மண்டையைப்
பிளக்கும் வெயில் காலம் முடிந்து விட்டது. அப்பாடா... என்று கூறும் அழகான
கார்காலம் தொடங்கிவிட்டது, இக்காலத்திலும் நம்மால் மகிழ முடியவில்லை.
எப்போதுதான் நாம் தொல்லைகள் இல்லாது இன்பமாகக் எல்லா காலங்களைக்
கழிக்கப் போகிறோமோ தெரியவில்லை. அந்தி மழையையும், குளிர் இரவையையும்
இனிமையாக ரசிக்க முடியாதபடி அடுத்த தொல்லை தொடங்கி விட்டது.
இனி கொசுக்களின் காலம். எங்கே சென்றாலும், பகலிலும் இரவிலும் கொசுகள்
ரீங்காரமிட்டு, மலர்களில் தேனருந்தும் வண்டாய் நம்முடைய ரத்தத்தை அருந்த
ஆரம்பித்து விடும். கொசு ஒன்றைக் கொடுக்காமல் எவரிடமும் இருந்து எதையும்
பெற்றுக்கொள்ளாது. இது கொசுக்களின் நீதி. கொசு தவறாமல் கடைபிடிக்கும்
கொள்கை என்றும் சொல்லலாம்..
தேன் உண்ணும் வண்டு மகரந்தத் தூளை தன் கால்களிலும் உடலிலும் எடுத்துச்
சென்று மலரினத்தைப் பரப்பித் தன் நன்றியுணர்வைக் காட்டுவது போல கொசுவும்
நம்மிடம் இருந்து பெற்றுக் கொள்ளும் இரத்தத்திற்கு ஈடாக சில நோய்களைப்
பரப்பித் தன் நன்றியுணர்வைக் காட்டி விட்டுத்தான் போகும்.
அதில் இருந்து தப்பிக்க கொசுவர்த்திச்சுருள் பயன் படுத்திக்கொள்ளலாம்,
என்றால் அதிலும் நமக்கு கிளம்புகிறது தொல்லைகளின் சாம்ராச்சியம்.
இந்த மழைக்காலத்திலன் முக்கியமான பிரச்சனை என்னவென்றால் ஒரு மின்னல் வந்துவிடக் கூடாது ஊரே இருண்டு விடும். வானத்தில் மினுக்கென்றால் கரண்ட் கட் ஆகிவிடும்.
முக்கியமாக கரண்ட் இல்லாவிட்டால் லிக்விடேட்டர் வைக்க வசதி இருக்காது.
வேற வழியின்றி கொசு வர்த்திச்சுருளைப் பயன் படுத்தத் தொடங்கி விடுகிறோம்.
சுருள் சுருளாக வரும் புகையில் நாமும் நம் திரைப்படக் கதாநாயகர்களைப் போல
கனவுடன் உறக்கம் கொள்கிறோம்.. மூடிய அறையில் ஏற்றப்படும் இந்த சுருளுக்கு
இரண்டு தனித்துவம் உண்டு. ஒன்று கொசுவை விரைவில் கொல்லும். இரண்டு அதைப்
பயன் படுத்தும் நம்மை மெல்ல மெல்லக் கொல்லும்.
இந்த இரு பணிகளையும் செய்ய உதவியாக இதில் ஒளிந்திருக்கும் பயங்கரமான வேதிப்பொருள்கள்
1. சிந்தெடிக் D அலித்ரின்
2. ஆக்டோ குளோரோ -டை- ப்ரொஃபைல் ஈதைர் அல்லது s- 2
இவை
எரியும் போது கிளம்பும் புகையில் கிளம்புவது வேதிப்பொருள் பை குளோரோ மெதல்
ஈதைர். இது நம் உடல் நலத்திற்கு பகையாகும் வேதிப்பொருள்.
தொடர்ந்து
மூடிய அரையில் இவ்வேதிப்பொருளை சுவாசிக்கும் நம் மூக்குக்குத்தெரிவதில்லை.
இது நம் உட்லில் கேன்சர் ஏற்பட மூலமாக அமையும் என்பது. நம் மூளையோ இதை
தெரிந்து கொள்ள விரும்புவது இல்லை.
தொடர்ந்து அடர்த்தி அதிகமான
இப்புகையைச் சுவாசிக்கும் ஒருவருக்கு நுரையீரல் முழுமையாகச் சுருங்கி
விரிவடைய முடியாமல் போகிறது. அதனால் சுவாசத்திற்குத் தேவையான காற்று போதிய
அளவு கிடைக்காமல் போகிறது.
