பிரித்தெடுத்தெடுத்தேன்
தொலை தூரத்தில் இருந்தும்
உன் மனத்தின்
ஏக்கங்களை
உனக்கே புரியாமல்
உன்னுள்
ஓலமிட்டுக்கொண்டிருப்பது
தாய்மைக்கான ஏக்கமா
காதலுக்கான தவிப்பா
நட்புக்கான துடிப்பா
என்பதை
இனம் காண முடிந்தது
என்னால்
ரகசியமாக
உன்னை
குழந்தையாக்கி
என் மனத்துள்
பூட்டிக் கொண்டு
நாட்கள் பல ஆயிற்று
உன் மனமே புரியாத உனக்கு
என் மனம் எப்படி புரிந்தது?
நான் ரகசியமாக இருக்கவே
விரும்புகிறேன் என்கிறாயே.
என்னை
தாயாகத் தத்தெடுத்த
என் பிள்ளை நிலாவே
சுமக்காத என் கருவறையும்
சுருதியாகி இசைக்கும்
சுகமான தாய்ராகம்
உன் பயணத்தில
என் வாழ்வின் எல்லை வரை!
அருமையான கவிதை.
பதிலளிநீக்குவாழ்த்துகள்.
தங்கள் முதல் வருகைக்கும் அன்பான பாராட்டுக்கும் மிக்க நன்றி ரத்னவேல் ஐயா
நீக்குதங்கள் வலைத்தளம் சிறப்புடன் அமைந்துள்ளது.வாழ்த்துகளும் மனமுவந்த பாராட்டுகளும்.ஆமாம்;தமிழ்ச்சான்றோர்கள் அரும்பாடுபட்டு வழக்கொழியச் செய்த ஜனனம் போன்ற சொற்களுக்கு நீங்கள் மறுவாழ்வு வழங்கலாமா?இந்தத் தவறைச் செய்கிற காரணத்தால்தான் நாகசாமிகள் சமற்கிருதம் இல்லையேல் தமிழ் இல்லை எனத் துNiச்சலுடன் எழுதுகிறார்கள்.
பதிலளிநீக்குமரியாதைக்குரிய மறைமலை இலக்குவனார் ஐயா, தங்களின் பாதம் என் வலைப்பூவில் பட்டமை யான் பெற்ற பேறு. வருகைக்கு முதலில் நன்றி ஐயா.
நீக்குதாங்கள் சொல்வது சரிதான். வடமொழியைப் பயன் படுத்துவது தவறுதான். மன்னிக்க வேண்டும் ஐயா.இனி தமிழ்ச்சொற்களைத் தவிர வேற்று மொழிச்சொற்களைப் பயன்படுத்த மாட்டேன். தங்களது அன்பான கருத்துக்கு நன்றி ஐயா.
இது போன்று தொடர்ந்து தவறுகளைச் சுட்டிக்காட்டுவது தங்களைப் போன்ற அறிஞர்களின் கடமையாகவும் உடனே திருத்திக் கொள்வது எங்களைப் போன்றவர்களின் கடமையாகவும் இருக்க வேண்டும் என்பதே என் ஆவல்.
தட்டச்சு செய்கையில் ஆங்கில எழுத்துகள் உள்ளே நுழைந்து எள்ளிநகையாடுகின்றன.அச்சுப்பிழையைப் பொறுத்தருள்க.
பதிலளிநீக்குதவறாகப் பிறமொழி எழுத்துகள் நுழைவதை சில நேரங்களில் தடுக்கத்தான் முடிவதில்லை. நன்றி ஐயா.
நீக்குதங்கள் தந்தையாரின் நினைவுநாள் விழாவுக்கு வர இயலவில்லை. மன்னிக்கவும் ஐயா.
அருமை கவிதை
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
முதல் வருகைக்கும் முதல் கருத்துக்கும் மிக்க நன்றி சரவணன்
நீக்கு