“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

புதன், 18 ஆகஸ்ட், 2010

இதயத்துக்குக் கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை).

http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcSH1aZa5GOLwW3MSg_BHe7m0djyYRlN3Hl7VebWvBdFuXn7vpo&t=1&usg=__rxKeZ4oUdE9mGRuvGg1JxTctoaw=

காலையில் தினமும் கண்விழித்தவுடன் கும்பிடும் தெய்வம் இது. இன்னும் பொருத்தமாகக் கூற வேண்டுமானால் கண் விழிக்கும் முன் மூக்கால் கண்டு (நுகர்ந்து) கும்பிடும் தெய்வம் என்றும் கூறலாம். எத்துனை முக்கியமானதாக இது இருந்திருந்தால் இதற்கென டீ டைம் என்று இரு நேரத்தை காலையிலும் மாலையிலும் ஒதுக்கி வைத்திருப்பர் எல்லா வேலை இடங்களிலும். எந்த இடத்திற்குப் போனாலும் எது கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் இது கிடைக்காமல் இருக்கவே இருக்காது. அவ்வாறு எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது இது. வாழ்வில் மக்கள் உற்சாகமாகவும் ஊக்கமாகவும் செயல்பட உதவிடும் காரணிகளில் முக்கியமானது இது.. இல்லம் தொடங்கி, பணி புரியும் அலுவலகங்கள் மட்டுமன்றி ஓட்டுநர், நடத்துநர், இழுப்பவர்(வண்டி) சாதி மதம் பாட்டாளி, பணக்காரன் என்று பேதமின்றி அனைவருக்கும் சக்தி கொடுக்கும் ஒரே பாணம் இது. முக்கியமாகப் பாட்டாளிகளின் ஊக்க டானிக் இது. அலுவலங்களில் பலரின் வெளிநடப்புக்கும் அதே வேளையில் விரைவான பணி முடிப்புக்கும் பெரிதும் உதவுவது இதுவே. அதுதான் டீ என்று நம்மால் விரும்பி அழைக்கபடும் தேயிலை. பச்சைத்தேயிலைக்குப் பச்சைக்கொடி காட்டியவர் சீன நாட்டு மன்னராகத் திகழ்ந்த ஷென் நங். புதிதாகப் பறிக்கப்பட்ட பச்சைத் தேயிலை இலைகளை வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்த போது வெளிப்பட்ட கருஞ்சிவப்பு நிற திரவத்தைக் குடித்த போது ஏற்பட்ட கொள்ளை உற்சாகத்தில் குதிக்கவே ஆரம்பித்து விட்டாராம். இந்த ஆட்டத்தில் தொடங்கியதே கிரீன் டீயின் ஆட்டம். அது மட்டுமல்ல ’சாயா’ என்ற சொல்லும் ’சா’ சீன மொழி சொல்லில் இருந்துதான் தோன்றியுள்ளது.

தேயிலையின் தோற்றம், அதன் பெயர் தோற்றம் எல்லாம் சீனா, கருதப்பட்டாலும் இது உலகெங்கும் நீக்கமற நிறைந்துள்ளது.
ஆண்டுக்கொரு முறை விளையும் தாவர வகையான். இதன் ஃபேமிலி பெயர் கெமிலா சினசிஸ் (Camellia sinensis). இதில் சுவை என்னவென்றால் இந்தப் பெயர் ஒரு கிறித்துவ பாதிரியாரின் பெயர். செரொக் காமெல் என்ற இப்பாதிரியார் தேயிலையை உருவாக்கவும் இல்லை. கண்டு பிடிக்கவும் இல்லை. பின் இவரின் பெயர் எதற்கு? தாவரவியல் அறிஞரான இவர் அறிவியலுக்கு ஆற்றிய தொண்டைப் பாராட்டும் வகையில் இவர் பெயர் அதிகமாக விளையும் இந்த தாவர இனத்திற்கு வைக்கப்பட்டது.

டீ இலை அதாவது தேயிலை ஒன்றுதான் ..ஆனால் அது வெள்ளை தேயிலை, கருப்புத் தேயிலை , மஞ்சள் தேயிலை, பச்சைத் தேயிலை என்று இதற்கும் வண்ணம் பூசி அழைப்பர்..

