? சரிதான்.. என்னவோ நீங்க 'அரும்பாடுபட்டு அறிவுக்கிணறு வெட்டி அல்லலுறும்' ஆதிரானு இல்ல நெனச்சுகிட்டிருக்கோம்?

    பதிலளிநீக்கு
  21. ஆஹா மாட்டிக்கிட்டியே ஆதிரா.. வாயைக் கொடுத்து..

    விட்டுருங்க... ஆமா.. ஆமா... அப்பரம்..நாநாநா அலுதுருவேன்....

    பதிலளிநீக்கு
  22. முனைவர் ஆய்வுப் பணி சிறப்புடன் நடைபெற வாழ்த்துக்கள்!
    வந்ததும் தொடங்கிடுவோம் நம்ம ஆட்டத்தை ஓகேவா..

    பதிலளிநீக்கு
  23. வாங்க மலிக்கா..
    முதன் முதல் வந்தவுடனே வாழ்த்தியிருக்கீங்க. முதல் வரவு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. முதல் கால்தடம், முதல் கைத்தடம், முதல் வாழ்த்து ஆகிய மூன்றுக்கும் நன்றி.

    அத்தோட ஆட்டம் தொடங்கிடுவோம்னு உற்சாகமா குரல் கொடுத்து வந்திருக்கீங்க. கொஞ்ச நாள்தான் வந்துடுறேன்.. ஆட்டம் போடுவோம்..என்றும் அன்புடன்..

    பதிலளிநீக்கு
  24. தாங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்கள்..
    http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_05.html

    பதிலளிநீக்கு
  25. முதல் வருகையிலேயே எங்கள கவர்ந்ததுமில்லாம.. எங்களைக் கவர்ந்துகொண்டு போய் வலைச்சரத்துல அறிமுகம் வேற செய்து இருக்கீங்க.. எப்படி நன்றி சொல்ல... நன்றி... நன்றி...

    பதிலளிநீக்கு
  26. ஆதிரா,

    பட்டம் பெற்றிட வாழ்த்துகள்.

    நீங்க கேட்ட ஒரு மாசம் முடிஞ்சு போச்சு. எப்ப வருவீங்க?

    பதிலளிநீக்கு
  27. அன்புள்ள அப்பாதுரை,
    சும்மா எட்டிப்பார்த்துட்டுப் போகும் உங்கள் அன்புக்கு எப்படி நன்றி சொல்ல.......
    சீக்கிரம் வந்துவிடுகிறேன்.. கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள்..

    பதிலளிநீக்கு
  28. அன்புள்ள சத்ரியன்,
    தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். வாழ்த்துக்கு நன்றி சதிரியன்.

    இன்னும் ஒருமாதம் என் விடுப்பை நீட்டித்துக்கொள்ள அனுமதி தருமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு