இந்த மழை விட்ட மாதிரி இருந்தது. ஆனா மறுபடியும் பெய்யத் தொடங்கி விட்டது. மழை வந்தா உடனே கூட வர்ற நண்பர்கள் கொசுத்தொல்லை. அடுத்தது கொசுவால ஏற்படர வைரஸ் காய்ச்சல். சென்னை மாதிரி மாநகராட்சிகளில் தண்ணிர் போக சுரங்கச் சாக்கடை உள்ளது. ஆனால் தண்ணீர் போனால்தானே! சாதாரணமாகவே அடைத்துக் கொண்டு குளமாகத் தண்ணீர் தேங்கி இருக்கும். இந்தக் குளத்தில் கால்களைக் கழுவிக் கொண்டு வந்தாலே மக்களுக்கு மோட்சம். நகரத்துல வாழ்கின்ற நம்மை எதெல்லாம் பயப்படுத்துதுன்னு பாருங்க..
இப்போ புதுசா இது வேற. லெப்டோஸ்பைரோசிஸ் (Saprophytic). இதுவும் ஒரு புது விதமான் தொற்று நோய். லெப்டோஸ்பைரா அல்லது ஸ்பைரோகீட் எனும் கிருமியால் (பாக்டீரியா) இந்நோய் ஏற்படுகிறதாம். பன்றிகள், கோழிகள் எல்லாம் கொடுத்த ட்ரீட் போதாதுன்னு இப்ப கிளம்பிடுச்சுங்க, எலிங்களும், பெருச்சாளிங்களும். எலி, பெருச்சாளி, பன்றி போன்ற கழிவு நீர் தேக்கங்களில் வாழும் பிராணிகள் கழிக்கும் சிறுநீரில் இருந்து இந்தக் கிருமி வெளியேறி, கழிவு நீரில் கலக்கிறதாம். மழைக்காலத்தில், குறிப்பாக நகரங்களில் ஆங்காங்கு தேங்கும் மழை நீருடன், கழிவு நீர், சாக்கடை நீர் கலக்கும்போது, அதில் இந்த பாக்டீரியாவும் கலந்துவிடுகிறதாம்.
மெல்லிய மிருதுவான தோலுள்ள பகுதிகளான மூக்கு, வாய் மற்றும் கண்கள். நீரில் ஊறிய மிருதுவான தோல் பகுதிகள் கால் மற்றும் கைகளில் விரல் இடுக்குகள். முக்கியமாக தேங்கிய நீரில் நாம் நடக்கும்போது, நமது காலில் உள்ள தோல் வெடிப்புகள் அல்லது சிறு காயங்கள் மூலமாக நமது இரத்த நாளங்களிலும் இந்த பாக்டீரியா நுழைகிறது. இந்த பாக்டீரியா இரத்தத்தில் கலந்து பெருகி, ஒரு வாரம் முதல் 10 நாட்கள் கடந்த பிறகு நமக்கு காய்ச்சல் ஏற்படும். அதனை வெறும் காய்ச்சல்தானே என்று அதற்காக ஒரு மாத்திரை வாங்கி போட்டுக்கொண்டு அல்லது ஒரு ஊசியைப் போட்டுக்கொண்டு மறந்துவிட்டோமானால் அதுவே விபரீதமாகிவிடும் என்று அச்சுறுத்துகின்றனர் மருத்துவர்கள்.
சரி இதற்கு அறிகுறி என்ன என்று கேட்கிறீர்களா? ஆரம்பத்தில் சாதாரண காய்ச்சலாக இருந்து நிலை மாறி, தலை வலி, கண் பாதிப்பு (கண்கள் இரத்தத்தால் தோய்ந்ததுபோல் சிவந்துவிடும்), உடம்பு வலி, களைப்பு, வாந்தி வருவது போன்ற உணர்வு, 102 டிகிரியைத் தாண்டும் காய்ச்சல் என்று ஏற்பட்டால், அது லெப்டோஸ்பைரோசிஸ் ஆக இருக்கலாம் என்று நீங்கள் முடிவு செய்ய மருத்துவரை அணுக வேண்டும்.
