“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

ஞாயிறு, 24 ஜூன், 2012

குடிக்கு மட்டுமல்ல முடிக்கும் பீர்.






மயிர் நீப்பின் உயிர் நீக்கும் கவரிமான். ஆம் கவரிமான்களுக்கே மயிர் மீது அவ்வளவு மோகம் இருக்கும் போது கன்னி மார்களுக்கு மயிர்மோகம் இருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. அன்று தொட்டு இன்று வரை பெண்கள் கவலை கொள்ளும் விஷயங்களில் முதலிடம் பெறுவது தலைமுடியே. ஆம் கவலையினால்தான் தலைமுடி உதிர்வதும் தலைமுடி உதிர்வதால் மனக்கவலை வருவதும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. தொடர்ந்து நடைபெறுவது. ஆம் அந்த அளவு பெண்களுக்கு அழகு தருவதில் முதலிடம் பெறுவது கூந்தல். அத்தகைய கூந்தல் உதிர்ந்தால் பெண்களின் அழகில் ஏதோ ஒன்று இல்லை மொத்தமே குறைவது போலத் தோன்றும். அதனால்தான் முந்தைய காலங்களில் கணவனை இழந்த பெண்களின் அழகைக் குறைக்கும் நோக்கில் கணவன் இறந்தால் மனைவிக்கு மொட்டை அடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இப்படியும்...... என்ன செய்வது?? 

 கூந்தல் உதிர்வதற்குக் காரணம் நமது உடலில் ‘சல்பர்‘ போதுமான அளவு இல்லாததே. அந்த கூந்தல் உதிராமல் தடுக்க நாம் வெங்காயத்தைப் உபயோகிக்கலாம். ஏனெனில் இதில் ‘சல்பர்‘ அதிகமாக உள்ளது. இதனை உண்பதால் நம் உடலில் இரத்த சுழற்சி சீரடைந்து கூந்தல் பட்டு போன்று மென்மையாக வளரும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.


உதிர்தலைத் தடுக்கும் வழிகள்



வெங்காய ஜூஸ்: வெங்காயத்தை அரைத்து அதில் வரும் சாற்றை சூடுபடுத்தாமல் தலையில் உள்ள ‘ஸ்கால்ப்‘ அதாவது வேர்ப்பகுதியில் தடவ வேண்டும். சாற்றைத் தடவுவதற்கு அரைமணி நேரத்திற்கு முன், வெந்நீரில் நனைத்த துணியைத் தலையில் சுற்றி கொள்ளவும். இதனால் சாறானது எளிதில் இறங்கி உதிர்தலைத் தடுக்கும்.



வெங்காயம் மற்றும் பீர்:பீர் என்று கூறியவுடன் எடுத்து அடித்து விட்டு முடி பளபளக்கவில்லையே என்று கேட்காதீர்கள். இது வேறு வகையான மருத்துவம். கூந்தல் பட்டு போல மினுமினுக்க வெங்காய சாற்றுடன் சிறிது தேங்காய் எண்ணெயைப் பேஸ்ட் மாதிரி செய்து கொள்ளவும். பின்னர் ஒரு கப் பீரை அந்த பேஸ்டுடன் கலந்து தலைமுடியில் தடவிக் கொள்ளவும். ஒரு மணிநேரம் கழித்து நன்கு சாம்பு போட்டு அலசி விடவும். இதனால் கூந்தல் பட்டு போல் இருக்கும். 

தலைப்பைப் பார்த்ததும் ஆண்கள் பலர் ஆர்வமாக உள்ளே ஓடிவந்து இருப்பீர்கள். உங்களுக்கும் இந்தப் பிரச்சனை இருக்கலாமே. உங்களுக்குப் பிரச்சனையே இல்லை. குடிக்கும்போது கொஞ்சம் முடிக்கும் ஒதுக்குங்கள். ஒரு கல் இரு மாங்காய்...ம்ம்ம்ம்ம் ஆகட்டும்...ஆகட்டும்


3 கருத்துகள்:

  1. ஆமாம் இர்ரஜராஜேஸ்வரி. நன்றி

    பதிலளிநீக்கு
  2. அக்கா என்னில் உள்ள (வெங்காயத்தில்) சல்பர் பற்றி அருமையாகவும் விளக்கமாவும் சொல்லியுள்ளிர்கள். நிச்சயமாக இது எமக்கும் அவசியமானதே..

    அன்புச் சகோதரன்
    ம.தி.சுதா
    ஏழை மாணவன் ஒருவனை கரை ஏற்ற வாருங்கள்

    பதிலளிநீக்கு