“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

வெள்ளி, 26 நவம்பர், 2010

பிஸ்தா எடு!! கொண்டாடு.....


http://www.defendingfoodsafety.com/uploads/image/Pistachios(1).jpg
அவன் பெரிய பிஸ்தாடா! என்று சொல்வது ஒரு வகை என்றால், அவன் பெரிய பிஸ்தாவாடா? என்று கேட்பது மற்றொரு வகை. இவை இரண்டும் ஃபுல் அடிக்கும் பயில்வானாக இருந்தாலும், புல் தடுக்கி பயில்வானாக இருந்தாலும் ஆண்களுக்கு மட்டுமே பொருந்தும் சொற்களாகிப் போயின. பிஸ்தாவுக்கும் ஆண்களுக்கும் அப்படி ஒரு நெருங்கிய தொடர்பு. அதிலேயும் பிஸ்தாவோடு மிகுந்த தொடர்புடையவர்கள் ரொம்ப நோஞ்சான் ரொம்ப பலசாலி இருவரும்தான். குடிக்கறது கூழாக இருந்தாலும் பெரிய பிஸ்தா மாதிரி உதார் விடுவதற்கு ஒரு குறைவும் இருக்காது. பாவம் இந்த நடுத்தரம் அவர்களை விட பாவம் பெண் தாதாக்கள். என்னதான் பலசாலிகளாய் இருந்தாலும் கண்டிப்பாக சொர்ணாக்கக்களுக்குப் இந்த பிஸ்தா ஜம்பம் எல்லாம் பொருந்தாது.

ஒருவருக்குத் திருமணம் நிச்சயம் ஆகிவிட்டால் போதும். அவனுக்கு இலவச அறிவுரை என்று வழங்குபவர்களின் வாய் உதிர்க்கும் முத்துக்களில் இந்த பிஸ்தா முக்கியமாக இடபெறும். `பாதாம், பிஸ்தா, முந்திரி எல்லாம் சாப்பிட்டு, உடம்பை தேத்துபா…’ இப்படி...அப்படி என்னதான் உள்ளது இந்த பிஸ்தாவில்?.
http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcQJupf0cTM8FZc5oByJoSQtCxgoWCpOM0FPs2S3fqo0BiOr16gV
ஒரு 100 கிராம் பிஸ்தாவில்
557 கலோரி உள்ளது. அதாவது 29%
கார்போஹைடிரேட்ஸ் 27.97 கிராம். இது 21.5%
புரதம் 20.60 கிராம். 37%
மொத்தக் கொழுப்பு 44.44 கிராம் 148%
கொழுப்பு 0.0 மிலிகிராம் 0%
நார்ச்சத்து 10.3 கிராம் 27%
http://www.pistachiohealth.com/sites/default/files/images/hcp-nutrition-main.jpg 
விடமின் A -553, 18% விட்டமின் C -5. 12% விட்டமின் E-150% தியாமின் 72.5% சோடியம் 1 மி.கி..பொட்டாசியம் 1.025 மி.கி., கால்சியம் 107மி.கி. 11% காப்பர் 1.3 மி.கி. 144% இரும்புச்சத்து 4.15 மி.கி. 52% மக்னீசியம் 121மி. கி. 30% மாங்கனீசு 1.2 மி.கி. 52% பிராஸ்பரஸ் 376 மி.கி. 54% செலினியம் 7 மிசிகி. 13% சின்க் 2.20 மிகி. 20% இத்தனையும் நிறைந்து உள்ளது. இவை முக்கியமானவை. 30 வகையான வைட்டமின்கள், மினரல்கள், உட்டச்சத்துக்கள் ஆகியவை பிஸ்தாவில்  நிறைந்துள்ளன என்கின்றது. இத்தனை சத்துக்களை உள்ளடக்கிய அது தானே பிஸ்தா. 
  