இது ஆண்டுக்கொரு முறை விளையும் பச்சைத்தாவர வகை. பச்சைத் தேயிலை என்பது டீ என்று மூச்சுக்கு முந்நூறு முறை நம்மால் அழைக்கப்படும் சாதாரனத் தேயிலையின் வேறுபட்ட பக்குவ நிலையே ஆகும் பொதுவாக பறிக்கப்படும் தேயிலை சரியாக உலர்த்தப்படாவிட்டால் அதில் உள்ள ஆகிஸிஜன் வெளியேறி அதில் உள்ள குளோரோஃபில் எனப்படும் பச்சயம் அழிந்து விடும். அப்போது அதிலிருந்து டானின் என்றதொரு இரசாயானம் வெளிவருகிறது. இதனால் டீ ஒரு விதமான துவர்ப்புச் சுவையை அடைகிறது. இதனை தமிழில் நொதித்தல் என்பர்.

நாம் அயல் நாட்டில் இருந்து கொண்டு வரும் கீரீன் டீயை மிகச்சுவையானது என்று அருந்த விரும்புகிறோம். அதில் பிற தேயிலையைப் போல நொதித்தல் இருக்காது. அதற்கு முன்னரே அதன் இலைகளை இளம் குருத்துகளுடன் மிதமாகச் சூடாக்குவர். இதனால் இதில் உள்ள நொதிகளின் நிலை மந்தமாக்கப்படுவதால் இயல்பாக இருக்கும் துவர்ப்புச்சுவை குறைந்து ஒரு கசப்புச்சுவை வருகிறது. இதில் உள்ள ஃபாலி ஃபினாலின் சிதைவது இல்லை.

மூளைக்கும் உடலுக்கும் சுறுசுறுப்பு அளித்து உற்சாகமூட்டுவது ஒருபுறம் இருக்க, இது இதயத்தைக் காக்கிறது என்பது இன்றைய மருத்துவ ஆயவு கண்டறிந்த உண்மை. அதனால் உயிர்காக்கும் பாணம் இது என்றும் தயங்காமல் கூறலாம் என்கின்றனர் கிரீக் நாட்டின் மருத்துவ ஆய்வுக்குழு. பச்சைத்தேயிலயில் உள்ள ஃபிளேவனாய்ட்ஸ் இதயத்தில் ரத்த ஓட்டம் சீராக இருப்பதற்கு துணைபுரிகிறது. .
நம் உடலுக்குத்தேவையான ஆண்டி ஆக்ஸெண்ட் கிரீன் டீயில் அதிகமாக இது உள்ளது. இது வைட்டமின் சியில் இருந்து கிடைப்பதைவிடவும், வைட்டமின் டியில் இருந்து கிடைப்பதைவிடவும் முறையே 100 சதவீதமும் 25 சதவீதமும் அதிகம் கிடைக்கிறதாம். இரத்தத்தில் உள்ள டிரை கிளிசரைடுகளின் அளவைக் கட்டுப்படுத்தி (LDL கெட்ட கொழுப்புச்சத்து) நல்ல கொழுப்புச்சத்து அளவை அதிகப்படுத்துகிறது. இதன் மூலம் இதயத்தைப் பசுமையாக வைத்திருக்க உதவுகிறது இந்த பச்சை தேயிலை.

கிரீன் டீயில் ஃபாலிஃபினால்கள் அதிகம் கிடைக்கின்றன. இவை டியூமர் எனப்படும் மூளைக்கட்டி செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது.
கேன்ஸர் செல்களின் டிஎன் ஏ உருவாக்கத்தைத் தடுப்பதுடன் நல்ல திசுக்களுக்கு எந்த வித பாதிப்பும் இன்றி கேன்ஸர் திசுக்களை அழிக்கின்றன.

கிரீன் டீயில் உள்ள ஃபாலிபினால்கள் அமிலோஸ் சுக்ரோஸ் எனப்படும் சர்க்கரையைத் தடுத்து சர்க்கரையை மெதுவாகச் சிதைவடையச் செய்வதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப் படுகிறது.

இது மட்டுமல்ல இது எலும்பு நோய்களுக்கும் அழும்பாக பயன் தந்தே தீர்வேன் என்கிறது. ஒரு நல்ல செய்தி ஆர்தரைடீஸ் எனப்படும் மூட்டு வாதம் இதைக்கண்டால் ஓடிப்போகும் என்கிறார்கள்.

எலும்பு என்று கூறியவுடன் அடுத்து நமக்கு நினைவுக்கு வருவது என்ன? பற்கள்தானே. ஆம் அதற்கும் மருந்தான ஃபுளூரைடு பற்சிதைவு, பற்குழி ஆகியவற்றில் இருந்து பற்களைக் காக்கிறது.