இந்த வேதிப்பொருள் விளைக்கும் இத்தீங்கு ஒருபுறம் என்றால் மறுபுறம்
இவ்வேதி பொருளின் கரியால் ஏற்படும் தீங்கு. கொசுவர்த்தி எரியும் போது அது
வெளியிடும் நுண்ணிய சாம்பல் அளவு 75 முதல் 137 சிகரெட் எரிப்பதனால் வரும்
சாம்பலுக்கு சமம் . இந்த சாம்பல் சாதாரனமாகக் கீழே கொட்டும் பிற சாம்பல்
போன்றது அல்ல. காற்றில் மிதக்கும் கண்களுக்குத்தெரியாத நுண்ணிய
சாம்பல்(size 2.5 micron). அதனை
சுவாசிப்பதனாலும் நுரையீரல் காச நோய், புற்று (cancer) நோய் வருவதற்கு வாய்ப்புகள் ஏராளம். ) நோய்கள் வரலாம்.
நாம் என்ன செய்கிறோம். முக்கியமாக நாம் உறங்காவிட்டாலும் குழந்தைகள்
நன்கு உறங்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் ஏன் தாய்மைப் பாசத்தில்
கொசுக்கொல்லிகளைப் பயன் படுத்துகிறோம். கொசுச் சுருளில் அல்லது கொசுப்
பாயில் (மேட்டில்) இருந்து வெளிவரும் புகையைப் பிஞ்சுக் குழந்தைகள்
சுவாசித்தால், அவர்களுக்கு வலிப்பு
நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறி எச்சரிக்கிறது லக்னோ
பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வு.
குழந்தைகளுக்கு இத்தகு
துன்பத்தைக் கொடுக்கும் இக் கொசுக் கொல்லிகள் குழந்தைகளே பிறக்காமல்
இருக்கவும் வழி செய்கிறது. மும்பையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், கொசு
விரட்டிகளில் பயன்படுத்தப்படும்
ரசாயனம் சிலருக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தக் கூடியது என்பதும் உறுதி
செய்யப் பட்டுள்ளது.
இதில் உள்ள சிந்தெடிக் D அலெத்ரின் மனிதர்களின் உடல் எடையை மெல்ல மெல்ல இழக்கச் செய்யும் தன்மை கொண்டது.
இத்தனையையும்
படித்த பின்புமா நீங்கள் கொசு வர்த்தியைப் பயன் படுத்துகிறீர்கள்?
போங்க... போயி ஒரு கொசு வலையை வாங்கி அழகா கட்டி அதற்குள் கூட்டாக நாயகன்
கமல் குடும்பம் போல ”நீ ஒரு காதல் சங்கீதம்” என்று மனைவியின் காதில் பாட்டு பாடிக்கொண்டு
இன்பமாக உறங்குங்கள்.. கொசுவைப் பாட அனுமதிக்காதீர்கள். அவ்வளவுதான்
சொல்லிட்டேன்.
//இனி கொசுக்களின் காலம்.//
பதிலளிநீக்குஇதை தலைப்பாக வைத்திருக்கலாம்!
//எங்கே சென்றாலும், பகலிலும் இரவிலும் கொசுகள் ரீங்காரமிட்டு, மலர்களில் தேனருந்தும் வண்டாய் நம்முடைய ரத்தத்தை அருந்த ஆரம்பித்து விடும்//
ரசித்தேன்!
கொசுவை வைத்து ஒரு புனைவு எழுதலாம் அப்படின்னு எண்ணம். எந்திரன்ல ரங்குஸ்கி பார்த்தப்ப தோணிச்சு. இப்ப உங்க பதிவு பார்த்தப்புறம் எண்ணம் உறுதி ஆயிடிச்சு. ஆனா என்னோட சைட்ல பெரிய கொசுவர்த்தி சுருள் ஏத்தி நல்லா புகைய விட்டுட்டேன். பார்க்கலாம் அது முடிஞ்சப்புறம் எழுதணும்... நல்ல பயனுள்ள தகவல்கள் ஆதிரா! நன்றி ;-)
அன்புள்ள RVS,
பதிலளிநீக்குதலைப்பை மாத்திட்டேன். எங்களுக்கு உங்க வலை தெரியும். இந்த மாய வலை தெரியும். ஆனா எந்திரன் மாதிரி சினி வலை எல்லாம் தெரியாது.
உங்க வலையில கொலுத்தின கொசுவத்தி இங்க வரைக்கும் மணக்குதே. மன்னார்(மால்)குடி டேஸ் நல்லா பழைய நினைவுகளைத் தூண்டி விட்டது.. நல்லா இருக்கு RVS.
