'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது பழமொழி. 'அகத்தின் அழகு நகத்தில் தெரியும்' இது புதுமொழி. ஆம் ஒருவரின் குணம் அவரின் நகத்திலும் பளிச்செனத் தெரிந்துவிடும். எப்படி என்று கேட்கின்றீர்களா?
சுத்தமாக
இருப்பவர்களின் நகமும் சுத்தமாக
இருக்கும். தூய்மையற்றவர்களின்
நகமும் அவ்வப்போது வெட்டப்படாது
அழுக்கு மண்டி காணப்படும்.
எப்போதும் அதிக கோபத்துடனும்
கொந்தளிப்புடனும் கவலையுடனும்
இருப்பவர்களின் விரல்களில்
நகம் இருக்காது. நகத்திற்குப் பதிலாக சிவப்பேறிய சதையே காணப்பெறும்.
கோபத்தை மெல்லுவதைப் போல நகத்தைக்
கடித்து மென்று துப்பி விடுவார்கள்.
அமைதியானவர்களின் விரல் நகங்கள்
அளவோடு சீராக்கியதாக இருக்கும்.
அழகியல் உணர்வு உள்ளவர்களின்
நகங்கள் நேர்த்தியாக திருத்தப்பெற்று
அதில் இளம் வண்ணங்கள் பூசப்பெற்று
இருக்கும். சற்று ஆடம்பரமானவர்களின்
நகங்கள் பொருத்தமா பொருத்தமில்லையா
என்ற கவலையில்லாது கண்களைக்
கூசும் பளிச் வண்ணங்களில்
மின்னும்.
கட்டுப்பாடற்ற மனம்
கொண்டவர்களின் நகங்கள் இன்னும்
ஒரு படி மேலே போய் பிறரை அச்சுறுத்தும்
அளவு கூராக்கிய கத்தி போல நீண்டு,
பல வண்ணங்களுடனும் பூ, காய்,
கனி, பறவை என்று பல படங்களுடனும்
மின்னும். இப்போது கூறுங்கள்.
இந்த புது மொழி பொருத்தம் தானே?
நகங்களை
வைத்தே ஒருவரின் உடல் ஆரோக்கியத்தைக்
கணித்து விடலாம். சாம்பல் படிந்த
வெள்ளைநிற புள்ளிகள் உளள நகங்கள்
உலோகம் மற்றும் உப்புச்சத்து
பற்றாக்குறையையும், வெளுத்துப்போன
நகங்கள் ரத்த சோகையையும், கருத்த
நகங்கள் கல்லீரல் மற்றும்
நுரையீரல் பலஹீனத்தையும்,
நீல நிற நகங்கள் இரத்தத்தில்
ஆக்ஸிஜன் அளவு குறைவையும் ஆஸ்துமா, இதயநோய்களின்
அறிகுறியையும் சிவந்து காணப்பட்டால்
மாரடைப்பின் அறிகுறியையும்.
கீறல் அல்லது குழிகள் விழுந்து
காணப்பட்டால் சரும நோய்களின்
அறிகுறியையும். வைட்டமின்
குறைபாட்டையும், சொத்தையான
நகங்கள் ஒவ்வாமை மற்றும் தோல்
நோய்களையும் உள்நோக்கி குழிந்திருந்தால்
இரும்புச்சத்து, விட்டமின் பி-12 பற்றாக்குறையையும் காட்டுவதாக
மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன.
.
அதுமட்டுமல்ல. நகங்களால் ஒருவரின்
பழக்க வழக்கங்களும் அம்பலத்திற்கு
வந்து விடும். புகைப் பழக்கம்
உள்ளவர்களின் நகம் பழுப்பாகவும்
மதுப்பழக்கம் உள்ளவர்களின்
நகம் கருப்பாகவும் தோன்றி
அவர்களின் அப்பழக்கத்தைக்
காட்டிக் கொடுத்து விடும் ஆரோக்கியமான
நகங்கள் என்பது
இளம் சிவப்பு
நிறத்தில் இருக்க
வேண்டும்
.
நகத்தை வைத்து ஒருவரின் வயதைக்
கண்டுபிடித்து விடலாம். நம்
வயதைக் காட்டும் கண்ணாடியாகச்
செயல்படும் நகத்தை அவ்வப்போது
கவணித்தால் சற்று வயதைக் குறைத்துக்
காட்டும். இல்லாவிட்டால் வயதைக்
கூட்டிக் காட்டி நம்மை முதியோர்
பட்டியலில் இணைத்து விடும்.
அதனால் நகத்தை அழகாக பராமரித்து
வைத்துக்கொண்டால் வயதைக்
குறைவாகக் காட்டிக்கொள்ளலாம்.