அதுமட்டுமில்லங்க. பல இணைய தளங்கள் கடுமையான எச்சரிக்கை இதற்கு விடுத்துள்ளன. கடுமையான மூச்சடைப்பு, சிறுநீரக செயலிழப்பு, காமாலை ஆகியன ஏற்படும் என்றும், இந்த நோய் தாக்கிய சில நாளில் வாய், மூக்கின் வழியாக இரத்தம் வெளியேறுதல், இதய இயக்கம் பாதிப்பு, உள் இரத்தக் கசிவு ஆகியன ஏற்படும் அபாயம் உள்ளதென லெப்டோஸ்பைரோசிஸ் நோய் தொடர்பான விழுப்புணர்வை ஏற்படுத்தும் மருத்துவ இணையத் தளம் எச்சரிக்கிறது
எச்சரிக்கை விடுத்தா போதுமா? என்னதான் செய்யச்சொல்றீங்கன்னு கேக்கறீங்களா? அப்படி கேளுங்க.. முடிஞ்சவரைக்கும் மழைக்காலத்தில் தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் நடக்கறதைத் தவிர்த்திடுங்க. கால்களில் காயமோ, ஆறாத புண் இருந்தா, காயத்தை மருந்து போட்டு நல்ல மூடிய பின்னே வெளியே இறங்குங்க. வீட்டிற்குத் திரும்பிய உடனே வெந்நீரால் கால்களை நல்ல சுத்தமா கழுவிடுங்க. மழைக்காலத்தில் கண்டிப்பா நல்ல சூடான வெந்நீரில் குளிங்க.. நீங்க இருக்கற இடத்துல எலி, பெருச்சாளிங்களுக்கு NO ENTRY போர்டை மாட்டிடுங்க.
எல்லாத்துக்கும் சுவையான தகவல் கொடுத்தாத்தானே நீங்க விரும்புவீங்க.. டேன்ஞ்சரசான இந்த நோய்க்கு வெளிநாட்டுல என்ன பேரு தெரியுமா? நகர்ப்புற நோயாம். அதாவது சிட்டி டிசீஸாம். வேறு ஒரு அவசரத் தகவலோட மறுபடியும் உங்கள சந்திக்கட்டா... அதுவரைக்கும் டாடா...... ஜூட்............
சின்ன வயசுல மோடி மஸ்தான் வாயிலும் மூக்கிலும் ரத்தம் வரும்னு சொல்லி பயமுறுத்தினது நினைவுக்கு வருது.
பதிலளிநீக்குஆமாம் சென்னைல இங்கிலிபிசு தெரிஞ்ச எலிங்க நடமாடுதுங்களா? :)
சரிங்க டாக்டர்! தெரிஞ்சுகிட்டோம்! ;-) ;-)
பதிலளிநீக்குநானும் கேள்விப் பட்டேன்...தெளிவாக விழிப்புணர்வு எற்படுத்தி விட்டீர்கள்..இதுக்கு எச்சரிக்கை தடுப்பூசி மருந்து இருக்கிறதா....
பதிலளிநீக்குஆய்வேடு சமர்ப்பிக்கும் முன்னேரே மருத்துவம் ஆரம்பிச்சுட்டிங்க
லெப்டோஸ்பைரோசிஸ் எலி ஜுரம் என்றும் அழைக்கப்படுகிறது. ஆமாம், இதற்கு எல்லாஇடங்களிலும் மருந்து கிடைப்பதில்லையாமே.
பதிலளிநீக்குஅருமையான தேவையான கட்டுரை..நன்றி பகிர்வுக்கு.
பதிலளிநீக்குஎப்பா நான் மோடி மஸ்தான் இல்லப்பா... எங்க ஊரு எலிங்கல்லாம் கான்வெண்ட்ல படிச்சுட்டுத்தான் வேலை வெட்டி இல்லாம சுத்துது. கருத்துப் பகிர்வுக்கு நன்றி அப்பாதுரை.
பதிலளிநீக்குநன்றி ஆர்.வி.எஸ்.