மூடிய கிளிஞ்சல்கள் போலக் காணப்படும்,  இதன் உடபுறம் பச்சை நிறத்தில்காணப்படும் பிஸ்தாவை `பிஸ்தாச்சியோ (Pistachio)என்று உலக அளவில் அழைக்கிறார்கள்

 

மத்திய கிழக்கு பகுதியில் முதன் முதலாக கண்டுபிடிக்கபட்ட பிஸ்தா மரம், உலகின் மிகப் பழமையான பருப்பு வகை மரங்களுள் ஒன்று என்பர். சுமார் 7000 ஆண்டுகளுக்கும் முன்பே பிஸ்தா மரத்தைப் பயிரிட்டு வளர்த்துள்ளனர். பிஸ்தாவிலும் வளர்ப்பிலும் அமெரிக்காதான் பிஸ்தா. ஆம் உலகிலேயே அதிக அளவில் பிஸ்தாக்கள் (பிஸ்தா மரங்கள்) நிறைந்த  நாடு அமெக்கா. 1903 முதலே கலிஃபோர்னியாவில் பிஸ்தா மரங்கள் பயிர் செய்யப்பட்டு வந்துள்ளன என்கிறது ஆய்வு. .


இனிப்பான சம்பவத்தைப் போல கசப்பையும் ஜீரணிக்கப் பழகிக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்த தமிழர்கள் தமிழ்ப் புத்தாணடில் வேப்பம்பூ பச்சடி செய்து கொண்டாடுகிறோம்.. அதுபோல சீனர்கள் ஒவ்வொரு புத்தாண்டையும் கொண்டாடும்போது, இந்த பிஸ்தா பருப்புகளை அனைவருக்கும் வழங்கி மகிழ்கிறார்கள். உடல் நலம், மன நலம், ஒளிமயமான எதிர்காலம், மகிழ்ச்சி, துள்ளல் ஆகியவற்றின் அடையாளமாக பிஸ்தாவை  நினைக்கின்றனர். அதனால் புத்தாண்டில் பிஸ்தாவே முதலிடம் பிடிக்கிறது. அதுமட்டுமல்ல அவர்கள் பிஸ்தாவை மகிழ்ச்சி பருப்பு (Happy nut), என்றே அழைக்கிறார்கள்.  உலகிலேயே அதிக அளவில் பிஸ்தா ஈட்டர் யார் என்றால் சீனர்களே. அவர்களின் நொறுக்ஸில் முக்கிய இடமும் பிஸ்தாவுக்கே.

ஈரானியர்களும் பிஸ்தாவை அதிகமாகப் பயன் படுத்துகின்றனர். இவர்கள் பிஸ்தாவை சிரிக்கும் பருப்பு (smiling nut)என்று அழைக்கின்றனர்.

ரஷ்யாவில் கோடைக்காலத்தில் பிஸ்தா பருப்பு அதிகப் பயன்பாட்டில் உள்ளது என்கிறது ஒரு ஆய்வு. கோடைக்காலத்தில் அடிக்கும் பீருக்கு இது தான் உடன் துணையாம்.

 ஒரு காலத்தில் சரியான செரிமானத்திற்காக சாப்பிடும்போது ரசம் ஊற்றி சாப்பிடுவோம். அந்த ரசத்தை இப்போது ஐந்து நட்சத்திர உணவு விடுதிகளில் சூப்பு என்று சாப்பிடுவதற்கு முன்னால் ஒரு கின்னியில் ஊற்றி கொடுக்கின்றனர். நாமும் ஸ்பூனால் உரிஞ்சி உரிஞ்சிக் குடிக்கிறோம். இது பசியைத் தூண்டி அதிகம் சாப்பிட வைக்கும். இதே போல பிரான்ஸ் நாட்டினர், சாப்பிடுவதற்கு முன்பு பசியை அதிகரிக்கச் செய்ய மது அருந்துவார்களாம். அப்போது மதுவுடன் இசைக்கும் பக்க வாத்தியம் பிஸ்தாவாம்.

மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது ஏழை நாடு இந்தியா, பிஸ்தா சாப்பிடுவதிலும் ஏழைதான். குடிப்பது கூழ் கொப்பளிப்பது பன்னீராகவா இருக்க முடியும்? .ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக அயல்நாட்டு டாலர் புழக்கம் நிறைந்த வீடுகளில் பிஸ்தாவும் இடபிடிக்கிறது. மற்றவர்கள் படம் போட்டுக் காட்டினால்தான் பிஸ்தா எப்படி இருக்கும் என்று அறியும் நிலையில் இன்றும் உள்ளனர்.