நகம்
கடிக்கும் பழக்கம் பலருக்கு
இருக்கின்றது. சிலர் எப்போதாவது
மனக்கவலை ஏற்படும் போது நகம்
கடிப்பர். சிலர் எப்போதும்
நகத்தைத் தேடித் தேடி கடிப்பர்.
இவர்கள் கால் நகங்களைக்கூட
விட்டு வைக்கமாட்டார்கள்.
அசந்தால் அடுத்த விடுக்காரர்
நகத்தையும் கடிக்கப் புறப்பட்டுவிடுவார்கள்.
இவ்வாறு நகம் கடிக்கும் பழக்கம்
இருப்பது கூட நரம்பு சம்பந்தமான
பிரச்சினையாக இருக்கலாம்
என்கின்றனர் மருத்துவர்கள். இதிலும்
ஆறுதல் அளிக்கும் ஒரு செய்தி
ஒன்று தற்காலத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
அதாவது தன்னம்பிக்கை அதிகம்
இல்லாதவர்களே நகம் கடிப்பார்கள்
என்ற பொதுவான கருத்து மாறி
எப்படியேனும் கடுமையாக முயற்சி
செய்து தாம் எடுக்கும் செயலை
முடிக்கும் மன வலிமையும் உடல்
வலிமையும் இருப்பவர்களே அதிகமாக
நகங்களைக் கடிக்கிறார்கள்
என்கின்றது தற்போதைய புதிய
ஆய்வு.
விரல்
நுனிகளில் ஏராளமான உணர் நரம்பு
கூட்டங்கள் பின்னிப் பிணைந்துள்ளன.
விரல் நுனிகளின் நரம்புக்
கூட்டங்களைப் பாதுகாப்பதற்கு
இறைவனால் வழங்கப்பட்ட பாதுகாப்புக்
கவசம்தான் நகங்கள். நகங்களைப்
பாதுகாப்பாக வைத்தால்தான்
விரல்களையும் சக்தி குறையாமல்
பாதுகாக்க முடியும்.
நகம்
கெரட்டின் என்றழைக்கப்பெறும்
நகமியம் என்னும் புரதப் பொருளால்
ஆன அழகிய பகுதி. சத்தமில்லாமல்
நாளும் வளர்ந்து கொண்டிருக்கும்
இதனை உகிர் என்றும் கூறுவர்.
நகங்கள் சுண்ணம்பு, பாஸ்பரஸ்,
புரதச் செல்களின் கலவையாகும்.
நாம் அதிகமாக உட்கொள்ளும்
உலோகங்களும் நச்சுப் பொருள்களும்கூட
உடலால் வெளியேற்றப்பட்டு,
நகத்தால் சேமித்து வைக்கப்
படுகின்றன. விரல் நுனிகளை வெப்பத்திலிருந்தும்,
குளிர்ச்சியிலிருந்தும் பாதுகாப்பவை
இவையே.
சிலருக்கு
நகங்கள் அடிக்கடி உடைந்து
போகும். இதற்குக் காரணம் அன்றாடம்
பயன் பயன்படுத்தும் சோப்பாக
இருக்கலாம். அல்லது போதிய நீர்ச்சத்து
இன்மையாலும் நகம் உடைதல் ஏற்படலாம்.
நகச்சுத்து
எனப்படும் நகச்சொத்தை ஏற்படக்காரணம்
நகக்கண்களில் அழுக்கு சேர்வதால்
என்றால் பொருந்தும். முக்கியமாக
நகத்தின் உயிராக இருக்கக்
கூடிய ஓரப்பகுதி நகங்களைக்
கடித்து இரத்தக் களறி ஆக்குவதாலும்
புண் ஏற்படும். நகப்படுகையில்
கசியும் இரத்தம் நகத்தட்டுக்கு
அடியில் அதாவது நகத்தின் உட்புறச்
சதையில் தங்கி விடும். இது
நாளடைவில் சீழ் பிடித்து நகச்சொத்தையாக
மாறிவிடுகின்றது.
மருதாணி
இலைகளை நீர்க் விட்டு அரைத்து
நகத்தைச் சுற்றி தினமும் தடவி
வந்தால் நகச்சொத்தை மாறும்.
வேப்பிலையும் மஞ்சள்துண்டையும்
சேர்த்து அரைத்துப் பூசி வந்தாலும்
நகச்சுத்து குணமாகும்.
நகச்சுத்து
நீண்ட நாட்களாகத் தொடர் தொந்தரவு
கொடுப்பது, திடீர் தொந்தரவு
கொடுப்பது என்று இரண்டு வகை
விருந்தாளிகளாகச் செயல் படுகிறது
இந்த திடீர் நகச்சுத்து நகக்கண்களில்
அழுக்கு சேர்தல், நகத்தை வேரோடு
கடித்துத் துப்புதல், ஏதேனும்
காயம் ஏற்படுவது ஆகிய, நாம்
நகத்திற்குத் தரும் தொந்தரவினால்
ஏற்படுகின்றது.. இதற்கு முதலில்
கைவைத்தியமாக வெந்நீரில்
நாளொன்றுக்கு இரண்டு அல்லது
மூன்று முறை நகங்களை நன்றாகக்
கழுவ வேண்டும்.
