“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

வியாழன், 22 ஜூலை, 2010

முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி....





முத்துப்பற்களுக்குக் கம்பி வேலி....

http://c1-preview.prosites.com/temp2b1agl455b/wy/images/Close%20Up%20Smile_edited-1.jpg

கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும்போது ஆசிரியர்களுக்கு ஒரே ஆச்சரியமாக இருக்கும். மாணவர்களிடம் காணப்படும் மாற்றங்கள். எப்போது விடுமுறை விடும் என்று காத்திருக்கும் பெற்றோர்கள் குழந்தைகல்ளை அழ்காக  உருமாற்ற வேண்டி தம் குழந்தைகளுடன் மருத்துவ மனைகளுக்கு அலைய ஆரம்பித்து விடுவார்கள். விடுமுறை முடிந்து திரும்பும் மாணவர்கள் எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்க்ஸுடன் பள்ளிக்கு வருவார்கள். அதில் இப்போது மிகப்பிரலமாகவும் அதிகமாகவும் மாணவர்களிடம் காணக்கிடைப்பது பற்களுக்கு வேலி போடுவது. நெல்லுக்கு வேலி போடலாம். அட சொல்லுக்கு வேலி போடலாம். அது எப்படி பல்லுக்கு வேலி என்று எண்ணுவது தெரிகிறது. அது ஒன்றும் இல்லை.. தோட்டத்துக்கு முல் கம்பி வேலி போல் இது பல் கம்பி வேலி.. பற்களுக்குக் கம்பி போடுவதுதான்.

வகை வகையா பற்பசைகளை விளம்பரங்களைப் பாத்து பயன்படுத்தினாலும் ஒரு பல் வெள்ளையாகவும் ஒரு பல் பழுப்பாகவும் இருக்கும் சில குழந்தைகளுக்கு. சீராக இருக்க வேண்டிய வெண் சிறுத்தைக் குட்டிகள் வாய்க்குகையில் வேறு வேறாகத் திரிந்தலைந்தால்....இப்படித்தான். ஏக்கத்துடன் ஏம்மா எனக்கு மட்டும் பல் இப்படி இருக்கு என்று கேட்கும் குழந்தைகள் இன்று பெருகி விட்டனர். அதே வேகத்தில் குழந்தைகளை மருத்துவரிடம் அழைத்துச் சென்று பற்களுக்குக் கம்பி  போடும் தாய்மார்களும் பெருகிவிட்டனர். 
   
http://www.weddingsmiles.co.za/images/YZ_bridge.jpg
 மரபு காரணமாகவோ குழந்தைப் பருவத்தில் அவை பழகிய விரல் சூப்புதல், நாக்கைத் துறுத்துதல், உதட்டைக் கடித்தல் போன்ற சில பழக்கங்கள் காரணமாகவோ, சில குழந்தைகள் மூக்கால் சுவாக்காமல் வாயால் சுவாசிப்பார்கள். இதன் காரணமாகவோ, இன்னும் சிலர் அடிக்கடி பின்னால அல்லது கிடைத்த கம்பிகளால் பற்களைக் குத்திக்கொண்டிருப்பர். இவற்றின் காரண்மாகவோ பற்கள் சீர்கெட்டு விடுவது உண்டு.

     இவ்வாறு சீர்கெட்டுப் போன பற்களைச் சீராக்கப்போடுவதே முன்னர் சொன்ன கம்பிவேலி. ஆர்த்தோ டாண்டிக் அப்ளையன்ஸ்’ (Orthodontic Appliances) என்று அழைக்கப்படும் இச்சிகிச்சை முறையைத் தமிழில் அழகாக பற்சீரமைப்புக் கம்பிகள் என்பர். பற்களைச் சீரமைத்தாலும் அமைக்காவிட்டாலும் கம்பிகளின் பெயர் அழகாக இருக்க வேண்டுமல்லவா!