இதைக் குடிப்பவர்களுக்குப் பசி வராது. அப்படியென்றால் என்ன? மாவுப்பொருள்களின் செரிமானம் குறைவு படுகிறது என்பதே. இதனாலும் ஒரு பயன் உண்டே. உடல் எடை கூடும் (குண்டு நோயும் மன்னிக்கவும் அது நோய் அல்ல) விளைவும் இதனால் கட்டுப்படுத்தப் படுகிறதாம்.. இதனால் தான் பச்சை தேயிலை அதிகம் அருந்தும் வெள்ளை அழகிகள் (Forigners) பெரும்பாலும் ஒல்லியாக இருக்கிறார்களோ!!

பொதுவாக காபி குடிப்பவர்களை நாம் காபி குடிப்பதை விட தேநீராவது அருந்துங்கள் என்போம். அதிலும் பிற தேயிலையை விட பச்சைத் தேயிலை வயதாவதையும் தடுக்கும் அதியனின் நெல்லிக்கனி போன்றது. ஒளவை இளைமையாக இல்லை. வாழ்நாள் மட்டும் அந்த நெல்லிக்கனி கூட்டியது என்றறிகிறோம். ஆனால் இந்த இலை நெல்லி அதாவது தேயிலை இளமையையும் அழகையும் கூட்டுகிறதாம். முகப்பொலிவை அதிகரிக்கிறதாம்.

ஒரு சுவையான வரலாற்றுச் செய்தியும் உண்டு. காந்தியடிகள் உப்புச்சத்தியாகிரகம் செய்வதற்கு முன்னோடியாக இருந்தது பாஸ்டன் தேநீர் விருந்து என்பர். அமெரிக்க சுதந்திரப் போராட்டத்தின் போது தேயிலைகளைக் கப்பல்களில் இருந்து துறைமுகத்திற்கு இறக்கிக் கொண்டு வராமல் கடலில் தூக்கி வீசினராம். இந்த உத்தியே இந்திய சுதந்திரப் போராட்டத்தில் உப்புச் ச்த்தியாகிரகமாக மாற்றம் பெற்றது என்பர்..
அடடா உற்சாகமாகத் தேயிலையைப் பற்றி பேசியதில் நேரம் போனதே தெரியவில்லை. தேயிலை குடிக்கும் நேரம் ஆயிடுச்சே....பச்சை..... பச்சை....ஆமாங்க பச்சைத் தேயிலைதான் (கிரீன் டீ) நான் கிளம்புகிறேன்..நீங்களும்.......


நன்றி குமுதம் ஹெல்த்.

6 கருத்துகள்:

  1. பல்லு வெளக்காம டீ குடிக்கிற என்னைய மாதிரி ஆளுக்காகாக இந்த பதிவ எழுதுனதுக்கு மிகவும் நன்றி.. !

    பதிலளிநீக்கு
  2. பல்லு வெளக்காம சுடச்சுட டீ குடிக்கிற மாதிரியே பதிவைப் போட்ட உடனே படிச்சி சுடச்சுட பின்னூட்டம் இட்டமைக்கு மிகவும் நன்றி ஆதிரன்..

    பதிலளிநீக்கு
  3. டீ ஊரில் பிறந்து, டீ ஊரில் சில காலம் பணிபுரிந்த எனக்கு, டீ தகவல்கள் தித்திப்பாக இருக்கிறது. டீ யின் நன்மைகள் ஒவ்வொன்றையும் சொன்னது சிறப்பு.
    டீ பானங்களின் ராணி என்று படித்திருக்கிறேன். தேவ பான இலையாக இருப்பதால் தானோ தேயிலை எனும் பெயர் பெற்றதோ?
    அருமையான பதிவு.

    பதிலளிநீக்கு
  4. //தேவ பான இலையாக இருப்பதால் தானோ தேயிலை எனும் பெயர் பெற்றதோ?//

    ’தே’ என்றால் கடவுள். இருக்கலாம் என்ற சிந்தனையைத் தூண்டிய பின்னூட்டம்..முதல் முறையாக பாதம் பதித்து, கருத்தும் பதித்தமைக்கும் மிக்க நன்றி பத்ம நாபன்..மீண்டும் தங்கள் வருகைய எதிர்பார்த்து...இச்சிறு குடில்..

    பதிலளிநீக்கு