நாட்பட்ட
நகச்சுற்று (Chronic
paronychia) இது சிறிது
சிறிதாகத் தோன்றி, நீண்ட நாட்களுக்கு
நீடிக்கும் வகையாகும். பொதுவாக
அடிக்கடி கையை நனைக்க வேண்டிய
தேவையுள்ள பண்ணைத் தொழிலாளர்கள்,
மீனவர்கள், சமையல் வேலை செய்பவர்களில்
இத்தகைய நாட்பட்ட நகச்சுற்று
அதிகம் ஏற்படுகிறது. எக்ஸிமா,
சொறியாசிஸ் நீரிழிவு போன்ற
நோய் உள்ளவர்களிலும் இவ்வாறு
ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகும்.
ஒரு
விரலின் நகத்தைச் சுற்றி மட்டுமின்றிப்
பல நகங்களுக்கும் பரவக் கூடும்.
ஆயினும் திடீரேன ஏற்படும்
நகச்சுற்று போல கடுமையான வேதனையைத்
தருவதில்லை என்பதால் பலரும்
அலட்சியம் செய்துவிடுகின்றனர்..
இடையிடையே சீழ் பிடித்து ஆறிவிடும்.
அவ்வாறு நீண்ட காலம் நீடிப்பதால்
நகமானது கீழுள்ள நகப்படுக்கையில்
பிளந்து விடுவதும் உண்டு. அத்துடன்
நகத்தின் மேற்பகுதியில் தடிப்புகள்
தோன்றி அது தன் இயல்பான வழுவழுப்பான
அழகிய தோற்றத்தை இழந்துவிடும். நகத்தின்
நிறமும் மஞ்சள் அல்லது சாம்பல்
பூத்ததாக மாறிவிடும். அவ்வாறு
ஏற்பட்டால் நகம் மீண்டும்
வளர்ந்து தனது இயல்பான தோற்றத்தைப்
பெற ஒரு வருடக்கணக்காகலாம்.
கவனிக்காமல் விட்டு விட்டால்
இந்நகச்சுத்து சரியாகாமலே
விரல்களுக்கும் பாதிப்பை
ஏற்படுத்தி விடும்.
இதுக்குக்
கை வைத்தியம் ஒன்று உள்ளது.
அது சின்ன வெங்காயம் நானகைந்து,
மஞ்சள் பொடி சிறிதளவு, கஸ்தூரி
மஞ்சள் பொடி சிறிதளவு, வசம்புப்
பொடி சிறிதளவு, சுக்குப்பொடி
சிறிதளவு, முருங்கை இலை சிறிதளாவ
எல்லாவற்றையும் ஒன்றாக வைத்து
அரைத்து சிறிதளவு எலுமிச்சைச்
சாற்றுடன் கலந்து நகச்சுத்தைச்
சுத்திப் போட்டு வந்தால் ஒரு
வாரம் அல்லது இரு வாரங்களில்
குணமாகும்
இதற்கு
முதற்கட்ட நடவடிக்கையாக்
கைகளை அதிக நேரம் நீரில் ஊற
வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.
அடுத்ததாக கையுறை அணிந்து
கொண்டு வேலைகளைச் செய்வதால்
விரலுக்கும் நலம். நகச்சுத்தினால்
ஏற்பட்ட தொற்றுகள் பரவாமல்
காக்கவும் உதவும். ஏனெனில்
இவ்வகை நகச்சுத்து பரவும்
இயல்புடையது..
இப்ப
என்ன சொல்ல வரேன்னா.. அது இது
எதுவாக இருந்தாலும் அதுதான்ங்க
நகச்சுத்து எதுவாக இருந்தாலும்
கண்டிப்பாக கவனத்தில் கொள்ள
வேண்டியது நகத்தைச் சுற்றியுள்ள
சருமத்தையும் நன்றாகப் பார்த்துக்
கொள்ள வேண்டும். அடுத்து நகம்,
விரல் நுனிகளில் சிறு காயம்
கூட ஏற்படாமல் பார்த்துக்கொள்ள
வேண்டும். கூடிய வரை நீர் வேலையைத்
தவிர்த்து கைகளை உலர்ந்த நிலையிலேயே
வைத்திருக்க வேண்டும். முக்கியமா
சுத்தப்படுத்தறேன் பேர்வழி
என்று டெட்டால் போன்றவற்றைப்
பயன்படுத்துவதை அறவே தவிர்க்க
வேண்டும்.