     இவற்றில் இரண்டு வகை உண்டு. ஒன்று கழற்றி மாட்டும் பற்சீரமைப்புக் கம்பி. (Removable Appliance) இரண்டு நிரந்தர பற்சீரமைப்புக் கம்பி (Fixed Appliance).

http://marketplace.dentalproductsreport.com/community/UserFiles/Ad-Photo-1817-1.jpg

இவற்றில் கழற்றி மாட்டும் பற்சீரமைப்புக் கம்பியை அணிந்தவர் தாமே கமிபியைக் கழற்றிச் சுத்தம் செய்து மாட்டிக் கொள்ளலாம். ஆனாலும் மாதத்திற்கு ஒரு முறை மருத்துவரிடம் சென்று கம்பியின் தளர்ச்சியைச் சமன் செய்து கொள்ளவேண்டும். இம்முறையில் செலவு குறைவு. ஆனால் இம்முறை பற்கள் சிறிதளவு சீர்கெட்டு இருந்தால் மட்டுமே பயன்படும். அதிகமான கோணல் மாணல் என்றால் நிரந்தர பற்சீரமைப்பு முறையே பயனளிக்கும்.

http://www.archwired.com/images/Me_In_Retainers.jpg
 ஏனெனில், கழற்றி மாட்டும் முறையில் ஒற்றைக் கம்பி வேலி போல ஒரே கம்பி அத்தனைப் பற்களையும் சேர்த்துப் பிடித்துக் கொண்டிருக்கும். ஆகையால் அடங்காத பற்களை அடக்க இந்த ஒற்றைக் கம்பியால் முடிவதில்லை.
 

http://www.prorthoassist.com/images/Brackets.JPG
நிரந்தர பற்சீரமைப்புக் கம்பியின் சிறப்பு:

நிரந்தர பற்சீரமைப்புக் கம்பியில் ஒவ்வொரு பல்லுக்கும் ஒரு சின்ன வெள்ளி நிறத் தகடு பொருத்தப்பட்டு, அத்தகடுகள் அனைத்தையும் இணைத்தபடி ஒரு வெள்ளி நிறக்கம்பியும் பொருத்தப் பட்டிருக்கும். ஒவ்வொரு பல்லுக்கும் அதனை உட்புறமாகவோ வெளிப்புறமாகவோ தள்ளிச் சீராக்க எவ்வளவு அழுத்தம் தேவையோ அவ்வளவு அழுத்தம் தனித்தனியாகக் கொடுக்கப்படுவது இம்முறையின் முக்கிய சிறப்பம்சம்.

    இரண்டாவது சிறப்பம்சம் தாடையில் போதிய இடம் இல்லாத காரணத்தால், சீர்கெட்டுள்ள பற்களைச் சீராக்கத் தாடையில் இடம் ஏற்படுத்தும் வண்ணம், வரிசைக்கு இரு பற்களாக மேலும் கீழும் நான்கு கடைவாயப் பற்களை எடுத்து, பற்களின் அழகான வரிசைக்குப் போதிய இடத்தை ஏற்படுத்திக் கொடுத்தல். பற்கள் எடுத்த வெற்றிடம் தெரியாமல் பள்ளி மாணவர்களைப் போல பற்கள் வரிசையாக அமர்ந்து சீராகி விடுகிறது.

இம்முறையில் பற்கள் வரிசையாக நகர்ந்து அழகாகிவிடும் என்பது உறுதி. ஆனால் வயது, பற்களின் சீரற்ற தன்மைக்கேற்ப ஓராண்டு அல்லது இரண்டு ஆண்டுகள் இக்கம்பிகளை அணிவது அவசியமாகிறது. மேலும் நிரந்தர கம்பிகளைப் போட வேண்டுமாயின் பால்பற்கள் அனைத்தும் விழுந்து நிரந்தர பற்கள் முளைத்த பின்பே போட முடியும். சுமார் பதிமூன்று அல்லது பதிநான்கு வயதுக்கு மேல்தான் இச்சிகிச்சை மேற்கொள்ள முடியும்.

இப்பருவம் இளைஞர்களின் மனதில் அழகுணர்ச்சி முளைவிடும் பருவம். அந்தக் கம்பி போட்ட பொண்ணு, கம்பி போட்ட பையன் என்று அடையாளம் சொல்வது அந்த இளம்  மனதைச் சங்கடப்படுத்தும். இதெல்லாம் சகஜம்பா வாழ்க்கையிலே என்று இருக்க வேண்டுவதும் அவசியமாகிறது. (வேறு வழியில்லையென்றால் என்ன செய்வது)

     அதுமட்டுமல்ல மாதமொரு முறை மருத்துவரை அணுகி சோதனை செய்து கொள்ள வேண்டும். அப்பப்பா என்று பெருமூச்சி விடுவது கேட்கிறது. முத்துப்பல் வேண்டுமென்றால் சும்மாவா? இதையெல்லாம் விடவும் பெரிய விஷயம் ஒன்றுள்ளதே. அதற்குள்ள பெருமூச்சு விட்டால் எப்படி? செலவுதான்!!! கையை மட்டுமல்ல, இது தலையையும் சேர்த்துக் கடிக்கிற செலவுதான்.