சரிங்க.. அப்படி என்னதான் இந்த பிஸ்தாவில் நம் உடலுக்கு நன்மை தரும் விஷயம் இருக்கிறது?

முக்கியமாக மூன்று நோய்கள் உலகில் உலா வந்து தன் இஷ்டம் போல மக்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றன. அவை புற்று நோய், இதய நோய், சர்க்கரை நோய். இந்த மூன்று நோய்களும் பிஸ்தா என்றால் கண்ணுக்கு எட்டாத தூரத்திற்கு ஓடி நிற்குமாம். இதைக் கூறுவது அமெரிக்க ஆய்வறிக்கை.

தினமும் பிஸ்தா சாபிட்டு வந்தால் எந்த வகையான புற்று நோயும் வராமல் தடுக்கலாம் என்று அமெரிக்க புற்றுநோய் ஆய்வு சங்கம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் மட்டும் நான்கு கோடி பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்கிறது ஆய்வறிக்கை. ரொட்டியுடன் கையளவு பிஸ்தா உட்கொண்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பு கணிசமாக குறையும். மேலும், பசியைத் தூண்டி விடுகிறது என்றும் ஆய்வாளர்கள் நிருபித்துள்ளனர்.

பிஸ்தாவில் குறைந்த அளவு கலோரி, குறைந்த அளவு கொழுப்புடன் அதிக அளவில் நார்ச்சத்து இருபதால் உடல் எடை அதிகம் கொண்டவர்கள், பிற உணவை குறைத்து அதற்கு பதிலாக பிஸ்தாவை உட்கொள்ளலாம் என்கிறார்கள். ஒன்று அல்லது இரண்டு கை நிறைய தினமும் பிஸ்தா சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளின் அளவு குறையும் என்கிறது ஒரு ஆய்வு.

நாள்தோறும் 1 அல்லது 2 பிஸ்தா பருப்புகளைச் சாப்பிடுவதன் மூலமாக, 9 முதல் 12 சதவீதம் உடலுக்கு தீமை செய்யும் கொழுப்பின் அளவைக் குறைக்கலாம். இதைக் கூறுவது டொரண்டோ பல்கலைக்கழக ஆய்வு. பிஸ்தா சாப்பிடுவதால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டுக்குள் இருப்பதை டொரண்டோ பல்கலைக்கழக ஆய்வு உறுதிபடுத்தியுள்ளது. கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவு வகைகளைச் சாப்பிடும் போது, அதனுடன் உணவுப்பொருளாக (சைட் டிஸ்ஸாக) பிஸ்தாவைச் சேர்த்துச் சாப்பிடும் போது, கார்போஹைட்ரேட்டை உடல் உள்ளிழுத்துக் கொள்வது மட்டுப்படுகிறது. கார்போஹைட்ரேட் அதிக அளவில் உள்ள பிரெட் சாப்பிட்டால்கூட, அது ரத்தத்தில் படியாமல் பார்த்துக் கொள்கிறது இந்த பிஸ்தா. இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக இருக்கும் என ஆய்வு கூறுகிறது.

நாகரிக மோகம் நிறைந்த, வேக உணவு எங்கும் பரவி விட்ட நகர்ப்புறங்களில் இதய நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த 50 ஆண்டுகளில் 4 சதவீததில் இருந்து 11 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதிலும் இந்தியாவில் குறிப்பாக இளம் வயதினர் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற புள்ளி விவரம் கேட்கக் கடினமாக இருந்தாலும் அதுதான் உண்மை நிலை. பிஸ்தா பருப்பைச் சாப்பிட்டால் ரத்தத்தில் கொழுப்பு அளவு குறையும் என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. பிஸ்தா பருப்புகளில் ஓமேகா-3 வகை கொழுப்பு உள்ளது. இது கொலஸ்ட்ராலைக் குறைக்கும் தன்மை கொண்டுள்ளது எனவே, இதை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இதய நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாமாம்.
.
கலர் பார்க்கும் ரோட்டோர ரோமியோக்களுக்கு மிகவும் நற்செய்தி இது. பிஸ்தாவைப்  பச்சைப் பாதாம் என்றும் அழைக்கின்றனர். இதில் உள்ள பச்சை கண்களுக்கு ஒளியூட்டுவதை வெகு நேர்த்தியாகச் செய்கிறதாம். அப்பறம் என்ன கலர் பார்த்துக் கலக்க வேண்டியதுதானே.