மேலும்
மேலும் நகம் வளர்ந்து கொண்டேதான்
இருக்கும். வளர வளர அவற்றை
வெட்டிக்கொண்டே தான் இருக்க
வேண்டும்.
மிக மிக முக்கியம் ஒருவர் பயன் படுத்திய நகவெட்டியை குறிப்பாக நகச்சுத்தி உள்ளவர்கள் பயன் படுத்திய நகவேட்டியைப் பிறர் பயன் படுத்துக்கூடாது. ஒருவரே பயன் படுத்தும் போதும் ஒவ்வொரு முறையும் நகவெட்டியை கொதிக்கும் வெந்நீரில் போட்டு கழுவியே பயன்படுத்த வேண்டும்.
மிக மிக முக்கியம் ஒருவர் பயன் படுத்திய நகவெட்டியை குறிப்பாக நகச்சுத்தி உள்ளவர்கள் பயன் படுத்திய நகவேட்டியைப் பிறர் பயன் படுத்துக்கூடாது. ஒருவரே பயன் படுத்தும் போதும் ஒவ்வொரு முறையும் நகவெட்டியை கொதிக்கும் வெந்நீரில் போட்டு கழுவியே பயன்படுத்த வேண்டும்.
நகப்
பாதுகாப்புக்கு அழகு நிலையங்களில்
மெனிக்யூர் செய்வது வழக்கம்.
இதற்கு அழகு நிலையம் செல்ல
வேண்டுவதில்லை. வீட்டிலேயே
அகலமான பாத்திரத்தில் சூடான
தண்ணீர் எடுத்துக்கொண்டு,
அதில் சிறிதளவு உப்புடன் ஒரு
எழுமிச்சம் பழத்தைப் பிழிந்து
அதில் இரு கைகளையும் ஊர வைக்க
வேண்டும். மெனிக்யூர் கிட்டில்
இருக்கும் Com
blade அல்லது நெயில்
கட்டரில் கொக்கி போல ஒரு பிளேடு
இருக்கும். அதனால் நக கண்களில்
படிந்துள்ள அழுக்கை நீக்க
வேண்டும். பல் துலக்கும் பிரஷினால்
மெதுவாக நக இடுக்குகளில் தேய்த்துக்
கழுவினாலும் போதுமானது. எளிமையான
மெனிக்யூர் முடிந்து விடும்.
பாலை மிதமாகச் சூடாக்கி அதில்
பஞ்சை நனைத்து அதனால் நகங்களைச்
சுத்தப் படுத்தினால் நகம்
பால்போல வெண்மையாக மின்னும்.
.இப்போது கைவிரல்களை நன்றாகத்
துடைத்துவிட்டு ஆலிவ் எண்ணெயைச்
சிறிதளவு தடவி மென்மையாக மசாஜ்
செய்து விடுங்கள். எல்லாம்.
முடிந்தது.
வழக்கம்
போல் ஒரு சுவையான செய்தியும்
உள்ளது. விளக்கு வைத்த பின்
நகம் வெட்டுவது, வெட்டிய நகத்தைக்
கீழே போடுவது, எல்லாம் தரித்திரம்
என்று நம்மவர்கள் கூறிக்கொண்டிருக்கிறார்கள். நியுசிலாந்திலோ
நகத்தை வெட்டி
ஏலத்தில் விட்டு
தம் தரித்தரத்தைப்
போக்கி, செல்வம்
சேர்க்கும் விந்தையும்
நிகழ்ந்து கொண்டி -ருக்கின்றது. ஆமாம் நம்பினால்
நம்புங்கள்.. இல்லா விட்டால்....விடுங்கள்.
ஒருவரின் நகம் 350 ரூபாய்க்கு
ஏலம் விடப்பட்டுள்ளதாம். நகத்தை
வாங்கி என்னதான் செய்தார்களோ
அது தெரியாது. ஒரு வேளை ஊருகாய
போட்டிருப்பார்களோ என்னவோ!!!
அதுவும் உணவு வங்கிக்கு நிதி
திரட்டியவர்கள் அதற்காக ஏலம்
விட்ட உயர்தர பொருள் நகம்..
ஒரு வேளை நம்மவர்கள் சினிமா
நடிகை நடிகர்கள் பயன்படுத்திய
பொருட்கள் என்றால் என்ன விலை
கொடுத்தேனும் அதனை வாங்குவது
போல இருக்கலாம்.
சரி
குழந்தைகள் ஏன் நகம் கடிக்கின்றன?
அடுத்த இதழில் பார்க்கலாமா?
(நகம்
வளரும்)நன்றி குமுதம் ஹெல்த் ஸ்பெஷல்.