பதிலளிநீக்குஅது ஒரு புறம் வேலை நடந்து கொண்டு இருக்கிறது. இதுவும்....
பதிலளிநீக்குஎச்சரிக்கை தடுப்பு மருந்து உள்ளதா என்று மருத்துவரிடம் கேட்டுச் சொல்கிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பத்மநாபன் சார்.
அன்புள்ள G.M Balasubramaniam ஐயா,
பதிலளிநீக்குஆமாம் மருந்து எல்லா இடங்களிலும் கிடைப்பதில்லையாம். மிக்க நன்றி ஐயா பார்த்ததற்கு, பகர்ந்ததற்கு..
வேடந்தாங்கலில் இருந்து வந்து கருத்துச் சொல்லி இருக்கிறீர்கள். தங்கள் முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே.
பதிலளிநீக்குபாருங்க எப்படி புதுசு புதுசா நோய கண்டு பிடிக்கிறாங்கன்னு எனக்கு பிரச்சனை இல்லப்பா ஏன்னா நா இருக்குற இடத்துலதான் மழையே கிடையாதே...
பதிலளிநீக்குசரி அதெல்லாம் இருக்கட்டும் எலிகளுக்கு நாங்க நோஎன்ட்ரி போர்டு (!!!) மாட்டிருவோம், நீங்க எப்படி மாட்டுவீங்க அதுக உங்களுக்குத்தான் க்ளோஸ்! பிரண்ட்ஸ் களாச்சே!!!! ஹிஹிஹி
வாங்க இசையன்பன் தம்பி,
பதிலளிநீக்குஇதச் சொல்ல வந்தீகளாக்கும்... ஆமா உங்க வீட்டுப் புள்ளங்களுக்கு நீங்க நோ எண்ட்ரி போர்ட் மாட்டுவீங்களா? அதுங்க எங்க வூட்டு செல்லப் புள்ளங்க... அதுங்கள விட்டு நாங்களா... எப்படி முடியும்? போர்டெல்லாம் எங்க வீட்டுக்கு வேண்டாம்...
இப்படியெல்லாம் புள்ளங்களப் பாத்துச் சொன்னதாலதான் நீங்க மழையே இல்லாத இடத்துல இருக்கீங்க..(சும்மாஆஆஆஆஆஅ)
நன்றி இசையன்பன்.. கொஞ்ச நாள்... வந்து இன்னும் கொட்டம் அடிக்கலாம்....
தங்களைப்பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். நேரம் இருக்கும் பொது வந்து பார்க்கவும்
பதிலளிநீக்குபாரி தாண்டவமூர்த்தி
http://blogintamil.blogspot.com/2011/03/2.html
அன்புள்ள பாரி தாண்டவ மூர்த்தி,
பதிலளிநீக்குமுதலில் தாமதமான நன்றி அறிவித்தலுக்கு மன்னிக்கவும்.
சில நாட்களாக (சொந்த ஊர் சென்றிருந்ததால்) வலைப்பூப் பக்கம் எட்டிப் பார்க்கக் கூட முடியவில்லை. வந்து பார்த்தால் இன்ப அதிர்ச்சி. என் வலைப்பூவும் வலைச்சரத்தில் இடம் பிடித்துள்ளது. அதுவும் இரண்டாவது முறையாக. மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. எப்படி நன்றி சொல்ல.. இதயகரம் மலர்த்தூவ, இயல்புக்கரம் எழுந்து கூம்பி விழிக்கரங்கள் மழை தூவி இங்கிருந்தே சொல்கிறது நன்றியெனும் உச்சாடனத்தை. நன்றி! நன்றி!நன்றி! நன்றி!நன்றி! நன்றி!நன்றி! நன்றி!நன்றி! நன்றி!
ஒரு முறை அத்தனை வலைப்பூக்களின் மணத்தையும் நுகர்ந்தேன். மிக நல்ல தேர்வு. பல விதமான பூக்களின் நறுமணத்தை நுகரச்செய்த தங்களுக்கு மிக்க நன்றி.