செக்ஸ் உணர்வு குறைபாடு இக்காலத்தில் பரவலாக ஆண்களிடம் காண்ப்படுகிறது என்கிறது புள்ளி விவரம். இந்த உடலுறவு ஆர்வம் இன்மை உடல், உள நோய்களுக்கு பெரும்பாலும் காரணமாகி விடுகின்றது.

காதலினால் மானிடர்க்குக் கலவி உண்டாம்
கலவியிலே மானிடர்க்கு கவலை தீரும்
ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே
http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcSazJeTXYWw_6bTTewQJKQEuiU4_pltM8hFD0hmNb9-xQ6xyl8ivA
என்பார் பாரதி பெண் என்றால் அழகு, ஆண் என்றால் ஆண்மை. என்பது தொன்று தொட்டு நிலவி வரும் சமூகக் கட்டு. இதில் பெண்மையை ஒளிவீசச் செய்ய எந்த அளவு ஈஸ்ட்ரோஜன் பயன் படுகிறதோ அதே அள்வு ஆண்மையைக் கூட்டுவதில் டெஸ்ட்டோஸ்டீரான் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த டெஸ்ட்டோடிரானை மருந்துகளால் அதிகரிக்க முடியாதாம். . டெஸ்ட்டோடிரானை அதிகரிக்கச் செய்வதில் பிஸ்தாவின் வேலை படு சுத்தமாக இருக்குமாம். தன் ஐந்தாவது வயதில் பழுக்கத்தொடங்கி 200 வயது வரை ஓயாது கனி ஈனும் பிஸ்தா ஈடு இணையற்ற இயற்கை வயாகராவாகி அரிய பயனைத் தருகிறது..

http://www.pistachiohealth.com/sites/default/files/images/WPDLogo_2_HR.regular.jpg
இது செரிக்க சற்று கடினமாக இருக்கும் ஆதலால் கொஞ்சமாக எடுத்துக் கொள்ளலாம். பிஸ்தாவைத் தேனுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளும் போது சுலபமாகச் செரிக்கும்

ஒரு சுவையான செய்தி.. பிஸ்தாவுக்கு என்றே ஒரு தினம் கொண்டாடுகிறார்கள் என்றால் நம்புவீர்களா? ஆம்  பைபிளில் இடம் பிடித்த(Genesis 43:11)இந்த வரலாறு படைத்த பருப்புக்குப் நன்றி சொல்லும் விதமாக பிப்ரவரி 26 உலக பிஸ்தா நாளாகக் கொண்டாடப் படுகிறது. 

அப்பாடா.. இதுவரை நீங்கள் பிஸ்தாவோ, இல்லையோ இந்த மகிழ்ச்சிப் பருப்பைக் கையில் எடுத்து விட்டீர்கள் அல்லவா. இனிமேல் நீங்கள் பிஸ்தாதான்.. பிஸ்தா எடு!! கொண்டாடு....




நன்றி குமுதம் ஹெல்த்.







9 கருத்துகள்:

  1. பிஸ்தா பற்றிய இனிய கட்டுரைக்கு இனிய நன்றிகள்...


    இனி நாங்க ஐஸ்கிரீம் கூட பிஸ்தா பிளேவர்தான் சாப்பிடுவோம்...

    பிஸ்தா சாப்பிட்டு நல்ல மஸ்தா இனி வலம் வருவோம்....