     சரி மொத்தமாக இந்தக் கம்பி வேலிக்குத் தீர்வு என்னன்னு கேக்கிறீங்களா? குழந்தை விரல் சூப்பும் போதும் நாக்கைத் துறுத்தும்போதும் மென்மையாகப் பேசி அப்பழக்கங்களை மாற்ற வேண்டும்.

     குழந்தைகள் மூக்கால் சுவாசிக்காமல் வாயால் சுவாசித்தால் அதற்குக் காரணமான டான்சில், அடினாய்ட் போன்ற கோளாறுகள் இருந்தால் காது மூக்கு தொண்டை மருத்துவரிடம் அழைத்துச் சென்று அதனை முதலில் சரியாக்க வேண்டும்.

     நவகிரங்கள் வேண்டுமானால் ஆளுக்கொரு பக்கமாகத் திரும்பி இருக்கலாம். நாக்கைப் பாதுகாக்கும், நம் முக அழகைப் பாதுகாக்கும், ஏன் பல் போனால் சொல் போச்சு என்பார்கள், சொல் வாக்கையும் பாதுகாக்கும் பற்கள் முப்பத்திரண்டும் எட்டு திசையில் திரும்பி இருந்தால் பார்க்கவா முடியும். வருமுன்னர் வேலி போடாமல் பாது காப்பதோ, இல்லை வந்த பின்பு வேலி போடு சீராக்குவதோ எல்லாம் உங்க கையில்தான்....சீராக்குங்க சொத்தான...முத்துப்பற்களை...
 

    

8 கருத்துகள்:

  1. தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி ரியாஸ்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் ஆதிரா,

    வியப்பா இருக்கு

    பல்லுக்கு போடுற க்ளிப் பற்றி எழுத முடியுமா?

    முடியும் உங்களால்.

    பெண்ணியம், மற்றும் கல்வி தளங்களுக்கு கை கூப்பி அழைக்கிறேன்

    இரா.எட்வின்

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கும் வாழ்த்துக்கும் அழைப்புக்கும் நெஞ்சார்ந்த நன்றி திரு இரா. எட்வின் அவர்களே...எனக்கும் பெண்ணியம், கல்வி குறித்து எழுத ஆசை உள்ளது..உங்கள் ஊக்கம் அதை இப்போது மேலும் தூண்டியுள்ளது..கண்டிப்பாக எழுதுகிறேன் எட்வின்..
    மீண்டும் நன்றியுடன்..

    பதிலளிநீக்கு
  4. வாசனின் திருவிளையாடலில் இதுவும் ஒன்றா..நன்று நன்று..என்ன கோபம் சொல்லலாமா??

    பதிலளிநீக்கு
  5. ஹாய் ஆதிரா!(என்ன மீனிங்?)

    மின்னுது உங்கல் பல் சாரி பதிவு!

    பதிலளிநீக்கு
  6. வாங்க ரோஸ்.. மணிமேகலையில் வருகிற ஒரு கதா பாத்திரம் ஆதிரை. கற்புக்கரசி.. அமுதசுரபியில்ல் முதல் முதலில் பிச்சை இட்டவள். நெருப்பில் இரங்கியும் எரியாமல் புதுமலராய் மீண்டவள். கொஞ்சம் புதுமையாக இவள் ஆதிரா..
    ஆதிரா என்றால் அன்னை, கதிரவன், அறிவு, உலகம் என்று பல பொருள் என்று கூறுவர்.

    பல்லொளி கண்ணைக் கூசவில்லையே...சாரி பதிவு.உண்மையைச் சொல்லுங்க ரோஸ்...
    தங்கள் வருகைக்கு, இந்த நகைச்சுவையான பதிவுக்கு மிக்க நன்றி ரோஸ்.. இன்னும் நகைக்கும் ஆவலுடன்..

    பதிலளிநீக்கு
  7. பல் கம்பி கட்டினால் குழந்தை பெறுவதை தள்ளிபோட வேண்டுமா?
    கர்பினி பென் கம்பி கட்டலாமா

    பதிலளிநீக்கு