தொப்புள் கொடியில் பூக்காத
பிள்ளை மலரே
நாளும்
குருதியில் வளராத
இரத்த உறவே
முந்நூறு நாட்கள்
கருவறை தவம்
செய்யவில்லை
முன்றே நொடியில்
முத்துப் பிள்ளையைப்
முழுவதுமாகப் பெற்ற
நிகழ் யுகக் குந்தி நான்
எவருமறியாமல்
பெட்டியில் வைத்து
நதிநீரில் ஓடவிடவில்லை
நீ மட்டுமே அறிய
மனப் பெட்டியில்
வைத்து
அடைக் காக்கிறேன்
என் நெஞ்சின்
ஏக்கச் சூட்டில்!
ஆதிராவுக்கு என் அன்பு வணக்கங்கள். தங்களின் கவிதைகளை மிகவும் விரும்புகின்றேன். வியந்து படிக்கின்றேன். உங்களுக்கு என் பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குஇவண்,
சுந்தரராஜ் தயாளன்
பெங்களூர்.
முதன் முதல் என் குடிலுக்குள் தங்களது பாதம் பதிந்துள்ளது. இனிய வரவேற்புகள். இந்த எளிய குடில் ஏற்றமுடையவர்களின் வருகையால் மகிழ்கிறது. முதல் வருகை, முதல் கருத்து இரண்டும் கோடையில் கிடைத்திட்ட பனிக்கூழாய் மனத்தைக் குளிர்விக்கிறது.
நீக்குமிக்க நன்றி தயாளன்.
தாய்மையின் தன்மையை தாயுள்ளம் தானறியும்
பதிலளிநீக்குவாய்மை எனப்படும் அஃது
உங்கள் கவிதைக்காக என் குறள் வெண்பா. ஏற்றுக்கொள்ளுங்கள்.
சுந்தரராஜ் தயாளன்
பெங்களூர்.
தங்கள் வெண்பாவில் என் மனம் மகிழ்கிறது. நன்றி ஐயா.
நீக்குஇல்லாதவர்களின் வலி புரிந்தமையால் இக் கவிதை கனக்கிறது நெஞ்சில்
பதிலளிநீக்குஎழில்... நன்றி
நீக்கு