    பதிலளிநீக்கு
  2. நிச்சயம் இது ஒரு பிஸ்தா பதிவு. இதோட சேர்த்து ஏதாவது பிஸ்தா பர்ஃபி என்று ஒரு ரெசிபி கூட சொல்லியிருக்கலாம். ;-)

    பதிலளிநீக்கு
  3. பிஸ்தா என்னமோ அலங்கார பருப்பு என்றுதான் இதை படிக்கும் வரை நினைத்துக்கொண்டிருந்தேன்... எதோ ஐஸ்கிரிமில் கலக்குவார்கள்..இனிப்புகள் செய்வார்கள் என்றளவில் தான் எனது பிஸ்தா ஞானம் இருந்தது...

    பெண்மையயை மிளிரச் செய்யும் ..ஆண்மையை ஒளிரச்செய்யும்..இது போக முப்பெரும் நோய்க்கு நிவாரணியா... கொழுப்பை கரைக்குமா ..

    நோஞ்சான்களையும் பிஸ்தா ஆக்கிவிடுமா பிஸ்தா..

    அடி தூள் மா ... இப்பதிவை போட்ட வகையில் நிங்களும் பிஸ்தா தான்...

    பதிலளிநீக்கு
  4. நீங்களெல்லாம் பெரீரீரீரீரீரீய பிஸ்தா ஆகனும் என்பதே எங்கள் விருப்பம்.... வாழ்த்துக்கள் நல்ல மஸ்தா வலம் வர. ஆனா ஜாக்கிரதை இப்பொவெல்லாம் என்கவுண்டர் அதிகமா இருக்கு..

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வாசன்.

    பதிலளிநீக்கு
  5. அடுத்த பதிவுல கலர்ஃபுல்லா ஒரு டிஸ் சொல்லிட்டா போகுது. கட்டுரை நீளமா போயிடுமேன்னுதான்.பிஸ்தாவைப் பற்றியே இன்னும் ஏராளமான செய்திகள் இருக்கு..
    எப்போதும் போல வந்து இனிய கருத்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி RVS

    பதிலளிநீக்கு
  6. //பெண்மையயை மிளிரச் செய்யும் ..ஆண்மையை ஒளிரச்செய்யும்..இது போக முப்பெரும் நோய்க்கு நிவாரணியா... கொழுப்பை கரைக்குமா ..

    நோஞ்சான்களையும் பிஸ்தா ஆக்கிவிடுமா பிஸ்தா..//

    எல்லாரையுமா பிஸ்தான்னு சொல்லிட முடியும். இத்தனை குணம் இருக்கறதாலதான் அது பிஸ்தா.

    //அடி தூள் மா ... இப்பதிவை போட்ட வகையில் நிங்களும் பிஸ்தா தான்...//

    பொம்பிள பிஸ்தா இதுவரைக் கேள்விப்படல. இருந்தாலும்... நீங்க சொன்ன அது சரியாத்தான் இருக்கும்.

    அன்பான தங்கள் கருத்துரையில் மனம் கனிந்தேன். மிக்க் நன்றி பத்மநாபன்.

    பதிலளிநீக்கு
  7. ஆதிரா... எல்லாவற்றிலும் சம உரிமை தருகிறோம்...பிஸ்தா வில் தர மாட்டோமா?

    பிஸ்தா வில் பால்பிரிவு இல்லை ....

    பதிலளிநீக்கு
  8. ஆஹா இதை தெரியாம போச்சே..
    பிஸ்தாவில் பால் பிரிவு இல்லை. இனிமேல் பிஸ்தா என அழைக்கப்படும் மனிதர்களில் பால் பிரிவு இருக்கும்..
    இது வரைக்கும் ஒரே பிரிவுதான் இருந்தது. மீண்டும்

    வந்து கருத்து சொன்னமைக்கு நன்றி பத்மநாபன்.

    பதிலளிநீக்கு
  9. பிஸ்தாவுக்குள்,இத்தனை சிறப்பா,
    இதை அழகான தொகுப்பா,
    தந்த தோழிக்கு சொல்லுவோம் வாழ்த்துப்பா !

    பதிலளிநீக்கு