நன்றி RVS இங்க வந்து அழ்கா கருத்து சொன்னமைக்கு..தலைப்பைக் கொடுத்தமைக்கு. இனிமே கட்டுரையை எழுதியது பெயர் சூட்டர வேலையை உங்ககிட்ட விட்டுடப் போறேன். ஏன்னா அதுதான் எனக்கு மிகக் கடினமான வேலை. நன்றி RVS.
இரவில் கொசு வந்தால் குட்நைட் ஏற்றலாம் வராமலிருக்க...
பதிலளிநீக்குபகலில் கொசு வந்தால் குட்மார்னிங் ஏற்ற முடியுமா?
கொசுக்கொல்லிகள்... மனிதக்கொல்லிகளாகவும்...
கொசு வலையை தங்களின் வலையில் மட்டும் படிக்கும் வீட்டுவசதியுடன், பொருளாதார வசதியுடன் நானும் மற்றும் சிலரும்....
கொசு நம்மை கடிக்கும் ஆனால் நாம் அதனை கடிக்க முடியாது...
கொசுவை நாம் அடிக்கலாம்... ஆனால் அது நம்மை அடிக்க முடியுமா?
சிரிப்போம் சிந்திப்போம்....
பயனுள்ள தகவல் கட்டுரைக்கு மிக்க நன்றி...
அன்பு ஆதிரா,
பதிலளிநீக்குசில நாட்கள் இந்தவலைக்குள் புகமுடியாமல்,வைரஸ்
சுத்திக்கிட்டிருந்தது. இன்று நுழையும் போது கொசு சுத்திக்கிட்டிருக்கு.
பரமஹம்ச யோகானந்தான்னு, நிஜமாவே ஒரு உத்தம ஸ்வாமிஜி....அவர் பற்றிக் கேள்வி பட்டிருப்பீங்க. அவர் குருகுல வாசமாய் குருநாதர் யுக்தேச்வர் கிரியிடம் ஆன்மிகம் பயின்றவேளை... தியானத்துக்கு உட்கார்ந்த யோகானந்தர் கை மணிக்கட்டில் ஒரு பெரிய கொசு வந்தமர்ந்து சாவதானமாய் ரத்தம் குடிக்கத் தொடங்கியது.
அதை அடிக்க ஓங்கிய அவர் கையை, அஹிம்சையை கண்டிப்பாய்க் கடைபிடிக்க எண்ணி,அந்தரத்திலேயே
நிறுத்தி விட்டாராம்.
அதைக் கண்ணுற்ற குருநாதர்,"ஏன் நிறுத்தி விட்டாய்? எடுத்த வேலையை முடித்து விட வேண்டியது தானே?"
"இல்லை குகுஜி! கொசுவானாலும்,அதுவும் ஓர் உயிர் தானே? அதனால் தான் அதைக் கொல்லாமல்
நிறுத்தி விட்டேன்."
குருஜி சிரித்தார்,"கொசுவைத் தான் ஏற்கெனவே உன் மனத்தால் கொன்று விட்டாயே! இன்னும் எதற்கு மிச்சம்?"
"ஆட்டோபயாகிராபி ஆப் எ யோகி" எழுதினாரே அவர்தானே மோகன்ஜி.
பதிலளிநீக்குஆதிரா! டைட்டில் சூப்பர்.
//இரவில் கொசு வந்தால் குட்நைட் ஏற்றலாம்
பதிலளிநீக்குபகலில் கொசு வந்தால் குட்மார்னிங் ஏற்ற முடியுமா?//
தத்துவ முத்துக்கள்.. முடியாது.. கொசுவுக்குக் குட்மார்னிங் சொல்லத்தான் முடியும்..
//கொசு வலையை தங்களின் வலையில் மட்டும் படிக்கும் வீட்டுவசதியுடன், பொருளாதார வசதியுடன் நானும் மற்றும் சிலரும்....//
அச்சச்சோ... கொசுவலை வாங்கிக்கொடுக்கலாம்.. வீடு???!!!
//கொசு நம்மை கடிக்கும் ஆனால் நாம் அதனை கடிக்க முடியாது...
கொசுவை நாம் அடிக்கலாம்... ஆனால் அது நம்மை அடிக்க முடியுமா?//
இதுக்குக் கொசுக்கடியே பரவாயில்லை..(ச்சும்மா)
சிரிப்போம் சிந்திப்போம்... சிந்திக்கிறேன்.. அதுக்கு நிறைய செலவாகுமே...
