இனிமை பூத்த நிலவொளியில் இரவு பூக்கும் இசைமலர் நீ இரவெல்லாம் காய்ச்சி வைத்த இளைய தமிழ் அமுதம்நீ மழைத்துளிகள் ஒன்றாகிக் கொட்டுகின்ற பாட்டருவிநீ மனமெல்லாம் அன்பாலே நிறைந்து விட்ட தேனருவிநீ
வான்புகழும் வள்ளுவனின் திருக்குறள் நீ வற்றாத கம்பன்வாய் கவிநயம் நீ தேனொழுகும் திரைத்தமிழின் திருவாசகம் நீ தெவிட்டாத அருட்பாவின் அகவல் நீ ஊற்றாக உள்ளமெல்லாம் உவகை பொங்க உலகம் வாழ் நாளெல்லாம் நிலைத்து நின்று போற்றுகின்ற புத்துலகச் சிற்பியாகி பொன்னெழுத்தால் புதுபுகழைப் பொறித்து வாழ்க!
இது தம்பி உதயாவின் பிறந்தநாளில் அவரை வாழ்த்தி ஜெய் இணையதள வானொலியில் என்னால் வாசிக்கப்பட்ட கவிதை.
மிக்க நன்றி மகேந்திரன். மன்னிக்க உங்களையெல்லாம் நீண்ட நாட்களாக காக்க வைத்து பதில் எழுதுவதற்கு. முச்சு விட இயலாதவாறு பணிச்சுமையில் அமிழ்ந்ததால் தாமதமான பதில்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை நானும் அவருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதிலளிநீக்குவாழிய வாழிய பல்லாண்டு..
பதிலளிநீக்குமிக்க நன்றி வை. கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களே.
பதிலளிநீக்குமிக்க நன்றி மகேந்திரன். மன்னிக்க உங்களையெல்லாம் நீண்ட நாட்களாக காக்க வைத்து பதில் எழுதுவதற்கு. முச்சு விட இயலாதவாறு பணிச்சுமையில் அமிழ்ந்ததால் தாமதமான பதில்.
பதிலளிநீக்கு