அன்புள்ள ஜி,
பதிலளிநீக்குநாங்க கொசுவை விரட்டக்கூட கையை அசைக்காத சமணர்கள்.. எங்களை வைரஸ் சுத்திகிட்டு இருக்குன்னா என்ன செய்யறது? இப்ப சரியாயிடுச்சா ஜி?
//பரமஹம்ச யோகானந்தான்னு, நிஜமாவே ஒரு உத்தம ஸ்வாமிஜி//
அது என்ன நிஜமாவே கேள்விப் பட்டிருப்பீர்கள்? இல்லையே... வருத்தத்துடன். ஆட்டோபயோகிராஃபி ஆஃப் யோகி என்ற நூலைத் தேடிப் பி(ப)டிக்க முயற்சி செய்கிறேன்..
கொசுக்கடியையும் பொருட்படுத்தாமல் வருகை புரிந்தமைக்கும் கருத்து தந்தமைக்கும் மிக்க நன்றி ஜி.
அன்பு RVS
பதிலளிநீக்குஅந்த டைட்டிலுக்குப் பெருமையெல்லாம் அந்த
வேஙகடவனுக்கே உரியது.. நன்றி..
போங்க... போயி ஒரு கொசு வலையை வாங்கி அழகா கட்டி அதற்குள் கூட்டாக நாயகன் கமல் குடும்பம் போல ”நீ ஒரு காதல் சங்கீதம்” என்று மனைவியின் காதில் பாட்டு பாடிக்கொண்டு இன்பமாக உறங்குங்கள்.. [eathu eathu unga aasaiyellaaam appudiyea velliya varaapula irrukea]
பதிலளிநீக்குyappa intha kosu thollai thaanga mudiyaladaaa saaaaaaaaaaaaaaaaaami, ithukku oru tartise yaaravathu koluththungappaaaaaa
ஆதிரா....கொசுக்கொல்லியை பற்றிய செய்திகள் அதிர வைக்கின்றன... எதிலும் குறுக்கு வழியை தேடும் தற்போதய மனித எண்ணங்கள் இதை எப்படி நேராக எடுத்து கொள்கின்றனவோ...சரியான எச்சரிக்கை சரியான நேரத்தில்..
பதிலளிநீக்குசமுக அக்கறை நிறைந்த இந்த பதிவிற்கு பாராட்டுக்கள்..நன்றி
( என்னையும் வைரஸ் இப்பதிவிற்கு வரவிடாமல் தாமதப்படுத்தியது )
அன்பு வினு,
பதிலளிநீக்குமுதல் முறை பதிந்த தங்கள் கால்ச்சுவடுக்கும் பதிந்த கைச்சுவடுக்கும் நன்றி.
நாயகன் கமல் மாதிரி இருக்கனும் என்பது என் ஆசைதான். எல்லோரும் அப்படி அன்பா குடும்பம் நடத்தனும் என்று ஆசைதான்.
டார்ட்டாய்ஸ் கொலுத்துவீங்களா!! இந்தக் கொசுத் தொல்லை நிலையானது. நீங்க டார்டாய்ஸ் கொலுத்தினாலும் போகாது. உங்கள இது மாதிரி தொல்லைகளில் இருந்தெல்லாம் காப்பாத்த எழுத்தால ரீங்காரம் இட்டுக்கொண்டே உங்களச் சுத்திச் சுத்தி வரும்.
மீண்டும் தங்கள் வரவை எதிர்நோக்கி..அன்புடன்..
அன்பு பத்மநாபன்,
பதிலளிநீக்குதாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. எதிலும் குறுக்கு வழியைத் தேடுவதும் கூறுவதையும் தவறாக எடுத்துக்கொள்வதும் சர்வ சாதாரனமாக நடைபெறுகிறது இன்றைய காலகட்டத்தில். ஊதுற சங்கை ஊதி வைப்போம். ஒரு சிலரின் காதிலாவது விழாமல் போகாதா?
அழகான தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி பத்மநாபன்.
unga post interesting mattumilla.. genuine-aakavum, responsible aakavum irunthathu
பதிலளிநீக்குமுதல் முறை வந்திருக்கீங்கள் மாதங்கி. வருக.. வருக..ரொம்ப ஜென்யூனாக கருத்தும் சொல்லி இருக்கீங்க. உங்களுடைய வருகைக்கு இங்கிருந்தே அன்பு மலர் தூவி வணக்கமும் கருத்துரைக்கு என் மனமார்ந்த நன்றியும்.. மீண்டும் வருக..
பதிலளிநீக்கு